Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 13, 2013

சொந்த நாட்டிலே அகதிகளாய் முஸ்லிம்கள்-முசாபராபாத் சோகம்


இந்து பாசிச பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் கிட்ட தட்ட 38 ஆயிரம் மக்கள் வலுக்கட்டாயமாக தங்களின் சொந்த ஊரைவிட்டு விரட்டப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவரும் ஆதரவற்று தங்களின் உடமைகளையும்  உரிமைகளையும் இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலான மக்கள் பெண்கள், குழந்தைகள்,வயதானவர்களாக உள்ளனர்.முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் சரியான குடிநீர்,உணவு இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்....பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ள நம் உறவுகளுக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம்.

செப்டம்பர் 12, 2013

உ.பி. கலவரத்தில் அரசியல் சதி!: மத்திய அமைச்சர் ஷிண்டே

புதுடெல்லி:உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே தெரிவித்தார்.

மாநிலத்தின் முஸாஃபர் நகர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் இரு வகுப்பினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை கலவரம் மூண்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆகியுள்ளது. வன்முறையில் காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியில் அரசியல் சதி உள்ளதாக மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவிடம் டெல்லியில் செய்தியாளர்கள் புதன்கிழமை கேட்டனர். அதற்குப் பதிலளித்து அவர் கூறியது:

முஸாஃபர் நகரில் நடைபெற்ற வன்முறை குறித்து முழுமையான அறிக்கை வரும் வரை அரசியல் சதி குறித்து என்னால் கருத்து கூற இயலாது. ஆனால், அத்தகைய சதியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டிருக்கலாம். மக்களவை பொதுத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு மதக் கலவரம் ஏற்படலாம் என்று 11 மாநிலங்களை மத்திய அரசு எச்சரித்திருந்தது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு உத்தரப் பிரதேசத்தில்

செப்டம்பர் 07, 2013

வக்ஃப் சொத்துகளை அபகரிப்பது ஜாமீன் இல்லா குற்றம்!

புதுடெல்லி: வக்ஃப் சொத்துகளை பாதுகாப்பதற்கும், வளர்ச்சிக்குமான வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. முன்னர் இம்மசோதாவை மாநிலங்களை அங்கீகரித்திருந்தது. குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டால் இம்மசோதா அமலுக்கு வரும். சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான் கான் தாக்கல் செய்த மசோதாவை பா.ஜ.க., இடது சாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் ஆதரித்தனர்.

வக்ஃப் சொத்துகளை விற்பது, தானமாக அளிப்பது, அடகு வைப்பது ஆகியன தடை செய்யப்பட்டுள்ளன. வக்ஃப் சொத்துகளை அபகரித்தல் ஜாமீன் இல்லாத குற்றமாகும். ஆனால், வக்ஃப் சொத்துகளை

உலகிலேயே மிகப்பெரிய எரிமலை கண்டுபிடிப்பு!

ஹூஸ்டன், செப். 7- உலகிலேயே மிகப் பெரிய எரிமலை ஜப்பான் நாட்டிற்குக் கிழக்கே 1,609 கி.மீ தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமு மசிஃப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எரிமலை சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய எரிமலை யாகும். செவ்வாய்க்கிரகத்தில் இருக்கும் முதல் பெரிய எரிமலையாகக் கருதப்படும் ஒலிம்பஸ் மோன்ஸ் இதைவிட 25 சதவிகிதம் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

130-145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உலகின் நீர்ப்பரப்புக்கடியில் அமைந்திருந்த ஷட்ஸ்கி ரைஸ் என்ற மலைத்தொடரில் இருந்த பல எரிமலைகள் வெடித்ததன் மூலம் இந்த எரிமலை உருவாகியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கள் கருதுகின்றனர். பரப்பளவில் இங்கிலாந்து தீவுகள் அல்லது நியூமெக்சிகோ மாநிலத்தை இது ஒத்துள்ளது. உருவாகிய சில மில்லியன் ஆண்டு களிலேயே செயலிழந்து போன இந்த எரிமலை 310,798 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாக உள்ளது.

உலகில் உள்ள செயல்படும் எரிமலைகளிலேயே

செப்டம்பர் 05, 2013

சிரியா அகதிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது!

சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும், போராளிகள் குழுக்களுக்கும் இடையே கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இச்சண்டைக்கு பயந்து மக்கள் பக்கத்து நாடுகளான லெபனன், ஜோர்டன், துருக்கி, ஈராக், எகிப்துக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

இந்த ஆண்டு முதல் இருதரப்புக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருவதால் அகதிகளாக வெளியேறும் மக்களின் எண்ணிக்கையானது பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு அகதிகளாக வெளியேறியவர்கள் லெபனன்-7,16,000, ஜோர்டன்-5,15,000, துருக்கி-4,60,000, ஈராக்-1,68,000, எகிப்து-1,10,000 என அகதிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் சிரியாவிலேயே தங்களது வீட்டைவிட்டு வெளியேறிய 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்நாட்டிலேயே அகதிகளாக தங்கியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா தாக்கக்கூடும் என்ற அச்சத்தில், உடலில் ரத்தம் வற்றிய நிலையில் கையில் கிடைத்த

பாரத ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்பு!

பாரத ரிசர்வ் வங்கியின் (ஆர்.பீ.ஐ) கவர்னர் டீ.சுப்பாராவின் 5 ஆண்டு பதவிக் காலம் நேற்று நிறைவடைந்தது. இதனையடுத்து புதிய கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார்.

பொருளாதார வல்லுனர் ரகுராம் ராஜன் பன்னாட்டு நிதியத்தில் தலைமை பொருளாதார வல்லுனராக இருந்தவர். ரிசர்வ் வங்கியின் 23–வது கவர்னராக பொறுப்பேற்றுள்ள ரகுராம் ராஜனுக்கு வயது 50. இவ்வளவு இளவயதில் ஆர்.பீ.ஐ.யின் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்த மிகச் சிலரில் இவரும் ஒருவர். நேற்று டீ.சுப்பாராவிடமிருந்து சம்பிரதாயப்படி பொறுப்பை பெற்று, அதற்கான ஆவணங்களில் கையொப்பமிட்டார். பின்னர் இருவரும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி, கட்டித் தழுவிக் கொண்டனர்.

ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தை விட்டு வெளியே வந்த சுப்பாராவ், ‘‘பத்து நிமிடங்களுக்கு முன்னால் ரகுராம் ராஜனிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். தற்போதைய கடினமான சூழ்நிலையில் ரிசர்வ் வங்கியை வழிநடத்திச் செல்வதற்கு இவரை விட பொருத்தமான ஒருவரை நாம் பெற்றிருக்க முடியாது’’ என்று தெரிவித்தார். வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பால், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது. மேலும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு

செப்டம்பர் 04, 2013

காட்டுமன்னார்கோவில் அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றக்கோரி சாலை மறியல்!

காட்டுமன்னார்கோவில் அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடை காட்டுமன்னார்கோவில் அருகே சர்வதராஜன்பேட்டையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை மாற்றக்கோரி கடந்த 2 மாதத்திற்கு முன்பு அக்கிராம மக்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, நடந்த பேச்சுவார்த்தையில் ஆகஸ்டு மாதத்திற்குள் டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றவில்லை. சாலை மறியல் இதனால் ஆத்திரமடைந்த 100–க்கும் மேற்பட்டபொது மக்கள் திருச்சி–சிதம்பரம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சில பெண்கள் மண்எண்ணெய் கேனுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து

மாணவர்கள் பெயரில் பிழை இருப்பின், திருத்தம் செய்து கொள்ள வாய்ப்பு!!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், பெயரில் பிழை இருப்பின் திருத்தம் செய்துகொள்ள ஆக., 26 முதல் செப்.7 வரை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பெயர் பட்டியல் இறுதி செய்யும் பணி, ஆக., 26 முதல் நடக்க உள்ளது. இதன்படி மதிப்பெண் சான்றிதழில், பெயர், இன்ஷியல் பிறந்த தேதி உள்ளிட்டவை பதிவு செய்யப்படும். இதுதொடர்பாக, தேர்வுத் துறையின் சுற்றறிக்கை:

சில பெற்றோர், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது பெயர், இன்ஷியல், பிறந்த தேதி போன்ற விவரங்களை தவறாக கொடுக்கின்றனர். இதனால், 10ம் வகுப்பு பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் தவறு ஏற்படுகிறது. உயர் கல்விக்கு செல்லும் போது சிக்கல் ஏற்பட்டு அதை சரி செய்ய தாமதம் ஆகிறது. இதைத் தவிர்க்க மாணவரிடம், உறுதி மொழி சான்றிதழ்

செப்டம்பர் 01, 2013

கடலூர் மாவட்ட அரசு தலைமை காஜியாக லால்பேட்டை ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் தேர்வு…!

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லுரியின் முதல்வர் ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்களை கடலூர் மாவட்ட தலைமை காஜியாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு கல்லூரிகளில் பொதுவான டிரஸ் கோடு! ஆபாச உடைகளுக்கு தடை! நாளை முதல் அமல்!

சென்னை: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்து கல்லூரிக்கு வருகின்றனர். சில மாணவர்கள் டி ஷர்ட், டிராக் ஷூட் போன்றவற்றோடும் கல்லூரிக்கு வருகின்றனர். இதனால் கல்லூரிகளின் கண்ணியத்துக்கு குறைவு ஏற்படுகிறது. இதையடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்படுகிறது.

மாணவ, மாணவிகளுக்கு உடை கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது. கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது. மாறாக முழுக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிந்து கம்பீரமாக வர வேண்டும். மாணவிகள் ஜீன்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஷர்ட்டுகள் அணிந்து வரக்கூடாது. ஆபாச உடையணிதல் கூடாது. மாணவிகள் சல்வார் கமீஸ் அல்லது சேலை அணிந்துதான் கல்லூரி வர வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறியதாவது:

மாநிலம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் 3 லட்சம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சிலர் அணியும் உடையால் ஏற்படும் தாக்கத்தை