வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுவடைந்து உள்ளதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கலெக்டர் கிர்லோஷ்குமார் அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக அனைத்து அரசு ஊழியர்களும் விடுப்பில் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்குவதற்காக பள்ளிக்கூடம், புயல்பாதுகாப்பு மையம், சமுதாய நலக்கூடம் ஆகியவற்றை சீரமைத்து
தயார் நிலையில் வைத்துள்ளோம். தாழ்வான பகுதியில் உள்ள மக்களை மேடான பகுதிகளில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வட்டார வளர்ச்சி அதிகாரிகள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களை அந்தந்த பகுதிகளில் ஆயத்தமாக உள்ளனர். மின்தடை, குடிநீர் பிரச்சினை ஏற்பட்டால் அதனை சமாளிக்க 5 கிராமங்களுக்கு ஒரு ஜெனரேட்டர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாலைகளில் மரம் விழுந்தால் அதை வெட்டி அப்புறப்படுத்தவும் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். தீயணைப்பு வீரர்கள் விடுப்பில் செல்லாமல் அவர்களின் தலைமை அலுவலகத்தில் நவீன பாதுகாப்பு கருவிகள், படகுகளுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிதம்பரம் அருகே தாழ்வான பகுதியான ஜெயங்கொண்டபட்டினம், பெராம்பட்டு ஆகிய கிராமங்களில் பொதுமக்களை மீட்க 5 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக கூடுதலாக அரிசி, மண்எண்ணெய் போன்ற பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் உணவு சமைத்து கொடுக்கவும், சில இடங்களில் பொருட்களாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலுக்கு சென்ற மீனவர்களை திரும்பி வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறையினர் தேவையான மருந்து, மாத்திரைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர். மழை வெள்ளம் ஏற்பட்டால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை மேடான இடங்களுக்கு கொண்டு வர அரசு பஸ்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மின்சாரத்துறை அதிகாரிகள், போலீசாரும் ஆயத்தமாக இருந்து வருகின்றனர். இவ்வாறு கலெக்டர் கிர்லோஷ்குமார் கூறினார்.
பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: தொடர்ந்து கலெக்டர் கிர்லோஷ்குமார் கூறுகையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும்
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
-dailythanthi

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...