Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 27, 2014

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மேனஜர், அசிஸ்டண்ட் மேனஜர் ஆகிய பணிகளுக்கு விண்ணப் பங்களை வரவேற்கிறது. 

பணி: மேனஜர் (சட்டம்) 

தகுதி: பி.எல். பட்டத்துடன் 7 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 38 வயதுக்குள் இருக்க வேண்டும்

பணி: மேனஜர் (பைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட்ஸ்) 

தகுதி: பி.காம். பட்டத்துடன் சி.ஏ. முடித்திருக்க வேண்டும். அல்லது எம்.பி.ஏவில் பைனான்ஸ் முடித்திருக்க வேண்டும்.

7 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும்

வயது வரம்பு: 38 வயதுக்குள் இருக்க வேண்டும் 

பணி: அசிஸ்டண்ட் மேனஜர் தகுதி: 

பி.காம். பட்டத்துடன் 2 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள்

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி. / எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 50, மற்ற பிரிவினருக்கு ரூ.300.

விண்ணப்பங்களை ‘
Chennai Metro Rail Limited'

கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வை 39,310 பேர் எழுதினர்!

கடலூர், : கடலூர் மாவட்டத்தில் 39,310 பேர் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை பறக்கும்படை சோதனை செய்தது. கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொது தேர்வுகளை 39 ஆயிரத்து 310 பள்ளி மாணவ, மாணவிகள் 107 மையங்களில் தேர்வு எழுதினர். நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. காலை 9.15 மணிக்கு தேர்வு அறிவிக்கப்பட்டிருந்ததால் காலை 8 மணிக்கே தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் வந்து ஹால்டிக்கெட் பெற்றனர்.

மாணவர்கள் சிறப்பாக தேர்வெழுத பல்வேறு பள்ளிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். காலை 9 மணிக்கு தேர்வு அறைகளில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 9.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு 9.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கின. தமிழ் முதல்தாள் எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கல்வித் துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் தலைமையிலான பறக்கும் படையினர் பல்வேறு தேர்வு மையங்களில் சோதனை நடத்தினர்.

தேர்வு முடிவடைந்ததும் விடைத்தாள்களை வழித் தட அலுவலர்கள் பாதுகாப்பாக விடைத்தாள் காப்பு மையத்திற்கு கொண்டு சேர்த்தனர். கடலூர் மாவட்டத்தில் தேர்வு பணிகளில் 2150 அறை கண்காணிப்பாளர்கள், 107 முதன்மை கண்காணிப்பாளர்கள், 107 துறை அலுவலர்கள், 214 அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பறக்கும் படையினர் அனைத்து அறைகளிலும் தேர்வு கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகளை மேற்கொண்டனர். தேர்வு மையங்கள் இல்லாத பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் காலை 7 மணிக்கே பள்ளிகளுக்கு

மார்ச் 24, 2014

வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைவு!

கடுமையான வெயிலின் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குவது வீராணம் ஏரியாகும். இந்த ஏரியை நம்பி மாவட்டத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழை காலங்களில் வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளான செந்துறை, ஆண்டிடம், ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் செங்கால்ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக நீர் வரத்து இருக்கும். ஏரிக்கு முக்கியமாக கல்லணை, கீழணை வழியாக நீர்வரத்து உள்ளது. ஏரியில் மேல்கரையில் 8 மதகுகளும், கீழ்கரையில் 26 மதகுகள் என மொத்தம் 34 மதகுகள் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இதை கடல் மட்டத்தில் இருந்து கணக்கிடுகிறார்கள். பொதுவாக ஏரி முழுகொள்ளளவு நீர்பிடிப்பு இருக்கும் காலங்களில் மேல்கரையையொட்டி உள்ள 6 கிராமங்கள் பாதிப்பு அடையும் சூழ்நிலை உருவாகும். மேலும், ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீருக்காக தினமும் 75 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வீராணம் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் 47 அடி தண்ணீரை ஏற்றி கண்காணித்து வந்தனர்.

மேலும், ஏரியை நம்பியுள்ள விவசாய நிலங்களில் நெல் அறுவடை என்பதால் பாசனத்திற்கு தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு, தினமும் சென்னைக்கு மட்டும் குடிநீர் அனுப்பும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாத காரணத்தாலும், சென்னைக்கு தினமும் குடிநீர் அனுப்புவதாலும், கடுமையான வெயில் இருப்பதாலும் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 44.65 அடியாகும். சென்னைக்கு நேற்று வினாடிக்கு 79 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது.

இதே நிலை நீடித்தால் 40 நாட்களில் ஏரி வறண்டு விடும்

மார்ச் 20, 2014

முசாபர்நகர் கலவர அகதிகளை வாக்களிக்க விடமாட்டோம்! பாஜக

பாஜகவின் மக்களவைத் தேர்தல் வேட்பாளர் ஹூக்கம் சிங் எம்.எல்.ஏ, கைரானா தொகுதியில் முசாபர்நகர் கலவர அகதிகளை வாக்களிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“வீடுகளையும் சொந்த நிலத்தையும் விட்டு வெளியேறி அரசு நிலத்தை ஆக்கிரமித்து முகாமில் தங்கியிருக்கும் அகதிகளின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க அனுமதிக்க மாட்டோம். அவர்களுடைய பெயர்கள் தங்கள் சொந்த தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்தே இன்னும் நீக்கப்படவில்லை. அவர்கள் கைரானா தொகுதியின் வாக்காளர்கள் இல்லை என்பதால், அகதிகள் தங்கியிருக்கும் எந்த முகாமிற்கும் நான் செல்லவில்லை” என்றும் ஹூக்கம் சிங் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் நடந்த முசாபர்நகர் கலவரத்தையடுத்து சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் அகதிகளாக வந்து கைரானாவின் 9 முகாம்களில்

மார்ச் 18, 2014

தமிழக ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு!!

டெல்லி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக கூடங்குளம் போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப. உதயகுமார் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் நிர்வாகிகளான சுப. உதயகுமார் உள்ளிட்டோர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர்.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் கூடங்குளம் போராட்டக் குழு நிர்வாகிகள் களமிறங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் லோக்சபா தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் 7வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 26 பேர் கொண்ட இந்த பட்டியலில் தமிழகத்தில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் சுப. உதயகுமார். 

தூத்துக்குடியில் எஸ்.புஷ்பராயன், 

நெல்லையில் ஜேசுராஜ் போட்டியிடுகின்றனர். 

அத்துடன் கோவையில்

வேட்பாளர்களின் பிரசாரம் வீடியோவில் பதிவு செய்யப்படும்!

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளின் செயல்பாடு குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் கிர்லோஷ்குமாரிடம் கேட்ட போது: கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் 3 ஆயிரம் போலீசார் உள்ளிட்ட 18 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் தேர்தல் பணிகள் தொடர்பான முதல்கட்ட பயிற்சி அனைத்து தேர்தல் அலுவலர்களுக்கும் முடிக்கப்பட்டுள்ளது. 2ம் கட்ட பயிற்சி வரும் 25ம் தேதி துவங்கப்படவுள்ளது.

தேர்தல் பணியில் முதல்கட்டமாக 20ம் தேதி முதல் 120 பேர் கொண்ட துணை ராணுவத்தினர் ஈடுபடவுள்ளனர். இதில் தேர்தல் விதிகளின் படி அமைச்சருக்கான பாதுகாப்பு பணியிலும் ராணுவத்தில் ஒருவர் ஈடுபடுவார். சுவர் விளம்பரங்கள் பொறுத்த வரை நகரில் முற்றிலுமாக அணுமதி கிடையாது. கிராமங்களில் தனியார் இடங்களில் உரிய அனுமதி கடிதத்தோடு எழுதலாம் என அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பிரசார பணிகளை அரசியல் கட்சியினர் துவங்கி வருகின்றனர். தேர்தல் விதிமுறை மீறலை கண்காணிக்கவும், பிரசாரத்தில் மேற்கொள்ளப்படும் செலவினங்கள் குறித்து பதிவு செய்யவும், அனைத்து கட்சியினர் பிரசாரத்தையும் வீடியோ கண்காணிப்பு குழு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விதிமீறல் பதிவு செய்யப்பட்டு புவனகிரியில் ஒரு வழக்கு பதிவாகியுள்ளது.

ஒவ்வொரு வீடியோ கண்காணிப்பு குழுவிலும்

மார்ச் 16, 2014

சிதம்பரம் (தனி) தொகுதி கண்ணோட்டம்!

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தனி தொகுதியாகும். இது கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பரந்து விரிந்து காணப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில், அண்ணாமலை பல்கலைக்கழகம், லால்பேட்டை மதரசா,பிச்சாவரம் சதுப்புநிலக்காடுகள் ஆகியவை இந்த தொகுதியின் சிறப்பம்சங்களாகும்.

1957–ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின் போது இத்தொகுதி இரட்டை உறுப்பினர்களை கொண்ட தொகுதியாக இருந்தது. 2004–ம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை இத்தொகுதியில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில்(தனி), மங்களூர்(தனி), குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. 2008–ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது மங்களூர்(தற்போதைய திட்டக்குடி தொகுதி), குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய தொகுதிகள் பிரிக்கப்பட்டு கடலூர் பாராளுமன்ற தொகுதியுடன் சேர்க்கப்பட்டது. அவற்றுக்கு பதிலாக அரியலூர் மாவட்டத்தைச்சேர்ந்த அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த குன்னம் தொகுதியும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியுடன் சேர்க்கப்பட்டது.

இதனால் இப்போது சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த

சிதம்பரம்,
புவனகிரி,
காட்டுமன்னார்கோவில்(தனி)
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயங்கொண்டம்,
அரியலூர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த குன்னம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன.

இதுவரை நடந்த 14 பாராளுமன்ற தேர்தல்களில் இத்தொகுதியில் காங்கிரஸ்தான் அதிக தடவை(5) வெற்றி பெற்றுள்ளது. அதுபோல் தி.மு.க. 4 தடவையும், பா.ம.க. 3 தடவையும் அ.தி.மு.க., விடுதலைசிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா ஒரு தடவையும் வென்றுள்ளன. இத்தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று வந்த பா.ம.க.வை கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன் தோற்கடித்து தொகுதியை கைப்பற்றினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் பொன்னுசாமி தோல்வி அடைந்தார். ஆனால் 2011–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்திருந்தும் இத்தொகுதிக்குட்பட்ட அரியலூர், புவனகிரி, காட்டுமன்னார்கோவில்(தனி) ஆகியவற்றை அ.தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சிதம்பரம் தொகுதியையும்

மார்ச் 15, 2014

சிதம்பரம் தொகுதியில் புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்கள் பெயரை பட்டியலில் சேர்க்கும் பணி!

சிதம்பரம் மற்றும் புவனகிரி தொகுதியில் புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த 9ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குசாவடிகளிலும் நடந்தது. இதில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் 4086 பேரும், புவனகிரி சட்டமன்ற தொகுதியில் 4308 பேரும் என 8394 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவிலும் தினந்தோறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு தொடர்ந்து ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

உரிய வயது, இருப்பிடம் மற்றும் கல்வி சான்று இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை ஆன்- லைனில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை