இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பூகம்பம் மற்றும் கன மழைக்கு இதுவரை 29 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.பாகிஸ்தானின் பஞ்சாப், பக்துன்கவா மாகாணங்கள் மற்றும் தலைநகர் இஸ்லாமாத் உள்பட பல இடங்களில் நேற்று பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 பதிவானது. இதில் கட்டிடங்கள் ஆடின. பல இடங்களில் ஜன்னல் கண்ணாடிகள் விரிசல் விட்டன.
ரம்ஜான் மாதம் என்பதால் சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை ஷகர் உணவருந்த மக்கள் தயாராகி கொண்டிருந்தனர். அப்போது பூகம்பம் ஏற்பட்டதால் பீதி அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். எனினும், பூகம்ப பாதிப்பு குறித்து தகவல்கள் இல்லை. இஸ்லாமாபாத், லாகூர் அபோதாபாத், ஜீலம், மாண்டி உள்பட பல நகரங்களில் இந்த பூகம்பம் உணரப்பட்டது. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் பூகம்பம் ஏற்பட்டது. இந்நிலையில் வடமேற்கு பகுதியான கராச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மேலும் கைபர் பக்துன்ஹவா, பலுசிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து மழை கொட்டி
தீர்க்கிறது. கராச்சியில் நேற்றைய நிலவரப்படி 115 மிமீ மழை பதிவானதானது. மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். குர்ரம் பழங்குடியின பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாயினர். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் பல்வேறு சம்பவங்களில் 13 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மழை மற்றும் வெள்ளம் காரணமாக பஞ்சாப் மாகாணத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கராச்சியில் திறந்து கிடந்த சாக்கடையில் விழுந்து பெண் ஒருவர் பலியானார்.
கராச்சியின் மற்றொரு பகுதியில் மழை காரணமாக மின்சாரம் தாக்கி குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாயினர். பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் புகுந்துள்ளதால் கராச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தாழ்வான இடங்களில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கராச்சியில் ராணுவ வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. இத்தகவலை கராச்சி மாகாண ஆணையர் சோயிப் அகமது சித்திக் உறுதிப்படுத்தி உள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...