Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 21, 2013

மோசமான நிலையில் பிச்சாவரம் நுழைவுவாயில் சாலை!

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தின் நுழைவு வாயில் சாலையில் நீர் தேங்கி குட்டை போல் உள்ளதால், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் சிதம்பரம் நகருக்கு வரும் புறவழிச் சாலையில் வழியாக வந்து பாதியில் பிரியும் கிள்ளை செல்லும் சாலையின் வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம். பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீ. மேற்கே உப்பனாறும், தெற்கே கீழத்திருக்கழிப்பாலை கிராமமும், வடக்கே சுரபுண்ணைக் காடுகளும் எல்லைகளாக உள்ளன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

இக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் செடிகளும் உள்ளன. கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் 4400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகுகுழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. தினந்தோறும் வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி மூலம் சுரபுண்ணைக் காடுகளை ரசித்து வருகின்றனர்.

இந்த சுற்றுலா வளர்ச்சி மையத்தின் நுழைவு வாயில் பகுதியில் சாலையில் நீர் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. அந்த குட்டையை கடந்துதான் படகுகுழாமுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நிலை
உள்ளது.எனவே அழகுமிருந்த சுரபுண்ணைக் காடுகளைப் பார்க்க, பல்வேறு நாடுகளிலிருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அச்சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாகும்.
-dinamani 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...