Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 04, 2013

கடலோர காவல் படையில் வேலை 10-ம் வகுப்பு தேரிச்சி போதும்!

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடலோர காவல் படையில் Navik (Domestic Branch) பணியில் சேர 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Navik - Domestic Branch (Cook &Steward) சம்பளம்: ரூ.5,200&20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2 ஆயிரம். வயது: 1.4.1992ல் இருந்து 31.3.1996க்கும் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி.,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டு களும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி. எஸ்சி., எஸ்டி பிரிவினர், தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள், கடலோர காவல் படையில் பணியில் இருந்த போது இறந்தவர்களின் பிள்ளைகள் ஆகியோர் 55 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். உயரம்: குறைந்தபட்சம் 157 செ.மீ., எடை: வயது மற்றும் உயரத்திற்கேற்ற எடை. உரசும் முட்டுக்கள், தட்டையான பாதங்கள் இன்றி, சாதாரணமாக கேட்கும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.

எந்த ஒரு நோயும் இல்லாமல் நல்ல உடல்நிலை பெற்றிருக்க வேண்டும். கண்பார்வை திறன்: 6/6 மற்றும் 6/9. எழுத்துத்தேர்வு, உடற் தகுதித்தேர்வு, மருத்துவதேர்வு, நேர்முகத்தேர்வு அடிப் படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக் கப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 2014 ஏப்ரலில் பயிற்சி தொடங்கும். மேலும் விவரங்களுக்கு www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தை
பார்க்கவும். விண்ணப்பத்தை சாதாரண தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி: The Recruitment Officer, 
Post Box.No.808,
 Fort St.George, 
Chennai- 600 009

நன்றி:தினகரன் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...