Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 30, 2011

வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு பயிர்களுக்கு நிவாரண உதவி!

சிதம்பரம்:கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு செய்து 15 நாள்களான பயிர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தெரிவித்தார்.

கனமழையால் வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையிலும், வெள்ளாற்றிலும், பழைய கொள்ளிடத்திலும் உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாக்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட 15 முதல் 30 நாள்களுக்குள்ளான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது. மேற்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நீர் வடியத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி, காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன் மற்றும் வோளாண் துறை அதிகாரிகள் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் பயிர் மற்றும் வெள்ள சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். குமராட்சி ஒன்றியம் வக்காரமாரி, தெம்மூர், நந்திமங்கலம், வீரநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ள பயிர்களை மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து விபரம் கேட்டறிந்தார். நந்திமங்கலத்தில் விவசாயி ஒருவர் உரம் தட்டுப்பாடாக உள்ளது. உரம் கிடைக்கவில்லை என ஆட்சிரிடம் புகார் தெரிவித்தார்.

மேலும் இக்கிராமத்தில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கெடுப்பது வாடிக்கையாகிவிட்டது. தீடீரென ஊருக்கு தண்ணீர் புகுந்து விடுவதால் வெளியேறுவது கஷ்டமாகிவிடுகிறது. எனவே நந்திமங்கலம்-பூலாமேடு இடையே பழைய கொள்ளிடத்தின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என நந்திமங்கலம் கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நந்திமங்கலத்தில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றை ஆட்சியர் பார்வையிட்டார். பொதுமக்கள் பயன்பாடு அதிகமாக இருப்பின் பாலம் அமைக்கப்படும் என அப்போது அவர் தெரிவித்தார்.

பின்னர் காட்டுமன்னார்கோயில் பொதுப்பணித்துறை விடுதியில் ஆட்சியர் அளித்த பேட்டி:
வெள்ளத்தில் மூழ்கியுள்ள நடவு செய்து 15 நாள்களிலிருந்து 30 நாள்களான பயிர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படும். 30 நாள்களுக்கு மேலான பயிர்கள் நீரில் மூழ்குவதால்

டிஜிட்டல் மயமாகிறது தொலைகாட்சி

 நன்றி மணிச்சுடர் 

முல்லைப் பெரியாறு அணை !!!

மலையாள திரைப்பட இயக்குநர் ஷோகன் ராய் என்பவர் அணை 999 (DAM-999) என்று ஆங்கிலத்தில் ஒரு திரைப்படம் எடுத்துள்ளார். அதை தமிழிலும் மொழி மாற்றம் செய்துள்ளனர். அப்படத்தை வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளும், கேரள அரசும் பெரும் நிதியுதவி அளித்து எடுத்துள்ளார்கள்.

முல்லைப்பெரியாறு அணை 999 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு உரியது என்று போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தைக் குறிக்கும் வகையில் அணை 999(டேம் 999) என்ற தலைப்பில் அப்படம் எடுக்கப்பட்டுளளது. முல்லைப் பெரியாறு அணை உடைந்து மக்களெல்லாம் இலட்சக்கணக்கில் மிதந்து அழிந்து, உடைமைகளும், விலங்குகளும் மனிதக் கூட்டமும, ஊர்களும் அழிவதைப் போல சித்தரித்து படமெடுத்துள்ளார்கள் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

முல்லைப்பெரியாறு அணை உடைந்து மக்கள் அடித்துச் செல்வதை போல சில ஆண்டுகளுக்கு முன் கேரள சி.பி.எம். முதல்வர் அச்சுதானந்தன் ஒரு பரப்புரை படம் எடுத்து கேரள மக்களிடையே பீதியைப் பரப்பி முல்லைப்பெரியாறு அணைக்கும் தமிழ் இனத்திற்கும் எதிரான இனப்பகையை தூண்டிவிட்டார். உச்ச நீதிமன்றம் 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், வல்லுநர் குழு பார்வையிட்டு அளித்த அறிக்கையின்படி அணை வலுவாக உள்ளது எனக் கூறியுள்ளது. முதல் கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்றும், சிற்றணையில் சிறு செப்பனிடும் பணிகள் செய்த பின் முழு அளவான 152 அடி தேக்கலாம் என்றும் அத்தீர்ப்பில் கூறியுள்ளது.

ஆனால் இத்தீர்ப்புக்கு எதிராக இப்பொழுதுள்ள அணையை உடைக்க வேண்டும் என்பது தான் அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசு கட்சி உள்ளிட்ட மலையாள இனவெறிக் கட்சிகளின் திட்டம். அந்த நோக்கத்தை சாதிக்கும் வகையில் இப்பொழுது இந்த அணை 999 என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு சிக்கல் பற்றி ஒருபக்கச் சார்பாக திரைப்படம் எடுத்து வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இதற்கு தணிக்கைச் சான்று கொடுத்தது மிகப்பெரிய தவறும், உள்நோக்கம் கொண்டதும் ஆகும். இரண்டாவதாக இனங்களுக்கிடையே பகைமையை மூட்டி விடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கியது சட்டவிரோதமாகும்
 பிரதமருக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா, மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
    இரண்டு மாநில நலன்களை உள்ளடக்கிய முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், பதற்றத்தைத் தூண்டும் வகையில்

ஹஜ் யாத்திரை செல்ல பிப்-2012 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்!

இந்தியன் ஹஜ் கமிட்டி 2012 புனித ஹஜ் பயணத்திற்கான வேலைகளை இப்பொழுது முதலே துவங்கியுள்ளது இந்நிலையில் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள் 2012-ம் ஆண்டு பிப்ரவரிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் கூறியது:
2012-ம் ஆண்டில் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள் பிப்ரவரிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஹஜ் பயணிகளிடம் பாஸ்போர்ட் இருக்க வேண்டும்.எனவும் அவர் தெரிவித்தார்

மக்கள் வசிக்க சிறந்த நகரம் பெங்களூர்– பாதுகாப்பில் சென்னை முதலிடம்

டெல்லி: இந்தியாவில் மக்கள் வசிக்க சிறந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூர் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. அதேசமயம், பாதுகாப்பில் சென்னைக்குதான் முதலிடம் கிடைத்துள்ளது.

உலகில் வாழ தகுதியான நாடு மற்றும் நகரங்களின் வரிசை குறித்து மெர்சர் என்னும் நிறுவனம் நடுத்திய கருத்துகணிப்பில் இது வெளியிடப்பட்டுள்ளது.

2011 ஆம் நடைபெற்ற குற்ற நடவடிக்கைகள், பாதுகாப்பு சூழல், சுற்றுச்சூழல் உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் உலக அளவில் மக்கள் வசிக்க சிறந்த நகரமாக ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னா நகரம் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜூரிச், ஆக்லாந்து போன்ற நகரங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.

உலகிலேயே மிக அதிகமான ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா தான்!

வாஷிங்டன்: உலகிலேயே இந்தியா தான் மிக அதிகமான ஆயுதங்களை இறக்குமதி செய்து வருவதாக பிரபல வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் பத்திரிக்கையான, Foreign Policy magazine தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் இந்தப் பத்திரிக்கை கடந்த ஆண்டில் நடந்து, வெளியில் தகவல் தெரியவராத சில முக்கிய உலக நிகழ்வுகள் குறித்து செய்தி வெளியிடவுள்ளது. இந்தக் கட்டுரையில் அடங்கியுள்ள முக்கிய அம்சங்கள்:

ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட மாபெரும் விமானம் தாங்கிக் கப்பலை பல்லாயிரம் கோடி செலவில் நவீனப்படுத்தியுள்ள சீனா, அதன் சோதனை ஓட்டத்தையும் ஆரம்பித்துவிட்டது. இது தவிர தானே புதிதாக விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டும் வேலைகளையும் சீனா ஆரம்பித்துள்ளது. கிழக்கு ஆசியா, சீனக் கடல் பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த சீனா தீவிரமாக களமிறங்கியுள்ளது.

நவம்பர் 29, 2011

விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை

உணவில் அளவுக்கதிகமாக பயன்படுத்தும் சர்க்கரை மெல்லக்கொல்லும் விஷம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தேநீர், காபி, பழரசங்களில் அளவுக்கதிகமாக சர்க்கரையை சேர்த்துக்கொள்ளவது ஆபத்தானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சர்க்கரையானது உடலில் ஜீரண சக்தியை பாதிக்கிறது. எண்ணற்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

நாம் அதிக அளவில் உண்ணும் சத்து இல்லாத உணவுகளில் சர்க்கரையும் ஒன்று. சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு, உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி மற்றும் சக்தியில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.

ஆபத்தான சர்க்கரை

சிகரெட், மது முதலியவற்றைப் போல் சர்க்கரையும் ஆபத்தானது என்றே சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சருமநோய்கள், முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக் கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், நீரிழிவு நோய் இப்படி எல்லாநோய்களுக்கும் சர்க்கரையும் ஏதாவது ஒருவிதத்தில் காரணமாகிறது.

நவம்பர் 28, 2011

அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுகின்றன – ஃபதேஹ்பூர் ஷாஹி இமாம்

புதுடெல்லி:முஸ்லிம்களின் மோசமான
சூழ்நிலையை சச்சார் கமிட்டி சுட்டிக்காட்டிய பிறகும் அரசியல் கட்சிகள்
முஸ்லிம்களை ஏமாற்றுவது தொடர்கிறது என டெல்லி ஃபதேஹ்பூரி ஷாஹி இமாம்முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத் கூறியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாட்டையொட்டி நடைபெற்ற மில்லி கன்வென்சனை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியதாவது:

சச்சார், ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அறிக்கைகளை தற்பொழுதும் மேசைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.முஸ்லிம்களின் வழிப்பாட்டு உரிமை கூட சவாலை சந்தித்துக்கொண்டிருக்கிறது.பலரும் முஸ்லிம்களின் பிரச்சனைகளை கேட்க கூட தயாரில்லை. முஸ்லிம்களை ஏமாற்றுவதில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே போலவே உள்ளன.

சமூக நீதிக்கான அழைப்பு வெறும்

நவம்பர் 27, 2011

மொரோக்கோ தேர்தல்:இஸ்லாமிய கட்சிக்கு வெற்றி


ரபாத்:அரசிற்கு கூடுதல் அதிகாரத்தை உறுதிச்செய்யும் புதிய அரசியல் சட்டத்தின் கீழ் மொராக்கோவில் நடந்த முதல் பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சியான ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் பார்டி(பி.ஜெ.டி) பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளது.
முதல் கட்ட தேர்தல் முடிவுகள் வெளியானபோது 395 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பி.ஜெ.டி 80 இடங்களை கைப்பற்றியுள்ளது. இக்கட்சி அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாகும் என உள்துறை அமைச்சர் தய்யிப் ஷெர்காவி அறிவித்துள்ளார். இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியை ஆதரித்த மொரோக்கோ மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பி.ஜெ.டி தலைவர் அப்துல் இலாஹ் பின் கிரான் அறிவித்துள்ளார்.முன்னர் மொராக்கோ தேசிய தொலைக்காட்சி பி.ஜெ.டி 40 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக அறிவித்தது. வெற்றி அதிகாரப்பூர்வமாக உறுதிச்செய்ததன் மூலம் அரபுலக ஜனநாயக போராட்டம் துவங்கியதற்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் இரண்டாவது இஸ்லாமிய கட்சியாக மாறியுள்ளது பி.ஜெ.டி. ஏற்கனவே துனீசியாவில் இஸ்லாமிய கட்சியான அந்நஹ்ழா ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

பலவீனமாகும் பழைய கொள்ளிடம் பாலம் நான்கு மாவட்டங்கள் துண்டிக்கும் அபாயம்

சிதம்பரம்:சிதம்பரம் - சீர்காழி சாலையில் மழையால் பழைய கொள்ளிடம் பாலம் பவீனமடைந்து வருவதால் நாகை, திருவாரூர், தஞ்சை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் துண்டிக்கும் அபாயம் உள்ளது.நாகை, தஞ்சை, திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய சாலையாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் - சீர்காழி சாலை உள்ளது. இச்சாலையில் சிதம்பரம் அடுத்த வேளக்குடியில் பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பழமையான பாலம் உள்ளது.குறுகலான இப்பாலத்தின் வழியாக சாதாரண நாட்களில் கூட வாகனங்கள் செல்வதற்கு கடுமையான சிரமம் ஏற்படுகிறது.

பாலத்தில் பல இடங்களில் உடைப்பு, மழைக் காலங்களில் பாலத்தில் மேல் தண்ணீர் தேங்குவது, பக்கவாட்டு சுவர்கள் உடைப்பு என பாலம் படிப்படியாக வலுவிழந்து வருகிறது.ஒவ்வொரு மழையின் போதும் பாலத்தில் பெரிய அளவில் குண்டும், குழியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்குமோசமான நிலை காணப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒவ்வொரு முறையும் தற்காலிமாக ஜல்லி கொட்டி சரி செய்கின்றனர். ஆனால் நிரந்தர தீர்வாக இதுவரை மாற்று ஏற்பாடுகள் செய்யவில்லை. 

நவம்பர் 26, 2011

வீராணம் ஏரியிலிருந்து 500 கன அடி தண்ணீர் திறப்பு

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை யினால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.ஏரியை பாதுகாக்க வெள்ளியங் கால் ஓடையில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் கரையோரத்தில் உள்ள 25 கிராமங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வீராணம் ஏரி
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வட வாறு மூலமாகவும், மழைக் காலங்களில் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண் ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வரும்.

ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியாகும்.மழைக்காலத்தில் ஏரியை பாதுகாக்க 44 அடிக்கு மேல் நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அதன் பேரில் பொதுப் பணித்துறை அதி காரிகள் மழைக்காலத்தில் 44 அடிக்கு மேல் உயர்த்தாமல் ஏரியை பாதுகாத்து வரு கின்றனர். நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 43.30 அடியாக இருந்தது.

தண்ணீர் திறப்பு
இந்நிலையில் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.இந்த மழை யினால் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை வழியாக வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் வருகிறது.வடவாற்றில் இருந்து 100 கன அடிநீரும் வருவதால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து 43.70 அடியை எட்டியது.

தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக இருப்பதால் ஏரியை பாதுகாக்கும் நோக்கில் லால்பேட்டை வெள்ளியங் கால் ஓடை வழி யாக 500 கன அடி திறந்து விடப் பட்டது.சேத்தியாத் தோப்பு வி.என்.எஸ்.மதகு வழி யாக 800 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டது.

கிராமங்கள் பாதிக்கும் அபாயம்
சென்னைக்கு வினாடிக்கு 21 கனஅடி தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.இருப்பினும் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் வெள்ளியங்கால் ஓடைக்கரையோர கிராம மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.கரையோர கிராமங்களான நந்திமங்கலம், கீழக்கரை, கீழவன்னியூர், திரு நாரையூர், வீரநத்தம், எள்ளேரி கிழக்கு, சர்வராஜன் பேட்டை, நெய்வாசல், தொருக்குழி, சோழக்கூர், தெம்மூர்,மெய் யாத்தூர் உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக் கும் அபாயம் ஏற்படும்.

இதேபோல் வெண்ணங்குழி ஓடை நிரம்பி வழிவதால் ரோட்டில் தண்ணீர் செல்கிறது. இதனால் சிதம்பரம்- திருச்சி செல்லும் சாலை துண்டிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது.மேலும் அந்த பகுதியில்

நவம்பர் 25, 2011

உழவர் பாதுகாப்பு திட்டம் டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!!

நன்றி:மணிச்சுடர் 

நவம்பர் 24, 2011

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம்(யு.ஏ.இ) இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்

துபாய்:கைதிகளை பரிமாறிக்கொள்வது உள்பட இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் இன்று இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன.

இரு நாடுகளிடையேயான கைதிகள் பரிமாற்றம்,பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய ஒப்பந்தங்களில் யு.ஏ.இயின் துணை பிரதமரும்,உள்துறை அமைச்சருமான ஷேக் ஸைஃப் பின் ஸாயித் அல் நஹ்யானும், இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கையெழுத்திடுவார்கள் என யு.ஏ.இயில் இந்திய தூதரக அதிகாரி எ.கே.லோகேஷ் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 1200 இந்திய கைதிகள் யு.ஏ.இ சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி சிறைத் தண்டனையை அனுபவிப்பவர்கள் மீதமுள்ள காலத்தை இந்திய சிறைகளில் பூர்த்தி செய்யலாம். ஆனால்

கூட்டுப்படுகொலை:அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக ஈராக் மக்கள் வழக்கு பதிவு

பாக்தாத்:சிவிலியன்களுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் நடத்திய குற்றங்களின் பெயரால் அமெரிக்க அரசு மற்றும் ராணுவத்தின் மீது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈராக் மக்கள் வழக்கு பதிவுச்செய்துள்ளனர்.

ஈராக் ஆக்கிரமிப்பை தொடர்ந்து 2003-ஆம் ஆண்டு முதல் நாட்டின் சாதாரண குடிமக்கள் மற்றும் அவர்களது சொத்துக்கள் மீது அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு படையினர் நடத்திய தாக்குதல்களை சுட்டிக்காட்டி வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இச்செய்தியை வழக்கறிஞர்களை மேற்கோள்காட்டி ப்ரஸ் டி.வி கூறுகிறது.

ஜெனீவா ஒப்பந்தத்தின் படி அமெரிக்காவும்,பிரிட்டனும் ஈராக் ஆக்கிரமிப்பை தொடர்ந்து சிவிலியன்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு போதிய இழப்பீட்டை வழங்க பொறுப்புள்ளதாக வழக்கறிஞர்கள் குழுவின் இயக்குநர் ரஸாக் அல் அபாதி தெரிவித்துள்ளார். குற்றம்புரிந்த அமெரிக்க ராணுவத்தினரை சட்டத்தின் முன்னால் நிறுத்த ஈராக் மக்களுக்கு உரிமை உண்டு

நவம்பர் 23, 2011

ஓர் வஃபாத் செய்தி!!

நமதூர் மேலத் தெருவில் இருக்கும் கசாப்பு ஜக்கரியா அவர்களின் மகன் முஹம்மது அலி அவர்கள் இன்று தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடுXpress இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

லிபியாவில் இஹ்வானுல் முஸ்லிமூன் முதலாவது பகிரங்க மாநாட்டை நடத்தியுள்ளது


வீழ்ச்சியடைந்த லிபிய ஆட்சியாளர் முஅம்மர் கடாபியின் காலத்தில் கடுமையான அடக்குமுறைக்கு உட்பட்டிருந்த இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம், அதன் முதலாவது பகிரங்க மாநாட்டை நடத்தியுள்ளது.

சென்ற வியாழனன்று லிபியாவின் இரண்டாவது பெருநகரமான பெங்காசியில் தொடங்கிய இம்மாநாடு மூன்று நாட்களாக நடைபெற்றது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எல்லா லிபியக் குழுக்களையும் ஒன்றிணையுமாறு இம்மாநாடு வலியுறுத்தியுள்ளது.

'இது எமக்கும் லிபிய மக்களுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்” என இயக்கத்தின் தலைவர் சுலைமான் அப்துல் காதர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் தூனிஸிய அந்நஹ்ழா இயக்கத்தினதும் சிரிய இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தினதும் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர்.

1949இல் ஆரம்பிக்கப்பட்ட லிபிய இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம் நடத்திய முதல் பகிரங்க மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த கால் நூற்றாண்டாக லிபியாவினுள் இயக்கத்தின் பகிரங்க கூட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. கடாபியின் அடக்குமுறையினால் இரகசிய கூட்டங்களே நடந்துள்ளன. மாநாடுகள்

விலைவாசி உயர்வு – முஸ்லிம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம்

       வரலாறு காணாத வகை யில் பால் விலை - பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள தற்கும், மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதற்கும்     கண்டனம் தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் நடத்துகி றது. தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நவம்பர் 23-ம் தேதி புதன் கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது.

தமிழ்நாட்டில் பால் விலை மற்றும் பேருந்து கட்டணம் மிகக் கடுமை யான அளவில் உயர்த்தப் பட்டுள்ளது. அட்டைதா ரர்களுக்கு வழங்கப்படும் பால் ரூ.17.75 லிருந்து ரூ.24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சில்லறை வணிகர்கள் எத்தகைய முன்னறிவிப்பும் இன்றி மனம் போன போக்கில் விலை நிர்ணயம் செய்து விற்கத் தொடங்கி விட்டனர். பால் விலை உயர்வையடுத்து உணவு விடுதிகளிலும், தெருவோர தேநீர் விடுதிகளிலும் டீயின் விலை கணிசமாக உயர்த் தப்பட்டுள்ளது.

பேருந்து கட்டணம் 80 சதவீதம் வரை உயர்த் தப்பட்டுள்ளதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகப் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். சில இடங்களில் இந்த உயர்வு 100 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியிடப் பட்ட அன்றைய தினம் இரவு முதல் முன்னறிவிப் பின்றி விலை உயர்வு அமல்படுத் தப்படுத்தப் பட்டதால் வேலைவாய்ப் புகளுக்காக சென்றிருந்த ஏழை கூலித் தொழிலாளர் கள் பணமின்றி தவித்தது மிகப் பெரும் விமர்சனத்திற் குள்ளானது.

மக்களை நேரடியாக பாதிக்கும்

கூகுள் டிவியை அறிமுகப்படுத்துகிறது சாம்சங்

சியோல் : டிவி உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், விரைவில், கூகுள் டிவியை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் உடனான இதுகுறித்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக சாம்சங் நிறுவனத்தின் டிவிக்கள் பிரிவின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

லாஜிடெக் இண்டர்நேஷனல் நிறுவன செட் டாப் பாக்ஸ்களுடன் சோனி கார்ப் டெலிவிஷன் நிறுவனம், தற்போதைய அளவில் கூகுள் டிவிக்களை வர்த்தகப்படுத்தி வருகிறது. இந்த டிவியின் மூலம், ஆன்லைன் வீடியோக்கள் மற்றும் இணையதளங்களை பார்த்து மகிழலாம். வீடியோ கேம்கள் விளையாடுவதற்கென சிறப்பு அப்ளிகேசன்களும் இதில் உள்ளன.

புளூ ரே பிளேயர் மற்றும் கம்பானியன் பாக்ஸ் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் கூடிய கூகுள் டிவியை, சமீபத்தில் நடைபெற்ற கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில், சாம்சங் நிறுவனம் பார்வைக்கு வைத்திருந்தது. இதை வர்த்தகப்படுத்தும் எண்ணம் இல்லை என்று அப்போது கூறியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால், இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சநதித்த சாம்சங் நிறுவனத்தின் டிவி பிரிவின் தலைவர் யான் பூ கியூன் கூறியதாவது, பல சிறப்பு அம்சங்கள் கொண்டதான கூகுள் டிவியை, அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ள‌ோம். இதுதொடர்பான நடவடிக்கைகளில் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மீண்டும் "ஸ்கூட்டர்' சகாப்தம்

இந்தியாவில், 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஸ்கூட்டர்கள் ஆதிக்கம் காணப்பட்டது. மோட்டார் சைக்கிள் புரட்சி ஏற்பட்ட பிறகு, ஸ்கூட்டர் விற்பனையில் கொடி கட்டி பறந்த பஜாஜ் மற்றும் கைனடிக் போன்ற நிறுவனங்களும், மோட்டார் சைக்கிள் விற்பனையில் கவனம் செலுத்தின. ஆனால், ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் மட்டும் இந்த விஷயத்தில் விதிவிலக்காக இருந்தது. 

இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆக்டிவா ஸ்கூட்டர் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இந்தியாவில் மீண்டும் ஸ்கூட்டர் சகாப்தம் துவங்குவதற்கான அறிகுறி என்பதை மற்ற நிறுவனங்களும் தற்போது உணர தொடங்கியுள்ளன. அந்த வகையில், யமஹா நிறுவனமும், இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனையை துவக்க உள்ளது. இந்த நிறுவனம் உலகளவில் 500 சிசி திறன் கொண்ட ஜுமா முதல் 500 சிசி திறன் கொண்ட டி-மாக்ஸ் ஸ்கூட்டர் வரை பல ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. எனினும், இந்தியாவை பொறுத்தவரை 100- 125 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர்கள் தான் தேவை என்பதை புரிந்து கொண்டு அந்த வகையில், புதிய ஸ்கூட்டரை, அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன் விற்பனையும் உடனே துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதே போல,இத்தாலி நாட்டை சேர்ந்த பியாஜியோ ஸ்கூட்டர் நிறுவனமும், வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரை, அடுத்த ஆண்டு தான் அறிமுகப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி:ரிசர்வ் வங்கியால் சரிவை தடுக்க முடியாது: பிரணாப்

மும்பை:அன்னியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. ரிசர்வ் வங்கியால் கூட இந்த சரிவை தடுத்து நிறுத்த முடியாது என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.நேற்றைய வர்த்தகத்தில், ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு கட்டத்தில், 52.73 ரூபாயாக சரிவடைந்தது. வர்த்தகத்தின் இறுதியில், 52.30 ரூபாய் என்ற அளவில் நிலை பெற்றது.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை, எண்ணெய் நிறுவனங்கள் டாலரில் வழங்குகின்றன. இதற்காக, இந்நிறுவனங்கள் அதிகளவில் அமெரிக்க டாலரை வாங்கி வருகின்றன.மேலும், வங்கிகளும் அவற்றின் அன்னியச் செலாவணி பரிமாற்றத்திற்காக டாலரை வாங்குவதால், டாலருக்கானதேவை அதிகரித்துள்ளது. இதனால், டாலர் மதிப்பு அதிகரித்து, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.இந்திய ரூபாய் மட்டுமின்றி, டாலருக்கு எதிரான இதர நாடுகளின் செலாவணிகளின் மதிப்பும் வீழ்ச்சி கண்டு வருகிறது.

நவம்பர் 22, 2011

ஈரான் அதிநவீன ஏவுகணையை சோதனை செய்தது

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியி்ல் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டப்படும் நிலையில், Bavar 373 என்னும் அதிநவீன ஏவுகணையை தயாரித்துள்ளதாக, அந்நாடு தெரிவித்துள்ளது. 22-11-2011 அன்று வெளியிட்டது

இந்தத் தகவல், ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது. ஈரானுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்த தீர்மானம் காரணமாக, அந்நாட்டுக்கு ஏவுகணைகள் விற்பதற்கான ஒப்பந்தத்தை, ரஷ்யா, ரத்து செய்தது. இதையடுத்து, ஈரானிய விஞ்ஞானிகள், ரஷ்யாவின்
S 300 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட ரகத்தை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளனர். இந்த ஏவுகணை, இஸ்ரேல் மற்றும், வளைகுடாவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளங்களை தாக்கும் அளவுக்கு திறன் கொண்டது என, தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் அணுகுண்டுகளை தயாரிப்பதாக, அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, மின்சாரம் உள்ளிட்ட ஆக்கப்பூர்வத் தேவைகளுக்காக மட்டுமே யுரேனியம் செறியூட்டப்படுவதாக, ஈரான் கூறி வருகிறது.

ஈரான், ஏவுகணை சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டுடன் நிதி பரிவர்த்தனை செய்து கொள்ள, அமெரிக்கா

வேலை வாய்ப்புகளை அள்ளித்தரும் படிப்புகள் – பேக்கரி டிப்ளமோ கோர்ஸ்!

உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் சுற்றுலா துறை அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. இதனுடன் சேர்ந்து ஹோட்டல் மேலாண்மைத்துறை, கேட்டரிங் துறையும் வளர்ந்துள்ளது. கேட்டரிங் துறையில் ஒரு பகுதி யாக பேக்கரியும் பிரதானமாக விளங்குகிறது.

பேக்கரி தொழிலிலும் பல்வேறு நுட்பங்கள் புகுத்தப்பட்டு விட்டன. வாடிக்கையாளர்களும் புதிய ரக பாஸ்ட்புட் உணவு வகைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

டிப்ளமோ படிப்பு :

பேக்கரி துறையில் வேலை பார்ப்பது என்பது வெறும் கேக் தயாரிப் பது மட்டுமல்ல. அது ஒரு கலை என்கின்றனர் இத்துறையில் இருப்பவர்கள். இந்த கலையை டிப்ளமோ மூலம் சில கல்வி நிறுவனங்கள் கற்றுத் தருகின்றன.
இந்த டிப்ளமோ படித்தவர்களுக்கு பேக்கரிகள்,உணவுப்பண்டம் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் மற்றும் பெரிய ஹோட்டல்களில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நல்ல ஊதியமும் கிடைக்கும்.

பேக்கரி தொழில் தொடர் பான டிப்ளமோ படிப்பை வழங் கும் கல்வி நிறுவனங்கள்:

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (www.mihmct.com).

எம்ஜிஆர் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி.

தந்தை ஹன்ஸ்ரோவர் கல்லூரி (www.thrcollege.ac.in)

இதுதவிர கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இந்த படிப்பை நடத்துகிறது.

படிப்பு தொடர்பான விவரங்களை www.annaàniv.ac.in என்ற

மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும் முட்டை.

மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதில் முட்டைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.பகல் நேரங்களில் குறிப்பாக அலுவலக வேலை நேரத்தில் தூக்கம் வருவதை தவிர்க்க காலைசிற்றுண்டிக்கு ப்ரெட் டோஸ்ட்டுடன் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து சாப்பிடலாம் எனமருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஜாமுக்கு பதிலாக முட்டையின்வெள்ளைக்கரு சேர்த்து கொள்வது நல்லதாம்.

வெள்ளைக்கருவில் உள்ள புரதம், மூளை மற்றும் உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக்கும் என்பதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்கருவில் உடலின் அதிககலோரிகளை எரிக்க தேவையான மூலப்பொருள் உள்ளதால் உடல் எடை கூடும் என்றபயமும் வேண்டாம்.

தூக்கம், சுறுசுறுப்பு இரண்டுக்கும் முக்கிய காரணம் ஓரெக்சான் என்ற செல்கள். இந்த செல்கள்மூளையில் ஓரெக்சின் அல்லது ஹைப்போக்ரெடின் என்ற சுரப்புக்கு காரணமாகிறது.

இதில் பாதிப்பு ஏற்படும்போது நார்கோலக்சி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உடல் பருமன் அதிகரிக்கும். இந்த பாதிப்பில் இருந்துமுட்டையின் வெள்ளைக்கரு பாதுகாப்பு அளிக்கிறது.

இதில் உடலுக்கு அத்தியாவசிய தேவையான அமினோ அமிலங்கள் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவைமூளையில் உள்ள ஓரெக்சின் செல்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது.

இதனால் இவற்றின் செயல்பாடுகள் சீராக இருக்கும். இதன்மூலம் மூளை மற்றும் உடல் செயல்பாட்டில் புத்துணர்ச்சி ஏற்படும்என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நவம்பர் 21, 2011

உலக கோப்பையை வென்றது இந்திய கபடி அணி

 உலகக் கோப்பை கபடி போட்டியில் கனடாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று உள்ளது. உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மொத்தம் 14 நாடுகள் கலந்து கொண்டன. இதில் பஞ்சாப் குருநானக் விளையாட்டு மைதானத்தில்
நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் 59க்கு 25 என்ற புள்ளி கணக்கில் கனடாவை இந்தியா தோற்கடித்தது.

இறுதி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற மகளிர் இறுதிப் போட்டியில்
இங்கிலாந்து அணியை 44 க்கு 17 என்ற புள்ளி கணக்கில் இந்தியா தோற்கடித்தது.

விமான கட்டணம் விரைவில் உயர்வு

விமான எரிபொருளின் விலை அதிகரித்துள் ளதை அடுத்து, அடுத்த மாத இறுதியில் விமா னக் கட்டணங்களை, 20 முதல் 25 சதவிகிதம் வரை அதிகரிக்க, விமான நிறு வனங்கள் முடிவு செய் துள்ளன. விமானப் போக்குவரத்து வட்டா ரங்கள் கூறியதாவது: கடந்தாண்டில், பன் னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததை அடுத்து, விமான எரிபொருளின் விலையும் 40 சதவிகிதம் வரை அதிகரித்தது. இத னால், ஏர்-இந்தியா, கிங் பிஷர் உள்ளிட்ட அய்ந்து விமான நிறு வனங்களுக்கு, கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில், 2,500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

இந்த சுமையை, பயணிகள் மீது சுமத்த, விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன்படி, அடுத்த மாத இறுதியில், விமானக் கட்டணத்தை 20 முதல் 25 சதவிகிதம் அதிகரிக்க, விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. மும்பையிலிருந்து டில் லிக்குச் சென்று, பின்னர் மும்பை திரும்புவதற் காக, கிங் பிஷர் நிறு வனம், தற்போது 14 ஆயிரத்து 468 ரூபாய் கட்டணம் வசூலித்து வருகிறது. அடுத்த மாதம் இந்த கட்டணம், 17 ஆயி ரத்து 356 ரூபாயாக அதி கரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல், குறுகிய

தங்கத்தால் 2 ஆண்டுகளில் அரசிற்கு ரூ.1 லட்சம் கோடி வருமானம்

புதுடில்லி : தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்திய அரசிற்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.1,00,000 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐஎம்எஃப் இடம் இருந்து 200 டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது.

 ஐ.எம்.எஃப்., இடம் இருந்து இந்தியா ரூ.30,000 கோடிக்கு தங்கம் வாங்கியது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.15,000 ஆக உள்ளது. தற்போது ரிசர்வ் வங்கியிடம் 557.7 டன் தங்கம் உள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, 2009ம் ஐ.எம்.எஃப்., யிடம் இருந்து மத்திய வங்கி 200 டன் தங்கம் வாங்குவதற்கு முன் ரூ.50,718 மதிப்பிலான தங்கம் வைப்பு இருந்தது. தற்போது உள்நாட்டு சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.29,000 ஆக உள்ளது. தற்போது ரிசர்வ் வங்கியிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.1,60,000 கோடியாகும். 2011ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி கணக்கீட்டிபடி மத்திய வங்கியிடம் உள்ள தங்கத்தின் விலை ரூ.1,31,442 கோடியாகும்.

காட்டுமன்னார்கோவிலில் மண்ணெண்ணெய் கடத்தல்

:காட்டுமன்னார்கோவிலில் கடத்தப்பட்ட 440 லிட்டர் மண்ணெண்ணெயை சிதம்பரம் ஆர்.டி.ஓ., பறிமுதல் செய்தார்.காட்டுமன்னார்கோவில் பகுதியில் ரேஷன் மண்ணெண்ணெய் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் நேற்று சிதம்பரம் ஆர்.டி.ஒ., இந்துமதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் செல்லும் வழியில் உடையார்குடி ரம்ஜான் தைக்கால், வடக்கு கொளக்குடி செல்லும் சாலையில் மினி வேன் நின்று கொண்டிருந்தது.
வேனை சோதனை செய்ததில் 3 பேரல்களில் ரேஷன் மண்ணெண்ணெய் கடத்திச் செல்வது தெரியவந்தது. உடன் 440 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் டாடா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்தார். மேலும் வடக்கு கொளக்குடியை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார், 26 என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாசில்தார் விஸ்வநாதன், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
-DM

நவம்பர் 20, 2011

எகிப்தில் இராணுவத்திற்கு எதிராக திரண்ட மக்கள்!!

இராணுவ ஆட்சியாளர்கள் சிவிலியன் அரசாங்கத்திடம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் எனக் கோரும் பாரிய மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று எகிப்தின் பிரபல்யமான தஹ்ரீர் சதுக்கத்தில் இன்று நடைபெறுகிறது.

இதற்கான அழைப்பை இஸ்லாமியர்களும்  சில மதச்சார்பற்றோரும் விடுத்துள்ளனர். ‘ஒரே கோரிக்கைக்கான வெள்ளிக்கிழமை‘ என அவர்கள் இதற்குப் பெயரிட்டுள்ளனர்.

இராணுவ ஆட்சியாளர்கள் எகிப்தில் பிரதான கொள்கை விவகாரங்களில் இறுதித் தீர்மானம் எடுக்கும் வகையில் புதிய நகர்வுகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனைக் கண்டிக்கும் வகையிலேயே பாரிய தொகை மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டுள்ளனர். இராணுவம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆவணம் சர்வதிகாரத்தை பலப்படுத்த முனைகிறது என இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம் கண்டித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பில் பலர் ஈடுபட்டாலும் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கமும் அதன் அரசியல் கட்சியான சுதந்திரம் மற்றும் நீதிக்குமான கட்சியுமே இதற்குத் தலைமை

நவம்பர் 19, 2011

ஜெயலலிதாவின் நம்பிக்கை துரோகம்!

source from :இந்நேரம் இணையதளம்   

மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்று சொன்ன தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாகப் பேருந்துக் கட்டணம், பால் விலை போன்றவைகளை உயர்த்தி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு அரசு பரிந்துரை செய்துள்ளது. விரைவில் மின்சாரக் கட்டண உயர்வையும் தமிழக மக்கள் தங்கள் தலையில் சுமக்க வேண்டி வரும்.

பால் விலை, பேருந்துக் கட்டண உயர்வு குறித்துத் தொலைக் காட்சியில் தெரிவித்த தமிழக முதல்வர் 'வழக்கம் போலவே கருணாநிதி ஆட்சியைச் சாடினார்.மேலும் தமிழக அரசின் இலவசத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி தராததாலும் போக்குவரத்துக் கழகச் சொத்துக்கள் வங்கிகளில் அடைமானம் வைக்கப் பட்டுள்ளதாலும் பெருகி வரும் நஷ்டத்தை ஈடு கட்டக் கட்டணங்களை உயர்த்துவதாக விளக்கமும் அளித்துள்ளார் ஜெயலலிதா.

மக்களை வசியப்படுத்த, 'தி மு கவின் தேர்தல் அறிக்கை'யைப் பார்த்துத் தாம் காப்பியடித்த தேர்தல் அறிக்கை வெளியிடும்போது மத்திய அரசின் நிதி கிடைத்தால் இலவசங்கள் தருவேன் என ஜெயலலிதா சொல்லவில்லையே! ஏதோ தம் பையிலிருந்து கொடுப்பதுபோல் அம்மி முதல் ஆட்டுக்குட்டிவரை அள்ளி வழங்குவதாக அறிவித்து விட்டு இப்போது மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை எனப் பழி போடுவது வாக்களித்த மக்களை நயவஞ்சகமாக ஏமாற்றுவதாகும். தமிழக அரசின் இலவசத் திட்டங்களுக்கு நிதி தருவோம் என மத்திய அரசு ஜெயலலிதாவுக்கு வாக்குறுதி ஏதும் கொடுத்திருக்கவில்லையே? பின் ஏன் இந்தத் திசை திருப்பும் நாடகம்?

தி மு க ஆட்சியின் போது பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதற்குப் பேருந்து உரிமையாளர்கள் பலமுறை முயன்றும் கருணாநிதி ஒப்புக்கொள்ளவில்லை என்பதையும்

நவம்பர் 17, 2011

வன்முறையை நிறுத்த பஷர் அல் அஸதுக்கு மூன்று நாள் அவகாசம்

     தமது நாட்டில் நிகழும் வன்முறையை நிறுத்திக் கொள்வதற்கு சிரியா   நாட்டு தலைவர் பஷர் அல் அஸதிற்கு இன்னும் மூன்று நாட்களே அவகாசம் வழங்கப்படும் என அரப்லீக் தெரிவித்துள்ளது. இல்லாதபோது பொருளாதாரத் தடையை எதிர் நோக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை எடுக்கப்பட்ட அரப்லீகின் பெரும்பான்மை முடிவை பஷர் புறக்கணித்திதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நகர்வு குறித்து அரப்லீக்கின் வெளிவிவகார அமைச்சர்கள் மொரோக்கோ தலைநகர் றபாத்தில் ஒன்றுகூடியதைத் தொடர்ந்தே இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரத்த அடக்குமுறையை நிறுத்திக் கொள்வதற்கு சிரிய அரசுக்கு மூன்று நாள் அவகாசமே வழங்கப்படுகிறது என

மாலேகான் குண்டுவெடிப்பு: அப்பாவிகளை சிறையில் அடைத்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்களா?

     இஸ்லாமிய தீவிரவாதி, இந்து தீவிரவாதி என தீவிரவாதிகளுக்கு மதவர்ணம் பூசி நேசமும், பகையும் பாராட்டும் நோய் மனப்பான்மை ஒழியட்டும். தீவிரவாதத்தை ஒழிப்பதில் அனைவரும் ஒன்றுபடுவோம். அதே நேரத்தில் ஆயிரம் குற்றவாளிகள் தப்பி விடலாம் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதையும் நினவில் கொள்வோம். ஒரு சாதாரண மனிதனின் நிம்மதியான வாழ்வு தவறான குற்றச்சாட்டுகளால் சிறைகம்பிகளுக்கிடையே சிதைக்கப்படும் போது அவனும் அவன் குடும்பமும் படும் வலியை,வேதனையை போக்கி எது தான் ஈடு செய்யும்.

ஒன் இந்தியா வெப் தளத்தில் வந்துள்ள இந்த கட்டுரை நன்றியுடன் மீள் பதிவு செய்யப்படுகின்றது.
மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று கூறி கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ள 7 பேரின் குடும்பத்தினரும், தங்களது உறவினர்களை தவறாக குற்றம் சாட்டி சிறையில் அடைக்க காரணமான காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் 31 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்திற்குத் தொடர்பு உள்ளதாக மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் அறிவித்தனர். மேலும் அந்த அமைப்புடன் தொடர்புடயைவர்களாக கூறி, மாலேகானைச் சேர்ந்த நூர் உல் ஹூடா ஷம்சுதிஹோ அன்சாரி, ஷபீர் அகமது மசியுல்லா, ரயீஸ் அகமது, டாக்டர் சல்மான் பார்சி, டாக்டர் பரூக் மக்தூமி, முகம்மது அலி, முகம்மது ஜாஹித், ஆசிப் பஷீர் கான், அப்ரார் அகமது சயீத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. கைது செய்யப்பட்ட 9 பேருக்கு எதிராகவும் எந்தவிதமான ஆதாரமும் சிக்கவில்லை.

இந்த நிலையில்தான் மாலேகான் சம்பவத்தில் இந்து தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பெண் துறவி சாத்வி பிரக்யா தேவி என்கிற பிரக்யா தாக்கூர் சிங் கைது செய்யப்பட்டார். அவருடன்

மோடிக்கு விசா வழங்கமுடியாது -அமெரிக்கா

நன்றி:மணிச்சுடர் 

நவம்பர் 15, 2011

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் படிவம்: ஒன்பது தொகுதிகளில் 1,19,936 பேர் வழங்கல்

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் சேர்க்கைக்கு 1 லட்சத்து 19 ஆயிரத்து 936 பேர் படிவம் கொடுத்துள்ளனர். கடந்த அக்டோபர் 24ம் தேதி கடலூர் மாவட்ட வாக்காளர் வரைவு பட்டியலை கலெக்டர் அமுதவல்லி வெளியிட்டார். இந்த பட்டியல் அனைத்து ஓட்டுப்பதிவு மையங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகிவற்றிற்கான படிவங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டது.

மனு கொடுப்பதற்கு கடந்த 8ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு, பின்னர் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டது. மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு படிவங்கள் பெறப்பட்டது. தொகுதி வாரியாக மனு விவரம் வருமாறு:
திட்டக்குடி 10 ஆயிரத்து 744, விருத்தாசலம் 12 ஆயிரத்து 898,
நெய்வேலி 11 ஆயிரத்து 538,
பண்ருட்டி 15 ஆயிரத்து 329,
கடலூர் 23 ஆயிரத்து 978,
குறிஞ்சிப்பாடி 19 ஆயிரத்து 172,
 புவனகிரி 7,985,
சிதம்பரம் 7,940,
காட்டுமன்னார்கோவில் 10 ஆயிரத்து 352 பேரும்

4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்

      கனடாவைச் சேர்ந்த டேட்டாவிண்ட் நிறுவனம், உலகிலேயே மிக மலிவான, 'ஆகாஷ்' டேப்லெட் கம்ப்யூட்டரை அண்மையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்திலான இந்த டேப்லெட் கம்ப்யூட்டரை, 2,999 ரூபாய் என்ற விலையில் வரும் டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

       இந்நிலையில் ரிலையன்ஸ் சார்பாக மலிவு விலை 4G டேப்லெட் கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தி, இந்தியாவின் அகலப்பாட்டை - பிராட்பேண்ட் சந்தையைக் கைப்பற்ற பிரபல தொழிலதிபர் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். இதற்காக, ரிலையன்ஸ் -டேட்டாவிண்ட் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

உலகில் 4ஜி தொழில்நுட்பத்தில் வெகு சில நிறுவனங்கள் மட்டுமே டேப்லெட் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. இவற்றுள் மோட்டரோலா நிறுவனத்தின் 'ஜூம்' டேப்லெட் கம்ப்யூட்டர் 599 டாலருக்கும், எச்.டி.சி-யின் 'இவோ வியூ' 399 டாலருக்கும், டெல் நிறுவனத்தின் 'ஸ்டீரிக்' 355 டாலருக்கும் விற்பனையாகின்றன. இதில் நான்கில் ஒரு பங்கு விலையில் (4,000-5,000 ரூபாய்) ரிலையன்ஸ், 4Gடேப்லெட் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்த

ஈரான் மீது தாக்குதல் நடத்த 85 சதவீத அமெரிக்க மக்கள் எதிர்ப்பு

நியூயார்க்:ஈரான் மீது அமெரிக்கா ராணுவ தாக்குதல் நடத்துவதற்கு அந்நாட்டில் வாழும் 85 சதவீத மக்களும் எதிர்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 15 சதவீத மக்கள் மட்டுமே ஈரானின் மீது தாக்குதல் நடத்த ஆதரவு தெரிவிப்பதாக அமெரிக்காவின் தொலைக்காட்சி-ரேடியோ ஏஜன்சியான சி.பி.எஸ் நடத்திய ஆய்வு கூறுகிறது.

ஈரானுடன் தூதரக ரீதியான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும். ஈரான் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் அல்ல என பத்தில் எட்டு அமெரிக்கர்களும் நம்புவதாக சி.பி.எஸ் ஆய்வு கூறுகிறது.

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கை வெளிவந்து சில தினங்களுக்குள் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 14, 2011

கடலூர் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஊதியமின்றி தவிக்கும் தனியார் பேருந்துப் பணியாளர்கள்

எரிபொருள் மற்றும் உதிரிபாகங்கள் விலையேற்றம் காரணமாக, தனியார் பஸ் தொழிலாளர்கள் அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட பெற முடியாமல் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

தனியார் நிறுவனங்களில் மூலப்பொருள்கள் விலையேற்றம், உற்பத்திச் செலவு அதிகரிப்பு, உற்பத்தியான பொருள்களை எதிர்பார்த்த விலைக்கு விற்க முடியாமல் போகும் நிலை உள்ளிட்ட பிரச்னைகள் எழும்போதெல்லாம் முதலில் கை வைப்பது, ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு மற்றும் வேலைப்பளுவை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள்தான் என்பது இயல்பான விஷயம்.அந்த வகையில் தற்போது தனியார் பஸ் தொழிலாளர்கள் மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள்.

தனியார் பஸ் கட்டணம் 2001-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ. 17.50. தற்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ. 44.85.அனைத்துப் பொருள்களின் விலைகளும் அதிகரித்து வரும் நிலையில், பஸ் கட்டணம் உயர்வு இல்லை என்பது, மக்களை திருப்திப்படுத்தவும், அவர்கள் அரசு மீது எரிச்சல் அடையாமல் இருப்பதற்கு மட்டுமே பயன்படுத்தும் உத்தியாகும். அரசு பஸ்களில் கட்டணத்தை உயர்த்தாவிடினும்

7000 கோடி கடனில் சிக்கி தவிக்கும் கிங்பிஷர் நிறுவனம்

   மும்பையில் நடந்த உலக பொருளாதார பேரையின் கூட்டத்தில் கிங்பிஷர் நிறுவனத்தின் நிதிக் குழப்பம் தொடர்பாக சூடாக விவாதிக்கப்பட்டது. கிங்பிஷருக்கு ஆதரவாக சிலரும், எதிராக சிலரும் கருத்து தெரிவித்தனர். பஜாஜ் நிறுவன தலைவர் ராகுல் பஜாஜ் பேசுகையில், சாக வேண்டியவன் செத்துதான் தீர வேண்டும் என்று சற்று கடுமையாகவே பேசினார்.

நேற்றைய கூட்டத்தில் பேசியவர்களில் சிலர் ஒரு தனியார் நிறுவன நஷ்டத்தை சரிக்கட்ட அரசு தலையிடுவது நியாயமில்லை என்று கருத்து தெரிவித்தனர். சிலரோ, இது பல ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினை. எனவே அரசிடம் உதவி கோருவதில் தவறில்லை என்று வாதிட்டனர்.

ராகுல் பஜாஜ் தனது கருத்தை தெரிவிக்கும்போது, பஜாஜ் ஆட்டோ ஒரு பெரும் குழப்பத்தில் சிக்கினால், நிதி நெருக்கடியில் சிக்கினால், யாராவது வந்து உதவுவார்களா?. நான் ஒரு தனியார் நிறுவன அதிபர். அதற்காக பெருமைப்படுகிறேன். ஆனால் ஒரு தனியார் நிறுவனம் கஷ்டப்படுகிறதே, அதன் ஊழியர்கள் கஷ்டப்படுகிறார்கள், அதன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகிறார்களே என்பதற்காக அரசு வந்து உதவ வேண்டும் என்று சொல்வது லாஜிக்காக எனக்குத் தெரியவில்லை.

ஒருவன் மரணமடைய வேண்டியது விதி என்றால் அவன் மரணமடைந்துதான் ஆக வேண்டும்

நவம்பர் 13, 2011

உடல்நிலை மோசம்:அப்துல் நாஸர் மஃதனி கோவை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை

பெங்களூர்:கோவை ப்ரஸ் க்ளப்பிற்கு அருகில் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாரால் இயலவில்லை.

தற்பொழுது பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்டு கர்நாடகா மாநிலம் பரப்பனா அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மஃதனியின் உடல்நிலை திருப்திகரமானது என மருத்துவர்கள் சான்றிதழ் வழங்காதததால் அவரை ஆஜர்படுத்த இயலவில்லை.

கடுமையான நோய்களால் அவதியுறும் அப்துல் நாஸர் மஃதனிக்கு இவ்வளவு தூரம் பயணம் செல்வதற்கு உடல்நிலை ஒத்துவராது என டாக்டர்கள் சான்றிதழ்

'கேபிள் டிவி கட்டணம் ரூ.70க்கு மேல் வசூலிக்கக் கூடாது' - தமிழக அரசு

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அரசு நிர்ணயித்த தொகையான ரூ.70-க்கு மேல் சந்தாதாரர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது. கூடுதலாக வசூலிப்பது தெரிய வந்தால், அத்தகைய ஆபரேட்டர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது

இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் பதிவு செய்து அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களாகப் பலரும் தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் தங்களுடைய சந்தாதாரர்களிடம் இருந்து வசூலித்த

நவம்பர் 12, 2011

புவனகிரியில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கினார் செல்வி ராமஜெயம்

கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் அழிக்சிக்குடி ஊராட்சியை சேர்ந்த வண்டுராயன்பட்டு கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார்.

சிதம்பரம் ஆர்.டி.ஓ. இந்துமதி, தாசில்தார் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அழிச்சிக்குடி ஊராட்சி மன்ற தலைவர்டி கவிதா பாரி வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் கலந்து கொண்டு 176 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 720 பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டு உள்ளது

விழாவில் ஒன்றியக்குழு

தமிழகத்தில் உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு திட்ட

தமிழகத்தில் தற்போது 18 சதவீதமாக உள்ள, உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை, 2025-ம் ஆண்டுக்குள், 25 சதவீதமாக உயர்த்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நேற்று நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் இதனை தெரிவித்தார். ஆட்சிப் பொறுப்பேற்பேற்ற 100 நாட்களில், தமிழகத்தில் 11 கல்லூரிகள் புதிதாக திறக்கப்பட்டு, இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார். பட்டமளிப்பு விழாவில், கலந்து கொண்ட தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ரோசய்யா, 395 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்

நவம்பர் 11, 2011

ஆயங்குடி பள்ளி தலைமை ஆசிரியர் அறை பூட்டை உடைத்து முக்கிய ஆவணங்கள் கிழிப்பு

காட்டுமன்னார் கோவில் அருகே பள்ளி தலைமை ஆசிரியர் அறை பூட்டை உடைத்து முக்கிய ஆவ ணங்கள், சான்றி தழ்கள் கிழிக்கப்பட்டு உள்ளது.இது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூட்டு உடைப்பு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே ஆயங்குடி முஸ்லிம் உதவி பெறும் பள்ளி உள் ளது.இந்த பள்ளியில் 322 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் பள்ளி வழக்கம் போல் நடந்தது.மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து பள்ளி தலைமை ஆசிரியர் கமாலுதீன் தனது அறையை பூட்டி விட்டு சென்று விட்டார்.

நேற்று காலை பள்ளிக் கூடத்தை திறந்து சுத்தம் செய் வதற்காக துப்புரவு ஊழி யர்கள் பள்ளிக் கூடத் திற்குள் வந்தனர்.அவர்கள் தலைமை ஆசிரியர் அறை அருகே சென்ற போது , அவரது அறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர்கள் இதுபற்றி பள்ளி தாளாளர் இலாகி பட்சி , தலைமை ஆசிரியர் கமாலு தீன் ஆகியோருக்கு தகவல் தெரி வித் தனர்.

ஆவணங்கள் கிழிப்பு
அதன்பேரில் பள்ளி தாளாளர் , தலைமை ஆசி ரியர் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் 3 பீரோக்கள் உடைக் கப் பட்டு, அதில் இருந்த ஆவணங் கள், சான்றிதழ்கள் கிழிக்கப் பட்டு சிதறி கிடந்தது.

அருகில் உள்ள கழிவு நீர் வாய்க்காலிலும் ஆவணங்கள் ,சான்றிதழ்கள் கிழிக்கப்பட்டு கிடந்தது. இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியர் கமாலுதீன் காட்டுமன்னார் கோவில் போலீசில் புகார் செய் தார்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ் பெக்டர் சந்திரசேகர், சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் நேரில் சென்று விசா ரணை நடத்தினர்.

மேலும் பீரோவை உடைத்து உள்ளே வந்து ஆவணங்களை கிழித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் அந்த பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நவம்பர் 10, 2011

மின் கட்டணத்தை முன் கூட்டியே செலுத்தும் முறை

     மின் கட்டணத்தை முன் கூட்டியே செலுத்தும் முறை மின் வாரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து விருத்தாசலம் கோட்ட செயற் பொறியாளர் சிவராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோகக் கழகம் மின் நுகர்வோர்களின் வசதிக்காக மின் கட்டணத்தை முன் கூட்டியே செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மின் நுகர்வோர்கள் விருப்பப்பட்டால் மின் கட்டண தொகையை முன்கூட்டியே செலுத்தலாம். அவ்வாறு செலுத்தப்படும் வைப்பு தொகை மின் நுகர்வோரது மின் கட்டண அட்டையில் குறித்து தரப்படும். மேலும் அந்த வைப்புத் தொகைக்கு ஆண்டிற்கு 6 சதவீதம்

மலேகான்:புரோகித்தின் ஜாமீன் மனு தள்ளுபடி

மும்பை:2008-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான லெஃப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்தின் ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது. அதேவேளையில், மற்றொரு குற்றவாளியான அஜய் ரவிர்கருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஹிந்து ராஷ்ட்ரத்தை நிறுவுவதற்காக சதித்திட்டம் தீட்டியது, குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆர்.டி.எக்ஸை கொண்டுவந்தது ஆகியவற்றில் புரோகித்திற்கு பங்கிருப்பதாக நீதிபதி ஆர்.பி.சவான் தெரிவித்தார். மாதத்தில் ஒரு நாள் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜராக ஜாமீன் வழங்கப்பட்ட ரவிகருகு நீதிபதி உத்தரவிட்டார்

அத்வானி யாத்திரை பாதை குண்டு: போலி என்கவுண்டருக்குத் திட்டம், அதிர்ச்சி தகவல்!

அத்வானி கொலை முயற்சி வழக்கில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டுச் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன் என்று அழைக்கப்படும் பக்ருதீனை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல காவல்துறை திட்டமிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் பாஜக-வின் தலைவர்களில் ஒருவரான அத்வானி ஊழல் எதிர்ப்பு ரத யாத்திரை வந்தார். அவர் அங்கிருந்து யாத்திரை செல்லும் வழியில் பைப் வெடிகுண்டு ஒன்று காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் கடந்த 1ம் தேதி

நவம்பர் 09, 2011

கடாபியின் மரணம் உணர்த்தும் உண்மைகள் – ஓர் ஆன்மீக, அரசியல் அலசல்- RASMIN M.I.Sc

மாபெரும்வீரன், இராணுவத் தளபதி, ஆபிரிக்காவின் விடிவெள்ளி, அமெரிக்காவின் எதிரி இது போன்றவார்த்தைகளினால் ஒரு காலத்தில்புகழப்பட்டவர் தான் இந்த முஅம்மர் கடாபி.

கடைசி நேரத்தில் கதரக் கதர அவர் கொலை செய்யப்பட்ட காட்சியை ஊடகங்கள் வாயிலாக உலக மக்கள் அனைவரும் பார்த்தார்கள். 42 வருட காலங்கள் ஓர் நாட்டை ஆட்சி செய்த தளபதி ஒருவரின் மரணம் இப்படியும் அமையும் என்பதை அன்றுதான் உலகம் நிதர்சனமாக நேரடியாக கண்டிருக்கும்.

முஅம்மர் கடாபியின் வரலாறு என்ன? அவரின் நல்ல பக்கங்கள் இருக்கிறதா? அல்லது அவர் செய்தது அனைத்துமே கெட்ட செயல்கள் தானா? என்பதைப் பற்றி நிறையப் பேருக்கு தெரியாமல் இருக்கிறது. அதிலும் குறிப்பாக முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கடாபியின் உண்மை வரலாற்றைப் பற்றிய சிகப்புப் பக்கங்களை சரியாக அறியாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.

இந்த ஆக்கம் கடாபியின் வாழ்க்கையின் நல்ல செயல்பாடுகள் மற்றும் மார்க்கத்திற்கு விரோதமான மார்க்கத்தையே இழிவு படுத்த நினைத்த அவரது செயல்பாடுகள் போன்றவற்றைப் பற்றி ஆராய்கிறது.

நபியவர்களின் முன்னறிவிப்பும், நாம் அறிய வேண்டியவைகளும்.

"உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள், உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கட்டம் வரும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அன்றைய தினம் நாங்கள் சிறுபான்மையாக இருப்போம் என்பதாலா?'' என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அந்நாளில் நீங்கள் பெரும்பான்மையாகவே இருப்பீர்கள். எனினும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி விடுவீர்கள். உங்கள் விரோதியின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழன்று விடும்! உங்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் "வஹ்னை' ஏற்படுத்தி விடுவான்'' என்று பதிலளித்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! வஹ்ன் என்றால் என்ன?'' என்று நாங்கள் கேட்டோம். "உலகத்தை நேசிப்பது; மரணத்தை வெறுப்பது'' என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), நூல்: அஹ்மத் 21363

இன்றைய கால கட்டத்தில் உலகில் பல நாடுகளிலும்

கொள்ளிடக்கரையில் முதலைகளால்...திக் திக் : மழைக் காலமானால் தொடரும் அச்சம்

   சிதம்பரம் : தொடர் மழையால் ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பியதாலும் ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் செல்வதாலும் கொள்ளிடக்கரையொட்டி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் கிராமங்களைச் சேர்ந்த மக்களை முதலைகள் அச்சுறுத்தி வருகின்றன. கொள்ளிடக்கரையொட்டிய சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் காவிரி டெல்டா பகுதி பாசன வாய்க்கால்கள், ஆறுகள் வழியாக மழை வெள்ள காலங்களில் முதலைகள் அதிக அளவில் வந்து விடுகிறது. இந்த முதலைகள் அப்பகுதிக்கு வருபவர்களை கடித்தும், இரவு நேரங்களில் கிராமத்திற்குள் நுழைந்து கால்நடைகளை விழுங்கி வருவதும் வழக்கமாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலைகள் கடித்து 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

     பலர் காயமடைந்துள்ளனர். எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடந்த ஆண்டு உயிரிழப்பு அதிகரித்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி பழைய கொள்ளிடம்

இந்தியாவில் இதுவரை தீர்ப்பு அளிக்கப்படாத வழக்குகள் 72 லட்சம்

புதுடெல்லி:இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் இதுவரை 72 லட்சம் குற்றவியல் வழக்குகள் தீர்ப்பு அளிக்கப்படாமல் தேங்கியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை, கலவரம், பாலியல் வன்புணர்வு ஆகிய வழக்குகள்தாம் தீர்ப்பளிக்கப்படாத வழக்குகளில் பெரும்பகுதியாகும்.

மஹாராஷ்ட்ரா மாநிலம் இதில் முன்னணி வகிக்கிறது.ஏழு யூனியன் பிரதேசங்களிலும், 28 மாநிலங்களிலும் 72,58, 502 வழக்குகள் 2010 ஆம் ஆண்டு பதிவுச்செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவை எதிர்கொள்ள அணு ஆயுதங்கள் தேவையில்லை-ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத்

டெஹ்ரான்:அமெரிக்காவை எதிர்கொள்ள அணு ஆயுதங்கள் தேவையில்லை என ஈரானின் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார். மோதலுக்குத்தான் அமெரிக்கா தயாராகிறது என்றால் ஈரானின் பதிலடியை குறித்து சிந்தித்து அமெரிக்காவிற்கு துக்கமடைய வேண்டிய சூழல் ஏற்படும் என நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் அணு ஆயுத தயாரிப்பின் அருகில் உள்ளதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கை அண்மையில் கசிந்ததைத் தொடர்ந்து பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலின் பின்னணியில் நஜாதின் எச்சரிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது. மேலும் நஜாத் கூறியிருப்பதாவது:இதர நாடுகளை வறுமையில் உழலச்செய்து அவர்களுடைய சொத்துக்களை கொள்ளையடித்து அமெரிக்கா தனது சொந்த செல்வ செழிப்பை உறுதிச்செய்கிறது. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அங்கீகரிக்க இயலாது.

நவம்பர் 08, 2011

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவை:தாருல் உலூம் பத்வா

முஸாபர்நகர் : இந்திய முஸ்லீம்களின் முக்கிய மத கல்வி நிறுவனமான தியோபந்தில் உள்ள தாருல் உலூம் மதரஸா பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவை என்றும் அவை மேற்கத்திய நாடுகளின் கலாசாரம் என்றும் குற்றம் சாட்டி உள்ளது.

அலிகார் முஸ்லீம் பல்கலைகழகத்தின் நிறுவனர் சர் சையது அஹ்மது கானுக்கு பிறந்த நாள் கொண்டாடுதல் சம்பந்தமாக ஒரு மாணவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது இப்பத்வா வழங்கப்பட்டது.

மேலும் தாருல் உலூமின் துணை வேந்தர் மெளலானா அபுல் காசின் நுமானி கூறும் போது ஷரியத்துக்கு மாற்றமான பிறந்த நாள் கொண்டாட்டங்கள்

நவம்பர் 07, 2011

கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளி தியாக திருநாள் கொண்டாட்டம்

நமதூர் தவ்ஹீத் பள்ளியில் இன்று சிறப்பான முறையில் தியாக திருநாள் தொழுகை, ஹஜ்ரத் நியமத்துல்லாஹ் அவர்களின் சிறப்பு பயானுடன் நடைபெற்றது.அதன் சமயம் ஆண்களும் பெண்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்....

தொழுகை முடிந்து குர்பானி கொடுக்கப்பட்ட ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகள்  ஏழை எளிய மக்களுக்கு முறையாக விநியோகிக்கப்பட்டது.

நவம்பர் 06, 2011

பெருநாள் தொழுகை முறை


பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம். ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால் ஜும்ஆவிற்குப் பதிலாக பெருநாள் தொழுகையே போதுமானது என்று மார்க்கம் கூறுகின்றது என்றால் பெருநாள் தொழுகை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.(இது பின்னர் விரிவாக விளக்கப்பட்டுள்ளது)

ஜமாஅத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை போன்ற கூட்டுத் தொழுகைகல் பெண்கள் பங்கு கொள்ளாமல் தமது வீடுகலேயே தனியாகத் தொழுது கொள்ளலாம் என்று இஸ்லாம் பெண்களுக்குச் சலுகை வழங்கியுள்ளது. அப்படிச் சலுகை வழங்கிய இஸ்லாம் பெருநாள் தொழுகையில் மட்டும் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறது. தகுந்த ஆடை இல்லாவிட்டால் இரவல் ஆடை வாங்கியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.(இதுவும் பின்னர் விளக்கப்பட்டுள்ளது).
மற்ற தொழுகைகளை விட அதிக முக்கியத்துவம் அக்கப்பட்டதில் இருந்து இத்தொழுகையின் அவசியத்தை அறிந்து கொள்ளலாம்.

தொழுகை நேரம்
இன்றைய தினத்தில் நாம் முதல் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பயிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: பர்ராஃ பின் ஆஸிப் (ரலி)

நூல்: புகாரி 951, 965, 968, 976, 5545, 5560, 
மேற்கண்ட ஹதீஸ் பெருநாள் தினத்தில் முதல் காரியமாக தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வயுறுத்துகின்றது. முதல் காரியமாக பெருநாள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்றால் சுபுஹ் தொழுது முடித்த மறு நிமிடமே தொழுது விடவேண்டும் என்று

நவம்பர் 05, 2011

இறைஅச்சமே அவனைச் சென்றடையும்!!

    மந்தை மந்தையாக ஆடு, மாடுகள் சந்தைகளில் சரி விலைக்கு விற்பனையாகின்றன. ஆடுஇ மாடு பண்ணை வைத்திருப்போர் இந்த ஹஜ் காலங்களில் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி விடுகின்றனர். கடந்த ஆண்டு 7000 ரூபாய்க்கு விற்ற மாடு இந்த ஆண்டு 9000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. 5000 ரூபாய்க்கு விற்ற ஆடு இந்த ஆண்டு 7000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

இப்படி ஆடு மாடுகளின் விலை ஆகாயத்தைத் தொட்டாலும்,என்ன விலையேற்றமாக இருந்தாலும், எவ்வளவு விலை எகிறியிருந்தாலும் அவற்றை விலை கொடுத்து வாங்குவதற்கு முஸ்லிம்கள் தயங்குவதில்லை. அத்தனை விலை கொடுத்து வாங்குவதுடன் நின்றுவிடுவதில்லை. வைக்கின்ற வைக்கோலுக்கும் புல் கட்டுக்கும் ஒரு தொகை காலியாகி விடுகின்றது.

அவற்றை வீட்டுக்குக் கொண்டு வந்து கட்டி, தீனி போட்டு,கஞ்சி ஊற்றி,கழனி வைத்துப் பராமரித்து வருவதில் அவர்கள் காட்டுகின்ற அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் அளவே இல்லை. கண்ட கண்ட இடங்களில் ஆடு மாடுகள் போடுகின்ற புழுக்கை, சாணி மற்றும் கழிக்கின்ற சிறுநீர் போன்ற அசுத்தங்களை அவ்வப்போது கழுவி துப்புரவு செய்கின்றனர். அதிலும் மழை நேரத்தில் நச நசவென்று ஒரே ஈரப் பதமாக இருக்கும் நாட்களில் இந்த அசுத்தங்களைச் சுத்தம் செய்வதற்காகத் தாய்மார்கள்

108 ஆம்புலன்சில் பணிபுரிய வரும் 9ம் தேதி ஆட்கள் தேர்வு

இலவச ஆம்புலன்ஸ் 108ல் பணிபுரிய வரும் 9ம் தேதி ஆட்கள் தேர்வு நடக்கிறது தமிழக அரசு சார்பில் ஜி.வி.கே.இ.எம்.ஆர்.ஐ., நிறுவனம் செயல்படுத்தி வரும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையில் மெடிக்கல் டெக்னீஷியன் பிரிவில் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்வதற்கான நேர்காணல் கடலூர் பீச்ரோட்டில் உள்ள ரோட்டரி ஹாலில் வரும் 9ம் தேதி நடக்கிறது. மெடிக்கல் டெக்னீஷியன் பணிக்கு பி.எஸ்சி., நர்சிங், தாவரவியல், விலங்கியல், மைக்ரோபயாலஜி, பயோ டெக்னாலஜி, உயிரிவேதியியல் மற்றும் மூன்றரை ஆண்டு ஜி.என்.எம்., மற்றும் இரண்டு ஆண்டு ஏ.என்.எம்., ஆகிய பாடப்பிரிவினை படித்திருக்க வேண்டும். வயது 20 முதல் 30 வரை இருக்க வேண்டும். சேர விரும்புவோர் தங்களின் அசல் கல்விச் சான்றிதழ்கள், பணி அனுபவச் சான்று, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் காலை 9 மணிக்குள் நேரில் வர வேண்டும். விவரங்களுக்கு 044- 28888060 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை செயல் அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.