Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 30, 2012

நரேந்திர மோடி இங்கிலாந்து வர தடை விதிக்கப்படுகிறது?

புதுதில்லி, ஏப்.30: மனித உரிமைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் பிரிட்டனுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட உள்ளது. இந்த சட்டத்தைப் பயன்படுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை இங்கிலாந்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளதாக மனித உரிமை பிரசாரகர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த தெற்குஆசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இதர நாடுகளில் மனித உரிமைகளை மீறியதாக குற்றம்சாட்டப்படுபவர்களை பிரிட்டன் கண்காணிப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் இதுபோன்ற சட்டம் இயற்றப்பட்டால் அதைப் பயன்படுத்தி நரேந்திர மோடி வருவதைத் தடுக்க வேண்டும். ஏனெனிஸ் குஜராத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதில் நரேந்திர மோடிக்கு பங்கு உள்ளதாக பல்வேறு மனித உரிமைக் குழுக்களும், ஆம்னஸ்டி உள்ளிட்ட சுயேச்சை அமைப்புகளும் தெரிவித்துள்ளன எனக் குறிப்பிட்டார்.

2005-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் நுழைய மோடிக்கு தடை விதிக்கப்பட்டுவரும் நிலையில் இங்கிலாந்திலும் அவர் நுழைய

கொலை மிரட்டல் வழக்கு: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கைது செய்யப்படுவாரா?

காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.தாசனின் வீடு 4 நாட்களுக்கு முன்பு அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக தி.மு.க.வினர் மீது எம்.ஜி.ஆர்.தாசன் புகார் கொடுத்தார். இந்த நிலையில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி செந்தில் மற்றும் செல்வம் ஆகியோரின் வீடு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் 1000 பேர் காட்டுமன்னார் கோவில் போலீஸ்நிலையம் சென்று அ.தி.மு.க.வினர் மீது புகார் கொடுத்தனர். அப்போது எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், தி.மு.க.வினரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

 இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் 150 பேர் மீது காட்டுமன்னார் கோவில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மீதும் வழக்குபதிவு செய்யப்பட் டது. அதில் கூட்டமாக வருதல், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தல், கொலைமிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அதைதொடர்ந்து தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி மணிகண்டன், முன்னாள் நகரமன்ற தலைவர் கணேசமூர்த்தி, பூக்கடை செந்தில், செல்வம் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்து எந்த நேரத்திலும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவரது சொந்தவூரான முட்டத்தில் தங்கியிருக்கிறார். அங்கு 150-க்கும் மேற்பட்ட

ஏப்ரல் 26, 2012

கொள்ளிட கரையை தார் சாலையாக மாற்றும் பணி தீவிரம்

காட்டுமன்னார்கோவிலில் கொள்ளிடக்கரையை அகலப்படுத்தி தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கொள்ளிடக்கரையோரத்தில் 25 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. மழை காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் வரும் அதிக வெள்ள நீரால் கரைகள் உடையும் அபாயம் இருந்து வந்தது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கொள்ளிடக் கரையை பலப்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து கடந்த திமுக ஆட்சியில் ரூ. 108 கோடியில் கொள்ளிடக்கரை அகலப்படுத்தும் பணி தொடங்கியது. இப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வீராணம் ஏரி, பொன்னேரி, பெருமாள் ஏரி, மேலும் பல்வேறு இடங்களிலிருந்து மண் எடுத்து வரப்பட்டு அகலப்படுத்தப்பட்டது. இரண்டு அடுக்கு கருங்கல் ஜல்லி நிரவப்பட்டு கரையின் சாலை சமப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது போக்குவரத்திற்கு ஏதுவாக தார்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தார்சாலை பணி நிறைவுற்றால் 25 கிராம மக்கள் போக்குவரத்து வசதி

இடிக்கப்பட்ட பள்ளிவாசலை வேறிடத்தில் தங்கத்தால் கட்டித்தந்தாலும் ஏற்க்க மாட்டோம்

இலங்கை,ஏப்ரல் 26 : இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் சுஜுது செய்த தம்புள்ள பள்ளிவாசலுக்கு ஈடாக எமக்கு தங்கத்தினால் பள்ளிவாசல் நிர்மாணித்து தந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பள்ளிவாசல் எமக்கு புனிதஸ்தலம். அதை பெறுமதிகாளால் ஈடுசெய்ய முடியாதென முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும், எம்.பி.யுமான ஹசன் அலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் ஹசன் அலி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தம்புள்ளiயிலுள்ள பள்ளிவாசல் முஸ்லிம்களுக்கும் புனிதஸ்தலமே. பெரும்பான்மையினரால் பள்ளிவாசலை சிதைக்க முடியாது.

மேலும் முஸ்லிம்களின் உணர்வுகளை அழிக்க முடியாது. பள்ளிவாசலை தங்கத்தினாலோ பொண் பொருட்களினாலோ செய்ய முடியாது. சமப்படுத்தவும் முடியாது. பெரும்பான்மையினருடன் சண்டையிட எங்களால் முடியாது. நாங்கள் பலவீனமானவர்கள். ஆனால் எமது உணர்வுகளை அவர்கள் மதிக்கவேண்டும். 60 வருட வரலாற்று கொண்ட தம்புள்ள பள்ளியில் பல இலட்சம் பேர் சுஜுத்து செய்துள்ளனர். அவர்களின் பிரார்த்தனைகள் நிச்சயம் அங்கீகரிக்கப்படுமெனவும்

மோடிக்கு விசா வழங்குவதில்லை என்ற முடிவில் மாற்றம் இல்லை: அமெரிக்கா

வாஷிங்டன்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்லை என்ற கொள்கை முடிவில் மாற்றம் இல்லை என்று அமெரிக்கா மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மோடிக்கு விசா வழங்க வேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு அமெரிக்க எம்.பி.வால்ஸ் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாலர் விக்டோரியா நுலந்த் கூறுகையில், நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்பது 2005-ம் ஆண்டே முடிவெடுக்கப்பட்டது. அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றார்.

 இதனிடையே அமெரிக்கா வாழ் இந்திய முஸ்லிம்கள் அமைப்பும் நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்ற 2005-ம் ஆண்டு முடிவை மாற்றிக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளது. மேலும் அமெரிக்க எம்.பி; வால்ஸ், நரேந்திர மோடியை ஆதரிப்பதை அந்த அமைப்பு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. குஜராத்தில் சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மோடிக்கு விசா வழங்குவதில்லை என்று அமெரிக்க அரசு தீர்மானித்திருந்தது

போட்டி நிறைந்த எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு

கடந்த 1952ம் ஆண்டு, இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் மூலம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக எய்ம்ஸ் ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் சிறந்த மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாக இது திகழ்கிறது. இங்கேயிருக்கும் வெறும் 50 MBBS இடங்களுக்காக, வருடந்தோறும், 80,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். எனவே, நுழைவுத்தேர்வானது, எப்படி போட்டி நிறைந்ததாக இருக்குமென்று நீங்கள் எண்ணிப்பார்த்துக் கொள்ளுங்கள்.

எய்ம்ஸ் விண்ணப்ப கட்டணம் ரூ.1000. இதை ஆன்லைனிலோ அல்லது சாதாரண முறையிலோ பூர்த்திசெய்து அனுப்பலாம். தகுதி 12ம் வகுப்பில், இயற்பியல், வேதியயில், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் மொத்தமாக சேர்த்து, 60% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் 1 ஜுன், 2012. தேர்வுமுறை சுமார் 3.5 மணி நேரங்கள் நடைபெறக்கூடிய, பேப்பரில் எழுதும் தேர்வு இது. இத்தேர்வில், சுமார் 200 multiple choice மற்றும் reason-assertion வகையிலான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். தலா 60 கேள்விகள், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களிலிருந்து கேட்கப்படும். 20 கேள்விகள், பொது அறிவுக் கேள்விகளாக கேட்கப்படும். அதேசமயம், தவறான விடைகளுக்கு Negative marking உண்டு. எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு பற்றி விரிவான தகவல்களை அறிந்துகொள்ள www.aiims.edu என்ற

மே15 முதல் விமான கட்டணங்கள் உயர்கிறது

புதுடில்லி : விமானம் மூலம் டில்லியிலிருந்து செல்பவர்கள் மற்றும் டில்லிக்கு வருபவர்களிடம் மே 15ம் தேதிக்கு பிறகு ரூ.1400 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் விமான தரையிறக்கம், பார்க்கிங் உள்ளிட்ட பிற வசதிகளுக்கான கட்டணத்தை 346 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் இருந்து 2000 முதல் 5000 கி.மீ., வரையிலான தூரத்தில் உள்ள பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளிடம் ரூ.845.50 ம், டில்லிக்கு வரும் பயணிகளிடம் ரூ.699.17ம் கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது. 5000 கி.மீ., க்கு மேல் உள்ள தூரம் பயணம் செல்லும் பயணிகளிடம் டில்லி வருவதற்கு ரூ.881.10ம், டில்லியிலிருந்து செல்வதற்கு ரூ.1068ம் கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்தை பொறுத்தமட்டில் டில்லியிலிருந்து பிற பகுதிகளுக்கு அதாவது 500கி.மீ.க்குள் பயணிப்பவர்களுக்கு விமான கட்டணமாக ரூ.231.40ஆகவும், டில்லிக்கு வருபவர்களிடம் ரூ.195.80 கூடுதலாக வசூலிக்கப்பட இருக்கிறது.

ஏப்ரல் 25, 2012

சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு : முஸ்லிம்களின் கவனத்திற்கு...!


இந்தியாவில் உள்ள பல்வேறு சாதி மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களை தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 23-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது.  1931-ம் ஆண்டுக்குப் பிறகு இது மாதிரியான சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை.
சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சாதிவாரி மக்கள் தொகை விபரம் துள்ளியமாக தெரியும்.
இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகார இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
விகிதாச்சார இட ஒதுக்கீடு என்பது இன்று பேச்சளவில் மட்டுமே இருக்கிறது. இந்த கணக்கெடுப்பு முடிந்தபிறகு விகிதாச்சார இட ஒதுக்கீடுக்கான குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கும். தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பட்டியலில்
1) ஷேக்,
2) சையது,
3) தக்னி முஸ்லிம்
4) அன்சார்,
5) தூதுகோலா
6) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர்
7) மாப்பிள்ளா
என 7 சாதியினராக முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் போது இந்த 7 சாதிகளில் ஒன்றை குறிப்பிட்டு, அது பள்ளி மாற்றுச் சான்றிதழில் இடம் பெற்றால் தான் அந்த குழந்தைக்கு வட்டாட்சியர் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிச் சான்றிதழை வழங்குவார்.
இந்த சாதிச் சான்றிதழை வைத்து தான் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும், கல்வி உதவித் தொகைகளும் பெற முடியும்.
பல முஸ்லிம்கள் இந்த விபரம் தெரியாமல் பட்டாணி, சாஹிப், பரிமளம் போன்ற உட்பிரிவுகளையும், குடும்பப் பெயர்களையும் சாதி என்ற இடத்தில் குறித்து விடுகின்றனர்.
பெற்றோர்கள் தெரியாமல் செய்யும் இந்தத் தவறின் காரணமாக மாணவச் செல்வங்களின் எதிர்காலம் பாழ்பட்டு போய்விடுகிறது.
எனவே மதம் என்று குறிப்பிடப்படும் இடங்களில் “இஸ்லாம்” என்றும் சாதி என்று குறிப்பிடப்படும் இடங்களில் மேற்கண்ட 7 பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவை மட்டுமே முஸ்லிம்கள் குறிப்பிட வேண்டும்.
வேறு எந்த பெயரையும் குறிப்பிடக்கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பின் போதும் இதே வழிமுறையைத் தான் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சாதிவாரி கணக்கெடுப்போடு சேர்த்து பொருளாதார கணக்கெடுப்பும் எடுக்கப்படுகிறது. சில முஸ்லிம் குடும்பங்களின் மாத வருமானம் 2 ஆயிரம் ரூபாய்தான் இருக்கும். ஆனால் கவுரவத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என கருதி மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்று பொய்யாக சொல்கிறார்கள். இது மாதிரியான பொய்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாழாக்கி விடும் என்பதை மறந்துவிடக்கூடாது.
இந்த ஆண்டு வரை மருத்துவம், பொறியியல் படிக்கும் ஏழை மாணவர்கள் அரசின் கல்வி உதவித் தொகையை பெற வேண்டுமெனில் குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல்

திமுக, அதிமுக மோதல் 55 பேர் மீது வழக்கு

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் நேற்று முன்தினம் திமுக, அதிமுக இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 55 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் அருகே திமுக, அதிமுகவினரிடையே நேற்று முன்தினம் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமலிங்கம் தலைமையில் போலீசார் நேற்று வாகன அணிவகுப்பு நடத்தி பொதுமக்களின் அச்சத்தை போக்கினர்.

 இதைத்தொடர்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பேரூராட்சி தலை வரின் உறவினர் நிர்மலாமேரி (40), காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இப் புகாரின் பேரில் போலீ சார் கணேசமூர்த்தி உட்பட 30 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள னர். இதேபோல பாதிக்கப்பட்ட உடையார்குடி சின்ன மசூதி தெருவை சேர்ந்த குப்புசாமி மகன் பன்னீர்செல்வம் (44), என்பவர் கொடுத்த புகாரின் மீது போலீசார், சுமார் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.










ஏப்ரல் 24, 2012

அமெரிக்காவின் உளவு விமானத்தை கைப்பற்றியது ஈரான்

 
நன்றி:மணிச்சுடர் 

சிரியாவில் போர் நிறுத்தம் குறித்து ஆய்வு செய்ய 300 பேர் கொண்ட குழுவை அனுப்ப முடிவு

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சி, வன்முறையில் 9 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட னர். இதனை தடுக்க அய்.நா. சபை எடுத்த கடும் முயற்சிக்கு பிறகு அங்கு கடந்த 12ஆம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. என்றாலும் முக்கிய நகரங்களில் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக புகார் கூறப்படுகிறது. எனவே போர்நிறுத் தத்தை கண்காணிக்க அனைத்து நாட்டு பிர திநிதிகளை கொண்ட ஆய்வு குழுவை அனுப்ப அய்.நா. பாதுகாப்பு சபை முடிவு செய்து உள்ளது. இக்குழுவில் 300 பேர் இடம் பெற தீர் மானிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இது சாத்தியப்படுமா? என பல நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. ஆய்வு குழுவினர் ஆயுதம் இன்றி நிரா யுதபாணியாக செல் கிறார்கள். எனவே அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அய்.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் உறுதி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

தஞ்சையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய முஸ்லிம்களின் இட ஒதுக்கிட்டிற்கான எழுச்சி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய முஸ்லிம்களின் இட ஒதுக்கிட்டிற்கான எழுச்சி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.எழுச்சி பேரணி தஞ்சை திலகர் திடலில் துவங்கி தஞ்சை ரயில் நிலையம் அருகே நிறைவுற்றது.பேரணி முடிவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இந்த இட ஒதுக்கிட்டிற்கான எழுச்சி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் ,பெண்களும் இதில் முஸ்லிம்களுக்கு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிசன் அடிப்படையில் மத்தியில் 10 % இட ஒதிக்கிடும்,தமிழகத்தில் 7 % இட ஒதிக்கிடும்வழங்க வேண்டும் என்று பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

இந்தியாவின் தேசிய பானமாகிறது டீ!

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவின் தேசிய பானமாக டீ அறிவிக்கப்படும் என திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் ஜோர்கத்தில் நடைபெற்ற தேயிலை உற்பத்தியாளர்களின் 75வது ஆண்டு விழாவில் கலந்துக் கொண்ட திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறியதாவது: அசாமின் முதல் தேயிலை உற்பத்தியாளரான மணிராம் திவானின் 212வது பிறந்த நாளை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டீ இந்தியாவின் தேசிய பானமாக அறிவிக்கப்படும்.

தேயிலை உற்பத்தியில் ஈடுபடுவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள் என்பதும், தேயிலை தேசிய பானமாக அறிவிக்கப்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணம். பிளாக் டீ உற்பத்தியில் இந்தியா உலகளவில் முதலிடத்தில் உள்ளது என்றும், 83 சதவிகித இந்திய குடும்பங்களில் டீ தான் அருந்தப்படுகிறது

ஏப்ரல் 23, 2012

ஆர் எஸ் எஸ் யின் பினாமி என்பதை நிருபித்தது அன்ன ஹசாரே குழு

கூட்ட நடவடிக்கையை செல்போனில் படம் பிடித்த முஸ்லிம் தலைவரை நீக்கியதால், எங்களுக்குள் பிளவு இல்லை என்று அன்னா ஹசாரே தெரிவித்தார். ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே குழுவின் உயர் நிலை கமிட்டி கூட்டம், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நேற்று நடந்தது. கூட்ட நடவடிக்கையை இக்குழுவில் இடம் பெற்றுள்ள தலைவரான முப்தி ஷமீம் காஸ்மி, தனது செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் ஹசாரே குழுவில் இருந்து நீக்கப்பட்டார். இது பற்றி கருத்து தெரிவித்த காஸ்மி, எனக்கு செல்போனையே ஒழுங்காக இயக்க தெரியாது. அப்படி இருக்கையில் செல்போனில் எப்படி என்னால் படம் பிடிக்க முடியும். ஹசாரே குழு முஸ்லிம்களுக்கு எதிரான இயக்கமாக மாறிவிட்டது என்றார்.

 இந்நிலையில், அன்னா ஹசாரே இன்று டெல்லியில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எங்களிடையே பிளவு எதுவும் கிடையாது. நீங்கள் (மீடியாக்கள்) எந்த பிளவை பற்றி கேட்கிறீர்கள்? எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் (காஸ்மி) நேற்று நடந்த கூட்ட நடவடிக்கையை படம் பிடித்ததுடன், தகவல்களை கசிய விட்டுள்ளார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று குழுவைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் கேட்டுள்ளார். உடனே, அவர், உங்கள் குழுவில் இருந்து விலகுகிறேன். திரும்பி வர மாட்டேன் என்று கூறிவிட்டு, வெளியே சென்று விட்டார். இதை தவிர வேறு பிரச்சினை அங்கு நடக்க வில்லை. அவர் நீக்கப்பட்டதால் எங்களுக்குள் பிளவு எதுவும் ஏற்படவில்லை. கருத்து வேறுபாடுகள் தோன்றுமானால், அதை சரிசெய்ய போராடுவோமே தவிர வீழ்ந்து விட மாட்டோம். எங்கள் போராட்டத்தில் பாபா ராம்தேவ் கலந்து

லால்பேட்டையில் மழை வேண்டி துஆ

source:Manichudar

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த கல்வி கொள்ளை!

 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு மாநில மாணவர்களும் வெளிநாட்டு மாணவர்களும் படிக்கிறார்கள். இக்கல்லூரியில் சேருவதற்கு கல்விக்கட்டணம் இல்லாமல் நன்கொடை என்ற பெயரில் பல இலட்சங்கள் செலவாகிறது.

 சீட் வாங்கி தருகிறேன் என்ற பெயரில் நன்கொடை பணம் பெறுவதற்கு இக்கல்லூரியில் உயர் பேராசிரியர்கள் முதல் இக்கல்லூரியில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர் வரை கொள்ளை லாபம் அடைந்து வருகிறார்கள். 

ஏழை மாணவர்கள் தங்கள் நிலங்களையும் நகைகளையும் விற்றும் வட்டிக்கு கடன் பெற்றும் தங்கள் பிள்ளைகள் இன்ஜினியர் டாக்டர் மற்றும் உயர் பொறுப்புக்களுக்கு வரவேண்டும் என்ற ஆசையில் இங்கிருக்கும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களான புரோக்கர்களிடம் கல்லூரி சீட்டுக்காக பணத்தை கொடுக்கின்றனர். சீட் வாங்கி தருகிறேன் என கூறி பல லட்சங்களை பெற்று கொண்டு ஏமாற்றி விடுவதால் வருடந்தோறும் நூற்றுக்கணக்கானோர் ஏமாற்றப்படுவது வாடிக்கையாகவே உள்ளது.

கஷ்டப்பட்டு கடன்பட்டு கொடுத்த பல லட்சங்கள் ஏமாற்றப்படுவதால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். பலர் மன நோயாளியாக மாறிவிடுகின்றனர். உயர்மட்டம் வரை பங்கு போவதால் இது போன்ற கொள்ளைகளை பல்கலைகழக நிர்வாகம் கண்டுகொல்வதில்லை. 

திருவாரூர் மாவட்டம் நாச்சிபுரத்தை சேர்ந்த அன்வர்தீன் என்பவர் தனது மகன் சித்திக் ஜாசிமின் மருத்துவ படிப்பிற்கான சீட்டு கேட்டு இக்கலூரிக்கு வந்துள்ளார்.

சீட் இல்லை ஆனால் பேராசிரியர்களிடம் கேட்டு பாருங்கள் என அங்கிருந்தவர்கள் கூறி உள்ளனர்.  தனது நண்பரும் திருவாரூர் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் எவ. கருணாநிதி அவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை செய்துள்ளார்அன்வர்தீன்.  எவ.கருணாநிதி தனக்கு தெரிந்த அண்ணாமலை பல்கலைகழகப் பேராசிரியர் கருப்பையன் என்கிற செல்வராஜ் (பொருளியில் துறை ) அவர்களும் அவருடைய மனைவி சுபாஷினி (கணினி துறை ) அவர்களும் பேராசிரியர்களாக இருக்கிறார்கள் அவர்களை கேட்டுப்பாருங்கள் என

ஏப்ரல் 22, 2012

தமிழகத்தின் 5 நகரங்களில் இட ஒதுக்கீடு கோரி முஸ்லிம்கள் இன்று பிரம்மாண்ட போராட்டம்!

சென்னை:தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் வெகுஜன மக்கள் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமையில் முஸ்லிம்கள் நடத்தும் இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் இன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு தமிழகத்தின் சென்னை, நெல்லை,மதுரை, தஞ்சாவூர்,கோவை ஆகிய முக்கிய நகரங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையில் பிரம்மாண்டமான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், அதிகாரம் ஆகியவற்றில் வலுப்பெறுவதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் ரங்கநாத் மிஷ்ரா கமிஷனின் பரிந்துரையின்படி மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவும், தமிழகத்தில் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வழங்கப்பட்ட 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்திடக் கோரியும் இன்று(ஏப்ரல்22) தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் பெருவாரியான முஸ்லிம்கள் கலந்துகொள்ளும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. இப்போராட்டத்தில் 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இன்றைய

சிதம்பரம் கடலோர பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை கருவி

சிதம்பரம் கடலோர பகுதிகளில் பொருத்துவதற்காக தமிழக அரசு சுனாமி எச்சரிக்கை கருவியை வழங்கியுள்ளது. சிதம்பரம் அருகே கடலோர கிராமங்களான கிள்ளை, முடசல் ஓடை, எம்ஜிஆர்திட்டு, பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டை, புதுகுப்பம் போன்ற பகுதிகளில் ஏற்கனவே சுனாமி தாக்கியதால் பலர் உயிரிழந்துள்ளனர். இப்பகுதிகளில் அடிக்கடி சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

 இதனையொட்டி இப்பகுதிகளில் சுனாமி வருவது குறித்து எச்சரிக்கும் வகையில் தமிழக அரசு சுனாமி எச்சரிக்கை கருவியினை வழங்கியுள்ளது. நேற்று முன்தினம் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ள இக்கருவி விரைவில் கடலோர கிராமத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் பொருத்தப்பட உள்ளன.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் காணாமல் போகும் சாலைகள்

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டத்தில், காட்டுமன்னார்கோவில் கடைக்கோடியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அதிகளவு கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு விவசாயிகள் அதிகம் உள்ளனர். மிகவும் பின் தங்கிய பகுதியாகும். இப்பகுதியில் உள்ள போக்குவரத்து சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் கிராமங்களில் உள்ள சாலைகள் மிகவும் பழுதாகி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் மாறிவிடும். இச்சாலைகளை நெடுநாட்கள் சீரமைக்கப்படாமல் விட்டு விடுவதால், பயணிக்க லாயக்கற்று காணப்படுகிறது.

 இரவு நேரங்களில் பொதுமக்கள் மருத்துவமனைகளுக்கு கூட வரமுடியாத அளவுக்கு சாலைகள் சேதமாகி காட்சி அளிக்கிறது. காட்டுமன்னார்கோவில் பகுதியில் சுமார் 500 கி.மீ. கிராம சாலைகள் உள்ளது. இதில் சுமார் 29 கி.மீ. பேருராட்சி சாலைகளும், மாநில நெடுஞ்சாலையாக 237.6 கி.மீட்டரும் உள்ளது. இப்பகுதியில் மாவட்டத்தின் முக்கிய சாலையாக 75 கி.மீ. உள்ளது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, கிராம சாலை, பேருராட்சி சாலை என பல்வேறு வகையாக சாலைகள் பிரிக்கப்பட்டாலும் ஒரு சாலை கூட நல்ல நிலையில் இல்லை. சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் வழியாக தேசிய நெடுஞ்சாலை திருச்சி வரை செல்கிறது. இதில் சிதம்பரத்தில் இருந்து 25 கி.மீ சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதுபோல் காட்டுமன்னார்கோவிலில் இருந்து திருச்சி செல்லும் வழியில் மீன்சுருட்டி வரை சாலையை காணவில்லை. இதுபற்றி பலமுறை பொதுமக்கள் மனு மற்றும் மறியல் செய்தும்

ஏப்ரல் 21, 2012

கல்வி நிறுவனங்கள் , பல்கலைகழகங்களின் வலைத்தள பட்டியல்


இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான கல்வி நிறுவனங்கள் மற்றும்பல்கலைகழகங்களின்அதிகாரப் பூர்வமான வலைத்தளங்களின்பட்டியல்.

Website Address of Universities
Name of the Institution
Website Address
Aligarh Muslim University (AMU)
All India Institute of Medical Sciences (AIIMS)
Allahabad University (AU)
Alagappa University 
Amaravati University
Anand Agricultural University
Andra University 
Anna University, Chennai
Annamalai University
Arunachal University (Rajiv Gandhi University)
Assam Administrative Staff College (AASC)
Assam University 
Avinashilingam University For Women
Bangalore University
Banaras Hindu University (BHU)
Banasthali Vidhyapith
Bengal Engineering and Science University
Barkatullah Vishwavidhyalaya, Bhopal
Berhampur University
Bharathidasan university, Tamil Nadu
Bharathiar University, Tamil Nadu

இந்தியாவில் முதன்முதலில் 4G ரிலீஸ் ...

பாரதி ஏர்டெல் கல்கத்தாவில் 4G ஐ வெளியிடுவதற்காக ZTE நிறுவனத்தை தேர்வுசெய்துள்ளது. பாரதிஏர்டெல்நிறுவனம்4G நெட்வொர்க் ஐ திட்டமிட்டு, வடிவமைத்து, சப்லைசெய்து, சந்தையில் நிறுத்துவதற்காக ZTE கார்பரேஷனை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் 4G சேவையை இந்தியாவில் முதன் முதலில் வெளியிடும் பெயரை ஏர்டெல் நிறுவனம் பெறவுள்ளது. இந்த வெளியீட்டின் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிவேக கம்பியில்லா இணையதள சேவையை அனுபவிக்கவுள்ளனர். மேலும் இதன் மூலம் சிறந்த வீடியோ ஸ்ட்ரீமிங் - ஐயும், high definition video conferencing - ஐயும், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பெறவுள்ளனர்.

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் CEO சஞ்சய்கபூர் கூறுகையில்: வெளிவர இருக்கும் இந்த 4G சேவையின் மூலம் அதிவேக தகவல் பரிமாற்றத்தை இந்த சமுதாயாத்திற்கு ஏர்டெல் நிறுவனம் அளிக்கவிருக்கிறது என்றும் இந்த 4G வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருப்பதாகவும் கூறினார். ZTE நிறுவனம் LTE தரத்தை பெறுவதற்காக இதுவரை 381 அத்தியாவசிய உரிமத்திற்கு விண்ணப்பித்துள்ளது. இது உலகிலுள்ள அனைத்து அத்தியாவசிய உரிம விண்ணப்பங்களிலும் தோரயமாக7 விழுக்காடுகளை பிடித்துள்ளது. ZTE நிறுவனம் இதுவரை LTE வணிகத்தில் 30 ஒப்பந்தங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 20, 2012

திருட்டு மணல் அள்ளும் கும்பலால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் திருட்டு மணல் அள்ளும் கும்பலால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் கொள்ளிடம் ஆறு செல்கிறது. கீழணையிலிருந்து வல்லம்படுகை வரை சுமார் 50 கிராமங்களுக்கு மேல் உள்ளது. இப்பகுதி மக்கள் வடக்குராஜன் வாய்க்கால், வடவாறு ஆகியவற்றின் மூலம் பாசனம் பெற்று விவசாயம் செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை திறப்பதற்கு முன் ஆழ்குழாய் கிணற்றின் மூலம் விதை விடும் பணியை செய்கின்றனர். இதன் காரணமாக மழை காலம் தொடங்குவதற்கு முன்னரே அறுவடை பணி நடைபெறும்.

கொள்ளிடம் ஆறு இப்பகுதியில் இருப்பதால் சுமார் 50 அடி ஆழத்திலிருந்து 100 அடி ஆழத்திற்குள் ஆழ்குழாய் கிணறு அமைத்து எளிதில் தண்ணீர் கிடைக்கப்பெற்று விவசாயிகள் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். நெல் பயிரோடு மட்டுமல்லாமல் கோடைகாலத்தில் வாழை, பருத்தி, கத்தரி, வெண்டை, மிளகாய், என பல் வேறு வாணிப பயிர்களையும் செய்து வருகின்றனர். இக்காலங்களில் நெல்பயிர் மட்டும் செய்தால் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்த இயலாது என்பதால் கோடைக்காலத்திலும் தீவிரமாக வாணிப பயிர் களை செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். கொள்ளிடம் ஆறு இப்பகுதி விவசாயிகளுக்கு இயற்கை கொடுத்த மிக பெரிய வரபிரசாதமாகும். ஆதலால் கொள்ளிடம் ஆற்றையே தெய்வமாக நினைக்கும் அளவுக்கு விவசாயிகள் உள்ளனர். சில கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட்டு வருவதையே விவசாயிகள் எதிர்க்கும் மனநிலையில் உள்ளனர்.

 கொள்ளிடம் ஆறு விவசாயிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறதோ அதே போன்று பொதுப்பணித்துறைக்கும் சில சமூக விரோதிகளுக்கும் முக்கியமானதாக கூறப்படுகிறது. பொதுப்பணித்துறை சார்பில் மணல் குவாரிகளை ஏற்படுத்தி மணலை விற்பனை செய்து அரசுக்கு லாபம் ஈட்டி

புதுமண தம்பதிகளுக்கு ரேஷன் கார்டு கிடையாது

புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 1.97 கோடி ரேஷன் கார்டு புழக்கத்தில் உள்ளது. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க, தமிழக அரசு பயோமெட்ரிக் தொழில் நுட்பத் துடன் கூடிய புதிய கார்டுகள் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக கார்டுதாரர்களின் கண் கருவிழிப்படலம், விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இதற்கு இப்போதைக்கு போதிய அவகாசம் இல்லை என்பதால், தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் ஆயுள் காலத்தை நடப்பு ஆண்டு முழுவதற்கும் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

 கார்டு புதுப்பிக்கும் பணி கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் முடிய நடந்தது. இந்நிலையில், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கார்டு வழங்குவதற்கு ஏதுவாக, இப்போதைக்கு புதுமண தம்பதிகளுக்கு மட்டும் புதிய ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டாம் என கூட்டுறவு மற்றும் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டு தரமறுக்கும் அரசு உத்தரவால் புதுமண தம்பதிகள் பாஸ்போர்ட் பெறுவது முதல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது, புதிய காஸ் இணைப்பு பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு மற்றும் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது: புதுமண தம்பதிகள் புதிதாக ரேஷன் கார்டு பெற வேண்டுமானால், ஏற்கனவே பெற்றோரது ரேஷன் கார்டில் உள்ள தங்கள் பெயர்களை நீக்கம் செய்யப்பட்டதற்கான சான்றிதழ் பெற்று, விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் சரிதானா என்பதை அதிகாரிகள் சரிபார்க்க போதிய

ஏப்ரல் 18, 2012

அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் சீருடை நிறம் மாறுகிறது

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வரும் கல்வி ஆண்டிலிருந்து மெரூன்- இளம் பிரவுன் நிறங்களில் புதிய சீருடை களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச சீருடைகள் வழங்கி வருகிறது. இலவச சீருடையாக மாணவர்களுக்கு காக்கி நிற அரைக்கால் சட்டையும், வெள்ளை சட்டையும் வழங்கப்பட்டு வந்தது. மாணவிகளுக்கு இளம் நீல நிறத்தில் பாவாடையும், வெள்ளை நிறத்தில் சட்டையும் வழங்கப்பட்டன. அனைத்து அரசு பள்ளிக்கூடங்களுக்கும் ஒரே மாதிரியான சீருடைகள் வழங்கவும், சீருடையின் நிறத்தை மாற்றவும் தமிழக அரசு முடிவு செய்தது.

 அதன்படி வரும் கல்வி ஆண்டில் இருந்து அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் சீருடை நிறம் மாறுகிறது. அதுமட்டுமின்றி மாணவ-மாணவி களுக்கு ஒரு ஜோடி சீருடை மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டுக்கு பதிலாக, ஒரு மாணவருக்கு ஒரு கல்வி ஆண்டிற்கு 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரைக்கால் சட்டை மற்றும் மேல் சட்டையும், 5ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவிகளுக்கு பாவாடை யும், சட்டையும் வழங்கப்படுகிறது. 6ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டை இனிமேல் கிடையாது. அதற்கு பதிலாக அனைத்து மாணவர்களுக்கும் முழுக்கால் சட்டை (பேண்ட்) வழங்கப்படும்.

 அதுபோல் 6ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் சுடிதார் மற்றும் துப்பட்டா வழங்கப்படுகிறது. பாவாடை-தாவணியை விட சுடிதார் உடைதான் மாணவிகளுக்கு வசதியாக உள்ளது என்பதால் இந்த புதிய ஆடை தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கான பேண்ட் மற்றும் அரைக்கால் சட்டைகள் மெரூன் நிறத்தில் தயார் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மேல் சட்டை இளம் பிரவுன் நிறத்தில் உற்பத்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு சுடிதார் பேண்ட் மற்றும் டாப்ஸ் மெரூன் நிறத்திலும், துப்பட்டா இளம் பிரவுன் நிறத்திலும் உற்பத்தி செய்ய முதல்-அமைச்சர் ஜெயலலிதா

பாகிஸ்தானிலிருந்து ஒசாமாவின் குடும்பம் வெளியேற்றம்

   ஒசாமா குடும்பத்தின் 16 உறுப்பினர்களும் இன்று இரவிற்கு மேல் எந்த நேரத்திலும் நாட்டைவிட்டு வெளியேற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த குண்டு வெடிப்புக்குப் பின் அல் கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின் லேடன் தன் குடும்பத்துடன் பாகிஸ்தானில் சட்ட விரோதமாக தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன் அவர் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் போதே அமெரிக்க ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். ஒசாமாவின் மூன்று மனைவிகளும் மற்றும் அவர்களது குழந்தைகளும் பாகிஸ்தானில் சட்ட விரோதமாக தங்கியிருந்தனர்.

இதனால் பாகிஸ்தான் நீதி மன்றம் அவர்களை 45 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தது. மேலும் இத்தண்டனை காலம் முடிவடைந்த பின் உடனடியாக அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒசாமா குடும்பத்தின் 16 உறுப்பினர்களும் இன்று இரவிற்கு மேல் எந்த நேரத்திலும் நாட்டைவிட்டு வெளியேற்றப்படலாம் என ஒசாமா குடும்பத்தின் ஆலோசகர் அமீர் காலில் டான் பத்திரிகைக்கு தகவல் தந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் உள்துறை அமைச்சகம் நேற்று இரவு கூடி இது குறித்து விவாதித்ததாகவும், ஒசாமா குடும்பத்தினர் சவுதி அரேபியா அல்லது ஏமன் நாட்டிற்கு அனுப்பப்படலாம் என

காட்டுமன்னார்கோவிலில் உதவித்தொகை பெற தள்ளுமுள்ளு- பரபரப்பு

காட்டுமன்னார்கோவிலில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக அரசு கல்வி உதவித்தொகையை அந்தந்த சமூக நல வட்டாட்சியர் பிரிவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தது. இதன்படி காட்டுமன்னார்கோவிலில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பம் செய்தனர். இதில் ஆயிரத்து ஐநூறு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட உள்ளதாக காட்டுமன்னார்கோவில் சமூகநல தாசில் தார் பிரிவில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தகவல் அறிந்து மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் நேற்று காட்டுமன்னார்கோவில் வட்டாட்சி யர் அலுவலகத்திற்கு கூட்ட மாக வந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விண்ணப்பம் செய்த அனைவருக் கும் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தா லும் பெற்றோர்கள், மாணவர்கள் அமைதி அடையவில்லை. சமூக நல வட்டாட்சியர், இப்பிரிவில் அலு வலரை சூழ்ந்து கொண்டு தங்களுடைய விண் ணப்பத்தை பெற வேண்டும் என்று கூறினர். ஏற்கனவே இப்பிரிவில் பணியாற்றிய அலுவலரும் மாற்றலாகி சென்று விட்டதால் ஒரு அலுவலரை வைத்து கொண்டு பல்வேறு பணி கள் நடைபெறுகிறது. தற்போது உதவி தொகை பெறுவதற்கு ஆயிரக்கணக்கில் பெற்றோர் கூடியதால் பணி செய்ய முடியாமல் அதிகாரி மற்றும் அலு வலர் சிரமப்பட்டனர். ஒருவரை ஒருவர்

காட்டுமன்னார்கோவிலில் புயல் நிவாரண ஊழலை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

    தானே புயல் நிவாரண ஊழலை கண்டித்து காட்டுமன்னார்கோவிலில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையத்தில் சிபிஐ (எம்எல்) அனைத்திந்திய விவசாய தொழிலா ளர் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் ஆகியவை சார்பில் தானே புயல் நிவாரண தொகையில் செய்யப்பட்ட ஊழலை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதில் ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்டகாரன்குப்பம், வாலிஸ்பேட்டை, பக்கிரிமானியம், கொளத்தங்குறிச்சி ஆகிய கிராமங்களில் உள்ள விடுபட்ட 167 நபர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படவில்லை. பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு படிவம் 20 தயார் செய்தும் நிவாரண தொகை வழங்கப்படாததை கண்டிப் பதாகவும், இதில் நடைபெறும் ஊழலை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களில் தகுதியான நபர்களுக்கு 35 கிலோ அரிசி வழங்க வேண்டும். அரசு பொது மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவரை பணியில் இருக்க செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு

சிதம்பரம் ராகேவேந்திர கல்லூரி அருகே விபத்து 2 பேர் பலி!

  சென்னை விமானம் நிலையத்தில் உறவினரை வெளிநாட்டு செல்ல வழியனுப்பிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த நாகை மாவட்டம் பூங்கானுரை சேர்ந்த சர்புன்னிசா (60), ஜபரூத்தின் (40) மற்றும் டிரைவர் கார்த்தி ஆகியோர் காரில் பூங்கானுர் நோக்கி சென்று கொண்டிருந்த போது காலை 7.30 மணியளவில் சிதம்பரம் கீழமுங்கிலடி ராகேவேந்திர கல்லூரி அருகே எதிர வந்த டிப்பர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியத்தில் காரில் இருந்த சார்புன்னிசா (60) மற்றும் ஜபரூத்தின் (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானர்கள்.

 உயிருக்கு ஆபத்தான நிலையில் டிரைவர் கார்த்தி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விபத்தில் பலியான இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவரின் உறவினர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் திரண்டுயுள்ளனர். மேலும் செய்தியரிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை நேரில் சென்று அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல்

சிறைத் தாக்குதல்:தாலிபான்களின் சக்தி பிரகடனம்- பாக். பத்திரிகை!

இஸ்லாமாபாத்:கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்தி 384 கைதிகளை விடுவித்த தாலிபான்களின் தாக்குதல் அவர்களின் சக்தியை பிரகடனப்படுத்துவதாக பாகிஸ்தான் நாளிதழான நியூஸ் இண்டர்நேசனல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளதாக அப்பத்திரிகையின் தலையங்கம் கூறுகிறது.

சிறையின் வாசல் அருகே குண்டுவெடிப்பை நிகழ்த்திய தாலிபான்கள் பெரும் ஆயுத பலத்தின் பின்னணியில் இரண்டு மணிநேரம் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட பிறகு 384 கைதிகளை விடுவித்தனர். தாக்குதல் முடிந்து திரும்பும் வேளையில் சிறையின் ஒரு பகுதியை தீவைத்தனர். இத்தகையதொரு தாக்குதல் முன்பு நடந்தது இல்லை என்று கூறும் பத்திரிகை, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானின் காந்தஹாரில் இதைப் போன்றதொரு சம்பவம் நடந்ததாக சுட்டிக்காட்டுகிறது. விடுவிக்கப்பட்ட தாலிபான் போராளிகள் தங்களது பணியை துவக்கும் வேளையில் தாலிபான் அமைப்பு மீண்டும் வலுப்பெறும் என்றும், இதன் மூலம்

ஏப்ரல் 16, 2012

விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்டம்

   இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரம் சோலை மகாலில் மாநில தலைவர் காதர் மைதீன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபு பக்கர், பொருளாளர் ஷாஜ கான், காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹ்மான் எம்.பி.மாநில துணைத்தலைவர் மௌலானா தளபதி ஷபிகுர் ரஹ்மான் மாநில செயலாளர்கள் நெல்லை அப்துல்மஜித், காயல்மகபூப், கமுதி பஷீர், திருப்பூர் சத்தார், ஆம்பூர் பாசித், ஜீவகிரிதரன், ஆடுதுறை ஷாஜகான், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அமீர்அப்பாஸ், ஷேக்தாவூத், சுல்தான் மொய்தீன் உள்பட செயற்குழு உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட தலைவர், செய லாளர்கள் கலந்து கொண் டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஐக்கிய ஜமாஅத் பேரவை மேலாளர் சகாயராஜ், ஆலோசகர் ஷாகுல்அமீது, ஷாநவாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் காதர்மொய்தீன், நிருபர்களுக்கு பேட்டியளித் தார். அப்போது அவர் கூறிய தாவது:- 3 மாநாடுகள் அகில இந்திய தலைவர் அகமது தலைமையில் 18-ந் தேதி சென்னை தலைமை அலுவலகத்தில் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் தேசிய அளவி லான இளைஞரணி மாநாடு நடக்க உள்ள தேதி, இடம் குறித்து நிர்ணயிக்கப்படும். வழக்கமாக கேரளாவில் தான் இந்த மாநாடு நடத்தப் படும். இப்போது முதல் முறையாக தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ளது. இம்மாநாட்டிற்கு தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தது 200 பேர் வரை பங்கேற்க வேண்டும். மாநிலத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும். இதனை தொடர்ந்து சென்னையில் ஜுன் 30-ந் தேதி மாணவர் பேரவை

ஹைதராபாத் கலவரத்திற்கு காரணமான ஹிந்துத்துவா தீவிரவாதி கைது!

ஹைதராபாத்:பழைய ஹைதராபாத் நகரில் அனுமன் கோயிலில் மாட்டுக் கறியை வீசிவிட்டு அதன் பழியை முஸ்லிம்கள் மீது போட்டுவிட்டு கலவரத்தை உருவாக்கிய ஹிந்துத்துவா தீவிரவாதியை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் பழைய ஹைதராபாத் நகரில் பஹதூர்பூராவில் உள்ள நந்தி முஸ்லைகுடா பகுதியில் ஹனுமான் கோயிலில் யாரோ ஒரு நபர் மாட்டு இறைச்சியை வீசிவிட்டு சென்றதை தொடர்ந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டனர். இதில் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

போலீசார் கைக்கெட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். நிரபராதிகளான முஸ்லிம்களை கைது செய்த போலீஸார் ஹிந்துத்துவா தீவிரவாதிகளை சும்மா விட்டனர். இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி ஜி.சிவகுமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் கால்கிலோ மாட்டு இறைச்சியை கடையில் இருந்து வாங்கி இந்து-முஸ்லிம் கலவரத்தை தூண்ட கோயிலில் வீசியுள்ளார். நேற்று செய்தியாளர்கள் முன்னிலையில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்ட சிவகுமார்(வயது 18) மீது IPC153/A மற்றும் 295 ஆகிய சட்டப் பிரிவுகளின் படி, (Crime No 83/2012) வழக்குகள்

கடலூர் மாவட்டத்தில் 2.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது

கடலூர்: இரண்டாம் கட்ட போலியோ முகாமில் கடலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. தமிழகம் முழுவதும் நேற்று இரண்டாம் கட்ட போலியோ தடுப்புச் சொட்டு மருந்து முகாம் நடந்தது. 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு இரண்டாவது தவணையாக நேற்று சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டது. இதற்காக மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 613 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 6 ஆயிரத்து 452 பணியாளர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். விடுபட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் சொட்டு மருந்து

ஏப்ரல் 15, 2012

சிதம்பரத்தில் அநீதிக்கு எதிராக...ஒன்று திரண்ட மக்கள்

சிதம்பரம், ஏப்ரல் 14: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக சிதம்பரம் அருகே லால்புரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் மற்று மதரஸா கட்ட அனுமதி மறுத்து வரும் கடலூர் மாவட்ட காவல்துறை, வருவாய்த் துறை சங்பரிவார கும்பலை கண்டித்து 14.04.2012 அன்று சிதம்பரம் பேருந்து நிலையம் காந்திசிலை அருகில் "மாபெரும் முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமை மீட்பு போராட்டம்" மாவட்ட தலைவர் சகோ.முத்துராஜா தலைமையில் நடைப்பெற்றது.

 இதில் மாநில பொதுச் செயலாளர் கோவை.ரஹ்ம்மதுல்லாஹ் கலந்து கொண்டு கண்டன் உரையாற்றினர். அவர் தனது உரையில் சம்மந்தப்பட்ட இடத்தில் பள்ளிவாசல் மற்றும் மதரஸா கட்ட உடனே அனுமதி அளிக்கவில்லை எனில் தமிழகமே ஸ்தபிக்கும் அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டதை தொடரும் என்று தெரிவித்தார் என்றதும் போராட்ட களத்தில் அல்லாஹ் அக்பர் என்ற ஒலி வின்முட்ட ஒளித்தது. இதில் அணைத்து ஜமாத்தார்களும் ,பொதுமக்களும் ,2000 க்கும் மேறபட்டோர் கலந்து கொண்டனர்.

ஏப்ரல் 12, 2012

இந்தியாவை சுனாமி தாக்க வாய்ப்பில்லை- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்

டெல்லி: இந்தியாவை சுனாமி அலைகள் தாக்கும் வாய்ப்பு இல்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆணையத்தின் துணைத் தலைவர் சசிதர ரெட்டி கூறுகையில், இந்தியாவை சுனாமி அலைகள் தாக்குவதாக இருந்தால் அந்தமான் நிக்கோபார் பகுதியில்தான் முதலில் தாக்கும். இந்தநிமிடம் வரை அதற்கான அறிகுறியே அங்கு இல்லை. மேலும் இந்தியப் பெருங்கடலில் சுனாமி அலைகள் எழுவதற்கான சாத்தியக்கூறும் தற்போது இல்லை.எனவே சுனாமி அலைகள் தாக்குவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட நிராகரிக்கப்படுகிறது என்றார். மேலும் அவர் கூறுகையில்,

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது பக்கவாட்டில் ஏற்பட்டுள்ளது. எனவே சுனாமி அலைகள் எழ வாய்ப்பி்ல்லை. இந்த வகையான நிலநடுக்கம் சுனாமி அலைகளை ஏற்படுத்தாது. இதுவே மேலிருந்து கீழாக

அரசு கேபிள் "டிவி' திட்டம் புஸ் : நலிவடையச் செய்ய சூழ்ச்சி?

கடலூர் : அரசு கேபிள் "டிவி' சரியாக தெரியாததால் வாடிக்கையாளர்கள் "டிஷ் டிவி' க்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுத் தேர்தலின் போது அ.தி.மு.க., அரசின் தேர்தல் அறிக்கையில் கேபிள் "டிவி' யை அரசே ஏற்று நடத்தும் என அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு பொறுப்பெற்ற பின்னர் கட்டண சேனல்கள் உட்பட 91 சேனல்கள் 70 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. இதில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹெச்.பி.ஓ., டிஸ்கவரி, நேஷனல் ஜியாகரபி உட்பட ஏராளமான சேனல்கள் தமிழில் ஒளிபரப்பப்படுகின்றன. இதற்காக மாவட்டம் தோறும் வாடகை அலுவலகத்தில் தாசில்தார் மற்றும் 2 டெக்னீஷியன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். "தானே' புயலால் சேதம் இதற்கிடையே "தானே' புயல் காரணமாக "டிஷ்' ஆண்டனா சேதமடைந்தது. மேலும் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததில் கேபிள்களும் சேதமடைந்தன. இதனால் மரங்களை திருடிச்சென்ற சமூக விரோதிகள் கேபிள்களையும் களவாடிச் சென்றனர்.

 அத்துடன் ஒரு மாத காலமாக மின் தடை ஏற்பட்டதால் கடலூர் மாவட்ட மக்கள் "டிவி' பார்ப்பதையே மறந்து விட்டனர். தற்போது அறுந்து போன ஆப்டிக் பைபர் கேபிள் ஒயர்களுக்கு பதிலாக சாதாரண ஒயர்கள் போடப்பட்டுள்ளன. இதனால் சிக்னல் சரியாக "டிவி' க்கு வராததால் படங்கள் தெளிவாக தெரியவில்லை. இதைப்பற்றி யாரும் கண்டு கொண்டுகொள்வதில்லை. தம் விருப்பம் போல... மாவட்டத் தலைநகர் அலுவலகத்திலிருந்து அனைத்து பகுதிகளுக்கும் இணைப்பு கொடுத்து முழுக்கட்டுப்பாட்டையும் வைத்திருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் உள்ளூர் சேனல்கள் துவங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைப்பு செய்யாததால் டெண்டர் எடுத்தவர்களில் 2 சேனல்கள்

ஏப்ரல் 11, 2012

சென்னை முழுவதும் நிலநடுக்கம்-கட்டடங்கள் ஆடின-மக்கள் ஓட்டம்-பெரும் பீதி

சென்னை: சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் கிடுகிடுவென ஆடின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டும் கட்டடங்களை விட்டும் வெளியேறினர். இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் நகரின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, எழும்பூர், நந்தனம், ஆழ்வார்ப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்டபல பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர்.

  அரசு அலுவலகங்கள் நிரம்பியுள்ள சேப்பாக்கம் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அரசு ஊழியர்கள் பயந்து வெளியேறினர். சில விநாடிகளுக்கு கட்டடங்கள் கிடுகிடுவென ஆடியதால் அவர்கள் பீதியடைந்தனர். கட்டடங்கள் ஆடியதால் மேசை, சேர்களும் ஆடியுள்ளன. மேலும் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் ஆடியதால் அனைவரும் பீதியடைந்தனர். யாரோ பிடித்து உலுக்கியது போல கட்டடங்கள் வேகமாக ஆடியதால் ஊழியர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.அனைவரும் அலுவலகங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதேபோன்ற நிலநடுக்கத்தையும், ஆட்டத்தையும் நகரின் பல பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர். சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததால் நகர் முழுவதும் பெரும் பீதி காணப்படுகிறது.

மக்கள் வீடுகளை விட்டும், கட்டடங்கள், அலுவலகங்களை விட்டும் வெளியேறியுள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும்

ஏப்ரல் 10, 2012

சிரியாவில் கலவரம் நீடிப்பு: மேலும் 50 பேர் பலி

சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக ஒரு வருடமாக மக்கள் போராடி வருகிறார்கள். இதில் சுமார் 10 ஆயிரம் பேர் ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். எனவே இந்த கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. சபையும், அரபு கூட்டமைப்பு நாடுகளும் தீவிர முயற்சி கொண்டுள்ளன. கோபி அன்னனை சமாதான தூதுவராக சிரியாவுக்கு அனுப்பி வைத்தது. அவர் அந்த நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதை தொடர்ந்து கலவரம் நடைபெறும் நகரங்களில் இருந்து ராணுவத்தை இன்றைக்குள் வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஹோம்ஸ் உள்ளிட்ட சில நகரங்களின் புறநகர் பகுதிகளில் இருந்து ராணுவம் வாபஸ் பெறப்பட்டது.

   அதை தொடர்ந்து சிரியாவில் கலவரம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படை வாபஸ் பெறும் கெடு முடியும் நேரத்தில் நேற்று மீண்டும் கலவரம் வெடித்தது. சிரியாவின் அண்டை நாடான துருக்கி எல்லையில் ஜியோபார்டன் நகரம் உள்ளது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. அதில் சிலர் காயம் அடைந்தனர். இதனால் ஹமா மாகாணத்தில் கலவரம் பரவியது. அங்குள்ள லடாம்னா என்ற கிராமத்தில் கூடிய மக்கள் மீது ராணுவம் குண்டு வீசியும், துப்பாக்கி சூடும் நடத்தியது. பதிலுக்கு போராட்டக்காரர்களும் தாக்குதல் நடத்தினர். அதில் 35 பொதுமக்களும், 15 ராணுவ வீரர்களும் பலியாகினர். இச்சம்பவம் துருக்கி அகதி முகாமில் கோபிஅனன் பார்வையிட வந்தபோது நடந்தது.

  சிரியாவில் தொடர்ந்து கலவரம் நடைபெறுவதால் ஏராளமான மக்கள் துருக்கியில் உள்ள அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை சுமார் 25 ஆயிரம் பேர் அங்கு அகதிகளாக உள்ளனர். தற்போது கலவரம் நீடித்து இருப்பதால் மேலும் பலர் அங்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர். அதை தடுக்க

சி.பி.ஐ.எம்-ன் மூத்த தலைவர் என்.வரதராஜன் காலமானார்

சென்னை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்(CPIM) மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலாளருமான என்.வரதராஜன் இன்று காலமானார். அவருக்கு வயது 76. கோழிக்கோட்டில் நடந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பிய வரதராஜனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

 மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ள வரதராஜன், கடந்த 1977 மற்றும் 1980ம் ஆண்டுகளில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 50 வருட அரசியல் வாழ்வில் இருந்த வரதராஜனுக்கு சொந்தமாக வீடு கூட கிடையாது. அவரது உடல் தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில்

ஹஜ் பயணம்: ஏப்16 வரை விண்ணப்பிக்கலாம்!

சென்னை: ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பங்களை வழங்குவதற்கான கால அவகாசம், ஏப்., 16ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்கள், இந்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் வழங்கி வருகின்றனர். விண்ணப்பங்களை வழங்க, ஏப்., 16ம் தேதி கடைசி நாள். தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, "ரேசி டவர்' எண்.13/7, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34 என்ற முகவரியிலோ அல்லது 044 - 2822 7617, 2825 2519, 2822 7617 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.

இதுகுறித்து, ஹஜ் குழு அலுவலக ஊழியர் ஒருவர் கூறியதாவது: விண்ணப்பத்துடன், 2013ம் ஆண்டு வரை செல்லக்கூடிய பாஸ்போர்ட்டின் நகல் இணைக்க வேண்டும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், குலுக்கல் முறையில் இல்லாமல், நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர்; இவர்களுடன் ஒருவருக்கு அனுமதி உண்டு. தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு, 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத கடைசியில், குலுக்கல் நடைபெறுகிறது. ஒருமுறை பயணம் மேற்கொண்டவர்கள், ஐந்தாண்டுகள் கழித்தே மறு பயணத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஐந்தாண்டுகளுக்குள்,

ஏப்ரல் 08, 2012

வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார்கோட் மூலம் அறியலாம்!

சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …

பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது……இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு
என்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்துகள் மாதிரி expiry date யை,இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.இனிமேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .

மற்ற நாடுகளின் முதல் எண்கள்

00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine