Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 31, 2013

கடலூரில் கண்தான விழிப்புணர்வு முகாம் கலெக்டர் கிர்லோஷ்குமார் பங்கேற்பு!

கடலூர்- கடலூரில் நடந்த கண்தான விழிப்புணர்வு முகாமை கலெக்டர் கிர்லோஷ்குமார் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

கண்தான விழிப்புணர்வு முகாம் தேசிய கண்ணொளி இழப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் சார்பில் 28–வது தேசிய கண்தான இருவார விழா ஆகஸ்டு 25–ந் தேதி தொடங்கி வருகிற 8–ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ஜே.சி.ஐ. கடலூர் விடியல் ஆகியவை இணைந்து கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் அருகில் கண்தான விழிப்புணர்வு கையொப்பமிடும் முகாமை நேற்று நடத்தின. முகாமுக்கு தலைமை தாங்கிய கலெக்டர் கிர்லோஷ்குமார் கையெழுத்திட்டு இதைத் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து கண்தானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 425 பேர் கையெழுத்திட்டனர் இதில் இணை இயக்குனர் (நலப்பணிகள்) கோவிந்தராஜன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஜவகர்லால், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு
சங்க திட்ட மேலாளர் அசோக்பாஸ்கர், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சிவசங்கர், வட்டார விரிவாக்க கல்வியாளர் சண்முகம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானஸ்கந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பார்வைக்கோர் பயணம் துண்டுபிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் மற்றும் புறக்காவல் நிலைய போலீசார் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 425 பேர் கண்தான விழிப்புணர்வு பெற்று கண்தானம் செய்ய கையெழுத்திட்டனர். கடந்த 8 மாதங்களில் 44 பேர் கண்தானம் வழங்கி உள்ளதாக திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானஸ்கந்தன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...