Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 07, 2013

மழையால் நீர் வரத்து அதிகரிப்பு: வீராணம் ஏரி மீண்டும் நிரம்புகிறது!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இருக்கும் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 74 கனஅடி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.5 அடி ஆகும்.

இந்த ஏரிக்கு மழைக்காலங்களில் செந்துரை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீர் செங்கல் ஓடை கருவாட்டு ஓடை வழியாக வரும். சாதாரண காலங்களில் மேட்டு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கீழணை வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும். இந்த ஏரியை நம்பி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாவை சேர்ந்த சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒருவாரமாக பெய்து வருவதால் ஏரிக்கு மழைநீர் வரத்து அதிகமாக உள்ளது. மேலும் காவிரியில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி நீர் வீதம் வடவாறு வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நீர்மட்டம் தொடர்ந்து
அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் 43.70 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 44.10 அடியாக உயர்ந்துள்ளது. முழு கொள்ளளவை எட்ட இன்னும் 3 அடி தண்ணீரே வர வேண்டும். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வீராணம் ஏரி முழு கொள்ளவை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே காவிரி நீர்வரத்தால் வீராணம் ஏரி இந்த ஆண்டு ஒரு முறை நிரம்பி உள்ளது. இப்போது மீண்டும் நிரம்பும் நிலையில் இருக்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...