கடலூர், : நடப்பு கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்-2 பொது தேர்வு எழுதவுள்ள மாணவ- மாணவிகளின் பெயர், பிறந்த தேதியை ஆன்-லைனில் பெற்றோர் பள்ளிக்கு நேரடியாக வந்து பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்-2 பொது தேர்வு எழுதவுள்ள மாணவ- மாணவிகளின் பெயர், பிறந்த தேதி முதன் முறையாக ஆன்-லைனில் பதிவு செய்யப்படுகிறது. இது தொடர்பான பெயர் பட்டியல் தயாரிப்பு பணி ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோசப் ஆண்டனிராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் மல்லிகா, சிஇஓ நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் 406 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்-2 பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர், பிறந்த தேதியை ஆன்-லைனில் பெற்றோர் பள்ளிக்கு நேரடியாக வந்து பதிவு செய்ய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து இன்று (26ம் தேதி) முதல் அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் பெயர் பட்டியல் தயாரிப்பு பணியை முடிக்க அனைத்து பள்ளி நிர்வாகிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பெற்றோர்களிடம் இருந்து மாணவ- மாணவிகள் தொடர்பான பெயர், பிறந்த தேதி மாற்றம் இருந்தால்
அது தொடர் பான உறுதிமொழியை எழுத்து பூர்வமாக பெற்று ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்-2 பொது தேர்வு எழுதவுள்ளனர்.
-தினகரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...