Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 07, 2013

எல்லா பெட்ரோல் நிலையங்களிலும் சமையல் எரிவாயு! -மத்திய அரசு

இந்தியாவில் பெட்ரோல் நிலையங்கள் மூலம், 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் திட்டத்தை நாட்டின் அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

சோதனை முயற்சியில் துவக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, அதனை விரிவுபடுத்துவதற்கான அனுமதியை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி வழங்கியுள்ளார். கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி இந்தியாவில் தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய 5 நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் மட்டும் சிறிய அளவிலான 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு விற்பனை துவங்கப்பட்டது. மானியம் இல்லாமல் சந்தை விலைக்கே விற்கப்படும் இவற்றை பெற தனிநபரின் அடையாள அட்டையே போதுமானது எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த விற்பனைக்கு கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து நாடு முழுவதும் உள்ள 47,000 பெட்ரோல் நிலையங்களுக்கும்
இத்திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்படுள்ள ஐந்து மாநிலங்களான தில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேஷம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களை தவிர அனைத்து மாநிலங்களிலும் உடனடியாக இத்திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாங்க, முறையான ஆவணங்களுடன், திரும்பி பெறக் கூடிய வைப்புத் தொகையாக ருபாய் 1000 செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இந்த சிறிய எரிவாயு சிலிண்டர்களை விற்கும்போது அதற்கான விற்பனை விதிகளை சரியாக கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பெட்ரோலிய நிறுவனங்கள் தொடங்கியுள்ள இத்திட்டத்தின் மூலம் மானிய விலைக்கு விற்கப்படும் எரிவாயு சிலிண்டர்களை முறைகேடாக அதிக விலைக்கு சிலர் விற்பதை தடுக்க முடியும் என சமுக ஆர்வலர்கள் கருத்து தெரிவத்துள்ளனர்.

அவசரத் தேவைக்கும், விழாக் காலங்களிலும் பொதுமக்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் அவர்கள் கூறினர். எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குவதால் மத்திய அரசுக்கும், பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் அதிக அளவில் நஷ்டம் ஏற்படுவதாக மத்திய அரசு கூறிவரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...