Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 15, 2013

கொள்ளுமேடு சாலை மறியல் பத்ரிக்கை செய்தி!

காட்டுமன்னார்கோவில், காட்டுமன்னார்கோவில் அருகே ரேஷன் கடை திறக்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திடீர் மறியல்:

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது கொள்ளுமேடு கிராமம். இங்கு சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக இப்பகுதியை சேர்ந்த சுமார் 700–க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், சமீப காலமாக ரேஷன் கடையில் பணிபுரிந்து வரும் விற்பனையாளர் சரியான நேரத்திற்கு கடையை திறக்கப்பதில்லை என தெரிகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை. இதனால், ஆத்திரமடைந்த சுமார் 200–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு நேற்று கொள்ளுமேடு பஸ் நிறுத்தத்தில் வீராணம் ஏரிக்கரை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு :

இதுகுறித்து தகவல் அறிந்த புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், பொது விநியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் வாசுதேவன், வட்ட வழங்கல் பிரிவு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்ததை நடத்தினர். இதில், கொள்ளுமேடு ரேஷன் கடை இனி சரியான முறையில் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்வதாகவும், சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீது நடவடிக்கை
எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்ற பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
-தினத்தந்தி 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...