Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 03, 2013

குளிர்பானங்கள் நீரழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது! ஆய்வில் தகவல்!

மனித வாழ்க்கையில் முக்கிய அம்சமாக மாறிவிட்ட குளிர்பானங்கள் (Soft Drinks) நீரழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடலுக்கு அதிகமான அளவில் சர்க்கரை கிடைப்பது குளிர்பானங்கள் மூலமாகும். இக்காரியத்தில் ஐஸ்க்ரீம், மிட்டாய்களை குளிர்பானங்கள் பின்னுக்குத் தள்ளிவிட்டது. க்ரெடிட் நியூஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட் நடத்திய ஆய்வு இதனை தெரிவிக்கிறது. ஒரு கப் குளிர்பானத்தில் எட்டு ட்யூஸ்பூன் சர்க்கரை அடங்கியிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது மனித உடலில் சாதாரணமாக இருக்கவேண்டிய சர்க்கரையின் அளவை விட அதிகமாகும். உடல் பருமனுக்கும் காரணம் குளிர்பானங்கள்தாம் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். சர்க்கரை திரவ நிலையில் உடலுக்குள் சென்றால் விரைவாக உடலுக்குள் கரைந்து பெரிய அளவில் கலோரி ஒன்றிணைந்து
உடலுக்குள் நுழைவதற்கு காரணமாகிறது.

ஆகையால் பெரும்பாலோருக்கு டைப் 2 நீரழிவு நோய் மற்றும் உடல் பருமன் ஏற்பட காரணமாகிறது. உலக மக்களின் 20 சதவீதம் பேரும் உடல் பருமனாக உள்ளார்கள். அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் குளிபானங்களின் பயன்பாடு அதிகமாகும். சீனர்கள் தாம் குறைந்த அளவில் சர்க்கரையை உபயோகிக்கின்றனர். தினமும் ஏழு ஸ்பூன் சர்க்கரையை மட்டுமே அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...