Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 14, 2013

முல்லாவுக்கு மரணத்தண்டனை:வங்காளதேசத்தில் கலவரம்!

டாக்கா:ஷேக் ஹஸீனா அரசின் பாசிச நடவடிக்கையின் ஒரு பகுதியாக வங்கதேச ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த தலைவர் அப்துல் காதர் முல்லா(65) தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாஅத்தே இஸ்லாமி தொண்டர்கள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்கும், அவாமி லீக் தொண்டர்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் அப்துல் காதர் முல்லாவிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ததையடுத்து, வியாழக்கிழமை இரவு அவர் தூக்கிலிடப்பட்டார். பரித்பூர் மாவட்டத்தில் அப்துல் காதர் முல்லாவின் சொந்த கிராமமான அபிராபாத்தில் வெள்ளிக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவர் பிரிவான ஸத்ரே ஸபீர் உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அவர்கள் போலீசுடன்
மோதலில் ஈடுபட்டனர். ஏராளமானோரை போலீஸ் கைதுச் செய்துள்ளதாக தி டெய்லி ஸ்டார் பத்திரிகை கூறுகிறது.

அப்துல் காதர் முல்லாவுக்கு அளிக்கப்பட்ட மரணத்தண்டனைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் நாட்டில் கூடுதல் மோதல் சூழல்களுக்கு கொண்டு செல்லும் என்று ஆம்னஸ்டி கூறியுள்ளது. பதில் நடவடிக்கையாக உருவாகும் வன்முறைகளை தடுக்கும் பொறுப்பு ஷேக் ஹஸீனாவுக்கு உண்டு. மரணத்தண்டனை மனித உரிமை மீறல் என்று ஆம்னஸ்டி தெரிவித்துள்ளது.சர்வதேச முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் அவை, முல்லாவுக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டதை கண்டித்துள்ளது. முல்லாவுக்கு நிறைவேற்றப்பட்ட தண்டனை சட்டவிரோதமும், அநீதியும் என்று துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...