Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 17, 2013

மோடி அரசை தோலுரித்துக்காட்ட ஆம் ஆத்மி கட்சியின் துடைப்பம் யாத்திரை!

அஹ்மதாபாத்: 2014-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு முன்னோடியாக மோடி அரசின் ஊழலை தோலுரித்துக் காட்ட ஆம் ஆத்மி கட்சி குஜராத் மாநிலத்தில் துடைப்பம் யாத்திரையை நடத்த உள்ளது.

துடைப்பம் யாத்திரை ஜனவரி 26-ஆம் துவங்குவதாக கூறிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் தினேஷ் வகேலா, குஜராத் அரசியலில் கழிவை சுத்தப்படுத்துவதே தங்களுடைய நோக்கம் என்று குறிப்பிட்டார். ஆம் ஆத்மிகட்சியின் 2 நாட்கள் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.பல்வேறு மாநில தேர்தல் நடக்கும் முன்பே குஜராத்தில் மட்டும் 5000 தீவிர தொண்டர்கள் இருந்தனர் என்று வகேலா கூறுகிறார். ஆனால் டெல்லியில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்குப் பின்னர் கட்சியின் தீவிர தொண்டர்களின் எண்ணிக்கை 17 ஆயிரமாக
உயர்ந்துள்ளதாக வகேலா தெரிவித்தார்.குஜராத்தில் உள்ள 28 மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சிபோட்டியிடப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...