Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 30, 2011

விடியலை நோக்கியே பயணம் -எம். அப்துல் ரஹ்மான் எம்.பி

பிரியமுள்ள பிறை நெஞ்சுக்கு!

எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளுமே தனித்தனியே போட்டியிட்டு அவரவர் பங்கிற்கு மக்களிடத்திலிருந்து முடிவுகளையும் பெற்றிருக்கின்றனர். ஐந்து மாதங்களுக்கு முன்னர்தான் சட்டமன்றத் தேர்தல் முடிவுற்று ஆளுங்கட்சிக்கு அபரிமிதமான இடங்கள் கிடைத்து, மக்களின் மனநிலையில் எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படாத நிலையில் தமிழகம் இன்னொரு தேர்தலைச் சந்தித்திருப்பதால் உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்திற்குரியவை அல்ல என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

ஆனால், சிறுபான்மை முஸ்லிம் சமுதாயம் சிந்திக்க வேண்டிய உண்மை வெளிச்சம் ஒன்று நிரூபணம் ஆகியிருக்கிறது. இந்த வெளிச்சம் வெளிப்படும் தருணம் விரைவில் தேர்தல் முடிவுகளாகத் தென்படும் என்று பிறைமேடை இதழின் முந்தைய தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.அது என்ன?

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் அதிகமாக, இன்னும் சொல்லப் போனால் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக வாழக்கூடியவை. அவை இஸ்லாமிய மார்க்கக் கலாச்சாரப் பெருமை கொண்ட பகுதிகள். காலம், காலமாக முஸ்லிம் சமுதாயப் பிரமுகர்களில் யாரேனும் ஒருவர்தான் அந்த நகராட்சியின், அல்லது பேரூராட்சியின் அல்லது ஊராட்சியின் தலைவராக இருந்திருப்பார். ஆனால், துரதிருஷ்டவசமாக இதுபோன்ற பல பகுதிகளில் நம்முடைய மார்க்க ஒழுக்க நிலைகளைக் காப்பாற்றி, பேண முடியுமா? என்கிற கேள்விகள் எழக்கூடிய அளவுக்கு இந்த தேர்தலில் முஸ்லிம் அல்லாதவர்கள், சில இடங்களில் முஸ்லிம் விரோத அரசியல் நடத்துவோர்கூட பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். ஜனநாயக ரீதியில் நம்முடைய வாழ்த்துக்களைச் சொன்னாலும்,சட்டரீதியாக

காட்டுமன்னார்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் நியமனம்

காட்டுமன்னார்குடி: ஒன்றியத் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் 16வது வார்டு மணிகண்டனும், தி.மு.க., சார்பில் 4வது வார்டு பாலமணிகண்டனும் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 18 ஓட்டுகளில் 11 ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க., மணிகண்டன் வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அலுவலர் இந்துமதி சான்றிதழ் வழங்கினார். பின்னர் நடந்த துணைத் தலைவர் தேர்தலில் 9வது வார்டில் சுயேட்சையாக வெற்றி பெற்ற ஆறுமுகம் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

போலியோவை முற்றாக ஒழிக்க உறுதிப்பாடு !

இளம்பிள்ளை வாதத்தை (போலியோவை) அடியோடு ஒழிப்பதற்கான உறுதியை பேர்த் நகரில் கூடிய பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மீண்டும் பூண்டிருக்கிறார்கள்.இந்த நோய்க்கெதிரான போராட்டத்துக்காக 5 கோடி டாலர்களை வழங்க ஆஸ்திரேலியா முன்வந்திருக்கிறது.

உலகிலேயே இன்னும் 4 நாடுகளில் மாத்திரந்தான் இந்த போலியோ நோய் தற்போது தாக்கிவருகின்றது.இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மாத்திரந்தான் போலியோ நோயால் பாதிக்கப்படுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் கால்கள் வாதத்தினால் பாதிக்கப்பட்டு வலுவிழந்துபோகும்.

உலகில் 99 வீதம் இந்த நோய் ஒழிக்கப்பட்டு விட்டது.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் இந்த நோயை முற்றாக அழிப்பது என்று உறுதி பூண்டிருக்கிறார்கள்.இதற்காக தமது 5 கோடி டாலர்களை வழங்கும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் உறுதியளித்தார்.
இந்த போலியோ இன்னமும் தாக்குகின்ற நாடுகளில்கூட அந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தாலும், அந்த நோய் மிகவும் பலமாக தொற்றக்கூடியது. இலகுவில் அது மீண்டும் தொற்றத்தொடங்கிவிடும்.ஆகவே அந்த நோயை அடுத்து வருகின்ற 2 வருடங்களுக்குள் முற்றாக அழிப்பது என்பது உலகின் கரங்களிலேயே இருக்கிறது என்று

அக்டோபர் 29, 2011

இன்று துல் ஹஜ் முதல் நாள் – தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிறை பார்க்கப்பட்டது.

தமிழகத்தில் சென்னை,திருவள்ளுர்,ராமநாதபுரம்,நீலகிரி,தஞ்சை,உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பிறை பார்க்கப்பட்டதால் இன்று (28-10-2011) மக்ரிப்லிருந்து தமிழகத்தில் துல் ஹஜ் பிறை 1 ஆரம்பமாகின்றது. இதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் ஹஜ் பெருநாள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

லிபியா, தூனிசியா, எகிப்தை உள்ளடக்கிய பிராந்திய இஸ்லாமிய கூட்டமைப்பு - கர்ளாவி

புகழ்பெற்ற இஸ்லாமிய பிரச்சாரகரும் சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவருமான ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி இஸ்லாமிய ஜனநாயக கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார். லிபியா, தூனிஸியா, எகிப்து ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து இதனை ஆரம்பிக்குமாறு அவர் வலியுறுத்தினார். சென்ற வாரம் கட்டாரில் இடம்பெற்ற குத்பாப் பிரசங்கத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் ‘‘கடாபி பூமியில் அட்டூழியம் புரிந்தார், கொலை செய்தார், மக்களை விரட்டியடித்தார், ஆயிரக்கணக்கானவர்களை காயப்படுத்தினார், அபூ ஸலீம் சிறைக் கைதிகள் 1200 பேரை ஏதும் நடக்காதது போன்று ஒரே இரவில் கொலை செய்தார்.இன்றைய தினம் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாளாகும். தனக்கு தெய்வீக சக்தி உண்டு என்ற நினைப்பில் அரக்கத்தனம் புரிந்து கொண்டிருந்த ஒருவர் வீழ்ந்துபோன நாள் இது. கடாபி குறித்து நான் எதிர்வு கூறியபோது சொன்ன முதல் வார்த்தை கடாபி மக்களால் கொல்லப்படுவார் என்பதுதான். கடாபி தலைவராகவும், தத்துவ ஆசிரியராகவும் இருக்க விரும்பினார். தனக்கு ஒரு நூல் இருக்க வேண்டும் என விரும்பி பசுமை நூலை எழுதினார். இப்பொழுது எல்லாம் முடிந்துவிட்டது.

இதேபோல்தான் வரலாற்று ஆதாரங்களை வைத்து உறுதியாகச் சொல்கிறேன் - சிரியாவின் பஷர் அல் அஸதிற்கும் யெமனின் அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கும் கடாபிக்கு நேர்ந்த இதே கதிதான் நடக்கும்.
கடாபிக்குப் பின்னரான காலப்பகுதி குறித்துப் பேசும்போது, லிபிய மக்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் முன்னைய ஆட்சிக்கு ஒத்துழைத்தவர்களை பழிதீர்க்க் வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். லிபிய அரசு அவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு

அக்டோபர் 28, 2011

டாக்டர் மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்!!!


கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.

இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.

ஆனால், என்ன ஆச்சரியம்! உலகத்தில் வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களை குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி (ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.

நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல; குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரை திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்தவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம்கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்.

நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்பட்டிருந்தது மில்லரின் வியப்பைக் கூட்டியது.

குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்ஆனில் ஒரு வசனம் அவரைத் தூக்கிவாரிப்

5 நாட்களில் உலக மக்கள் தொகை 700 கோடி

இன்னும் 5 தினங்களில் உலக மக்கள் தொகை 700 கோடியைத் தொடும் என்று அய்.நா. தெரிவித்துள்ளது.

ஐ.நா. சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட உலக மக்கள் தொகை தொடர்பான அறிக்கையில் இந்தத் தகவல் கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் கூறியிருப்பது: மருத்துவத்துறையின் வளர்ச்சி யால் உலகம் முழுவதும் மனிதர்களின் ஆயுள்காலம் நீடித்துள்ளது. மக்கள் தொகை பெருக்கமே இதைக் காட் டுகிறது.

மக்கள் தொகைப் பெருக் கத்தால் மனித சமுதாயத்துக்கு பல சாதகமும், பாதகமும் உண்டு. இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. உலக மக்கள் தொகையில் 10-24 வயதுடையோர் 180 கோடி பேர் உள்ளனர்.

இவர்களுக்கு வரும் காலங்களில் அரசியல், பொருளாதார துறைகளில் நல்ல வாய்ப்பு உள்ளது. இதை இவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வரும் காலங்களில் முதலீடு செய் வதில் உலக மக்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும்.

இளைஞர் களின் எதிர் கால நலனைக் கருத்தில் கொண்டு இத்துறைகளில் அதிக முதலீடு அவசியமாகிறது. இதில் அவர்களின் தனிப்பட்ட நலன் மட்டு மல்லாது ஒட்டுமொத்த

ஆதார் அடையாள அட்டை'க்கு விண்ணப்பிக்கும் பணி துவக்கம்!

சென்னை:""தேசிய அளவில் செல்லத்தக்க, "ஆதார் அடையாள அட்டை'யை, ஒவ்வொரு குடிமகனும் அவசியம் பெற வேண்டும்,'' என, முன்னாள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி பேசினார்.


இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, தமிழக அளவில், "ஆதார் அடையாள அட்டை'க்கான விண்ணப்பங்களை பெறும் பணி, சென்னை அண்ணா சாலை தலைமை தபால்நிலையத்தில் நேற்று துவங்கியது. இப் பணியை துவக்கி வைத்து, முன்னாள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி பேசியதாவது.

ஒருவரின் இருப்பிட நிரூபணத்திற்கு முக்கிய ஆவணங்களாக உள்ள ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவை, மாநில அளவில் மட்டும் செல்லத்தக்கவை.

தற்போதைய பணி சூழலில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அவ்வப்போது மாறுதலில் செல்ல வேண்டியுள்ளது.

அப்போது அவர்களிடம், இருப்பிட நிரூபணத்திற்கான ஆவணங்கள் இல்லாததால், ரேஷன் அட்டை, சமையல் காஸ் இணைப்பு, வங்கி கணக்கு துவங்குவது போன்றவற்றில், நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது.

இக்குறைகளை களையும் வகையில், தேசிய அளவில் செல்லத்தக்க, "ஆதார் அடையாள அட்டை' வழங்கும் திட்டம், தபால் துறை மூலம், நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில்

அக்டோபர் 27, 2011

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை “செம்மொழி” மாநாடு தீர்மானம் செயல் வடிவம் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு ஜுன் மாதம், தி.மு.க அரசு தமிழ் “செம்மொழி” மாநாட்டை நடத்தியது, அப்போது “மொழி” உணர்வைவையும், இளைஞர்கள் தமிழில் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் வளர்க்கும் விதமாக, தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20% முன்னுரிமை வழங்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கு பின்னர் அரசு வேலைக்கு பலர் தேர்வு செய்யப் பட்டிருந்தாலும் முறையான ஆரசு ஆணை இல்லாததால் இந்த சட்டம்
நடைமுறை படுத்தப்படவில்லை.

கடந்த செப்டம்பர் மாதம் தமிழில் படித்தவர்களுக்கு 20% முன்னுரிமை வழங்கலாம் என்று அரசு “ஆணை” வெளியிடப்பட்டதை தொடர்ந்து சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு “நகல்” எடுக்கும் பணியாளர் ஒருவரும், தலைமை செயலகத்தில் ஒருவரும், தலைமை செயலகத்தில் “லிப்ட் ஆப்ரேட்டர்” பணியிடம் ஓன்று மட்டும் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்

சவூதி நாட்டின் புதிய இளவரசர் தேர்வு

சவூதி மன்னரின் அடுத்த வாரிசான புதிய இளவரசராக அந்நாட்டு உள்துறை அமைச்சர் நியமிக்கப்படவுள்ளார். சவூதி மன்னராக அப்துல்லா உள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சவூதிஅரேபியா நாட்டின் இளவரசராக இருந்த சுல்தான் கடந்த வாரம் காலமானார்.

இதைத்தொடர்ந்து புதிய இளவரசரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போது உள்துறை அமைச்சராக உள்ள‌ நையீப் என்பவர் புதிய இளவரசராக தேர்வு செய்யப்படலாம் எனவும், அதற்கான முறையான ஒப்புதல் அரண்மணை ‌நிர்வாகம் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்துறை அமைச்சரான நையீப்,78. கடந்த 1933-ம் ஆண்டு பிறந்தார். கடந்த 1975-ம் ஆண்டு உள்துறை அமைச்சராக

அக்டோபர் 26, 2011

துனீசியா:இடைக்கால அரசுக்கு அந்நஹ்ழா தலைமை வகிக்கும்

துனீஸ்:அரபுலகில் ஜனநாயக புரட்சிக்கு வித்திட்ட துனீசியாவில் நடந்த முதல் தேர்தலில் இஸ்லாமிய கட்சியான அந்நஹ்ழா வெற்றிப்பெற்றுள்ளது. 217 உறுப்பினர்களைக்கொண்ட இடைக்கால பாராளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் 90க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளதாக அந்நஹ்ழாவின் செய்தித்தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

40 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று ஏகாதிபத்திய அரசின் காலத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தடைச்செய்யப்பட்டு கொடூரமான அடக்குமுறைக்கு ஆளான அந்நஹ்ழா வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது.

அந்நஹ்ழா என்றால் எழுச்சி அல்லது மறுமலர்ச்சி எனப்பொருளாகும்.

15 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள இடதுசாரி கட்சிகளான இத்திஹாத்துல் கட்சியும், காங்கிரஸ் ஃபார் தி ரிபப்ளிக் கட்சியும் அடுத்த இடங்களை பிடித்துள்ளன. அந்நஹ்ழாவின் முக்கிய எதிர்கட்சியான ப்ரோக்ரஸிவ் டெமோக்ரேடிக் கட்சி நல்ல போட்டியை கொடுக்கும் என எதிர்பார்த்தபொழுதிலும் நான்காவது இடத்திற்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.

தேசிய அளவிலும், மாவட்ட அளவிலும் இஸ்லாமிய கட்சிதான் முதல் இடத்தை பிடித்துள்ளது என அந்நஹ்ழாவின் தேர்தல் மேலாளர் அப்துல் ஹமீத் ஜலஸி தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை பொதுத்தேர்தலுக்கு முன்னால் நடந்த 18 வெளிநாடு வாழ் துனீசிய மக்களுக்கான தொகுதிகளுக்கான தேர்தலில் அந்நஹ்ழா ஒன்பது இடங்களை

லிபியாவில் இனி ஷரீயா (இஸ்லாமிய) ஆட்சி

மிஸ்ரடா : லிபியாவில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் உடல் அமைந்துள்ள இடம் பொதுமக்கள் பார்வையிட முடியா வண்ணம் பூட்டப்பட்டுள்ளது. கடாபியின் மரணத்துக்கு பின் அங்கு என்ன வகையான ஆட்சி முறை நிலவும் என்ற சர்ச்சை இருந்து வந்தது.

இச்சூழலில் இது குறித்து கருத்து தெரிவித்த லிபிய இடைக்கால குழுவின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் "லிபியாவில் இஸ்லாமிய ஷரீயா சட்டங்களே இனி ஆளும்" என்றும் "அதற்கு மாற்றமான சட்டங்கள் அகற்றப்படும்" என்றும் தெரிவித்தார்.

மேலும் லிபியா ஒரு இஸ்லாமிய நாடாக இருப்பதால், "ஷரீயாவை முதன்மை சட்டமாக வைத்திருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?" என்று வினா எழுப்பிய ஜலீல் "கடாபியின் ஆட்சி முறையில் பலதார மணம் தடை செய்யப்பட்டு இருந்தது. அது ஷரீயாவுக்கு மாற்றமாக இருப்பதால் பலதாரமணத்தை தடை செய்யும் சட்டம் இன்றிலிருந்து அகற்றப்படுகிறது" என்றார்.

source:inneram.com

"உள்ளே வராதே!" - அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கடும் எச்சரிக்கை!

பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தான் பிராந்தியம் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தைக் கைவிட வேண்டும், பாகிஸ்தானில் உள்ளே நுழையுமுன் ஒன்றுக்குப் பத்துமுறை யோசித்துக்கொள்ளுங்கள்" என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அஷ்ஃபாக் ஃபர்வேஸ் கயானி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"ஆஃப்கானிலிருந்து வடக்கு வஜீரிஸ்தானில் நுழையும் முன் ஒன்றுக்குப் பத்தாக யோசித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், பாகிஸ்தான் அணு ஆயுதம் கொண்டுள்ள நாடு. அது ஒன்றும் ஆஃப்கனோ, இராக்கோ அல்ல" என்றார் கயானி.

    நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் கமிட்டி முன்பாக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். கடந்த மே மாதம் பாகிஸ்தான் நகரமான அபோடாபாதில் நுழைந்த அமெரிக்க இராணுவ வீரர்கள் அங்கு வசித்து வந்த ஒசாமா பின் லேடனை கொன்றனர். அது முதலே அமெரிக்காவுக்கு எதிர்ப்பான இராணுவக் குரல்கள், குறிப்பாக தலைமை தளபதியின் அமெரிக்க எதிர்ப்புக் குரல்கள் பாகிஸ்தானில் கேட்கின்றன.

ஆப்கனில், அமெரிக்கத் தரப்புக்குச் சேதம் ஏற்படுத்தும் 'ஹக்கானி தீவிரவாத குழுவினருக்கு வடக்கு வஜீரிஸ்தானே மையமாகத் திகழ்கிறது என்பதும், அக்குழுவினருக்குப் பாகிஸ்தான் இராணுவமே உதவி புரிந்து வருகிறது என்பதும் அமெரிக்காவின்

அக்டோபர் 25, 2011

சட்டசபை தேர்தலை விட உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. செல்வாக்கு அதிகரிப்பு: கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்


நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டும் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டது.
 
இந்த தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து மாநகராட்சிகளை கைப்பற்றியதுடன் பெரும்பாலான உள்ளாட்சி பதவிகளில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் உள்ளது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியான நிலையில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதத்தை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 39.02 சதவீத ஓட்டுகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
 
அ.தி.மு.க.வுக்கு கிராமப் பகுதிகளில் 39.24 சதவீத ஓட்டுகளும், நகரப் பகுதியில் 38.69 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன. இதன்மூலம் கிராமங்களில் அதி.மு.க. செல்வாக்கு அதிகரித்துள்ளது. மேலும் சமீபத்திய சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 38.4 சதவீத ஓட்டுகள் பெற்று இருந்தது. அதன்பிறகு 4 மாதத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 39.02 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளது. 4 மாத இடைவெளியில் அ.தி.மு.க.வுக்கு 0.62 சதவீத ஓட்டு அதிகரித்து இருக்கிறது. அரசின் செயல்பாடுகள் மீது மக்கள் நம்பிக்கை அதிகரித்து இருப்பதையே இது காட்டுகிறது.

அக்டோபர் 24, 2011

கல்லூரி மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு வசதி: பிரவீன் குமார் தகவல்

சென்னை: "வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் கல்லூரி மாணவர்களுக்கு, சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது' என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

மேலும், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 2012 ஜனவரி முதல் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல், இன்று(நேற்று) வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் வைக்கப்பட்டுள்ள இப்பட்டியலின் படி, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், பெயர் மற்றும் முகவரியில் உள்ள பிழை திருத்தம் போன்ற மாற்றங்களை, வாக்காளர்கள் செய்து கொள்ளலாம். வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள், 18 வயது பூர்த்தி அடைவோர், தங்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இவற்றுக்குரிய படிவங்களை, அனைத்து ஓட்டுச் சாவடிகள், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலங்கள் ஆகிய இடங்களில் பெறலாம். பூர்த்தி செய்த படிவங்களை, அடுத்த மாதம் 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். படிவங்கள் சரிபார்ப்புப் பணி, அடுத்த மாதம் 15ம் தேதி துவங்கும். புதிய வாக்காளர் பட்டியல், 2012 ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். புதிய வாக்காளர் அடையாள அட்டை, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், ஜனவரி 25ம் தேதி வழங்கப்படும்.

அக்டோபர் 23, 2011

இ. யூ. முஸ்லிம் லீக் உள்ளாட்சி தேர்தலில் 119 இடங்களில் வெற்றி

நடைபெற்று முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் அங்கீகரிக் கப்பட்ட பேரியக்கம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

பல்வேறு சட்டமன்ற-பாராளுமன்ற-உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்தும் போட்டியிருக்கின்றது. கூட்டணியில் போட்டியி ருக்கின்றது. அதேபோல் கூட்டணி சின்னத்திலும் போட்டியிருக்கின்றது. தனிச் சின்னத்திலும் போட்டியிட் டிருக்கின்றது.

நடைபெற்று முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிட்டதோடு மாநில அளவில் கூட்டணி அமைக்கா மல் தனித்து போட்டியிட்டது.
போட்டியிட்ட 394 இடங்களில் 115 இடங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெற்று தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்திருக்கின்றது.

தமிழக உள்ளாட்சி தேர்தல் 56 இடங்களில் SDPI வெற்றி

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, தமிழக உள்ளாட்சி தேர்தலில் 300 இடங்களில் போட்டியிட்டது. மாநகராட்சி மேயர் பதவிகளில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவோடு போட்டியிட்டது. சென்னை, ஈரோடு மாநகராட்சியில் SDPI ன் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கோவையில் ஐக்கிய ஜமாத் வேட்பாளருக்கு SDPI ஆதரவளித்தது. இதில் SDPI ஆதரவுடன் போட்டியிட்ட கோவை மேயர் வேட்பாளர் M.அமீர் அல்தாப் 36,471 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

அதேபோல் ஈரோட்டில் போட்டியிட்ட SDPIன் மேயர் வேட்பாளர் யூனுஸ் 4952 வாக்குகள் பெற்றுள்ளார். சென்னை மேயர் வேட்பாளர் அமீர் ஹம்சா 16,170 வாக்குகள் பெற்றுள்ளார். மாநகராட்சி மன்ற உறுப்பினர்களில் கோவையில் 82 வது வார்டில் போட்யிட்ட SDPI ன் வேட்பாளர் முகம்மது சலீம் வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோல் நெல்லை மாநகராட்சியில் 36 வது வார்டு SDPI வேட்பாளர் மைதீன் பாத்திமா வெற்றி பெற்றுள்ளார். இது தவிர

அக்டோபர் 21, 2011

செல்லா காசானது மதினா பள்ளி ஜமாஅத்

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை துவங்கியது.இதில் நமதூர் ஊராட்சி மன்ற தேர்தலில் முன்பு  எப்போதும் இல்லாத வகையில் சாதுல்லாஹ்,சிராஜுத்தீன் மற்றும் சபிக்குர்ரஹ்மான் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டது.இன்று வெளியிடப்பட்ட கடைசிகட்ட அறிவிப்பின்படி சுயேச்சையாக போட்டியிட்ட  சிராஜுத்தீன் அவர்கள் 42  ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.வார்ட் வாரியாக வெற்றிபெற்றவர்களின் விபரம்:

வார்ட் 1:ஜெக்கரியா வெற்றி
வார்ட் 2:வஜ்ஹுல்லாஹ் வெற்றி
வார்ட் 3:குத்புதீன் (சுயேச்சை) வெற்றி
வார்ட் 4:ரஜ்யா பேகம் வெற்றி
வார்ட் 5:பௌசியா பேகம் வெற்றி
வார்ட் 6: காதர் வெற்றி


செல்லா காசானது மதினா ஜமாஅத்:
           நடந்து முடிந்த தேர்தலின்  மூலமாக மதினா பள்ளி ஜமாஅத் படுதோல்வியை சந்தித்துள்ளது.கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் மதினா பள்ளி ஜமாஅத் அசைக்க முடியாத ஓட்டு வங்கியோடு பெரும் வெற்றியை பெற்றது.ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளில் அங்கு ஏற்பட்ட பிளவின் காரணமாக தவ்ஹீத் குடும்பங்கள் தனியாக வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.அது மாத்திரம் இல்லாமல் இவர்களின் தவறான அணுகு முறையால் மேலும் சிலரும் இவர்களுக்கு எதிராக செயல்பட்டனர். தகுதி இல்லாதவர்களிடமும், கப்ரை வணக்கும் இனைவைபாலர்களிடம் ஆட்சி அதிகாரம் சேர்ந்தால்  என்னவாகும் என்பதற்கும், ஜமாத்தை ஒருங்கினைபதற்கு பெரும்பாடுபட்ட தலைவர்களையும் குடுப்பங்களையும் அலட்சியப்படுதியதற்கும் சரியான பாடத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான்.

கொள்ளுமேடு ஊராட்சி தலைவர் தேர்தல் சிராஜுத்தீன் வெற்றி!!

மற்ற செய்திகள் விரைவில் வெளிவிடப்படும் இன்ஷா அல்லாஹ் ........

ஓர் வஃபாத் செய்தி!!

நமதூர் தெற்கு  தெருவில் இருக்கும் அஜீதுல்லாஹ் அவர்களின் மகன் முஹம்மது  அசார் அவர்கள் இன்று காலை  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை  சென்றடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடுXpress இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
 நாமெல்லாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் நமதூர்  ஊராட்சி தேர்தல் முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு தெரியவரும்.இன்ஷா அல்லாஹ்.............

லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தேர்தல் A.R.சபியுல்லா வெற்றி

லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை காட்டுமன்னார்குடி குருகலம் மேல்னிலைப்பள்ளியில் நடைப்பெறுகிறது 
தலைவர் பொருப்புக்கு போட்டியிட்ட A.R.சபியுல்லா அ.இ.அ.தி.மு.க. 88 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி .

வார்டு 1. ராபியா-புஹாரி சுயேச்சை வெற்றி

வார்டு 2. அப்துல் ரஹீம் சுயேச்சை வெற்றி

வார்டு 3. ஷேய்குல் ஆதம் { சேட் } சுயேச்சை வெற்றி

வார்டு 4, தமிழ் தம்பி, பா.ம.க வெற்றி.

வார்டு 5, முயினா பேகம்,சுயேச்சை, வெற்றி,

வார்டு6, மிஸ்பாஹுன்னிஸா, முஸ்லிம் லீக் வெற்றி,

வார்டு 7, ஷேக் தாஉவூது, முஸ்லிம் லீக் வெற்றி,

வார்டு 8, ராஜம்,சுயேச்சை,வெற்றி,

வார்டு 9, அப்துல் சலாம்,சுயேச்சை. வெற்றி,

வார்டு 10, அஹம்து அலி,ம.ம.க.வெற்றி,

வார்டு 11, முஹம்மது இஸ்மாயில்,சுயேச்சை,வெற்றி,

வார்டு 12, ஜாகிர் உசேன், சுயேச்சை,வெற்றி,

வார்டு 13,அன்வர் சதாத், சுயேச்சை,வெற்றி,

வார்டு 14,லதா, சுயேச்சை,வெற்றி,

வார்டு 15,குணசேகரன், பா.ம.க,வெற்றி,
source:lalpet.net

அக்டோபர் 20, 2011

லிபியா சொல்லும் சேதி!

தோழர் பஷீர், பொறியாளர்- லிபியாவிலிருந்து திரும்பியவர்

நீங்கள் எத்தனைச் சின்னவர்கள் என்பதல்ல விசயம்! உங்கள் அபார நம்பிக்கையும் நடவடிக்கையும்தான் உங்கள் சக்தியை தீர்மானிக்கும்!

இந்த வரிகள் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஒரு வட ஆப்பிரிக்க இளைஞனுக்கு முற்றிலும் பொருந்தும். 1960களில் அந்த வாலிபன், எகிப்தின் கமால் அப்துல் நாசரை வாசித்தான்; சீனாவின் மாவோவை படித்துப் பார்த்தான். அப்பொழுது அவனின் வயது இருபதுக்கும் இருபத்தைந்துக்கும் இடையில் தான்!

 சிறுபிள்ளை விவசாயம் வீடு வந்து சேராது என்று பெரியவர்கள் இளையவர்களை மட்டம் தட்டி வைப்பதை அந்த இளைஞனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கல்லூரிப் படிப்பை முழுமையாக முடிக்காமல் இராணுவ வேலைக்குப் போனான். போனவுடன் தலைமைப் பதவியா கொடுப்பார்கள்? மூன்றாம் நிலைதான். அடுத்தவர்கள் தனது தலைவிதியை நிர்ணயிப்பதை அந்த “”இளம் ரத்தம்” ஏற்றுக் கொள்ளவில்லை. தனது 27 வயதில் தானே தன் முன்னேற்றத்திற்கு அயராது உழைக்க ஆரம்பித்தான்.

அனைவரிடம் பேசினான்! மன வலிமையையும் புத்திக் கூர்மையையும் பிரயோகித்து இரத்தம் சிந்தாமல் ஒரு தேசத்தையே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான்.
அறிவித்த நாள் செப்டம்பர் 01,1969,
அந்த தேசத்தின் பெயர்: லிபியா,
அந்த மாவீரனின் பெயர் : முஅம்மார் கடாஃபி.

மரியாதைக்குரிய கடாஃபி அவர்களின் வரலாற்றை நான் எழுதவில்லை. நிறைகளும், சாதனைகளும், வீரமும் மிகுந்த அந்த மனிதனிடம், குறைகளும், பிழைகளும் இருந்தன. அதனால்தான் அவர் சறுக்கிக் கொண்டிருந்தார். இன்று மார்ச் 01-2011 கிட்டத்தட்ட கடைசிக் கட்டத்தில், விளிம்பில் நிற்கிறார் அந்த மாவீரர். “மாவோ’வை வாசித்த இந்த மனிதர் ஏன் “உமரை’ மறந்தார்? இதுதான் எனது சந்தேகம்! என்ன செய்வது? பிழை செய்தால் விலை கொடுப்பது என்பதுதானே வரலாறு.

கடாஃபி என்னென்ன செய்து தன் தேசத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்? என்னென்ன விசயத்தில் கட்டுப்பாட்டை இழந்தார் என்பதை கொஞ்சம் பார்ப்போம்!

மது, மாது, சூது இல்லாத அற்புத தேசம் லிபியா!
மதுக் கடைகள் திறந்தால்தான் அரசின் கஜானா பெருகும் என்று பல நாடுகள் பட்ஜெட் தயாரிக்கிறார்கள். ஆனால் லிபியாவில் மதுவும் கிடையாது, மதுக்கடையும் கிடையாது.
பாவங்களின் தாய் எனப்படும்

இன்று முதல் டாடா இன்டிகாம் வாடிக்கையாளர்கள் டோகோமோவுக்கு மாற்றம்!

பெங்களூர்: டாடா இன்டிகாம் செல்போன் சேவையைப் பயன்படுத்தி வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் இன்று முதல் டாடா டோகோமோ சேவைக்கு மாற்றப்படவுள்ளனர்.

இதன்மூலம் டாடா இன்டிகாமின் சிடிஎம்ஏ, ஜிஎஸ்எம் சேவைகள் மற்றும் 3ஜி, போட்டான் இன்டர்நெட் சேவை ஆகியவை அனத்தும் இனி டோகோமோ சேவையின் கீழ் வரும்.

இந்த சேவைகளின் தரத்தை மேலும் அதிகமாக்கவும், சேவையை விரிவுபடுத்தவும் விரைவில் ஏராளமான கூடுதல் முதலீட்டையும் டாடா நிறுவனம் செய்யவுள்ளது.

அக்டோபர் 19, 2011

நமதூர் உள்ளாட்சி தேர்தலில் 78% வாக்குகள் பதிவாகியது!!

உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போடுவதில் நமதூர் பகுதி வாக்காளர்கள் இன்று காலை முதலே அதிக ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.எந்தவித  அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது.வழக்கம் போல் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.மொத்தம் உள்ள 1300௦௦ வாக்குகளில் 1012 வாக்குகள் பதிவாகியுள்ளது.இதில் ஆண்கள் 428 ஓட்டுகளையும் பெண்கள் 584 ஓட்டுகளையும் செலுத்தியுள்ளனர்.

1மற்றும் 2 வது வார்ட்களில் மொத்தம் 309 வாக்குகள் பதிவாகின இதில் ஆண்கள் 138 ஓட்டுகளையும் பெண்கள் 171 ஓட்டுகளையும் செலுத்தியுள்ளனர்.

3மற்றும் 4 வது வார்ட்களில் மொத்தம் 406 வாக்குகள் பதிவாகின இதில் ஆண்கள் 170 ஓட்டுகளையும் பெண்கள் 236 ஓட்டுகளையும் செலுத்தியுள்ளனர்.

5மற்றும் 6 வது வார்ட்களில் மொத்தம் 297 வாக்குகள் பதிவாகின இதில் ஆண்கள் 120 ஓட்டுகளையும் பெண்கள் 177 ஓட்டுகளையும் செலுத்தியுள்ளனர்.


செய்தி: ரஜ்வீ

அக்டோபர் 17, 2011

10 மாநகராட்சிகளிலும் சராசரியாக 60% வாக்குப் பதிவு- சென்னையில் மந்தம்

உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தின் 10 மாநகராட்சிகளில் சென்னையைத் தவிர பிற மாநகராட்சிகளில் அமைதியான வாக்குப் பதிவு நடந்தது.

சென்னையில் பெரும் குழப்பங்களுடன் வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. ஆயிரக்கணக்கான வாக்காளர்களுக்கு ஓட்டே போட முடியாமல் போனதால் அவர்கள் கடும் விரக்தியில் மூழ்கினர்.

10 மாநகராட்சிகளிலும் சராசரியாக 60 சதவீத வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது.

10 மாநகராட்சிகளிலும் சென்னையைத் தவிர பிற நகரங்களில் ஓரளவு நல்ல வாக்குப் பதிவு காணப்பட்டது. சென்னையில் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட பெரும் குழப்பத்தால் ஆயிரக்கணக்கான வாக்காளர்களால் வாக்களிக்க முடியாமல் போய் விட்டது.

சென்னையில் ஆரம்பத்தில் மந்த நிலை காணப்பட்டது. இடையில் வட சென்னையில் பெய்த பலத்த மழையால்

அக்டோபர் 16, 2011

ரூ. 40,000 கோடிக்கு ஸ்கைப்பை சொந்தமாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்

இன்டர்நெட் தொலைத் தொடர்பு நிறுவனமான ஸ்கைப் நிறுவனத்தை முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் ரூ. 40,000 கோடிக்கு வாங்கியுள்ளது.

இன்டர்நெட் மூலமான தொலைபேசி சேவையில் முன்னணியில் இருப்பது ஸ்கைப். வீடியோ சேட், இன்டர்நெட்டிலிருந்து தொலைபேசியில் பேசுவது, இன்டர்நெட் மூலமான வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

உலகில் பல மில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன இந்த சேவைகள்.

இந் நிலையில் இந்த நிறுவனத்தை ரூ. 40,000 கோடிக்கு வாங்கியுள்ளது மைக்ரோசாப்ட். இதையடுத்து ஸ்கைப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டோனி பேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, ஸ்கைப் செயல்பாட்டை நிர்வகிப்பார்.

2003ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்கைப் நிறுவனத்தின்

அமெரிக்காவில் பரவும் மக்கள் கிளர்ச்சி - ஒரு பார்வை

அரபுலகின் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக இவ்வாண்டின் தொடக்கத்தில் அரபுமக்கள் கொதித்தெழுந்தனர். அதன் பலனாக, துனீசியா, எகிப்து, யேமன், சிரியா என்று பல அரபுநாடுகளில் ஆட்சிமாற்றத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ‘அரபு வசந்தம்’ என்றழைக்கப்படும் இந்தப் புரட்சி, சில நாடுகளில் வெறுமே ‘கிளர்ச்சி’ என்ற அளவில் நின்றுபோனதற்கு அந்நாடுகளின் சமூக அரசியல் சார்ந்த காரணிகள் இருக்கக்கூடும். ஆனாலும், நாம் இந்தப் புரட்சிகளின் ஊடாகக் காண வேண்டியது ‘அமெரிக்கா’ ‘இங்கிலாந்து’ உள்ளிட்ட ‘மேலை’நாடுகளின் முகத்தைத் தான்.

அரபு வசந்தம்’ என்கிற புரட்சிக்கு முன்பு, அந்தந்த ஆட்சியாளர்களின் அத்யந்த நண்பர்களாயிருந்த அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் , புரட்சியாளர்களின் ‘கை’ ஓங்கத் தொடங்கிய போது, நண்பர்களை ‘கை கழுவி’ விட்டு, ‘ஜனநாயகம்’ பேசின.

அமெரிக்காவுக்குப் பிடிக்கவே பிடிக்காத ஈரானிலும் கிளர்ச்சி தொடங்கிய போது, “மக்கள் விருப்பத்திற்குச் செவிசாய்க்க வேண்டும்” என்று அமெரிக்கா ஈரானைக் கோரியது. அமெரிக்காவிற்குச் சளைக்காமல் பதிலளிக்கும் ஈரான், அன்று பதிலடியாகச் சொன்ன கருத்து 2011 ஆம் ஆண்டு முடிவடையத் தொடங்கும் இந்தத் தருணத்தில் உண்மையாகியிருக்கிறது.

அப்போது ஈரான் அதிபர் அஹமத்நிஜாத் சொன்னது இதுதான்: “எங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம். அப்படித் தலையிட்டு மகிழ்ச்சி அடையாதே அமெரிக்காவே, இதுபோன்ற மக்கள் எழுச்சி உன் நாட்டிலும் விரைவில் வரும்” என்பதே அந்த பதில்.

ஆம். அமெரிக்க அரசின் மோசமான நிதிக்கொள்கையாலும், அரசின் கொள்கை முடிவுகளில் ‘கார்ப்பரேட்’ எனப்படும் வல்லாதிக்க நிறுவனங்களின் தேவையற்ற ஆளுமையாலும், அதனால் உருவாக்கும் பொருளாதார இடைவெளியாலும் கொதிப்படைந்துள்ள அமெரிக்க நடுத்தர வர்க்க மக்கள் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி ஆயிரக்கணக்கில் கூடி ‘வால் ஸ்ட்ரீட் ஆக்ரமிப்புக் கிளர்ச்சியை நடத்தினர்.

ஆனாலும், இந்த ‘அமெரிக்கர்’களை நம்பி, இதை செய்தியாக வெளியிடத் தயங்கின ஊடகங்கள். வேலை வெட்டி அற்றவர்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியோ என்பது போலவே அந்தப் போராட்டத்தை

ஹஜ் யாத்திரை சென்ற 19 இந்தியர்கள் சவூதியில் மரணம்

ஹஜ் யாத்திரைக்குச் சென்ற 19 இந்தியர்கள் அங்கு மரணமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக இந்தியாவிலிருந்து 61,847 பேர் சென்றுள்ளனர். இவர்களில் 27,487 பேர் மதீனாவிலும், 34,345 பேர் மதீனாவிலும் உள்ளனர். இவர்களில் 19 பேர் பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளனர் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 223 விமானங்கள் மூலம் இந்திய யாத்ரீகர்கள் ஹஜ் புனிதப் பயணமாக சவூதி வந்துள்ளதாக தெரிவித்துள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இறந்த 19 பேரில் 15 பேர் இந்திய ஹஜ் குழு மூலம் வந்தவர்கள், 4 பேர் தனியார் மூலம் வந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 14, 2011

குர்பானியின் சட்டங்கள்-அப்பாஸ் அலி

நாம் எந்த ஒரு வணக்கத்தைப் புரிந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு செய்ய வேண்டும். நாம் விரும்பியவாறு செய்தால் அந்த செயல் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியதைப் போல் குர்பானியின் சட்டங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.ஆனால் குர்பானி தொடர்பாக பல தவறான நம்பிக்கைகள் மக்களிடத்தில் நிலவுகின்றன. ஆகையால் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு குர்பானி தொடர்பான சட்டங்கள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே.

விரைவில் வர இருக்கிறது இஸ்லாமியர்களுக்கான செல்போன்

இந்த நவீன காலத்தில் ஒவ்வரு நாளும் ஒவ்வரு கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போதைய உலக நடப்புபடி பெரும்பாலான மக்கள் செல்போன் தான் அதிகம் உபயோகித்து வருகிறார்கள். புதிய வசதிகள், புதிய மாடல்களில் செல்போன்களின் உற்பத்திகளும் நாளுக்கு நாள் பெருகி கொண்டுதான் வருகிறது. இவ்வாறு தற்போது ஐ டெல் நிறுவனம் இஸ்லாமியர்களுக்கான செல்போன் ஒன்றை விரைவில் அறிமுகபடுத்த இருக்கிறது.

ஐ டெல் நிறுவனம் அறிமுகபடுத்த இருக்கும் இந்த ஐ டெல்-786 என்ற 2 சிம் பொருந்த கூடிய மாடல் செல்போனில் இஸ்லாமியர்களுக்கு 5 வேலை தொழுகையின் நேரத்தை கொண்டு அலாரம் அடிக்க கூடிய வசதியும், இஸ்லாமியர்களுக்காக தயாரிக்கப்பட்ட காலேண்டர் மற்றும் சாக்கட் காலேண்டர் வசதிகளும், 1.3 பிக்சஸ் கேமரா, சிறப்பான விடியோ ரேக்கார்டிங் வசதிகள், புழு டூத் வசதிகள், பொழுது போக்கு அம்சம் கொண்ட mp3 ,mp4 ,மிடியா பிளேயர் வசதிகளையும் கொண்டது

மேலும் இந்த செல்போனில் பயன்பாட்டிற்கு ஆங்கிலம்,ஹிந்தி,உருது,இந்தோனேசியா,துருக்கி, பெர்ஷியன் போன்ற 11 மொழிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த செல்போன் மூலம் வருகிற வருவாய் மூலம் 2.5 சதவீதம் பங்கு ஏழை இஸ்லாமிய

இலவசமாக M.E /M.Tech படிக்க GATE நுழைவு தேர்வு

GATE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள IIT, NIT, அண்ணா பல்கலை கழகம் போன்ற மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் M.E/M.Techபடிக்க மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வாகும். இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது. இந்த உதவி தொகை மூலம் படிப்பை இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய தேவைகளையும் (ஹாஸ்டல், உணவு, புத்தகம்) நிறைவேற்றிகொள்ளலாம். இதில் முஸ்லீம்களையும் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடும் உள்ளது. தேர்வை பற்றிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உயர்ந்த தொழில் நுட்ப நிறுவனக்களான IIT, NIT, டெல்லி பல்கலை கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில் M.E/M.Tech, Phd படிக்க GATE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது, இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் (கல்லூரிக்கேற்ப அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது). இந்த கல்வி உதவி தொகையை வாங்குவது மிகவும் எளிது. நீங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கு எண்ணுக்கு மாதமாதம் பணம் வந்து சேர்ந்துவிடும். இது மட்டும் இல்லை இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview) மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி

அக்டோபர் 13, 2011

உச்சநீதிமன்றத்தில் வைத்து பிரபல வழக்கறிஞரை தாக்கிய சங்க்பரிவார பயங்கரவாதிகள்

புதுடெல்லி:கஷ்மீரிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெற்று அங்குள்ள மக்களுக்கு சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் உறுதிச்செய்ய வேண்டுமென கருத்து தெரிவித்த பிரபல வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் மீது உச்சநீதிமன்றத்திற்குள் வைத்து சங்க்பரிவார பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

உச்சநீதிமன்றத்தின் அருகில் உள்ள அவருடைய சேம்பருக்குள் நுழைந்த ஸ்ரீராமசேனா என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்த மூன்று தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் ஒருவரை இச்சம்பவத்தை பார்த்தவர்களில் ஒருவர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இதர இரு தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர். தாக்குதலுக்கு உள்ளான பிரசாந்த் பூஷண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரசாந்த் பூஷண் மீதான தாக்குதலை அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டித்துள்ளன.

பெங்களூரிலும் இதர பகுதிகளிலும் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை நடத்தி பிரசித்திப்பெற்ற ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கம்தான் ஸ்ரீராம சேனா. இவ்வமைப்பின்

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக ஓட்டுச் சீட்டுகள் தயா

உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டுச் சீட்டுகள் நேற்று அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள், 16 பேரூராட்சிகள் மற்றும் 5 நகராட்சிகளுக்கு 17, 19 தேதிகளில் தேர்தல் நடக்கிறது.இதில் நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் உறுப்பினர் என இரண்டு பதவிகள் மட்டுமே உள்ளதால் இந்த தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

ஆனால் ஒன்றியங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளதால், இப்பதவிகளுக்கான தேர்தலுக்கு ஓட்டுச் சீட்டு பயன்படுத்தப்படுகிறது. இதற்காக விருத்தாசலம் அரசு அச்சகத்தில் நான்கு வண்ணங்களில் 50 லட்சம் ஓட்டுச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக வரும் 17ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நெல்லிக்குப்பம், பண்ருட்டி மற்றும் விருத்தாசலம் நகராட்சிகளுக்கும், மேல்பட்டாம்பாக்கம், தொரப்பாடி, கங்கைகொண்டான், மங்கலம்பேட்டை மற்றும் பெண்ணாடம் ஆகிய பேரூராட்சிகளுக்கு தேவையான மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேப்போன்று வரும் 17ம் தேதி ஓட்டுப் பதிவு நடைபெறவுள்ள அண்ணாகிராமம், பண்ருட்டி,

காட்டுமன்னார்கோவிலில் உள்ளாட்சிதேர்தல் ஏற்பாடு: கலெக்டர் ஆய்வு

காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதியில் தேர்தல் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் வரும் 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று தேர்தலின் முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் அமுதவல்லி ஆய்வு மேற்கொண்டார்.காட்டுமன்னார் கோவில் ஒன்றியத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிதம்பரம் ஆர்.டி.ஓ., இந்துமதியிடம் தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்தார். ஓட்டுச்சாவடி, ஓட்டு எண்ணும் மையங்களை பார்வையிட்டார். பி.டி.ஓ., க்கள் ஜமுனா, வாசுகி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.பின்னர் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்குச் சென்ற அவர் அங்குள்ள தேர்தல் அலுவலரிடம் தேர்தல் குறித்து செய்ய வேண்டிய முன்னேற்பாடான பணிகளை செய்ய உத்தரவிட்டார்.

அக்டோபர் 09, 2011

நமதூர் ஊராட்சி தேர்தல் ஒரு பார்வை!!

ஊராட்சி தேர்தல் அறிவிப்பு வந்தவுடனே நமதூரில் ஆர்ப்பாட்டங்களும் அலும்பல்களும் ஆரம்பம்மாகிவிட்டது.முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.பரம்பரை அரசியல்வாதிகள் கூட தோற்றுவிடும் அளவிற்கு கோசங்களும் தோற்றங்களும் நமதூரில் தினம் தினம் அரங்கேரி வருகிறது.இப்போது நமதூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை பற்றி பார்ப்போம்.

அ.சாதுல்லாஹ் (கத்தரிகோல் சின்னம் ): மிகுந்த அரசியல் அனுபவம் நிறைந்த தலைவர், ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்து அப்போதைய தலைவர் தவறு செய்த போதெல்லாம் வார்ட் உறுப்பினர் அப்துர்ரஹ்மான் அவர்களோடு இணைந்து ஊ.ம.தலைவரின் தவறுகளை மக்கள் மத்தியில் அம்பலபடுத்தினார் இவர் அண்ணாதிமுக முதல் விடுதலை சிறுத்தைவரை பல கட்சிகளில் இருந்துயிருக்கிறார்.எந்த ஜாமத்தையும் சாராமல் சுயேச்சையாக போட்டியிடுகிறார். மதினா பள்ளி ஜமாஅத் மற்றும் பெரிய பள்ளி ஜமாத்தின் ஓட்டு வங்கியை பெரும் அளவில் பிரித்துவிடுகிறார் மேலும் வெற்றி வாய்பை நிர்னயிக்கும் ஓட்டுகளாக கருதப்படும் தவ்ஹீத் குடும்பங்களின் ஓட்டுகளை முழுமையாக பெற்றுவிடுவார் என்றே சொல்லபடுகிறது.குடிசை கடைகளை கட்டிடங்களாக மாற்றி கடைத் தெருவை அழகுப்படுத்துவது  சிறந்த குடி நீர் ஆகியவை இவரின் வாக்குறுதிகலாகும்.

த.சிராஜுத்தீன் (கை உருளை சின்னம்)  : துடிப்பான இளைஞர்,எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்போடு செயல்படுகிறார்.பெரிய பள்ளிவாசல் ஆதரவோடும் மதினா பள்ளி ஜமாத்தின்  கனிசமான வாக்குகளை நம்பியும் களத்தில் இறங்கியுள்ளார்.த மு மு கவில் கிளை செயலாளராக இருந்த இவர் தற்போது அவர்களுக்கு எதிராக முழுவீச்சில் செயல்பட்டுவருகிறார்.தேமுதிக ஆதரவு இவருக்கு கூடுதல் பலம்,தேமுதிக வில் உள்ளவர்கள் அனைவரும் முன்னால் தமுமுக தொண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 24  மணி நேரமும் தண்ணீர் கிடைக்க வசதி செய்து தருவேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

மை.சபிக்குர்ரஹ்மான்   (பூட்டு சாவி சின்னம்):  நமதூரில் எலக்ட்ரிசன் வேலை செய்யும் துடிப்பான இளைஞர்,மம கட்சியின் ஆதரவோடு களத்தில் உள்ளார்.ஊழலற்ற ஊராட்சி என்ற கோசத்தோடு செயல்படுகிறார்.இவரின் இந்த கோசம் மக்கள் மத்தியில் கடந்த பத்து ஆண்டுகளில் ஏதேனும் ஊழல் நடந்துதிருக்குமோ என்று பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இவர் வெற்றிபெறும் பட்சத்தில் ஊழல் செய்தவர்களையும் ஊழலையும் வெளிக்கொண்டுவருவார் என்று நம்பப்படுகிறது.மதரசா கட்டித் தருவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

இஸ்லாதின் பார்வையில் பதவி:
பதவி என்றால் என்ன, இஸ்லாம் பதவியை பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பற்றிய அறிவில்லாத காரணத்தினாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யலாம் என்ற சுயநலத்தினாலும்

அக்டோபர் 08, 2011

ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகிறது?

தெலங்கானா பிரச்சனை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க முடியாமல் ஆந்திர மாநில அரசு திணறி வரும் நிலையில்,அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலங்கானா தனி மாநிலம் கோரி அண்மையில் மீண்டும் வெடித்த போராட்டம் நேற்றுடன் 25 ஆவது நாளை எட்டியுள்ளது.

தெலங்கானா பகுதியில் உள்ள அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன.சட்டம் ஒழுங்கு நிலைமையும் மோசமடைந்துள்ளது.

சிங்கரேணி நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு நாடுமுழுவதும் மின் விநியோகம் பாதிக்கபட்டு உள்ளது.

இதனையடுத்து, ஆந்திர ஆளுனர் நரசிம்மன் நேற்று டெல்லி வந்தார்.அவர் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும், அதனைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

அப்போது தெலங்கானா போராட்டத்தினால் ஏற்பட்டுள்ள

ஆப்கான் படைகளுக்கு இந்தியா பயிற்சி

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியிருக்கிறது.
2014ல் ஏற்கனவே அறிவித்தபடி, அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் ஆப்கானிஸ்தானில் செல்வாக்கை நிலைநாட்ட அண்டை நாடுகள் பல போட்டி போடும் நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானை தனது கேந்திர விவகாரக் கொல்லைப்புறமாகக் கருதும் பாகிஸ்தானுக்கு இந்த ஒப்பந்தம் எரிச்சலைத் தரும் ,எனவே இது இந்திய பாகிஸ்தான் உறவுகளைப் பாதிக்கும் என்றும் சில நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் இப்படியான பயிற்சிகளை இந்தியா ஏற்கனவே அளித்து வருகிறது என்றும் அது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார், இந்தியாவின் அமைச்சரவை செயலகத்தின் ஓய்வு பெற்ற கூடுதல் செயலரும், பாதுகாப்பு ஆய்வாளருமான பி.ராமன்.

தற்போது ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு பயிற்சிகளை அளித்து வரும் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளை விட இந்தியாவுக்கு பாகிஸ்தான் குறித்த விடயங்கள் நன்கு தெரியும் என்பது, அந்தப் படையினரை இந்தியா பயிற்றுவிக்க ஒரு முக்கிய காரணம் எனவும் ராமன் கூறுகிறார்.

இந்தியத் தரப்பு ஆப்கான் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்கு அமெரிக்காவும் மறைமுக ஆதரவை தெரிவித்துள்ளது என்று சுட்டிக்காட்டும் அவர், இது பாகிஸ்தானை ஆத்திரமடையச் செய்து, இந்தியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளை அதிகப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது எனவும் ராமன் தெரிவிக்கிறார்.

20 நாடுகளில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை.

இந்திய பெருங்கடலில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டது. 7 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்திய பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 20 நாடுகளில் ஒத்திகை நடைபெற உள்ளது. வருகிற 12-ந் தேதி அன்று நடைபெறும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் இந்தியா, இந்தோனேசியா, சுமத்ரா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை `யுனெஸ்கோ' இயக்குனர் ஜெனரல் இரினா பொகாவோ செய்து வருகிறார்.

காட்டுமன்னார்குடியில் பெட்ரோல் கிடைக்காமல் வாகன ஓட்டிகள் அவதி

     காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள இரண்டு பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டதால் பெட்ரோல் கிடைக்காமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.காட்டுமன்னார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகள் பெரும்பான்மையாக கிராமப் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போட காட்டுமன்னார்கோவில் நகர் பகுதிக்கு வரவேண்டும்.வடவாற்றின் ஓரத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்குச் சொந்தமான பெட்ரோல் பங்க்கும், ரெட்டியார் சாலையில் எச்.பி., நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு பெட்ரோல் பங்க் என இரண்டு பங்க்குகள் உள்ளன.

கடந்த 5 நாட்களாக ரெட்டியார் ரோட்டில் உள்ள பங்க் மூடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கிற்கு அதிகளவில் சென்றதால் அங்கும் பெட்ரோல் தீர்ந்தது.இதனால் காட்டுமன்னார்கோவில் பகுதியில் இரண்டு நாட்களாக பெட்ரோல் கிடைக்காமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

அக்டோபர் 07, 2011

குஜராத்தில் நடப்பது என்ன?

குஜராத்தில் நரேந்திரமோடி ஆட்சி ஹிட்லரை நல்லவராக்கி விட்டது. காவல்துறை அதிகாரி சஞ்சய்பட் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2002இல் கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையின் பின்னணியில் அம்மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி இருந்த உண்மையைப் போட்டு உடைத்து விட்டார்.

கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப்பட்டு, கரசேவர்கள் பலியான நிலையில் அன்று இரவே அவசர அவசரமாக மாநில முதல் அமைச்சர் காவல்துறை அதிகாரிகள் உள்பட முக்கிய அதிகாரிகளை அழைத்து ஆணையிட்ட தகவல்களை, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட காவல்துறை அதிகாரி என்கிற முறையில் சஞ்சீவ்பட் உச்சநீதிமன்றத்தில் மனுவாகக் கொடுத்து விட்டார்.

சிறுபான்மையின மக்களாகிய முசுலிம்மீது வன்முறையை ஏவும் ஆணையை அந்தக் கூட்டத்தில் முதல் அமைச்சர் மோடி முடுக்கி விட்டார். காவல்துறையினர் கலவரங்களைக் கண்டு கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

இந்தப் பின்னணியில் தான் இரண்டாயிரத் துக்கும் மேற்பட்ட முசுலிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். காந்தி பிறந்த மண்ணில் குருதி வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

ஓன்பது ஆண்டுகள் ஓடிய பிறகும்கூட

ஜெயலலிதா மாறவில்லை!!!

மகத்தான அதிபதியாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:

அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அவர்களிடையே இதைத் தெளிவுபடுத்துகிறோம்.மனிதர்களில் அதிகமானோர் (நம்மை மறுப்போராகவே) உள்ளனர். (அல்குர்ஆன் 25: 50)

நபி(ஸல்)அவர்கள், முஆத் அவர்களையும், என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும், பிரச்சாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், நீங்கள் இலேசானதையே மக்களுக்கு எடுத்துரையுங்கள். சிரமமானதை எடுத்துரைக்காதீர்கள். மக்களுக்கு நற் செய்தி கூறுங்கள். வெறுப்பூட்டி விடாதீர்கள். ஒருவரோடொருவர் இசைந்து பழகி (அன்புசெலுத்தி)க் கொள்ளுங்கள். (கருத்துவேறுபாடு கொண்டு) பிணங்கிக் கொள்ளாதீர்கள் என்று (அறிவுரை) கூறினார்கள். (அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) புகாரி 3038)

கடந்த தேர்தலின்போது தன்னிடம் அளப்பரிய மாற்றம் ஏற்பட்டு விட்டதாக ஒரு தோற்றத்தை ஜெயலலிதா ஏற்படுத்தினார். ஊடகங்களும் அவர் மிகவும் மாறி விட்டார் என்று பிரச்சாரம் செய்தன. மக்களும் அவர் மாறிவிட்டதாக நினைத்து மிருக பலத்துடன் அவரை ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்யும் அளவுக்கு அவருக்கு ஆதரவும் அளித்தனர். ஆனால், அவரிடம் எந்த மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மாற்றம் ஏற்பட்டதாக ஒப்புக் கொண்டாலும் முஸ்லிம்களையும் தலித் மக்களையும் அவருக்குப் பிடிக்காது என்ற நிலைபாட்டில் அவரிடம் நிச்சயம் கடுகளவும் மாற்றம் ஏற்படவில்லை என்பதை அவரே நிருபித்து வருகிறார்...

இரண்டாயிரம் முஸ்லிம்களைக் கொன்று கருவருத்த பயங்கரவாதி நரேந்திர மோடியைத் தனது பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்து கண்ணியப்படுத்தியதன் மூலம் தான் முஸ்லிம் விரோதிகளின் தோழி தான் என்பதை மீண்டும் பகிரங்கமாகக் காட்டிக் கொண்டார். இதில் தன்னிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

முஸ்லிம்களைத் திட்டமிட்டு கொன்று குவிக்கும் சங்பரிவார ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும்

அக்டோபர் 06, 2011

மதச் சார்பற்ற அரசு அலுவலகங்களில், மத விழாக்கள், கூடாது!மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அரசு அலுவலகங்களில் மத விழாக்கள், பூஜைகள் கொண்டாடக் கூடாது என்று கோரும் வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசு அலுவலக வளாகங்களில் அதி காரிகள் மதவிழாக்கள் கொண்டாடுவது மதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதவிழாக்களை, குறிப்பாக சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை போன்ற இந்து விழாக் களை, அரசு அலுவலக வளாகங்களுக்குள் கொண்டாடுவது அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று தனது மனுவில் திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.பி.முத்துராமன் கூறியுள்ளார்.

அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை யின்படி, இந்திய குடியரசு ஒரு மதச்சார்பற்ற நாடு என்று கூறப்பட்டு உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர் மதங்கள் தொடர்புடைய விவகாரங்களில் அரசுக்குச் சம்பந்தமில்லை - விலகியிருப்பது என்பதே அதன் பொருள். எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துடனும் அரசு தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளக் கூடாது.

மதத்தின் அடிப்படையில் எந்த வித பாகுபாட்டையும்மதச்சார்பற்ற ஓர் அரசு காட்டக்கூடாது என்று கூறியுள்ள அவர், பல அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுவது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

அரசு மதச் சார்பற்ற அரசு இல்லை என்ற எண்ணத்தை

தெலுங்கானா போராட்டத்தில் முஸ்லிம்கள் முக்கிய பங்கு – ஹமீது முஹம்மது கான்

ஹைதராபாத்:தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழுவின் பிரதிநிதிகள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முஸ்லிம்கள் தனித் தெலுங்கான போராட்டத்தில் முக்கிய வகிப்பதாக கூறியுள்ளனர்.

பிரதமரை சந்தித்த பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற்றிருந்த ஜனாதிபதியின் அமைதி மற்றும் நீதிக்கான இயக்கத்தின் ஹமீது முஹம்மது கான் தனித் தெலுங்கானாவிற்கு ஜமாத்-ஏ-இஸ்லாமி ஹிந்தின் ஆதரவு குறித்த காரணத்தை விளக்கியதாக கூறினார்.

ஜமாத்-ஏ-இஸ்லாமி அநீதியை எதிர்த்து மக்களுக்கு நீதி கிடைக்க தனித் தெலுங்கானாவிற்கு ஆதரவு தருவதாக பிரதமரிடம் விளக்கியதாக பிரதமரை சந்தித்து விட்டு ஹைதராபாத் திரும்பியுள்ள ஹமீது முஹம்மது கான் தெரிவித்தார். மேலும் நீதியின் பக்கம் நின்று அநீதிக்காக போராடுவதே ஜமாத்-ஏ-இஸ்லாமியின் கொள்கை என்றும் அவர் கூறினார்.
source:thoothuonline

அக்டோபர் 04, 2011

அடுத்த ரெய்டு !எம்.ஆர்.கே.வீட்டில் போலீஸார் சோதனை

திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வீடு மற்றும் அவர் அக்கா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி முட்டத்தில் உள்ள அவரது வீடு, சிதம்பரத்தில் உள்ள அவரது சகோதரி வீடு, பொறியியற்கல்லூரி ( நாட்டார்மங்கலம் ) , காட்டுமன்னார்குடியில் உள்ள ஜவுளிகடை, கலைக்கல்லூரி மற்றும் வடலூர் உள்ளிட்ட 11 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள தி.மு.க,.வினர் அதிர்ச்சியில் உறைந்து போய்உள்ளனர்.

மேலும் வடலூரில் உள்ள குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றியச் செயலாளர் சிவகுமார் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி செயலாளர் தங்க. ஆனந்தம் வீடு உள்ளிட்ட 11 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் பதட்டமான ஓட்டுச் சாவடிகள்

காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் 17 கிராமங்களில் பதட்டமான ஓட்டுச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் வரும் 19ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி உளவு துறை போலீசார் பதட்டமான ஓட்டுச்சாவடிகள் பட்டியல் மற்றும் அதிக அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டிய இடம் குறித்து தகவல் சேகரித்து மாவட்ட காவல் துறைக்கு அனுப்பியுள்ளனர்.

 அதில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் கண்டமங்கலம், குருங்குடி, குணவாசல், பழஞ்சநல்லூர், கொல்லிமலை, கீழ்பாதி, சந்தைதோப்பு ஆகிய பகுதிகளும், சோழத்தரம் பகுதியில் அறந்தாங்கி, வடக்கு பாளையம், சோழத்தரம், முடிகண்டநல்லூர், மாமங்கலம் ஆகிய பகுதிகளும்,

குமராட்சி பகுதிகளில் சிறகிழந்தநல்லூர், புளியங்குடி, வெல்லூர், மெய்யத்தூர், தெம்மூர் ஆகிய பகுதிகள் பதட்டமான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.

அக்டோபர் 01, 2011

கட்சிகள், வாக்காளர்கள் புகார் தெரிவிக்க தேர்தல் அதிகாரிகள் போன் எண் அறிவிப்பு

சென்னை : உள்ளாட்சி தேர்தலில் புகார் தெரிவிக்கவும், சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும், தேர்தல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாநில தேர்தல் ஆணைய அலுவலகம்
(கோயம்பேடு) 044 & 2475 3001, 2475 3002.
டாக்டர் எஸ்.அய்யர், மாநில தேர்தல் ஆணையர்:
044 & 2475 3004, 98847 97847.
வி.எம். சேவியர் கிரிசோ நாயகம், அரசு செயலர்:
044 & 2475 3003, 94444 00044.
எம்.பரமேஸ்வரன் முதன்மை தேர்தல் அதிகாரி (பஞ்சாயத்து),:
044 & 2475 0500, 94440 14766.
டாக்டர் பி.குபேந்திரன், முதன்மை தேர்தல் அதிகாரி (நகராட்சி),
044 & 2475 9922, 94868 46884.
சந்திரகாந்த் காம்ளே, ஆணையர் (நகராட்சி நிர்வாகம்):
044 & 2854 9924, 94450 29555.
டாக்டர் எஸ்.விஜயகுமார், ஆணையர் (கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ்யம்):
2432 3794, 2433 8690, 98400 45215.
எம்.சந்திரசேகரன் இயக்குனர் (டவுன் பஞ்சாயத்து):
044 & 2534 0352, 94455 88588.
டாக்டர் டி.கார்த்திகேயன், ஆணையர் (சென்னை மாநகராட்சி):
2538 1330, 2538 3783, 94451 90999.
எஸ்.சிவசண்முகராஜா, மாவட்ட கலெக்டர் (காஞ்சிபுரம்):
044 & 2723 7433, 94441 34000.
ஆசிஸ் சட்டர்ஜி, மாவட்ட கலெக்டர் (திருவள்ளூர்):
044 & 2766 1600, 94441 32000.

ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை

சென்னை: வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக, மனிதநேய மக்கள் கட்சித்தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பின்னர் இவ்வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

ஹவுரா-தான்பாத் இடையே டபுள்டெக்கர் ரயில் சேவை இன்று துவங்குகிறது

ஹவுரா-தான்பாத் இடையே நாட்டின் முதல் இரண்டடுக்கு(டபுள்டெக்கர்) ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி இன்று கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

இரண்டடுக்கு இருக்கை வசதிகொண்ட ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வே துறை தயாரித்துள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதிகொண்ட இந்த ரயில் பெட்டிகள் அதிவேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக, இந்த ரயில் பெட்டிகளில் இலகு எடைகொண்ட அதேநேரத்தில் அதிக உறுதித்தன்மை வாய்ந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளன.மேலும், பயணத்தின்போது அதிர்வுகள் குறைவாக இருக்கும் வகையில் இந்த பெட்டிகளில் ஏர் ஸ்பிரிங்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

யார் ஏழை ? புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய திட்டக் குழு முடிவு

எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்தையடுத்து,ஏழ்மையை வரையறுக்கும் புதிய பிரமாணப் பத்திரத்தை மத்திய திட்டக் குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றில் மத்திய திட்டக் குழு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ஒரு நாளைக்கு கிராமப்புறத்தில் ரூ.25ம் நகர்ப்புறத்தில் ரூ.32க்கு மிகாமல் வருமானம் இருப்பின் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக கருதமுடியும் என அதில் அது தெரிவித்திருந்தது.

இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும் திட்டக் குழுவின் பதில் மனுவுக்கு கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி இது தொடர்பாக புதிய பிரமாணப் பத்திரத்தை திட்டக் குழு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யும் என்றார்.

அவர் மேலும் கூறியது : திட்டக் குழு தெரிவித்துள்ளது புள்ளிவிவரங்கள் நடைமுறைக்கு சாத்தியமானது இல்லை என்ற வாதம் அனைத்தரப்பினராலும் முன் வைக்கப்பட்டுள்ளது. எனவே, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை நிர்ணயம் செய்ய புதிய வருமான வரம்பு வகுக்கப்படும்.

இது குறித்து திட்டக் குழுவின் இறுதி பதிலை எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்திட்டக் குழு தாக்கல் செய்துள்ள பதில் மனுவை திரும்பப் பெற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அருணா ராய், ஹர்ஷ் மந்தர் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.