Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 18, 2013

ஓட்டுப்போட்ட உடன் அத்தாட்சி சீட்டு நாகலாந்து இடைத்தேர்தலில் அறிமுகம்!!

நமது நாட்டில் தேர்தல்களில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் இன்றளவும் சந்தேகங்கள் எழுப்பி வருகின்றன. அத்தாட்சி சீட்டு இந்த நிலையில், ஒரு வாக்காளர் தனது ஓட்டை பதிவு செய்தபின்னர், அதற்கான அத்தாட்சி சீட்டு உடனே வெளிவருகிற முறையை மின்னணு வாக்கு எந்திரத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் எழுப்பினர்.இது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்தது. அத்துடன் இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஏற்ற வகையில், 1961–ம் ஆண்டைய தேர்தல் நடத்தை விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு
வந்தது.

சோதனை ரீதியில் அறிமுகம்:  இப்போது, இந்த முறையை நாகலாந்து மாநிலத்தில், நாக்சென் (எஸ்.டி.) சட்டசபை தொகுதியில் அடுத்த மாதம் 4–ந் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் சோதனை ரீதியில் அறிமுகம் செய்ய தேர்தல் கமிஷன் முடிவு செய்து, அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.எனவே நாட்டிலேயே முதல்முறையாக நாகலாந்தில், நாக்சென் சட்டசபை தொகுதி மக்கள் இடைத்தேர்தலில் வாக்களிக்கிறபோது, விரும்பிய வேட்பாளருக்கு தாங்கள் ஓட்டு பதிவு செய்ததை உறுதி செய்யும் அத்தாட்சி சீட்டை காண முடியும். இருப்பினும் இந்த அத்தாட்சி சீட்டை வாக்காளர்கள் கையில் எடுத்து வந்து விட முடியாது. அது வாக்குச்சாவடியில் தனியாக சேமித்து வைக்கப்படும்.

நாடு முழுவதும் அமல் இது தொடர்பாக நாக்சென் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்ற உள்ள அதிகாரிகள், ஊழியர்கள், ஓட்டுப்போட உள்ள வாக்காளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என தேர்தல் கமிஷன் கூறி உள்ளது.இந்த திட்டம் பிரச்சினையின்றி வெற்றி அடையும் பட்சத்தில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...