Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 16, 2013

மறக்கடிக்கப்பட்ட மகாகவி அல்லாமா முஹம்மது இக்பால்!!

இந்திய திருநாட்டின் விடுதலை நாளை கொண்டாடும் இந்த நேரத்தில் நாட்டின் விடுதலைக்காக தன உயிராலும், உணர்வாலும் பாடுப்பட்ட உண்மையான தலைவர்களைப் பற்றி அறிய நாம் கடமைப்பட்டுள்ளோம்.அந்த வரிசையில் ஒரு மாபெரும் கவிஞராக.. பழுத்த தேசபக்தராக வாழ்ந்த மகாகவி அல்லாமா முஹம்மது இக்பால் அவர்களின் நினைவுகள் இன்று அடியோடு மறக்கடிக்கப்பட்டதற்கு காரணம்.. அவர் முஸ்லிம் என்பதைத் தவிர வேறு காரணமில்லை.

 1938 இல், லாகூரில் மகாகவி இக்பால் மரணமடைவதற்கு சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் ஜவஹர்லால் நேருவும் கலந்து கொள்கிறார். அவர் மேடையிலிருந்த மகாகவி இக்பாலை நோக்கி இப்படி சொல்கிறார்: "ஜின்னாஹ் ஒரு அரசியல்வாதி! நீங்களோ ஒரு தேசபக்தர்!" பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணகர்த்தா இவர் என்று சொல்பவர்களுக்கு இது நெத்தியடியாகும். இருந்தும் மகாகவி இக்பால் தொடர்ந்து பாசிச சந்திகளால் பழிக்கப்படுகிறார்.

இந்திய துணைக்கண்டத்தின் பன்முகப் பண்பாட்டை மிகவும் விரும்பியவர் மகாகவி. இக்பால் அவர்களால் எழுதப்பட்ட "ஸாரே ஜகான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா ஹமாரா" என்று தொடங்கும் பாடல் 1947 ஆகஸ்ட்டில் ஆங்கிலேயர் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதன்முதலாக ஒலித்தது. மறைந்த நேரு அவர்களால் அதிகம் கையாளப்பட்ட பாடலும் இதுவாகும்.

உலகத்தில் சிறந்தது எங்கள் இந்த தேசம். 
இந்த பூந்தோட்டம் எங்களுடையது......... என நீண்டு செல்கின்றன பாடல் வரிகள். ராணுவத்தின் முழக்கமாக விளங்கும் இந்தப் பாடலின் வரிகள், இந்தியாவின் சுதந்திர மற்றும் குடியரசு தினங்களில் மட்டும் மக்களின் காதுகளுக்கு எட்டும். அவை நாள்தொறும் நாட்டில் ஒலிக்கப்பட வேண்டும். பொதுமையும், இந்திய மண்ணின் பண்பையும் விளக்கும் இப்பாடல் இந்திய தேசிய கீதமாய் அங்கீகரிக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டது அதை எழுதியவர் ஒரு முஸ்லிம்
என்ற காரணத்தால்..

நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த சமுதாயத்தின் வாரிசுகளின் மனதில் உண்மையான வரலாறு விதைக்கப்பட வேண்டும்.

நாளைய வரலாற்றை எழுதுவது நாமாக இருக்க வேண்டும்.
நேற்றும் இன்றும் கதையாக கழிந்துவிட்டன.
நாளை உதயமாவதை எதிர்பார்த்திரு! என்ற அல்லாமா இக்பால் அவர்களின் கவிதை வரிகள் உயிரோட்டம் பெற வேண்டும்.

இப்படிப்பட்ட மகாகவிஞரை நாடும் மறந்தது. நாமும் மறந்தோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...