Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 21, 2013

ரேஷன் கார்டுகள் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு

பொதுமக்கள் பயன்பெறும் வகை யில் தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அரசு வெள்ளிக் கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

குடும்ப அட்டைகள்
நடப்பு 2013ம் ஆண்டுக்கு புதுப்பிக்கப்பட்ட குடும்ப அட்டை களின் பயன்பாட்டுக் காலம் 31.12.2013 அன்றுடன் முடிவடை கிறது. தற்போது உடற்கூறு முறையிலான தேசிய மக்கள் தொகை பதிவாளர் கணக்கெடுப்பு பதிவுகளின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் (smart family card) வழங்க திட்டமிட‌ப்பட்டுள்ளது.

எனினும், மத்திய அரசின் தேசிய மக்கள் தொகை பதிவாள ரின் கணக்கெடுப்பு பணி முழுமை யாக முடிந்து தகவல் தொகுப்பினை பெற காலதாமதமாகும் என்பதால் மின்னணு குடும்ப அட்டையை 2014-2015-ல்தான் வழங்க முடியும் என கருதப்படுகிறது. எனவே 31.12.2013 அன்றுடன் முடிவடைய உள்ள புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம் 01.01.2014 முதல் 31.12.2014 வரை மேலும் ஓராண் டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மானிய விலையில் பருப்பு வகைகள்
தமிழ்நாட்டில் செயல்படுத்தப் பட்டு வரும் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு 3 லட்சத்து 17 ஆயிரம் மெட்ரிக் டன் தரமான அரிசி 1 கோடியே 85 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம்
செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு பருப்பு வகைகளுக்கும், பாமாயிலுக்கும் வழங்கி வந்த மானியத்தை நிறுத்திவிட்டாலும், முதல்வரின் ஆணையின்படி, தமிழ்நாட்டிலுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் மானிய விலையில் பருப்பு வகை கள் மற்றும் பாமாயில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இச்சிறப்பு விநியோகத் திட்டத்துக்கு மட்டும் ரூ.1006.27 கோடி மானியமாக ஒதுக்கப்பட் டுள்ளது.

தற்போது சென்னை மாநகரத்தில் செயல்பட்டு வரும் 40 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 2,607 மெட்ரிக் டன் காய்கறிகள் சுமார் 7 கோடியே 76 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் 20 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் தற்போது செயல்பட்டு வரும் 279 அங்காடிகள் மூலம் 64,100 குவின்டால் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ், பொங்கல்
எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு புழுங்கலரிசி, பச்சரிசி, சர்க்கரை மற்றும் பருப்பு வகைகள், பாமாயில் ஆகியவை போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் எவ்வித விடுதலுமின்றி வழங்கப் பட உள்ளது.மத்திய அரசு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை தொடர்ந்து குறைத்துக் கொண்டே வந்து முழுத் தேவையான 65,140 கிலோ லிட்டருக்கு பதிலாக தற்போது 29,056 கிலோ லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இருப்பினும் எரிவாயு இணைப்பு தரப்பட்டுள்ள விவரத்தை குடும்ப அட்டைகளில் பதிவு செய்து மண்ணெண்ணெய் உரியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-source: Hindu

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...