மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிகளுக்கு எதிராக புத்த மதத்தினர் வன்முறையில் இறங்கினர். இதில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் நொறுக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் இடம் பெயரும் நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஐ.நா. மனித உரிமைகள் தூதர் டோம்தாஸ் ஓஜியா குயின்டானா, கடந்த திங்கட்கிழமை மியான்மரில் பயணம் மேற்கொண்டார். மெய்க்டிலா என்ற இடத்தில் அவரது காரை 200–க்கும் அதிகமானோரை கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்று வழி மறித்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் தூதர் டோம் தாஸ் கூறுகையில், ‘‘என்னை போலீசாரால் பாதுகாக்க முடியவில்லை. இதே போன்றுதான் அந்த வன்முறை கலவரங்களின் போதும் நடந்திருக்க வேண்டும்’’ என்றார். இந்த தாக்குதலை தொடர்ந்து விசாரணை நடத்த
பல்வேறு இடங்களுக்கு செல்லவிருந்ததை அவர் ரத்து செய்து விட்டார். வன்முறையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...