Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 10, 2013

ஜப்பான் உருவாக்கிய ஆட்டோமேட்டிக் கார்!

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி காரை ஓட்டி பார்த்து மகிழ்ந்தார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.அமெரிக்காவில் சில வாரங்களுக்கு முன்பு தானியங்கி காரை கூகுள் நிறுவனம் சோதனை செய்து பார்த்தது. இந்நிலையில், ஜப்பான் நாட்டில் டொயோட்டா, நிசான், ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் தானியங்கி கார்களை தயாரித்துள்ளன.

சாலையில் ஏற்படும் விபத்துகளை குறைக்கவும், கவன குறைவால் ஏற்படும் தவறுகளை தடுக்கவும், கூகுள் எர்த் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி இந்த வகையிலான கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் சோதனை முறையில் உள்ள இந்த கார்கள் ஜப்பானில் வர்த்தக முறையில் தயாரிக்கப்பட்டு விட்டதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார்.

ஜப்பானின் முன்னணி கார் நிறுவனங்கள் தயாரித்துள்ள தானியங்கி காரில் அமர்ந்தால் போதும். கிளட்ச், கியர், பிரேக், சாலைகளில் ஓட்டம் போன்ற எல்லாவற்றையும் அதுவே பார்த்துக் கொள்ளும். இந்நிலையில், தானியங்கி காரில்
அமர்ந்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஓட்டி சென்றார்.சாலைகளில் காரில் சென்றபடி அதன் தொழில்நுட்ப வசதிகளை சோதனை செய்து பார்த்தார். இதற்கு ஜப்பானில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து ஷின்சோ அபே கூறுகையில், உலகிலேயே தொழில்நுட்பத்தில் ஜப்பான்தான் முதலிடத்தில் இருக்கிறது. வரும் பட்ஜெட்டில் இதுபோன்ற தானியங்கி வாகனங்களை தயாரிக்க நிதி ஒதுக்கப்படும் என்றார்.இந்த மாதம் டோக்கியோவில் நடைபெற உள்ள வாகன கண்காட்சியில் தானியங்கி கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
நன்றி:தமிழ்முரசு 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...