Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 05, 2013

2015 ஆம் ஆண்டில் சந்திரனில் காய்கறிகள், தாவரங்கள் வளர்க்க திட்டம்-நாசா

மனிதர்கள் வாழவும் மற்றும் பூமியின் இயற்கையான செயற்கைகோளில் பணியாற்ற முடியும் என்பதை புரிந்து கொள்ள, 2015-ம் ஆண்டில், சந்திரனில் டர்னிப் மற்றும் துளசி போன்ற தாவரங்கள் மற்றும் காய்கறிகளை வளர்க்க நாசா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிலவின் மேற்பரப்பில், ஒரு கமர்ஷியல் லூனார் லேண்டர் போர்டில் தாவரங்களை அனுப்பி வளர்க்க உள்ளோம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த முயற்சியை லூனார் பயிர் வளர்ச்சி வசிப்பிட அணி மூலம் இயக்கப்படுகிறது. அவர்கள், காலநிலை கடுமையான சக்திகளுக்கெதிராக தாவரங்களை பாதுகாக்க கன்டெய்னர்களை வடிவமைத்து அதனை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். சந்திரனில் ஐந்து முதல் பத்து நாட்களுக்குட்பட்ட காலப்பகுதியில் தாவரங்கள் முளைப்பதற்காக ஒரு மிக எளிய அடைக்கப்பட்ட வளர்ச்சி அறை உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. இந்த கன்டெய்னர்
டர்னிப், துளசி மற்றும் அரபிடோப்சிஸ் வளர முயற்சிக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. அதாவது கன்டெய்னர்களில் இந்த தாவரங்களின் விதைகள் வைக்கப்பட்டு சந்திரனை அடைந்ததும், சிறிய அளவு நீர் அந்த விதைகளுக்கு அளிக்கப்படும், அந்த கன்டெய்னர்களில் இருக்கும் காற்று, விதைகள் 5 முதல் 10 நாட்கள் வளர போதுமானதாக இருக்குமாம்.

மேலும் தாவரங்கள் பற்றிய தகவல்களை கேமராக்கள், சென்சார்கள், மற்றும் மின்னணுவியல் ஆகியவை வழங்கும். சந்திரனில் விதைகளின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பது குறிப்பிட்ட இடைவெளியில் புகைப்படம் எடுத்து, அதன் மூலம் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது.
-dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...