Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 03, 2013

பாட்னா குண்டுவெடிப்பு: விசாரணையில் மர்மம் நீடிப்பு!!

பாட்னாவில் நரேந்திரமோடி கலந்துகொண்ட பேரணியில் குண்டுவெடித்த சம்பவத்தைக் குறித்த விசாரணையில் நாட்கள் செல்லச் செல்ல மர்மம் அதிகரிக்கிறது. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து பிடிக்கப்பட்ட நபர் நேற்று முன் தினம் மரணமடைந்தார். அவரது மரணம் குண்டுவெடிப்பில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்டது என்று போலீஸ் கூறுகிறது.

பீகாரில் தர்பாங்காவில் இருந்து கைதுச் செய்யப்பட்ட மெஹர் ஆலம் என்ற பதின்பருவ வயது நபரைக் குறித்த கதையில் புதிய திருப்பம்ஏற்பட்டுள்ளது. முதலில் ஊடகங்களின் முன்னால் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி என்று அறிமுகப்படுத்திய மெஹர் ஆலம் என்ற குளிர்சாதனப்பெட்டி மெக்கானிக், பின்னர் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் பயன்படுத்தும் இன்ஃபார்மராக மாறியுள்ளார். மெஹர் ஆலம் என்.ஐ.ஏவின் கஸ்டடியில் இருந்து தப்பி பின்னர் பிடிபட்டதாக செய்தி வெளியானது. இதன் பின்னர் மெஹர் ஆலம் போலீஸ் இன்ஃபார்மராக கூறப்படுகிறார். ஆனால், என்.ஐ.ஏவின் கூற்றை மெஹர் ஆலத்தின் தந்தை மஹ்மூத் ஆலம் மறுக்கிறார். நண்பருடன் சொந்தக் கிராமமான சிதவுளியில் இருந்து தர்பாங்காவிற்கு செல்லும் வழியில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி(பாட்னா குண்டுவெடிப்பிற்கு முன்பு) மெஹரை என்.ஐ.ஏ அதிகாரிகள்
பிடித்துச் சென்றார்கள் என்று மஹ்மூத் ஆலம் கூறுகிறார்.

வெள்ளை பொலேரா வாகனத்தில் வந்த ஐந்து பேர் வலுக்கட்டாயமாக மெஹரை பிடித்துச் சென்றுள்ளனர் என்று நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். உறவினர்கள் மெஹரை தேடி டி.எஸ்.பிஅலுவலகத்திற்கு சென்ற பிறகும் தகவல் எதனையும் தெரிவிக்க டி.எஸ்.பி அலுவலகம் மறுத்துவிட்டது. மெஹர் கடத்தப்பட்டார் என்று பஹாதூர்பூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தபோதும் போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவுச் செய்ய மறுத்துவிட்டது என்று மஹ்மூத் ஆலம் கூறுகிறார். அன்று மாலை என்.ஐ.ஏ அதிகாரிகள் மெஹரை விடுவித்தனர். 29-ஆம் தேதி புத்தகயாவுக்கு வந்து தங்களை சந்திக்கவேண்டும் என்று அவர்கள் மெஹரிடம் கூறினர்.

அக்டோபர் 29-ஆம் தேதி புத்தகயாவுக்கு வர மெஹர் ஆலத்திற்கு நோட்டீஸ் 23-ஆம் தேதி அளிக்கப்பட்டதாக என்.ஐ.ஏ ஊடகங்களுக்கு பின்னர் தெரிவித்திருந்தது. இந்தியன் முஜாஹிதீன் குறித்து விசாரணை நடத்த மெஹரை அழைத்தபோதும் பாட்னா குண்டுவெடிப்பில் முக்கிய சூத்திர தாரி என்று போலீஸ் கூறும் தஹ்ஸின் அக்தரைக் குறித்துதான் என்.ஐ.ஏ விசாரணை நடத்தியதாக மெஹர் ஆலம் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஸலஃபியா மதரஸாவில் குர்ஆன் படிக்கும்போது மெஹர், தஹ்ஸீன் அக்தரை சில தடவைசந்தித்திருந்தார் என்றும் மஹ்மூத் ஆலம் கூறுகிறார். புத்தகயாவுக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிறகு என்.ஐ.ஏவுடன் தொடர்பு கொண்டபோது பாட்னாவில் உள்ள அலுவலகத்திற்கு வருமாறு கூறப்பட்டது. மெஹர் ஆலம் தந்தையுடன் பாட்னா அலுவலகத்திற்கு சென்றுள்ளார். மறுநாள் மெஹர் ஆலத்தை அனுப்புகிறோம் என்று கூறி மஹ்மூத் ஆலத்தை என்.ஐ.ஏ அதிகாரிகள் அனுப்பிவிட்டனர். ஆனால், மெஹரை தர்பாங்காவில் வைத்து என்.ஐ.ஏ கைதுச் செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 29-ஆம் தேதி இரவு தனது மகன் தன்னை அழைத்தபோது அவன் அதிகம் பயந்துபோனதாக உணர்ந்தேன் என்று மஹ்மூத் ஆலம் கூறுகிறார்.

ஆனால், மறுநாள் காலை பீகார் முஸஃபர்பூரில் வைத்து என்.ஐ.ஏ கஸ்டடியில் இருந்து மெஹர் தப்பிவிட்டதாக செய்தி வெளியானது.அதே நாள் மாலை உத்தரபிரதேசத்தின் கான்பூரில் வைத்து மீண்டும் மெஹர் கைதுச் செய்யப்பட்டதாக செய்தி வந்தது.ஆனால், தீவிர பாதுகாப்பு கொண்ட என்.ஐ.ஏவின் கஸ்டடியில் இருந்து தனது மகன் தப்பிச் சென்றதை நம்பமுடியவில்லை என்றுமஹ்மூத் ஆலம் கூறுகிறார். மகன் என்.ஐ.ஏவின் இன்ஃபார்மராக இருந்தார் என்பதைக் குறித்தும் மஹ்மூத் ஆலம் கேள்வி எழுப்புகிறார்.என்.ஐ.ஏவின் நோட்டீஸ் கிடைக்கும் வரை அவர்கள் மெஹரை சந்திக்கவேயில்லை என்று மஹ்மூத் ஆலம் உறுதியாக கூறுகிறார்
-thoothuonline.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...