Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 07, 2013

விமான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் நேட்டோ படைகளுக்கான பாதைகளை தடுப்போம்-இம்ரான் கான்

ஆளில்லா வேவு விமானங்களைக் கொண்டு நடத்தும் தாக்குதல்களை இந்த மாதத்துடன் நிறுத்தாவிட்டால், நேட்டோ படைகளுக்கான முக்கிய வழங்கல் பாதைகளை தடுக்கப் போவதாக எதிர்கட்சித் தலைவர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள நேட்டோ படைகளுக்கான பொருட்கள் வழங்கும் பாதை பாகிஸ்தான் வழியாகவே செல்லும் சூழலிலேயே இம்ரான் கானின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. பிபிசிக்கு வழங்கிய ஒரு பேட்டியியேயே இம்ரான் கான் இதைத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானிய தாலிபான்களின் தலைவர் ஹக்கீமுல்லா மெஹ்சூதை கடந்த வாரம் ஆளில்லா வேவு விமானத்தால் கொன்றதன் மூலம், அவர்களுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா திட்டமிட்டு சதிசெய்து
குலைத்துள்ளது என்றும் இம்ரான் கான் குற்றஞ்சாட்டுகிறார்.

இந்த மாதம் இருபதாம் தேதிக்கு முன்பாக, அமெரிக்கா தனது ஆளில்லா விமானங்கள் மூலமான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால், கைபர் கணவாய் வழியாக அப்படைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் பாதையை தடுக்கும் வகையில், தான் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்து முன்னெடுக்கப்போவதாக இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...