Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 05, 2013

கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி இயக்கப்பட்ட 38 ஆம்னி பஸ்சுக்கு அபராதம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க, பயண கட்டண விவரத்தை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் முறையான சீட் பர்மிட் இல்லாமலும், வரி செலுத்தாமலும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கடலூர் மாவட்ட போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து தலைமையில் ஈசிஆர் சாலையில் கடலூர், சிதம்பரத்திலும், சென்னை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நெய்வேலி பகுதியிலும், சென்னை & திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூரிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரத்தில் இருந்து கடலூர் மாவட்டத்தை கடந்து சென்ற 422 ஆம்னி பஸ்களில் சோதனை நடந்தது. அவற்றில் 38 பஸ்கள் உரிய வரி செலுத்தாமலும், பர்மிட் இல்லாமலும்
செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் அபராத தொகையாக ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 75 வசூல் செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து கூறும்போது, ஆம்னி பஸ்கள் இயக்கத்துக்கு, குறைந்தது 3 மாதத்துக்கு கட்டண வரியாக ஒரு சீட்டுக்கு ரூ.3,500 செலுத்த வேண்டும். ஆனால் பண்டிகையை சாதகமாக பயன்படுத்தி கொண்டு பயணிகளுக்கு பாதுகாப்பற்ற வகையில் பஸ்களை இயக்கியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...