Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 09, 2013

காட்டுமன்னார்குடியில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடம்! தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

காட்டுமன்னார்குடியில் ரூ.26 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்–அமைச்சர் திறந்து வைத்தார்.

கால்நடை மருந்தகம் திறப்பு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சத்தி 66 ஆயிரம் செலவில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடத்தை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி நேற்று திறந்து வைத்தார். அதையொட்டி, காட்டுமன்னார்குடியில் கால்நடை மருந்தக கட்டிடத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் தலைமை தாங்கினார். காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், ஒன்றியக்குழு தலைவர் மணிகண்டன், பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.ஜி.ஆர்.தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் கணேசன் வரவேற்றார். விழாவில், மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் பேசியதாவது:–

கடலூர் மாவட்டத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரம் செலவில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அதி நவீன மற்றும் தரம் உயர்த்தப்பட்ட 21 கால்நடை மருத்துவமனைகளை நேற்று தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதன்மூலம், 147 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 645 கால்நடைகளும்
பயன்பெறும். மேலும், ஏழை விவசாய கூலி தொழிலாளர்களின் நலனை கொண்டு விலையில்லா ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரத்து 200 கறவை மாடுகளும், 55 ஆயிரத்து 580 ஆடுகளுக்கும் இந்த கால்நடை மருத்துவமனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் பேசினார்.

இதில், தாசில்தார்கள் வெங்கடாசலம், அன்பழகன், பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், கால்நடை உதவி இயக்குநர் சதாசிவம், கால்நடை வளர்ப்போர் சங்க தலைவர் டாக்டர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், உதவி மருத்துவ அலுவலர் சிலம்பரசன் நன்றி கூறினார்.
source:தினத்தந்தி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...