மங்கலம்பேட்டையில் பேரூராட்சி அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளி, பல தனியார் கல்வி நிறுவனங்கள், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், தனியார், கூட்டுறவு வங்கிகள், மின்சார வாரிய அலுவலகம், கால்நடை மருத்துவமனை என பல அலுவலகங்கள் உள்ளது. இப்படி பல தனியார், அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு என தினம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மங்கலம்பேட்டைக்கு வருகின்றனர். மங்கலம்பேட்டையை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் தேவைகளுக்கு தினம் இங்குதான் வர வேண்டும். இப்படி பேரூராட்சியாக உள்ள மங்கலம்பேட்டையில் பேருந்து நிலையம் இல்லை. இதனால் தினம் நகருக்கு வரும் பொதுமக்கள் பெரும் சிரமப்படும் நிலை உள்ளது.
பேருந்து நிலையம் இல்லாததால் பொதுமக்கள் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள மிக குறுகிய இடமான கடைத் தெருவில் நின்று பேருந்து ஏற வேண்டிய நிலை உள்ளது. பேருந்து ஏறும் இடத்தில் பயணிகள் நிழற்குடை என எவ்வித அடிப்படை வசதியும் இல்லை, இதனால் மழைக்காலங்களில் மழையில் நனைந்துகொண்டும், வெயிலிலும் அவதிப்படும் நிலை
உள்ளது. முதல் நிலை பேரூராட்சியாக உள்ள மங்கலம்பேட்டையில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஆனால் இதுவரை நிறைவேறவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மங்கலம்பேட்டை பேரூராட்சியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-Dinakaran
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...