Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 14, 2013

வேகமாக பரவும் கோமாரி நோய் ஆட்சியர் அவசர ஆலோசனை!

காட்டுமன்னார்கோவில், : கடலூர் மாவட்டத்தில் கால்நடைகள், கோமாரி நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் வாய், கால் உள்ளிட்ட பகுதியில் புண்கள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறது. இதனால் கால் நடைகள் உணவுகளை சாப்பிட முடியாமலும், நடக்க முடியாமலும் உள்ளன. தற்போது மருந்து, மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர், தனியார் மருந்து கடைகளில் அதிக விலை கொடுத்து மருந்துகளை வாங்கி செல்கின்றனர். சிதம்பரம்: சி.வங்கார மாரி, காட்டுக்கூடலூர், நாஞ்சலூர், வடமூர், செட்டிமுட்டு, இளநாங்கூர், சிவாயம், மணலூர், சிலுவைபுரம், பூலமேடு, வல்லம்படுகை, அம்மாபேட்டை,
ஜெயங் கொண்டபட்டினம், பெரம்பட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் மாடுகள் இறந்துள்ளது. தடுப்பு நடவடிக்கை எடுத்து வந்தாலும் கோமாரி நோய் வேகமாக பல்வேறு கிராமங்களில் பரவி வருகிறது. அதிகளவில் கால்நடைகள் உயிரிழப்பதற்குள் அரசு கோமாரி நோய் தாக்கிய பகுதிகளுக்கு சிறப்பு கால்நடை மருத்துவ குழுவை அனுப்பி தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு தடையில்லாமல் இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்கிட வேண்டும் என இப்பகுதி கூறினர். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் கோமாரி நோயை தடுக்க மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர்(பொறுப்பு) கணேசன், நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர் ராமமூர்த்தி, பிரதம மருத்துவர் ராகவன், விருத்தாசலம், சிதம்பரம் உதவி இயக்குநர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கால்நடை மருத்துவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண் டனர். கோமாரி நோய் அறிகுறிகள் காணப்படும் கிராமங்களுக்கு மருத்துவ குழுவினர் உடனடியாக சென்று சிகிச்சை அளிப்பது. மேலும் நோய் பரவாமல் தடுப்பது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.
-source:Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...