Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 10, 2013

கடலூர் மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டை வழங்க நிரந்தர மையம்!

அனைத்து தாலுகாக் களிலும் நிரந்தர மையம் அமைத்து உடனுக்குடன் ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக புகைப்படம் மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் முகாம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.

முதலில் தபால் அலுவலகத்தில் நடைபெற்று வந்த இந்த பணி பின்னர் நகராட்சி, தாலுகாக்கள் வாரியாக நடைபெற்றது. இதில் புகைப்படம் எடுத்த சிலருக்கு அடையாள அட்டை உடனடியாக வந்தது. ஆனால் பெரும்பாலான மக்கள் அடையாள அட்டை கிடைக்காமல் தவித்தனர். ஆதார் அடையாள அட்டை சாதாரண குடிமகன் என்பதற்கான அடையாளமாக வழங்கப்பட்டாலும் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அரசு அறிவித்தது.

ஆதார் அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்க தவறியவர்களுக்கு 2-வது கட்ட முகாம்
கடலூர் தாலுகா, நெய்வேலி பகுதியில் முடிவடைந்துள்ளது. தற்போது பண்ருட்டி தாலுக்காவில் நடைபெற்று வருகிறது. 2-வது கட்ட முகாம் முடிவடைந்த கடலூர் தாலுகாவில் புகைப்படம் எடுக்க தவறியவர்களுக்கு புகைப்படம் மற்றும் கைவிரல்கள் பதிவு செய்யும் முகாம் கடலூர் பீச்ரோட்டில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் நடைபெற்ற முதல் மற்றும் 2-வது கட்ட முகாம்களில் புகைப்படம் எடுக்க தவறிய ஏராளமான ஆண்களும், பெண்களும் புகைப்படம் மற்றும் கைவிரல் ரேகைகளை பதிவு செய்து கொண்டனர். 

பின்னர் இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:- முகாமுக்கு வரும்போது 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டுடன் ரேஷன் கார்டு, பான்கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மத்திய, மாநில அரசுகளால் புகைப்படம் ஒட்டி வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்து வர வேண்டும். ஏற்கனவே பெயர் பதிவு செய்து விடுபட்டு போனவர்களுக்கு மட்டுமே தற்போது புகைப்படம் எடுக்கப்படுகிறது. அதன் பின்னர் பெயர் பதிவு செய்யாதவர்களுக்கு புதிதாக விண்ணப்ப படிவம் வழங்கி அவர்களின் பெயர் விவரங்கள் பூர்த்தி செய்து வாங்கிய பின்னர் புகைப்படம் எடுக்கப்படும். நிரந்தர மையம் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் புகைப்படம் எடுத்து உடனுக்குடன் அடையாள அட்டை வழங்குவது போல ஆதார் அடையாள அட்டையையும் உடனுக்குடன் வழங்குவதற்காக ஒவ்வொரு தாலுகாக்களிலும் ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக நிரந்தர மையம் விரைவில் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற் கான சோதனை முறை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடைந்த பின்னர் நிரந்தர மையத்தை ஏற்படுத்தி ஆதார் அடையாள அட்டைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இங்கேயே புகைப்படம் எடுத்து அடையாள அட்டை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...