Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 26, 2013

பயிர் காப்பீடு கோரி மறியல்: 110 விவசாயிகள் கைது!

காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 110 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு தமிழகஅரசே காப்பீடு தொகையைச் செலுத்தியது. இதில் 50 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரமும், 50 சதவீதத்துக்கு கீழ் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு மூலம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால் காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் 1109 ஹெக்டேர் நிலங்களுக்கு மட்டும் ரூ.15 ஆயிரம் வீதம் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது காட்டுமன்னார்கோவில் வட்டம் குமராட்சி பகுதிக்கு ரூ.4 லட்சத்துக்குக் குறைவான தொகையை விவசாயிகளுக்கு பயிர் காப்பீடுத் தொகை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு இழப்பீடுத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி
விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமையில் கென்னடி, மதிவாணன், அன்பழகன், லட்சுமிகாந்தன் ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குமராட்சி கடைவீதியிலிருந்து ஊர்வலமாகச் சென்று வேளாண்மை அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 110 பேரை குமராட்சி போலீஸார் கைது செய்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...