Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 13, 2013

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீதான சொத்துகுவிப்பு வழக்கு: 5–ந் தேதிக்கு தள்ளிவைப்பு!

கடலூர்: சொத்து குவிப்பு வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடலூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். வழக்கு விசாரணையை அடுத்தமாதம்(செப்டம்பர்) 5–ந் தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

சொத்து குவிப்பு வழக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கடலூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது மனைவி தமிழ்செல்வி, மகன் கதிரவன் ஆகியோர் மீது கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011–ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கடலூர் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு கிங்ஸ்லிராபர்ட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆஜர் ஆனார். அவரது சார்பில் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் வாதாடினார்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(செப்டம்பர்) 5–ந் தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். முன்னதாக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோர்ட்டுக்கு வரும் தகவலை அறிந்து மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு,
பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஜி.ராஜேந்திரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஏ.ஜி.ஆர்.சுந்தர், வக்கீல் அணி அமைப்பாளர் சிவராஜ், துணை அமைப்பாளர் வனராசு, சவு.ப.கதிர்வேலன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் கோர்ட்டு வளாகத்தில் திரண்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...