நிரபராதிகளான முஸ்லிம்களை பொய் வழக்கில் சிக்கவைத்து தீவிரவாதிகளாக சித்தரிப்பதால் அவர்கள் சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்தப்படுகின்றனர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
புனேயில் கட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார் சரத் பவார்.அப்பொழுது அவர் கூறியது: என்னவானாலும் ஒரு முஸ்லிமால் பள்ளிவாசலில் குண்டுவைக்க முடியாது என்று நான் 3 அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மஹராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலிடம் தெரிவித்திருந்தேன்.இதனைத் தொடர்ந்து பாட்டீல் மறைந்த ஹேமந்த் கர்கரேயை என்னிடம் அனுப்பினார்.அப்பொழுது நான் அவரிடம், குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்களை சிக்கவைப்பது குறித்த எனது சந்தேகங்களை தெரிவித்தேன்.
15 தினங்களுக்கு பிறகு கர்கரே மீண்டும் என்னை சந்திக்க வந்தார்.இந்தூரில் ஒரு சன்னியாசினி(ப்ரக்யாசிங்) தான் இச்சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாகவும், ஒரு ராணுவ அதிகாரியின்(புரோகித்) ஆதரவு அவருக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.செய்யாத குற்றத்திற்காக 19 முஸ்லிம்கள் 3 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு எவ்வாறு இந்த தேசத்தை சொந்த நாடாக கருதமுடியும்?இந்த வகையில் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஒரு நபர் ஏதேனும் ஒரு தவறைச் செய்தால் ஒரு சமூகத்தை முழுவதும் தேசவிரோதிகளாக சித்தரிக்க முடியுமா? பவார் கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை
நடந்து வருவதால் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் உண்மை வெளிவந்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.ஆனால், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரின் இழப்பை யார் சரிச் செய்வார்?இத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சந்திக்கும் அநீதியால் யாரேனும் கோபமடைந்தால் அவரை நம்மால் குற்றப்படுத்த இயலுமா? பவார் கேள்வி எழுப்பினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...