Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 05, 2013

பதிவு செய்யும் பத்திரங்களை 'சிடி' ஆக வழங்கும் புதிய திட்டம் - ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு துறை அலுவலகங்களில் பதிவு செய்யும் பத்திரங்களை சிடி ஆக வழங்கும் புதிய திட்டத்தை நாளை (புதன்கிழமை) முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் பெற்று தரும் அரசுத்துறைகளில் வணிகவரித்துறை மற்றும் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பது பத்திரப்பதிவுத்துறை. குறிப்பாக 2012-2013 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு துறை ரூ.7,455.41 கோடி வருவாயை ஈட்டி தந்துள்ளது. தற்போது மேலும் இந்த துறையை நவீனப்படுத்துவதுடன், எளிமைப்படுத்தவும் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வருபவர்கள், பத்திரங்களை அலுவலகத்தில் பதிவு செய்யும் போது நடக்கும் நிகழ்வுகள் சிசிடிவி மூலம் பதிவு செய்யப்படுகிறது. பத்திரங்களை பதிவு செய்யவருபவர்கள் தேவைப்பட்டால்
ரூ.50 கட்டணம் செலுத்தி 'சிடி'யாக வாங்கிக்கொள்ளலாம். அதேபோல் பத்திரப்பதிவு செய்ய வருபவர்கள் பதிவு செய்ய வரும் நாள், நேரம் போன்றவற்றை முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு, அதற்கான நாள், நேரம் போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம். இதனால் கூட்டநெரிசலை தவிர்த்து 20 நிமிடங்களில் தங்கள் பதிவை பதிவு செய்துவிட்டு செல்ல முடியும். இந்த இரண்டு திட்டங்களையும் நாளை (புதன்கிழமை) முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

இதன் மூலம் பத்திரப்பதிவு அலுவலர்களுக்கும், பத்திரங்கள் பதிவுசெய்ய வருபவர்களுக்கும் வேலை எளிதாக இருக்கும். ரூ.9.70 லட்சம் செலவில், பதிவுத்துறை பயிற்சி மையத்திற்கென 21 கணினிகள், 3 லேசர் அச்சுப்பொறிகள், 1 தடையில்லா மின்சாரம் வழங்கும் சாதனம் மற்றும் 1 நகலெடுக்கும் இயந்திரங்களும் வாங்கப்பட்டு உள்ளது. ரூ.18.30 லட்சம் செலவில், பதிவுத்துறை அலுவலகங்களுக்கு வரும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக 5 ஆயிரம் பிளாஸ்டிக் நாற்காலிகளும் வாங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.5 லட்சம் செலவில், பதிவுத்துறையின் பல்வேறு அலுவலகங்களின் பயன்பாட்டிற்காக 164 சாய்வு மேஜைகள் வாங்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் கூறினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...