Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 31, 2013

காட்டுமன்னார்கோவிலில் இருந்து சென்னைக்கு ஒரு புதிய பஸ்!-தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு 26 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. இதையொட்டி கடலூர் பஸ் நிலையத்தில் போக்குவரத்து அதிகாரிகள், அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழகம் முழுவதும் 333 புதிய பஸ்கள் மற்றும் 81 புனரமைக்கப்பட்ட பஸ்கள் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து 26 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்படி ஏற்கனவே இருந்த வழித்தடங்கள் மூலம் கடலூரில் இருந்து விருத்தாசலம், திட்டக்குடி, தொழுதூர், திருச்சிக்கு 9 பஸ்களும், கடலூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக 2 புதிய பஸ்களும், கடலூரில் இருந்து திண்டிவனம் வழியாக 2 விரைவு பஸ்கள் சென்னைக்கும் இயக்கப்பட்டன.

அதேபோல் காட்டுமன்னார்கோவிலில் இருந்து சிதம்பரம், பண்ருட்டி, திண்டிவனம் வழியாக சென்னைக்கு ஒரு புதிய பஸ்சும்,

காட்டுமன்னார்கோவிலில் இருந்து ஸ்ரீமுஷ்ணத்துக்கு ஒரு புதிய பஸ்

சிதம்பரத்தில் இருந்து கடலூர், புதுச்சேரி வழியாக 4 புதிய பஸ்களும்,

சிதம்பரத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலத்துக்கு 2 புதிய பஸ்களும், விருத்தாசலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் வழியாக சென்னைக்கு 2 புதிய பஸ்களும்,

வடலூரில் இருந்து பண்ருட்டி, கோலியனூர், திண்டிவனம் வழியாக சென்னைக்கு

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்!-இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

19கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாடு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நேற்று திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் காதர் மொய்தீன் தலைமை தாங்கினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மின்தடை அதனால் தொழில்கள் மூடப்படும் சூழ்நிலை இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வாக்குகள் சிதறி விடும் சூழலை ஏற்படுத்தி விடாத நிலைப்பாட்டை உருவாக்கிடுமாறு தமிழக கட்சிகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது. ஜனநாயக சமய சார்பற்ற சமூக நீதியை நிலைநிறுத்தும் திராவிட நெறியின் பாரம்பரியத்தை தொடருமாறு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
10 சதவீதம் இட ஒதுக்கீடு
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், அரசியல் சாசனத்தின் 44–வது பிரிவை நீக் கவேண்டும். நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரையை ஏற்று கல்வி, வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு 15 சதவீதமும், அதில் 10 சதவீதம் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த 15 சதவீத இட ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டால் பிறப்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் 8.4 சதவீதம் சிறுபான்மையினருக்கு ஒதுக்கி அதில் 6 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான தனி உள் ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து உயர்த்தி தரவேண்டும். இஸ்லாமாக மதம் மாறியவர்களுக்கு பிற்பட்ட வகுப்பினர் சான்று வழங்க வேண்டும்.
பள்ளிவாசல் திருமண பதிவை ஏற்று பாஸ்போர்ட்டு வழங்க அனுமதிக்க வேண்டும், காஜி சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவியில் முஸ்லிம்கள் நியமிக்கப்பட வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம் நீதிபதிகளை நியமிக்க வேண்டும், திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் அகலப்படுத்தும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரணி
முன்னதாக திருச்சி கோகினூர் தியேட்டர் அருகில் இருந்து முஸ்லிம் லீக் பேரணி புறப்பட்டது. இந்த பேரணியில் மாவட்ட வாரியாக தொண்டர்கள்

டிசம்பர் 28, 2013

நடுராத்திரியில் ரெய்டு செய்து ஜம்மு காஷிமீர் கிரிக்கெட் வீரர்களை அவமானப்படுத்திய போலீஸ்!

ஜம்மு காஷ்மீர் அணி ஐதராபாத் அணியுடன் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடியது. அன்று கிறிஸ்துமஸ் தினம் உலகம் முழுதும் திருக்கோயில்களுக்கு மக்கள் சென்று கேக்குகளையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்ட நேரத்தில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வீரர்களை பெரும் அவமானத்திற்கு உள்ளாக்கியுள்ளது ஜம்முபோலீஸ்.
புதனன்று ஐதராபாத் உடனான அந்த ரஞ்சி போட்டியின் இறுதி நாள், இந்த ஆண்டு ஜம்மு அணி சிறப்பாக ஆடி வருகிறது. மறுநாள் ஆட்டத்திற்கான கடுமையான ஆயத்தங்களைச் செய்துவிட்டு வீரர்கள் விடுதியில் நன்றாக உறங்கிவிட்டனர்.

அப்போது திடீரென ஆயுதங்களுடன் போலீஸ் கும்பல் வீரர்கள் தங்கியிருக்கும் விடுதி அறைக்குள் புகுந்து அடையாள அட்டையை எடு, அது இது என்று ஆயிரத்தெட்டு கேள்விகளைக் கேட்டு அவர்களை ஏதோ பயங்கரவாதிகளைப் போல் விசாரணை செய்துள்ளது ஜம்மு போலீஸ். 
இது குறித்து ஜம்மு காஷ்மீர் அணி வீரர் சமியுல்லா பெய்க் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

"இரவு முழுதும் தூங்கமுடியவில்லை. நடு இரவில் போலீஸ் எங்கள் அறைக்கு வந்து சோதனை நடத்தினர். நடு ராத்திரி சுமார் 1.15 மணிக்கு வந்த போலீஸ் சுமார் ஒன்றரை மணி நேரம் கேள்வி மேல் கேட்டு எங்கள் அறையை புரட்டிப் போட்டுவிட்டுச் சென்றது.

நாங்கள் அறையை தாழிடவில்லை. நாங்கள் ரஞ்சி கிரிக்கெட் வீரர்கள்தானே. ஆனாலும் நடு ராத்திரியில் திபு திபுவென ஆயுததாரிகளாக போலீஸ் அறைக்குள் நுழைந்தது இப்போதும் குலை நடுங்குகிறது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ரஞ்சி காலிறுதிக்குள் முதன் முதலாக நுழைந்து வரலாறு படைக்கும் முயற்சியுடன் ஜம்மு காஷ்மீர் அணி விளையாடி வருகிறது.

யார் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பது ஜம்மு போலீசுக்கு தெரியாதா என்ன? இதுபோன்ற ஒரு கேவலமான ரெய்டை நடத்திவிட்டு பதில் கேட்டால் ஜம்மு ஐ.ஜி.ராஜேஷ்குமார் கூறுவது கேவலத்தின் உச்சக்கட்டம்:இது ஒரு ரொடீன் செக், சோதனை நடத்தியவர்களுக்கு அவர்கள் ரஞ்சி வீரர்கள் என்று தெரியாது. விதிமுறைகளின் படி தேடுதல் வேட்டை நடத்தினோம். இந்தச் சோதனை இங்கு மட்டுமல்ல நகரம் முழுதும் நடத்தப்பட்டுள்ளது. என்று கூறுகிறார்.

இது குறித்தும் தனது ஃபேஸ்புக்கில் கருத்து கூறிய வீரர் சமியுல்லா பெய்க், "வேண்டுமென்றே நடத்தப்பட்ட இழிவான ரெய்டா அல்லது ரொடீன் செக்கா என்பது பற்றி கவலையில்லை, விளையாட்டு வீரர்களை இதுபோன்று நடத்துவது முறையல்ல என்றே கூறுகிறேன்" என்றார்.

பயிற்சியாளர் அப்துல் கயும் கூறுகையில், ரெய்டு நடத்திய நேரம்தான் பிரச்சனை" என்று அடக்கி வாசித்துள்ளார்.

போலீஸ் தங்கள் இஷ்டத்திற்கு எங்கு வேண்டுமானாலும் நுழையலாம், என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைதான் ஜம்மு காஷ்மீரில் நிலவுகிறது என்பதற்கு பல சாட்சியங்களில் மிகவும் பருமையான சாட்சியமாக இந்த கேவலமான ரெய்டு அமைந்துள்ளது.

வீரர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் நிச்சயம் ஜம்மு போலீஸ் தகவல் திரட்டியிருக்கும், அப்படியிருக்கையில் திடீரென விடுதிக்குள் புகுந்து மறுநாள் இறுதி நாள் ஆட்டத்தில் பங்கேற்கும் வீரர்களை ஏதோ பயங்கரவாதிகள் போல் நடத்துவது என்ன அராஜகம்?

ஜம்மு காஷ்மீர் பற்றி கேள்வி கேட்பாரற்று போய்க்கொண்டிருக்கிறது என்றுதான் இதுபோன்ற கேவலமான அடக்கு முறை சம்பவங்கள் நம்மை எண்ணத் தூண்டுகின்றன.

இந்தியாவின் ஒரு பகுதியே ஜம்மு காஷ்மீர் என்று உரிமை கொண்டாடும் இந்தியா தனது ராணுவம் போலீஸ் ஆகியவற்றைக் கொண்டு அங்கு செய்து வரும் அராஜகங்கள் அது இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்பதையே

வீராணம் ஏரி கரையோரத்தில் குப்பைகள் எரிப்பு வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்!

காட்டுமன்னார்கோவில்:லால்பேட்டை பேரூராட்சி நிர்வாகம், வீராணம் ஏரிக்கரையில் குப்பைகளைக் கொட்டி எரிப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதுடன், சுற்றுச்‹ழல் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள லால்பேட்டை பேரூராட்சியில், 75 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

இப்பேரூராட்சியில் அகற்றப்படும் குப்பைகளை, மக்கும் குப்பை , மக்காத குப்பை என தரம் பிரித்து கொட்டுவதற்காக, சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் சாலையோரத்தில்ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், பேரூராட்சியின் குப்பைகளை சிதம்பரம்- காட்டுமன்னார்கோவில் மெயின் ரோடு ஓரத்தில் கொட்டி வந்தனர். எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் இச் சாலையில் ஓரத்தில் கொட்டிய குப்பைகளை தீயிட்டு கொளுத்தி வந்தனர். இதனால் கரும்புகை சாலையில் சூழ்ந்து, எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து அங்கு குப்பைகள் எரிப்பது நிறுத்தப்பட்டு, தற்போது வீராணம் ஏரிக்கரையில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகள், காற்றில் பறந்து ஏரியில் விழுகின்றன.

இந்நிலையில், ஏரிக்கரையில் கொட்டப்படும் குப்பைகளையும் அவ்வப்போது தீயிட்டு எரித்து வருகின்றனர். இதனால், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை சூழ்ந்து, விபத்து ஏற்படும்

மோடிக்கு எதிரான ஸாக்கியா ஜாஃப்ரியின் மனு தள்ளுபடி! ஸாக்கியா மேல்முறையீடு!

அஹ்மதாபாத்: குஜராத் இனப்படுகொலைகளை மோடி முன்னின்று நடத்தினார் என்று கூறப்பட்டும் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக அஹமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி, குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இந்திய வரலாறு காணாத முஸ்லிம் இனப்படுகொலையின் சூத்திரதாரியாக செயல்பட்டார் என்று வலுவான குற்றச்சாட்டு எழுந்தது. குஜராத் இனப்படுகொலையின்போது அஹ்மதாபாத் நகரில் நடைபெற்ற கொடூரமான கூட்டுப் படுகொலை சம்பவத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரி உள்ளிட்ட 68 பேர் குல்பர்கா குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற தீ வைப்புத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். இஹ்ஸான் ஜாஃப்ரி மிகக் கொடூரமான முறையில் ஹிந்துத்துவ ஃபாஸிஸ்டுகளால் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

ஃபாஸிஸ வன்முறையாளர்கள், தமது குடியிருப்புப் பகுதியைச் சுற்றி வளைத்த நிலையில், இஹ்ஸான் ஜாஃப்ரி பல காவல்துறை அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் தொடர்பு கொண்டு தம்மைக் காப்பாற்றும்படி கேட்டும் யாரும் அவருக்கு உதவவில்லை. இந்தக் கூட்டுப்படுகொலையைத் தடுக்க காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தப் பின்னணியில் கூட்டுப் படுகொலையின் போது நரேந்திர மோடி ஆற்றிய பங்கு குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் என்று கொல்லப்பட்ட இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஐக்கியா ஜாஃப்ரி விசாரணை கோரியிருந்தார். கோத்ராவில் 59 கரசேவகர்கள் ரயிலில் எரித்துக் கொல்லப்பட்டதற்கு இந்துக்கள் பழி தீர்க்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் மோடி காவல்துறை அதிகாரிகளிடம் சொன்னதாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டும் குற்றம் சாட்டியிருந்தார். எனவே இனப்படுகொலையில் மோடிக்கு உள்ள நேரடிப் பங்கை வெளிக் கொண்டு வரக் கூடிய முக்கிய வழக்காக இந்த வழக்கு கருதப்பட்டது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னணியை ஆராய மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ யின் முன்னாள் இயக்குனர் ஆர் கே ராகவன் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்தக் குழு கடந்த 2010 ஆம் ஆண்டு மோடியிடம் 9 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தியது. அதன் பிறகு இது அளித்த அறிக்கையில், வழக்கு தொடுக்கும்

டிசம்பர் 26, 2013

TNTJ நடத்தும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டி சிறை நிரப்பும் போராட்டம்!

நாட்டின் விடுதலைக்காக கல்வியையும் வேலை வாய்ப்புகளையும் தியாகம் செய்த நம்மைத் தவிர மற்ற அனைவரும் நம்மை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பல மடங்கு மேலே சென்றுவிட்டார்களே, அதுபற்றிச் சிந்தித்தீர்களா?



கூலித் தொழிலாளியாகவோ...

இறைச்சிக் கடைக்காரராகவோ...

நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ...

கொல்லுப்பட்டரையில் கடின வேலை செய்பவராகவோ...

தோல் பதனிடும் தொழிலாளியாகவோ...

பெட்டிக்கடை நடத்துபவராகவோ...

குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவராகவோ இருப்பவர்கள் நம் சமுதாயத்தில் மட்டும் மிக அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?

சொந்த நாட்டில் தகுந்த கல்வியும், தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு நாம் மட்டும் வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல்படுவது ஏன்?

ஒட்டகம் மேய்த்தல்...

சாலை போடுதல்...

கழிவுகளைச் சுத்தம் செய்தல்...

உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டடங்களில் கூலித் தொழில் செய்தல்...

தனியாருக்குக் கார் ஓட்டுதல்...

வீடுகளைச் சுத்தம் செய்தல்...

சமையல் வேலை செய்தல்...

இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்த்து நீங்கள் மட்டும் ஏன் அவல நிலையில் இருக்க

டிசம்பர் 24, 2013

நீதி செத்தது ! ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்ட குஜராத் கலவர குற்றவாளிகளுக்கு ஜாமீன்!

நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற குஜராத் இனப்படுகொலையில் பல ஆயிரம் மக்கள் கொத்து கொத்தாக கொள்ளபட்டனர்,இதில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகின்றன அவற்றில் மெக்‌ஷானா மாவட்டத்தில் திப்தா தர்வாஜா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த 9 வழக்குகளில் இந்த வழக்கும் ஒன்று.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திவந்த சிறப்பு நீதிமன்றம் 20க்கும் மேற்பட்டோரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இதனை அடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 21 குற்றவாளிகள் சார்பில் குஜராத் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையின் போது ஐகோர்ட்டு குற்றவாளிகள் 21 பேருக்கும் கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.குற்றவாளிகளுக்கு ரூ. 25 ஆயிரம் பிணைய தொகையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.

பல ஆண்டுகளாக ஒன்றும் அறியாத என் அருமை இஸ்லாமிய சகோதரர்கள் அவர்கள் செய்த குற்றம் என்ன என்று கூட தெரியாமல் விசாரணையே இல்லாமல் சிறையில் வாடுகின்றனர்.அவர்கள் பல முறை ஜாமீன் கேட்டும் இந்த அரசாங்கமோ அல்லது நீதித்துறையோ சற்றும் கண்டுக்கொள்ளவில்லை.அவர்கள் முஸ்லிம்கள் என்கின்ற காரணத்தை தவிர வேறு என்ன

கெஜ்ரிவால் மந்திரிசபையில் இளைஞர்கள் பட்டாளம்! ஆட்டம் காணும் மோடி

டெல்லியில் ஆட்சி அமைக்கும் ஆம் ஆத்மி கட்சி பல வகைகளில் புதிய சாதனை படைப்பதாக உள்ளது. டெல்லி அரசியல் வரலாற்றில் இதுவரை முழு மெஜாரிட்டி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைத்தது இல்லை. முதல் முதலாக ஆம்ஆத்மி கட்சி வெளியில் இருந்து ஆதரிக்கும் காங்கிரஸ் உதவியுடன் மிகவும் துணிச்சலாக ஆட்சியில் அமர்கிறது.

 ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கோஷத்தை இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுமே சொல்லி வருகின்றன. ஆனால் அந்த கோஷத்தை முதன்மைப்படுத்தி முதன், முதலாக ஆம்ஆத்மி கட்சிதான் ஆட்சியைப் பிடித்துள்ளது.

ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஒரு கட்சி, மிக குறுகிய காலத்தில் தலை நகரில் ஆட்சியைப் பிடித்து இருப்பது அரசியல் களத்தில் புதிய புரட்சியாக கருதப்படுகிறது. இந்த புரட்சியை இளைஞர்கள் ஒருங்கிணைந்து அரங்கேற்றி இருப்பது இந்திய அரசியலில் ஒரு மாற்றுப் பாதைக்கு அவர்கள் வழி வகுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை டெல்லியில் ஆட்சி செய்த பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே வயதானவர்கள்தான். அரசியலில் பழுத்த பழமாக இருந்தவர்கள். அவர்களையெல்லாம் விளக்குமாறு சின்னத்தால் அடித்து துரத்தி விட்டு, இளைஞர் பட்டாளத்தை அரசியல் களத்துக்கு கெஜ்ரிவால் கொண்டு வந்துள்ளார்.

முதல்–மந்திரியாக பொறுப்பு ஏற்க உள்ள அவரும்

டிசம்பர் 22, 2013

துருக்கி: 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹிஜாப் அணிய சுதந்திரம்!

இஸ்தான்புல்: துருக்கி நாட்டுப் பெண்கள் தலைமுக்காடுடன் கூடிய ஹிஜாப் எனப்படும் பூரண ஆடை அணிய, கடந்த 14 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, ஹிஜாப் அணிய சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் நான்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலை முக்காடு அணிந்து வந்து துருக்கி நாடாளுமன்றத்தில் செயலாற்றினர். அவர்களுக்கு மற்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பெண்கள் தலைமுக்காடு அணிந்து வரத் தடையில்லை; விருப்பம் போல அணிந்து வரலாம் என்ற உரிமை அளிக்கப்படுவது பெண்ணுரிமைக்கும் மதசுதந்திரத்திற்கும் மதிப்பளிப்பதாக உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்தளித்தனர். கடந்த 14 ஆண்டுகளாக ஹிஜாப் மற்றும் தலை முக்காடு அணிவதற்கு இருந்த தடை இதன்மூலம் முடிவுக்கு வந்துள்ளது. "இனி என் தலை முக்காட்டை நான் தொடர்ந்து அணிவேன்; நீக்க மாட்டேன் - என்னுடைய இந்த முடிவை எல்லோரும் வரவேற்பார்கள் என்றே எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார் துருக்கியின் நாடாளுமன்ற உறுப்பினரான கோனுல் பெகின் ஷகுல்பே என்கிற பெண். 20 ஆம் நூற்றாண்டில் இறுதியில் 1999 ஆம் ஆண்டு, அமெரிக்கத் துருக்கியரான மெர்வ் கவாக்சி என்னும் பெண்மணி துருக்கிய நாடாளுமன்றத்திற்கு தனது பதவியேற்புக்காக தலை முக்காடுடன் வந்த போது,அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் துருக்கியின் குடியுரிமையையும் அவர் இழக்க நேர்ந்தது.

அப்போதைய துருக்கி பிரதமர் புலண்ட் ஈசிவிட் தலை முக்காடு அணிவதற்கு எதிராகக் கடுமையாகப் பேசினார். "இந்தப் பெண் அவருக்குரிய இடத்திற்குச் செல்லட்டும்; இங்கிருந்து வெளியேறட்டும்" என்று தலை முக்காடு அணிந்திருந்த மெர்வ் கவாக்சியைப் பார்த்து அப்போது கூறப்பட்டது நினைவு கூரத்தக்கது. இச்சம்பவத்திற்குப் பின்னர் துருக்கியிலிருந்து வெளியேறிய கவாக்சி, பெண்களின் மத சுதந்திரத்திற்காகப் போராடினார்."முஸ்லிம் பெண்கள் தங்கள் நம்பிக்கைகளின் படி வாழும் சுதந்திரம்

முஸ்லிம்களுக்கு மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்!-கே.எம். காதர் மொய்தீன்

தமிழகத்தில் 55 லட்சம் முஸ்லிம்கள் உள்ளதால் முஸ்லிம்களுக்கு மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொய்தீன் தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

 ஜனநாயகம், சமயச் சார்பின்மை, சமூக நீதி ஆகியவையே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொள்கை. இதையே அரசியலமைப்புச் சட்டமும் வலியுறுத்துகிறது. கேரளத்தில் காங்கிரஸ்டன்  கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் திமுகவுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. பாஜகவை பொருத்தவரையில் அக்கட்சி எங்களுக்கு விரோதி கிடையாது. ஆனால் மோடி கிராம ராஜ்யம் பற்றி பேசுவதற்குப் பதிலாக, ராம ராஜ்யம் பற்றி பேசி வருகிறார். மதச்சார்பற்ற கொள்கையில் அவர் எங்களிடம் இருந்து முரண்படுகிறார். திமுக தலைவர் கருணாநிதியைப் பொருத்தவரையில், அவர் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவாக அறிவித்துவிட்டார்.

தமிழகத்தில் 55 லட்சம் முஸ்லிம்கள் உள்ளதால் முஸ்லிம்களுக்கு மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். . திருச்சியில் டிசம்பர் 28-ஆம் தேதி மஹல்லா ஜமா அத் மாநில

டிசம்பர் 21, 2013

கொள்ளுமேடு ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகள்!

நமது கொள்ளுமேடு ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த விபரங்களை ஊராட்சி மன்றத் தலைவர் எம்.டி.சிராஜுதீன் வெளியிட்டுள்ளார்.அதன் விபரங்கள் வருமாறு…

இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2012-2013 ஆண்டில் இது வரை பத்து வீடுகள் கட்டித் தரப் பட்டுள்ளன.

100 நாள் வேலை திட்டத்தில் நமது ஊரை சேர்ந்த ஏராளமான பெண்களுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

தண்ணீர் விநியோகம் தடை பட்டிருக்கும் சமயங்களில் பொதுமக்களின் வசதிக்காக தெற்குத் தெரு,மேலத் தெரு,சலாமத் புதுத் தெரு,கூபாத் தெரு ஆகிய இடங்களில் அடி பைப் வசதி செய்யப்பட்டுள்ளது.

மாதத்திற்கு நான்கு தடவைகள் (வாரம் ஒரு தடவை) கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

காட்டுமன்னார்குடி ஒன்றியத்திலேயே சொந்தமாக கொசு மருந்து அடிக்கும் மெஷின் வைத்திருக்கும் ஒரே ஊராட்சி கொள்ளுமேடு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

water-manual-pipehousing-project-002100-day-work-project-002100-day-work-project-001


-செய்தி&படங்கள்: எம்.டி.ஜியாவுத்தீன்&kollumedu.com

ரேஷன் கார்டுகள் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு

பொதுமக்கள் பயன்பெறும் வகை யில் தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அரசு வெள்ளிக் கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

குடும்ப அட்டைகள்
நடப்பு 2013ம் ஆண்டுக்கு புதுப்பிக்கப்பட்ட குடும்ப அட்டை களின் பயன்பாட்டுக் காலம் 31.12.2013 அன்றுடன் முடிவடை கிறது. தற்போது உடற்கூறு முறையிலான தேசிய மக்கள் தொகை பதிவாளர் கணக்கெடுப்பு பதிவுகளின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் (smart family card) வழங்க திட்டமிட‌ப்பட்டுள்ளது.

எனினும், மத்திய அரசின் தேசிய மக்கள் தொகை பதிவாள ரின் கணக்கெடுப்பு பணி முழுமை யாக முடிந்து தகவல் தொகுப்பினை பெற காலதாமதமாகும் என்பதால் மின்னணு குடும்ப அட்டையை 2014-2015-ல்தான் வழங்க முடியும் என கருதப்படுகிறது. எனவே 31.12.2013 அன்றுடன் முடிவடைய உள்ள புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம் 01.01.2014 முதல் 31.12.2014 வரை மேலும் ஓராண் டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மானிய விலையில் பருப்பு வகைகள்
தமிழ்நாட்டில் செயல்படுத்தப் பட்டு வரும் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு 3 லட்சத்து 17 ஆயிரம் மெட்ரிக் டன் தரமான அரிசி 1 கோடியே 85 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம்

டிசம்பர் 17, 2013

மோடி அரசை தோலுரித்துக்காட்ட ஆம் ஆத்மி கட்சியின் துடைப்பம் யாத்திரை!

அஹ்மதாபாத்: 2014-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு முன்னோடியாக மோடி அரசின் ஊழலை தோலுரித்துக் காட்ட ஆம் ஆத்மி கட்சி குஜராத் மாநிலத்தில் துடைப்பம் யாத்திரையை நடத்த உள்ளது.

துடைப்பம் யாத்திரை ஜனவரி 26-ஆம் துவங்குவதாக கூறிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் தினேஷ் வகேலா, குஜராத் அரசியலில் கழிவை சுத்தப்படுத்துவதே தங்களுடைய நோக்கம் என்று குறிப்பிட்டார். ஆம் ஆத்மிகட்சியின் 2 நாட்கள் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.பல்வேறு மாநில தேர்தல் நடக்கும் முன்பே குஜராத்தில் மட்டும் 5000 தீவிர தொண்டர்கள் இருந்தனர் என்று வகேலா கூறுகிறார். ஆனால் டெல்லியில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்குப் பின்னர் கட்சியின் தீவிர தொண்டர்களின் எண்ணிக்கை 17 ஆயிரமாக

டிசம்பர் 16, 2013

கையால் எழுதப்பட்ட பழைய பாஸ்போர்ட் 2015 ஆண்டிற்கு பிறகு செல்லாது!

இது தொடர்பாக கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சசிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சர்வதேச விமான போக்குவரத்து ஆணைய உத்தரவின்படி உலகம் முழுவதும் வினியோகிக்கப்பட்ட கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளுக்கு 24.11.2015-ந் தேதியோடு கெடுவிதிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் 25-ந் தேதி முதல் கம்ப்யூட்டரால் பதிவு(நான் மெஷின் ரீடபிள் பாஸ்போர்ட்) செய்ய இயலாத அதாவது கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளுக்கு உலக நாடுகள் விசாக்கள் வழங்க மறுத்து விடும். புதிய கையால் எழுதப்பட்டு போட்டோ ஒட்டிய பாஸ்போர்ட்டுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு வினியோகிக்கப்பட்டன. அந்த பாஸ்போர்ட்டுகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய முடியாத பாஸ்போர்ட்டுகளாக கருதப்படுகின்றன.இந்திய அரசு கடந்த 2001-ம் ஆண்டு முதல் கம்ப்யூட்டர் பதிவு செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள் வினியோகித்து

டிசம்பர் 15, 2013

10, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பார் கோடுடன் கூடிய தேர்வுத்தாள் அறிமுகம்!

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ள 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் விடைகளை எழுதும் தாள்களை புத்தக வடிவில் வழங்கும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய அரசு தேர்வுகள் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுவரை இந்த தேர்வுகளுக்கான விடைகளை மாணவர்கள் எழுத முதலில் வழங்கப்படும் 4 பக்கங்கள் கொண்ட பேப்பரில் முதல் பக்கத்தில் மாணவன் பெயர், தேர்வு எண், பாடம் போன்ற விவரங்கள் எழுதுவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். மாணவன் அந்த 4 பக்கங்களை எழுதிய பின்னர் கூடுதலாக தேவைப்படும் பேப்பர்களை தனியாக வாங்கி பதில் எழுதி அதை பிரதான 4 பக்கங்களுடன் இணைத்து தேர்வுக்கூட பொறுப்பாளரிடம் வழங்குவார். இந்த நடைமுறையில் உள்ள பல்வேறு குறைகளை களையவும், திருத்துவதற்கும், மாணவனின் எண்ணை யாரும் அறியா வண்ணம் கம்ப்யூட்டர் பார்கோட் மூலம் பிரின்ட் செய்து அனைத்து விவரங்களையும் விடைத்தாளிலேயே அச்சடித்து வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

அதேபோல் கூடுதல் தாள்களையும் பிரதான பேப்பருடன் இணைத்து எல்லா பாடத்தேர்வுகளுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பிளஸ் 2 தேர்வுக்கு தலா ஒரு பாடத்துக்கு 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாள்களை நோட்டுப்புத்தக வடிவில் வழங்கப்படும். அதுவே 10ம் வகுப்புக்கு 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் வழங்கப்படும். அதோடு ஆள்மாறாட்டத்தை தடுக்க ஒவ்வொரு மாணவனின் புகைப்படமும் அதில் இருக்கும். தேர்வு கூட அறையில் விடைத்தாளை வாங்கும் மாணவன் அதில் கையொப்பம் மட்டுமே இட வேண்டியிருக்கும். மாணவனின் புகைப்படத்துடன்

கொள்ளுமேடு சாலை மறியல் பத்ரிக்கை செய்தி!

காட்டுமன்னார்கோவில், காட்டுமன்னார்கோவில் அருகே ரேஷன் கடை திறக்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திடீர் மறியல்:

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது கொள்ளுமேடு கிராமம். இங்கு சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக இப்பகுதியை சேர்ந்த சுமார் 700–க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், சமீப காலமாக ரேஷன் கடையில் பணிபுரிந்து வரும் விற்பனையாளர் சரியான நேரத்திற்கு கடையை திறக்கப்பதில்லை என தெரிகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை. இதனால், ஆத்திரமடைந்த சுமார் 200–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு நேற்று கொள்ளுமேடு பஸ் நிறுத்தத்தில் வீராணம் ஏரிக்கரை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு :

இதுகுறித்து தகவல் அறிந்த புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், பொது விநியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் வாசுதேவன், வட்ட வழங்கல் பிரிவு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்ததை நடத்தினர். இதில், கொள்ளுமேடு ரேஷன் கடை இனி சரியான முறையில் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்வதாகவும், சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீது நடவடிக்கை

கெஜ்ரிவால் புது வகையான அரசியலை தந்துள்ளார்: அரசியல் வல்லுநர்கள் கருத்து

புதுடில்லி : ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய வகையான அரசியலை நாட்டிற்கு தந்துள்ளதாகவும், உழைத்து களைத்த இந்திய மக்களை பலப்படுத்தும் விதமாக இந்த அரசியல் உருவெடுத்துள்ளதாகவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் டிவி.,யின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு சச்சின் உள்ளிட்ட 25 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. முன்னதாக நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியலாளர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு அரசியல், அறிவியல், தொழில்நுட்பம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரச்னைகளும் தீர்வுகளும் என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அரசியல் குறித்த விவாதத்தின் போது பேசிய அமிர்தியா சென், அரவிந்த் கெஜ்ரிவாலை வெகுவாக பாராட்டினார். கெஜ்ரிவால் குறித்து பேசிய அவர் கூறியதாவது :

பொருளாதார ரீதியாக சாமாணிய மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்துள்ள புதிய அரசியல் ஒரு வளர்ச்சி பாதையை ஏற்படுத்தி உள்ளது; அன்னா ஹசாரேவுடன் இணைந்து மக்களிடையே ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்த கெஜ்ரிவால் அரசியலுக்கு வந்தது சரியான முடிவு அன்னா ஹசாரே நீதித்துறைக்கு அப்பாற்பட்டதை நடத்த எண்ணுகிறார் இது சரியானத அல்ல அவர் கெஜ்ரிவாலுடன் அரசியலில் இணைவதே சரியானது கெஜ்ரிவாலின் வெற்றி ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் தோல்வி கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறையில் அரசு செய்ய வேண்டியது என்ன என்பதை கெஜ்ரிவால் தெளிவுபடுத்தி

டிசம்பர் 14, 2013

கொள்ளுமேட்டில் பல நாட்களாக திறக்கபடாத ரேசன் கடை பொதுமக்கள் கொந்தளிப்பு!

கொள்ளுமேட்டில் கடந்த 16 நாட்களாக எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நியாய விலை கடை திறக்கபடாமல் இருந்தது.கடையை திறக்க ஊழியர்கள் எந்த முயற்சியும் எடுக்காத நிலையில் பொது மக்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் காட்டுமன்னார்குடி சேத்தியாதோப்பு,சிதம்பரம் செல்லும் வீராணம் ஏரிக்கரை சாலையில் போக்குவரத்து தடைபட்டது.அரசு இயந்திரத்தின் அலட்சியப்போக்கிற்கு சரியான பாடம் புகுத்தியுள்ளனர் கொள்ளுமேட்டுவாசிகள்.

படங்கள்:சைபுல்லா 

அறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்!

முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத பிற மதங்களைச் சேர்ந்த அல்லது மதக்கோட்பாடுகளில் ஈடுபாடு காட்டாத அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வெளியிட்ட சில கருத்துக்கள் இவை:

முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். - ஜவஹர்லால் நேரு

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள்இ ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே அப்படியின்றி அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள். - எஸ். எச். லீடர் -

இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவர் மறுக்க முடியும்? - வாஷிங்டன் இர்விங் -

நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது. - டாக்டர் ஜான்சன் -

முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். - பெர்னாட்ஷா -

திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை. - நெப்போலியன்

இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும்

முல்லாவுக்கு மரணத்தண்டனை:வங்காளதேசத்தில் கலவரம்!

டாக்கா:ஷேக் ஹஸீனா அரசின் பாசிச நடவடிக்கையின் ஒரு பகுதியாக வங்கதேச ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த தலைவர் அப்துல் காதர் முல்லா(65) தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாஅத்தே இஸ்லாமி தொண்டர்கள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்கும், அவாமி லீக் தொண்டர்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் அப்துல் காதர் முல்லாவிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ததையடுத்து, வியாழக்கிழமை இரவு அவர் தூக்கிலிடப்பட்டார். பரித்பூர் மாவட்டத்தில் அப்துல் காதர் முல்லாவின் சொந்த கிராமமான அபிராபாத்தில் வெள்ளிக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவர் பிரிவான ஸத்ரே ஸபீர் உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அவர்கள் போலீசுடன்

டிசம்பர் 12, 2013

நாளைய ஜும்ஆ உரையின் தமிழாக்கம் -ஐக்கிய அரபு அமீரகம்




கொள்ளுமேடு,காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் முக்கிய பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பழஞ்சநல்லூர், கண்டமங்கலம், குருங்குடி, மோவூர், வீரானந்தபுரம், நாட்டார்மங்கலம், ஆயங்குடி, கஞ்சங்கொல்லை, புத்தூர், முட்டம், விளாகம், டி.நெடுஞ்சேரி, விருந்தாங்கநல்லூர், கந்தகுமாரன், கொள்ளுமேடு,மதுராந்தகநல்லூர், குமராட்சி, ம.அரசூர், பருத்திக்குடி, வெள்ளூர், வெண்ணையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இத்தகவலை சிதம்பரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுதப் போர் மூண்டால் 200 கோடி பேர் கொல்லப்படுவர்!

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுஆயுதப் போர் மூண்டால் சுமார் 200 கோடி பேர் கொல்லப்படுவார்கள் என்று சர்வதேச அமைப்பு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச மருத்துவர்களின் அணுஆயுத போர் தடுப்பு கூட்டமைப்பின் (ஐ.பி.பி.என்.டபிள்யூ.) இணைத் தலைவர் ரா ஹெல்பன்ட், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1947-ம் ஆண்டு முதல் இந்தியா வும் பாகிஸ்தானும் 3 முறை கடும் போர்களில் ஈடுபட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத போர் மூண்டால் பேரிழப்புகள் ஏற்படும். உலக மக்கள் தொகையில் 3-ல் ஒரு பங்கு மக்கள்டுகொல்லப்படு வார்கள். அதாவது சுமார் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் கொல்லப்படும் அபாயம் உள்ளது. தெற்காசியாவில் அணுகுண்டுகள் வெடித்தால் அமெரிக்காவின் வேளாண் உற்பத்தி 10 சதவீதம் குறைந்துவிடும். அருகில் உள்ள சீனாவில் கோதுமை உற்பத்தி 50 சதவீதம் பாதிக்கப்படும். இதனால் சீனாவில் உணவுப் பஞ்சம் ஏற்படும். அணுகுண்டு கதிர்வீச்சால் சுமார் 100 கோடி பேர் கொல்லப்பட்டால், அதன்பின் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்படும் உணவுப் பஞ்சத்தால் மேலும் 100 கோடி

மஹராஷ்ட்ரா சட்டப்பேரவையில் மூட நம்பிக்கைக்கு எதிரான மசோதா தாக்கல்!

மஹராஷ்டிர சட்டப் பேரவையில் மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதாபுதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.சமூக நீதித்துறை அமைச்சர் சிவாஜிராவ் மொகே இந்த மசோதாவை தாக்கல்செய்தார். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், பாதுகாப்பானசமூகச் சூழலை உருவாக்குவதற்கும், அப்பாவி பொதுமக்களை மூடநம்பிக்கைகளில் இருந்து பாதுகாக்கவும் இந்த மசோதா வழி வகுக்கும் என்று சட்டப்பேரவையில் சிவாஜிராவ் கூறினார்.

டிசம்பர் 11, 2013

ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

ஓரினச் சேர்க்கை என்பது அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய வகையில் குற்றம்தான் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமல்ல என, கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பில், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377-ன்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர், பரஸ்பரம் விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம், உத்கல் கிறிஸ்தவ கவுன்சில், அபோஸ்தல் தேவாலய கூட்டமைப்பு போன்ற மத அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஓரினச் சேர்க்கை குற்றம்தான் என உச்ச நீதிமன்றத்தால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

'ஓரினச் சேர்க்கை குற்றம். இந்தக் குற்றத்தில் ஈடுபடுவோர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்க முடியும்' என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
மேலும், சட்டப் பிரிவு 377-ஐ நீக்குவது குறித்து அரசே முடிவு செய்ய

கடலூரில் 14–ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்!

                                                   
தனியார்   நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாவலர் பணிக்கு ஆட்களை
தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாம் கடலூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 14–ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், எஸ்.எஸ்.எல்.சி. கல்வித் தகுதியுடைய 19 முதல் 40 வயதுக்குட் பட்டவர்கள் தங்கள் மதிப்பெண் சான்று நகல், பள்ளி மாற்றுச்சான்றிதழ், தேர்தல் அடையாள அட்டை நகல், குடும்ப அடையாள அட்டை நகல், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். இதில் தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது என்று

டிசம்பர் 07, 2013

சிதம்பரம் பகுதியில் பால் விற்பனை செய்யும் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

சிதம்பரம் பகுதியில் மொத்தமாக பால் விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கலப்பட பால் மற்றும் காலாவதியான பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அதைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா, கீரப்பாளையம், புவனகிரி ஒன்றிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அருண்மொழி, குணசேகரன் ஆகியோர் நேற்று காலை சிதம்பரம் நகரில் உள்ள பால் பாக்கெட்டுகளை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

சபாநாயகர் தெரு, கீழத்தெரு மாரியம்மன் கோவில், அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள கடைகளுக்குள் சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பால் பாக்கெட்டுகளை எடுத்து தயாரிப்பு தேதியை சரி பார்த்தனர். மேலும் காலாவதி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு நடத்தினார்கள். குளிர்சாதனபெட்டி சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா? எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா பால் மொத்த விற்பனை கடைகளில் இருந்து பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை ஆய்வு செய்வதற்காக சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் பரிசோதனை மையத்திற்கு

டிசம்பர் 05, 2013

”டிசம்பர் 6” பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு! (Tamil & English)

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 



பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.
வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.
‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.
ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.
இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக்

கடலூர் மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 11 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து!

கடலூர் மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 11 பேரின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்து வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி அங்கமுத்து உத்தரவின் பேரில் கடலூர், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முக்கிய சந்திப்புகளில் நின்று 4,225 வாகனங்களை தணிக்கை செய்தனர்.

இதில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்தல், அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை வாகனத்தில் பொருத்தி இருத்தல், அதிக பிரகாசமான முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டது, சிவப்பு நிற பிரதிபலிப்பான்கள் ஒட்டாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 277 வாகன ஓட்டிகளின் மீது வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி அங்கமுத்து கூறியதாவது:–

ரூ.17½ லட்சம் அபராதம்: கடலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை செய்தனர். இதில் அளவுக்கு அதிகமாக சுமை ஏற்றி சென்றது தொடர்பாக 61 வாகன ஓட்டிகள் மீதும், பக்கவாட்டு கண்ணாடிகளில் கருப்பு நிற பிளாஸ்டிக் பேப்பர்களை ஒட்டிவைத்தது

2015 ஆம் ஆண்டில் சந்திரனில் காய்கறிகள், தாவரங்கள் வளர்க்க திட்டம்-நாசா

மனிதர்கள் வாழவும் மற்றும் பூமியின் இயற்கையான செயற்கைகோளில் பணியாற்ற முடியும் என்பதை புரிந்து கொள்ள, 2015-ம் ஆண்டில், சந்திரனில் டர்னிப் மற்றும் துளசி போன்ற தாவரங்கள் மற்றும் காய்கறிகளை வளர்க்க நாசா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிலவின் மேற்பரப்பில், ஒரு கமர்ஷியல் லூனார் லேண்டர் போர்டில் தாவரங்களை அனுப்பி வளர்க்க உள்ளோம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த முயற்சியை லூனார் பயிர் வளர்ச்சி வசிப்பிட அணி மூலம் இயக்கப்படுகிறது. அவர்கள், காலநிலை கடுமையான சக்திகளுக்கெதிராக தாவரங்களை பாதுகாக்க கன்டெய்னர்களை வடிவமைத்து அதனை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். சந்திரனில் ஐந்து முதல் பத்து நாட்களுக்குட்பட்ட காலப்பகுதியில் தாவரங்கள் முளைப்பதற்காக ஒரு மிக எளிய அடைக்கப்பட்ட வளர்ச்சி அறை உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. இந்த கன்டெய்னர்