Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 22, 2013

முஸ்லிம்களுக்கு மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்!-கே.எம். காதர் மொய்தீன்

தமிழகத்தில் 55 லட்சம் முஸ்லிம்கள் உள்ளதால் முஸ்லிம்களுக்கு மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொய்தீன் தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

 ஜனநாயகம், சமயச் சார்பின்மை, சமூக நீதி ஆகியவையே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொள்கை. இதையே அரசியலமைப்புச் சட்டமும் வலியுறுத்துகிறது. கேரளத்தில் காங்கிரஸ்டன்  கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் திமுகவுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. பாஜகவை பொருத்தவரையில் அக்கட்சி எங்களுக்கு விரோதி கிடையாது. ஆனால் மோடி கிராம ராஜ்யம் பற்றி பேசுவதற்குப் பதிலாக, ராம ராஜ்யம் பற்றி பேசி வருகிறார். மதச்சார்பற்ற கொள்கையில் அவர் எங்களிடம் இருந்து முரண்படுகிறார். திமுக தலைவர் கருணாநிதியைப் பொருத்தவரையில், அவர் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவாக அறிவித்துவிட்டார்.

தமிழகத்தில் 55 லட்சம் முஸ்லிம்கள் உள்ளதால் முஸ்லிம்களுக்கு மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். . திருச்சியில் டிசம்பர் 28-ஆம் தேதி மஹல்லா ஜமா அத் மாநில
மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் ஜமா அத் நிர்வாகிகள் மற்றும் அறிஞர்கள், முஸ்லிம் கல்வி நிறுவன நிர்வாகிகள் அதில் கலந்துகொள்ள உள்ளனர் என்றார் காதர் மொய்தீன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...