Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 31, 2011

போலீஸ் கால்சென்டர்,நல்ல முயற்சி

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் துவக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் போலீஸ் கால்சென்டரில் நவீன கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு மேலும் தரமான சேவை அளிக்க வகை செய்யப்படும் என்று அந்த நகரத்தின் போலீஸ் கமிஷனர் பி. விஜயன் தெரிவித்துள்ளார்.

சென்ற ஆகஸ்டு 15 முதல் இங்கு போலீஸ் கால் சென்டர் சோதனை அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. இந்த சேவை இப்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து கோழிக்கோடு நகர போலீஸ் கமிஷனர் விஜயன் கூறியது: "இந்த சேவைக்கென 8129000000 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எண்ணில் பொதுமக்கள் வாரத்தின் அனைத்து நாள்களிலும் எந்த நேரமும் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்கலாம். இது ஒரு 24 மணி நேர சேவையாகும். இந்த எண் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், உதவி கமிஷனர், கமிஷனர் உள்ளிட்டோரை சந்திக்க நேரம் கேட்டுப் பெறுவதற்கான வசதி செய்யப்பட்டது. மேலும் புகார் அளிப்பதையும் இந்த எண் எளிமையாக்கியுள்ளது.

கெய்ரோ போராட்டக்காரர்களின் பிடியில்

எகிப்தில் சர்வாதிகார அரசுக்கெதிரான மக்கள் திரள் போராட்டம் அதன் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

ஆட்சிமாற்றத்தை கோரி ஊரடங்கு உத்தரவை மீறியும்,பாதுகாப்புப் படையினருக்கு சவால் விட்டும் ஆறாவது நாளாக களமிறங்கிய எகிப்து நாட்டு மக்கள் கெய்ரோவின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனர்.

ராணுவ உடையை களைந்துவிட்டு ராணுவ வீரர்களும் மக்களோடு போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த மோதலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 150 ஐ தாண்டியுள்ளது. நான்காயிரத்திற்கும் அதிகமானோருக்கு காயமேற்பட்டுள்ளது. போலீஸ் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய வேளையிலும் மக்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை.

சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பாமல் திரும்பமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் செங்கல் விலை வீழ்ச்சி

கடலூர் மாவட்டத்தில் செங்கல் உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. மேலும் குறையும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம், சிறுவத்தூர், சேமக்கோட்டை, நத்தம், பணப்பாக்கம் உட்பட 50 கிராமங்களில் தினமும் ஒரு கோடி பச்சைக்கல் (செங்கல்) உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்காக, செங்கல் தேவை அதிகரித்துள்ளதால் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் விறகு மூலம் கொளுத்தப்பட்ட 1,000 செங்கல் 6,500 ரூபாயும், மெலார் மூலம் கொளுத்தும் செங்கல் 6,000 ரூபாய் அளவில் கிடுகிடுவென விலை உயர்ந்தது.

கடும் விலை உயர்வு காரணமாக கான்ட்ராக்டர்கள், வீடு கட்டும் மக்கள் என அனைவரும் கடும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் மழைக் காலம் முடிந்து, கடந்த 15 நாட்களாக செங்கல் உற்பத்தி பச்சைகல் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது விறகு மூலம் கொளுத்தப்பட்ட செங்கல் 4,200 ரூபாய்க்கும், மெலார் மூலம் கொளுத்தப்பட்ட செங்கல் 4,000 ரூபாய்க்கும் கிடைக்கிறது. இதே நிலையில் உற்பத்தி அதிகரித்து விறகு, சவுக்கை மெலார் உயராமல் இருந்தால் இன்னும் 15 நாட்களில் செங்கல் 3,500 மற்றும் 3,300 ரூபாய்க்கு கிடைக்கும் என, செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

ஜனவரி 30, 2011

கருப்பு பணத்தை கொண்டு வர நடவடிக்கை: மொய்லி

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாக சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், கருப்பு பண பிரச்சனையில் மத்திய அரசு எதுவும் மறைக்கவில்லை என்றும், கருப்பு பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றமே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் கூறினார்.

தர்மத்தை வலியுறுத்த உலக பணக்காரர்கள் இந்தியா வருகை!

உலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவரான பில்கேட்ஸும் மூன்றாவது இடத்தில் உள்ள பங்குச் சந்தை வர்த்தக மன்னரான பப்பெட் ஆகியோர், இந்திய பணக்காரர்களிடம் தர்மத்தை வலியுறுத்தி சமூக சேவையை ஊக்கப்படுத்துவது குறித்து விவாதிக்க இந்தியா வருகை தர உள்ளனர்.

உலகப் பணக்காரர்களில் ஒருவரும், சமூக சேவைகளில் சிறந்து விளங்குபவருமான பில் கேட்ஸ், தனது சேவையை சீனா மற்றும் இந்தியாவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, "நான், எனது மனைவி மெலிண்டா, மற்றும் பங்குச் சந்தை வர்த்தக மன்னரான பப்பெட் மூவரும் இந்த வருடம் இந்தியா சென்று, அங்குள்ள பணக்காரர்களிடம் சமூக சேவை செய்வதை ஊக்கப்படுத்துவது பற்றி விவாதிக்க உள்ளோம். இந்த விவாதக் கூட்டம் கடந்த வருடம் சீனாவில் நடந்ததைப் போன்று இருக்கும்.

இடஒதுக்கீட்டை கண்காணிக்க குழு : முதல்வர் உத்தரவு!

முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் 3.5 சதவீத இடஒதுக்கீடு அவர்களுக்கு சரியாக போய் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க, தலைமைச் செயலாளர் மாலதி தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீடு சரியாக போய் கிடைக்கிறதா என்பதனை ஆராயக் குழு அமைத்தது தமிழக அரசு.அருந்ததியருக்கு குழு அமைத்து போல் முஸ்லிம்களுக்கு அமைக்க வேண்டுமென ததஜ கோரிக்கை வைத்தது குறிப்பிடதக்கது.

தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கை நிறைவேறியதின் மூலம் அவர்களின் தேர்தல் நிலைப்பாடு திமுக வோடு  என்பது தெளிவாகின்றது இதனிடையே ம்ற்றுமொரு முஸ்லிம் இயக்கமான தமுமுக அதிமுக வுடன் தொடர்பில் உள்ளது.

தப்லீக் ஜமாஅத்தின் இரண்டாவது கட்ட மாநாடு டாக்காவில் துவக்கம்

தப்லீக் ஜமாஅத்தின் வருடாந்திர மாநாடான பிஸ்வா இஜ்திமாவின் இரண்டாவது கட்டம் பங்களாதேஷ் தலைநகரம் டாக்காவில் துவங்கியது.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். புனித ஹஜ்ஜிற்கு அடுத்தபடியாக அதிகமான முஸ்லிம்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியாக இந்த இஜ்திமா கருதப்படுகிறது.பங்களாதேஷ் அதிபர், பிரதமர் ஷேக் ஹஸீனா, எதிர்கட்சித் தலைவர் கலிதா ஜியா ஆகியோர் முதல் கட்ட மாநாட்டில் கலந்துக்கொண்டிருந்தனர்.

ஜனவரி 29, 2011

தனி நாடாக உதயமாகிறது தெற்கு சூடான்!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின் கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட அமைதி ‌ஒப்பந்தத்தின் படி சூடானை தெற்கு, வடக்கு என இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் பின்னர் நிகழ்ந்த பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முன்னதாக சூடானை இரண்டாக பிரிக்கலாமா, வேண்டாமா என வாக்கெடுப்பு நடந்தது. இதில் ‌பெரும்பாலா மக்கள் சூடானை பிரிக்க ஆதரவு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தெற்கு சூடான் மக்கள் வாக்கெடுப்பு ஆணையம் (எஸ்.எஸ்.ஆர்.சி) அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 99 சதவீத வாக்கெடுப்பு நடந்துள்ளதாக கூறப்படும் இந்நிலையில் எஸ்.எஸ்.ஆர்.சி.யின் தலைவர் முகமது இப்ராஹிம் கஹாகிலி, கஹார்டூம் நகரில் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியதாவது:

"வாக்கெடுப்பு முடிவுகள் பிப்ரவரி 7-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளன. முன்னதாக குடியரசுத் தலைவர் ஒமர் பஷீர் சூடானை இரண்டாக பிரிக்கும் வாக்கெடுப்பிற்கு ஓப்புதல் அளித்தார். இதன்படி தெற்கு சூடானின் தலைநகரமாக கஹார்டூம், வடக்கு சூடானின் தலைநகரமாக ஜூபாவும் முறையாக அறிவிக்கப்படும்.இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 14-ம் தேதி இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு அன்று முதல் தெற்கு சூடான் என்ற சுதந்திர நாடு உதயமாகும்" இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி:செய்தி.கம

தனியார் மின் நிலையத்துக்கு எதிர்ப்பு!!

சிதம்பரம், ஜன. 28: சிதம்பரம் அருகே பச்சங்குப்பத்தில் அமையவுள்ள ஐ.எஃப். எல்.எஸ் தமிழ்நாடு பவர் கார்பரேஷன் என்ற தனியார் மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் வெள்ளிக்கிழமை சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிக்கூட்டத்தில் எவ்வித உடன்படிக்கை ஏற்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. வருகிற பிப்ரவரி 3-ம் தேதிக்கு மேல் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் அமைதிக்கூட்டத்தை கூட்டுவது என முடிவு எடுக்கப்பட்டது.

சிதம்பரம் அருகே பச்சங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1100 ஏக்கரில் ஐ.எஃப். எல்.எஸ். தமிழ்நாடு பவர் கார்பரேஷன் நிறுவனம் தனியார் அனல் மின் நிலையம் அமைக்கவுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும்போது புரோக்கர்கள் மூலம் குறைந்தவிலையில் விவசாயிகளிடம் நிலங்களை பெற்றதால் கூடுதல் தொகை வழங்க வேண்டும். மேலும் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதால் அப்பகுதியில் மின்நிலையம் அமைக்கக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 3 முறை நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் உடன்படிக்கை ஏற்படவில்லை.

பிரச்சனையை தேடும் இந்தியா?

சமீபத்தைய பொருளாதார நெருக்கடியால் அமெரிக்காவின் வேலை இழந்தோர் எண்ணிக்கை மிக அதிகமாகி இரட்டை இலக்கத்தை நெருங்குகிறது. அரசின் எந்த நடவடிக்கையும் வேலை வாய்ப்பை பெருக்க முடியவில்லை. வேலை வாய்ப்பை பெருக்க அமெரிக்கா முன் இரண்டு வழிமுறைகள் இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கணிக்கின்றனர். ஒன்று கீனிசியன் (Keynesian)பொருளாதார முறைப்படி அரசின் செலவீனங்களை அதிகரிக்க வேண்டும். அதாவது அரசு உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு என்ற பெயரில் ரோடுகள் போடுவது, பாலம் அமைப்பது, அரசு அலுவலங்களில் மரபு சாரா சக்தி முறைப்படி அனைத்து மின் பொருட்களையும் மாற்றி அமைப்பது போன்ற செயல்களை செய்வதன் மூலம் வேலை வாய்ப்பை பெருக்குவது. ஆனால் இது அமெரிக்காவின் முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு எதிரானது.

மேலும் அரசு வேலை செய்ய ஒதுக்கும் நிதி, அதற்கான வேலையை சென்றடையும் போது பாதி கரைந்து போயிருக்கும் என்று கருதபடுகிறது.ஆனாலும் ஒபாமா பெரிய தொகையை அரசு செலவினத்துக்கு ஒதுக்கியும் வேலை வாய்ப்பை உயர்த்த முடியவில்லை.

BLUETOOTH பயன்பாடும் பாதுகாப்பும்?

வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன.

நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது.

குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாவகம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

ஜனவரி 27, 2011

தடையை மீறி பேரணியாகச் செல்வோம்!பி.ஜெ

பாபர் மசூதி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து மறு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை நோக்கி வியாழக்கிழமை பேரணி நடத்துகிறது.

இது குறித்து அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் பி. ஜெய்னுலாபுதீன் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: சென்னை மெமோரியல் அரங்கம் அருகில் வியாழக்கிழமை தொடங்கும் இந்தப் பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

அதே நாளில் மதுரையிலும் ரயில் நிலையத்தில் தொடங்கி, அங்குள்ள உயர் நீதிமன்றக் கிளையை நோக்கி பேரணி நடைபெறும். இந்தப் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்காவிட்டால், தடையை மீறி பேரணியாகச் செல்வோம் என்றார் ஜெய்னுலாபுதீன்.
நன்றி:தினமணி
பேரணியின்  நேரடி ஒளிப்பரப்பை காண 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேரணி

சென்னை : பாபர் மசூதி இடிப்பு தொடர்பான, அலகாபாத் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டில் இவ்வழக்கை மறு விசாரணை செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் சார்பில், இன்று  சென்னையில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்படுகிறது.இது குறித்து சென்னையில், நேற்று இந்த அமைப்பின் மாநில பொது செயலர் அப்துல் ஹமீது நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான, அலகாபாத் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டில் இவ்வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலிருந்து ஐகோர்ட் வரை கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி, என் தலை மையில் நாளை நடத்தப்படுகிறது. இதில், தமிழகம் முழுவதிலிருந்தும் முஸ்லிம்கள் கலந்துக் கொள்கின்றனர். பேரணியின் முடிவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் உரையாற்றுகிறார்.இவ்வாறு அப்துல் ஹமீது கூறினார்.
-தினமலர்

சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.2.6 கோடி!

சிதம்பரம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் வகையில் பிரம்மாண்ட முகப்பு தோற்றத்துடன் 2.6 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது.சுற்றுலா நகரமான சிதம்பரத்தை மையமாகக் கொண்டு 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் காமராஜர் பெயரில் அரசு மருத்துவமனை 1976ம் ஆண்டு திறக்கப்பட்டது.

மாவட்ட பொது மருத்துவமனைக்கு அடுத்த அந்தஸ்து பெற்றது என்பதால் எக்ஸ்ரே, ரத்த வங்கி, மகப்பேறு, தோல் சிகிச்சை, பல் சிகிச்சை, கண் சிகிச்சை, நரம்பியல், எலும்பு முறிவு, ஓமியோபதி, சித்தா என தனித்தனி பிரிவுகள் உள்ளன.எந்த நேரத்திலும் ஆபரேஷன் செய்யும் வகையில் அறுவை அரங்கம் உள்ளது. தினமும் 500க்கும்மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகப்பேறு மற்றும் பல்வேறு சிகிச்சைக்õக சிதம்பரம் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் கட்டட வசதி, படுக்கை வசதி போதாமல் இருந்தது. அதனைக் கருத்தில் கொண்டு சுனாமி மறுவாழ்வு திட்ட நிதியில் இருந்து மகப்பேறு மற்றும் பெண்களுக்கென மருத்துவமனையின் பின்புறம் 2 கோடி ரூபாய் செலவில் 100 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டடம் கட்டி கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு திறக்கப்பட்டது.

புதிய அனல் மின் நிலையங்கள்: என்.எல்.சி தலைவர் அன்சாரி

குடியரசு தினம், நெய்வேலி நகரில் என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. தலைவர் அன்சாரி, நெய்வேலி நகர நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

பாரதி விளையாட்டரங்கில் அன்சாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். பின்னர் என்.எல்.சி. பாதுகாப்புப்படை, தீயணைப்புப்படை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப்படை, ஊர்க் காவல்படை, தேசிய மாணவர்படை, நாட்டுநலப் பணித்திட்ட மாணவ மாணவிகள், சாரண சாரணியர், விளையாட்டு வீரர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இஸ்ரோ மீதான தடையை நீக்கியது அமெரிக்கா

வாஷிங்டன்,ஜன.27:இஸ்ரோ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்களுக்கு கடந்த 1998ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது அமெரிக்கா.

1998ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் இந்தியா அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இதையடுத்து இஸ்ரோ உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்தது. அன்று முதல் இந்த தடை நீடித்து வந்தது. இந்த நிலையில் தற்போது 13 ஆண்டு கால தடையை நீக்கியுள்ளது அமெரிக்கா.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது அவருக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையே இதுதொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி தற்போது இந்தியாவின் இஸ்ரோ மீதான தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

ஜனவரி 26, 2011

தேசியக் கொடியும்! தேசப்பற்றும்!!

காஷ்மீர் மானிலத்தில் உள்ள ஸ்ரீ நகரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றப் போவதாக மீண்டும் அறிவித்து நாட்டில் வகுப்பு துவேஷத்தை விதைக்க சங்பரிபார சதிகாரக் கூட்டம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பாக உள்ளார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு தேசப்பற்று இல்லை என்ற நச்சுக் கருத்தை விதைப்பது தான் இவர்களின் நோக்கம்.தேசப்பற்று என்றால் என்ன? என்ற அரிச்சுவடி கூட தெரியாத மூடர்கள் தான் - அல்லது தெரியாதது போல் நடிப்பவர்கள் தான் - பாஜக தலைவர்கள் என்பது இதன் மூலம் உறுதியாகிறது

தேசப்பற்று அவசியம் என்பதில் இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமுக்கும் இரண்டாவது கருத்து இல்லை. தேசத்துக்கு ஆபத்து என்றால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் முஸ்லிம்களுக்கும் சேர்த்துத் தான் ஏற்படும் என்பதை இந்திய முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அறிந்தே வைத்துள்ளனர். தேசத்தை நேசிப்பதில் முஸ்லிம்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்.தேசத்தின் மீது பற்று இருந்த காரணத்தால் தான் பாஜகவின் முன்னோடிகள் வெள்ளையர்களுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்த போது வெள்ளையனுக்கு எதிராக உயிரைக் கொடுத்து முஸ்லிம்கள் போராடினார்கள்.

செல்போன் வழியாக சான்றிதழ் படிப்பு

சிதம்பரம், ஜன.24: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் புதிய முயற்சியாக செல்போன் மூலமாக சான்றிதழ் படிப்பின் பாடங்களை வழங்க பெங்களூர் மொபிசர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலை. துணை வேந்தர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, மொபிசர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் நிர்வாக இயக்குநர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

TNPSC குரூப் – 1 தேர்வு எழுத இலவச பயிற்சி

IAS, IPS-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆணையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது இன்ஷா அல்லாஹ். இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
முஸ்லீம் பட்டதாரிகள் பயன்பெரும் வகையில் தமிழகத்தில் 13 இடங்களில் குரூப் I மற்றும் குரூப் II தேர்விற்க்காக இலவச பயிற்சி நடத்த படவிருப்பதாக ரேடியன்ட் அகாடமி தலைவர் ரஹ்மதுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள புது கல்லூரியில் (New College) மாலை 6 மணி முதல் 8 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் சென்னை எஸ்ஐஇடி (SIET) பெண்கள் கல்லூரி, வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி, மதுரை வக்ப் கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி (JMC) உட்பட தமிழக்த்தில் 13 இடங்களில் இந்த இலவச பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்த இலவச பயிற்சி பற்றி மேலும் தெரிந்துகொள்ள ரேடியன்ட் அகாடமி ரஹ்மதுல்லாஹ் (9629309314) அவர்களை தொடர்பு கொள்ளாம்.
- S.சித்தீக்.M.Tech
TNTJ STUDENTS WING.

எகிப்தில் அரசுக்கெதிரான போராட்டம்!!

எகிப்தில் அரசுக்கெதிராக போராட்டங்கள் நடந்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் வறுமை அதிகரிப்பதாகவும், ஹுஸ்னி முபாரக்கின் அடக்குமுறை தொடர்வதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.

தலைநகரான கெய்ரோவில் ஆளுங்கட்சியான நேசனல் டெமோக்ரேடிக் கட்சியின் தலைமையகத்தின் முன்பு பிரமாண்டமான போராட்டம் நடைப்பெற்றது. போராட்டங்களைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஜனநாயக-மனித உரிமை இயக்கங்களின் அழைப்பைத் தொடர்ந்து இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை என எகிப்தின் முக்கிய எதிர்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அறிவித்துள்ளது. ஆனால், தங்களின் உறுப்பினர்கள் தனிப்பட்டரீதியில் போராட்டங்களில் கலந்துக் கொண்டிருக்கலாம் என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

செய்தி:மாத்யமம்&பாலைவனத் தூது

ஜனவரி 25, 2011

"உணவுப் புரட்சி தேவை"

உலகின் பட்டினி அபாயத்தை போக்க புரட்சிகர மாற்றங்கள் தேவை என உணவு உற்பத்தி குறித்து ஆராய பிரிட்டிஷ் அரசால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு கூறியுள்ளது.
மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உலக மக்கள் அனைவருக்கும் உணவளிக்க வேண்டுமானால், அடுத்த நாற்பது ஆண்டுகளில் உலகின் உணவு உற்பத்தி இரட்டிப்பாக வேண்டும் என்று 35 நாடுகளைச் சேர்ந்த 400 விஞ்ஞானிகளைக் கொண்ட இக்குழு கூறியுள்ளது.

உற்பத்தி செய்யப்படும் உணவில் கணிசமான பகுதி வீணடிக்கப்படுவதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.
மரபணு மாற்றங்கள் செய்து உணவு உற்பத்தியை பெருக்க முயல்வதை விட உணவு வீணாவதை தடுக்க கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
source:BBC

கடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் விலை கடும் வீழ்ச்சி!

கடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளதால், நெல்லை சேமித்து வைத்து, உரிய விலை கிடைக்கும் காலத்தில் விற்பனை செய்ய வசதியாக, சேமிப்புக் கிடங்கு வசதிகளை அரசு உடனடியாகச் செய்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 1.24 லட்சம் ஏக்கர் உள்பட 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், வடவாறு பாசனப் பகுதிகள் பெண்ணாடம், கறிவேப்பிலங்குறிச்சி பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை தொடங்கி விட்டது. இதுவரை 15 ஆயிரம் ஏக்கரில் அறுவடை முடிவடைந்து விட்டது.

பெங்களூரிலிருந்து புறப்பட்டு பெங்களூருக்கே செல்கிறது!!

ஸ்ரீநகரில் லால்சவுக்கில் தேசிய கொடியை ஏற்றுவதற்காக ரெயிலில் புறப்பட்ட கர்நாடகா மாநில பா.ஜ.க தொண்டர்கள் தூக்கத்திலிருந்து விழித்த பொழுது தாங்கள் பயணித்த ரெயில் வந்த வழியிலேயே வேகமாக திரும்பிச் செல்வதை கண்டனர்.

நீண்டகால மக்கள் போராட்டத்தினால் அமைதியை இழந்த கஷ்மீர் சில நாட்களாக அமைதியாக உள்ளது. அமைதியை குலைப்பதையே வழக்கமாகக் கொண்ட பாசிச  அரசியல் முகமூடியான பா.ஜ.கவின் லால்சவுக்கில் தேசியகொடியை ஏற்றும் நாடகம் மீண்டும் கஷ்மீரில் அமைதியை குலைத்துவிடும் என கருதி மத்திய-மாநில அரசுகளின் உத்தரவின்பேரில் பாதுகாப்பு ஏஜன்சிகள் தலையிட்டு 1800க்கும் அதிகமானோரை ஏற்றிச் சென்ற ரெயிலை திருப்பி அனுப்பினர்.

ஜனவரி 24, 2011

கடலில் மூழ்கும் துபாய் தீவுகள்

துபாயில் உள்ள அழகிய தீவுகள் கடலில் மூழ்கி வருகின்றன. எண்ணை வளம்மிக்க துபாய் நாடு பல அழகிய தீவுகளால் ஆனது. இந்த தீவுகளில் தான் பிரமாண்டமான நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், விண்ணை முட்டும் கட்டிடங்கள் என உள்ளன. உலக வெப்பமயமாதல் காரணமாக இங்குள்ள கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

எனவே இங்குள்ள பல அழகிய தீவுகள் படிப்படியாக மூழ்கி அழிந்து வருகின்றன. தீவுகளில் உள்ள மணல் அதாவது நிலப்பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக கடல் தன்வசம் உள் இழுத்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் துபாயின் பெரும்பாலான தீவுகள் கடலில் மூழ்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தீவுகள் கடலில் மூழ்கி வருவதால் அங்கு தொழில் தொடங்க கோடீஸ்வரர்கள் தயங்குகின்றனர். ஏற்கனவே, இங்கு நடத்தி வரும் தொலை நிறுவனங்களில் முதலீடுகளை குறைத்து வருகின்றனர்.

அமெரிக்காவிடம் லாபி செய்ய 1.5 மில்லியன் டாலரை வாரியிறைத்த இந்தியா

டெல்லி: அமெரிக்க அதிகாரவர்க்கத்தை தங்களுக்கு சாதகமாக திருப்புவதற்காக இந்திய அரசும், பல்வேறு இந்திய நிறுவனங்களும் சேர்ந்து 1.5 மில்லியன் டாலர் பணத்தை வாரியிறைத்துள்ளன.

இருப்பினும் கடந்த 2009ம் ஆண்டை விட 2010ம் ஆண்டு இந்திய அரசு செலவு செய்த தொகை குறைந்துள்ளது. 2009ம் ஆண்டு இந்திய அரசு செலவிட்ட தொகை 2.2 மில்லியன் டாலராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் இந்திய தொழில்துறையைப் பாதிக்கும் பல விஷயங்கள் அமெரிக்கா வின் கைப்பிடியில் உள்ளதால், தங்களுக்கு பாதகமாக நடந்து கொள்ளக் கூடாது என்று அமெரிக்காவை கெஞ்சுவதற்காக இந்த செலவுகளை செய்துள்ளன இந்திய அரசும், இந்திய நிறுவனங்களும்.

மருந்து விலை கொள்(ளையும்)கையும், மக்கள் விரோத அரசும்

இன்றைய சூழலில் உலகை சுருக்கமாக, எளிதாக எப்படி புரிந்து கொள்ளலாம்? வணிக நலனா? மக்கள் நலனா? என வரும்போது எந்தத் துறையை எடுத்தாலும் அது மக்கள் நலனை புறந்தள்ளி வணிக நலனை காக்கும் கொள்கைகளையே ஆளும் கட்சியானாலும் சரி, எதிர்கட்சியானாலும் சரி, கடைப்பிடிப்பதே நடைமுறை உண்மை!

மருத்துவத் துறையில் எப்படி வணிக நலன் காக்கப்படுகிறது, மக்கள் நலன் புறக்கணிக்கப்படுகிறதுஎனப் பார்ப்போம். மக்கள் பொதுவாக அதிகம் பாதிப்புள்ளாகும் நோய்களுக்கான மருந்தின் மொத்த விலைக்கும், சில்லரை விலைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்வது முக்கியம்.

வணிகத்துறையில் இலாபமே இருக்க கூடாதா? எனக்கேட்டால் அதற்குப் பதிலாக, இலாபம் இருக்கலாம்! ஆனால் அது கொள்ளை லாபமாக இருக்கக் கூடாது. கீழ்காணும் அட்டவணையை கூர்ந்து நோக்கினால் மருத்துவத்துறையில் நடப்பது கொள்ளை லாபம் என்றும் இதை சரி செய்ய எந்த அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்பதிலிருந்து ஆளும், எதிர்கட்சி அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை எளிதாக புரிந்து கொள்ளலாம்

இளைஞர்கள் தங்கள் உயிரின் மதிப்பை உணர்ந்துக்கொள்ள வேண்டும் -டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி

துனீசியாவில் முஹம்மது பொவைஸி என்ற இளைஞரின் தற்கொலையால் மக்கள் புரட்சி ஏற்பட்டு அந்நாட்டின் சர்வாதிகாரி பின் அலி நாட்டைவிட்டு வெளியேறினார்.

இந்நிலையில் துனீசியாவை பின்பற்றி எகிப்து, அல்ஜீரியா, மவுரிடானியா ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பின்மை மற்றும் பட்டினி காரணமாக இளைஞர்கள் தற்கொலை முயற்சியை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தங்களது உயிரை தாமே பறித்துக்கொள்வது இஸ்லாத்திற்கு விரோதமானது என்பதை அறிவுத்தும்விதமாக சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரான பிரபல சிந்தனையாளர் டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி விடுத்துள்ள அறிக்கையில், முஸ்லிம் அரபு இளைஞர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். தீக்குளித்து தற்கொலைச் செய்வது நீங்கள் செய்யவேண்டிய வேலை அல்ல.

ஜனவரி 23, 2011

சிதம்பரம் ஆர்.டி.ஓ.வாக இந்துமதி பொறுப்பேற்பு !

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஆர்.டி.ஓ.வாக இந்துமதி பொறுப்பேற்றார்.இதற்கு முன்பு சிதம்பரம் ஆர்.டி.ஓ. வாக பணியாற்றி வந்த ராமராஜு திருவாரூர் மாவட்ட கலர் டி.வி.வழங்கும் திட்ட அதிகாரியாக பணி மாறுதலாகி சென்றார்.

புதிதாக பொறுப்பேற்ற ஆர்.டி.ஓ.இந்துமதி சென்னை தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அலுவலர் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.புதிதாக பொறுப்பேற்ற சிதம்பரம் ஆர்.டி.ஓ. இந்துமதி யிடம் ஆர்.டி.ஓ. ராமராஜு பொறுப்புகளை ஒப்படைத் தார்.இதை தொடர்ந்து புதிய ஆர்.டி.ஓ.வுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித் தனர்.
Source: dailythanthi

சிதம்பரம் அருகே 3600 மெகாவாட் அனல் மின் நிலையம் - ஐ.எல்.எப்.எஸ்

சிதம்பரம் அருகே 3600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்று ஐ.எல்.எப்.எஸ். நிறுவன அதிகாரி பேசினார். கிராமப்புற பெண்களுக்கான தொழில்திறனை ஊக்குவித்து அதன் மூலம் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் தொழிலில் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யும் ஒரு முயற்சியாக ஐ.எல்.எப்.எஸ். பவர் கம்பெனி மற்றும் இதன் கல்வி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரத்தில் தொழிற்பயிற்சி மையத்தை தொடங்கி உள்ளது.

இதில் மின்சாரத்தில் இயங்கும் 30 நவீன தையல் எந்திரங்களும் அதற்கு உண்டான ஏனைய உபகரணங்களும் நிறுவப்பட்டுள்ளன.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணை தலைவர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

உங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி?

அண்மையில் MOBILE NUMBER PORTABILITY எனும் வசதி TRAI கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் உங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் அதே நம்பரை வைத்துக்கொண்டு வேறு ஒரு மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறலாம்.
STEP 1:
முதலில் நீங்கள் UPC(Unique Porting Code) எனும் நம்பரை பெறவேண்டும். அதற்கு PORT என டைப் செய்து 1900 எனும் எண்ணிற்கு குறுந்தகவல்(SMS) அனுப்ப வேண்டும்.

STEP 2:
இப்போது உங்களுக்கு 1901எனும் எண்ணில் இருந்து எட்டு இலக்க எண் மற்றும் அந்த எண் எந்தத் தேதி வரை செல்லும் எனும் தகவலும் அனுப்பப்படும்.

ஜனவரி 22, 2011

இடிந்த தேசத்திலிருந்து ஓர் இடிமுழக்கம்

"என் தேசத்தை; அதன் மீதான ஆக்ரமிப்பை; அது குற்றப் பின்னணி உடையவர்களாலும் யுத்த வெறியர்களாலும் ஆளப்படும் அவலத்தை; அமெரிக்காவின் அப்பட்டமான சுயநல வெறியை; சுரண்டலை வெளிஉலகுக்குத் தெரிவிக்க அனைத்து உபாயங்களையும் நிச்சயம் மேற்கொள்வேன்" என்கிறார் அந்தப் பெண். உலகின் மிக தைரியமான பெண் என்றும் பாராட்டப்படுகிறார் அவர்.

உலகின் சக்தி வாய்ந்த 100 பேரில் ஒருவராக, கடந்த மே மாதம் டைம் பத்திரிக்கை தேர்ந்தெடுத்திருந்தவர்களுள் அவரும் ஒருவர். அவர் பெயர் மலலாய் ஜோயா. ஆஃப்கனிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். "எனது நாடு, அதன் முன்னேற்றம் குறித்து பெரும்கனவுகளைச் சுமந்தலைகிறேன்" என்கிறார்.

லோயா ஜிர்கா எனப்படும் ஆப்கன் மக்களவைக்கு 2007 ஆம் ஆண்டு, தன்னுடைய 28 வயதில் தேர்தல் வெற்றி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் மிக இளவயது நாடாளுமன்ற உறுப்பினர் (MP) ஆக இருந்த ஜோயாவை, அவருடைய மூன்று நிமிட உரையை எதிர்கொள்ள முடியாத ஆஃப்கன் நாடாளுமன்றம் பதவிபறிப்பு செய்து அவரை வீட்டுக்கு அனுப்பியது. ஆனால் ஜோயாவின் பயணம் அதிலிருந்து தான் தொடங்கிற்று எனலாம்.

ஜெருசலத்தை யூதர்களிடம் அடகு வைக்கமாட்டோம் - யு.ஏ.இ

ஜெருசலத்தை யூதர்களிடம் அடகுவைக்க ஒருபோதும் முஸ்லிம்களால் இயலாது என யு.ஏ.இயின் அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸய்யத் அல் நஹ்யான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளுக்கான கூட்டமைப்பான ஒ.ஐ.சியின் இண்டர் பார்லிமெண்ட் யூனியனில் ஷேக் கலீஃபாவின் உரையை யு.ஏ.இ சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ராஸல்கைமா ஆட்சியாளருமான ஷேக் ஸவூத் பின் ஸகர் அல்காஸிமி வாசித்தார்.
ஜெருசலத்திற்கு தூதரகத்தை மாற்றுவது இஸ்ரேலை ஆதரிப்பதற்கு சமமாகும். இத்தகைய முயற்சிகளை நடத்தும் நாடுகள் மீது யு.ஏ.இ நிர்பந்தம் அளிக்கும்.

1967-ஆம் ஆண்டு நடந்த போரில் இஸ்ரேல் அபகரித்த கிழக்கு ஜெருசலம் உள்ளிட்ட பிரதேசங்கள் ஃபலஸ்தீனுக்கு சொந்தமானது என்ற ஓ.ஐ.சியைப் போலவே யு.ஏ.இயும் அங்கீகரித்துள்ளது.

காட்டுமன்னார்கோவிலில் பேனர்கள் அகற்றம்

காட்டுமன்னார்கோவிலில் இரவோடு இரவாக அரசியல் கட்சி பேனர்களை போலீசார் அகற்றினர். கடலூர் மாவட்டம் முழுவதும் விதியை மீறி வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டநிலையில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் அரசியல் கட்சியினர் வைத்த பேனர்கள் அகற்றப்படாமல் இருந்து வந்தது. அதையொட்டி இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் நேற்று முன்தினம் காலை நகரப்பகுதியில் அரசியல் கட்சியினர் தாங்கள் வைத்துள்ள டிஜிட்டல் பேனர்களை தாமாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் இரவு வரை அகற்றாததால் நேற்று இரவு 11.30 மணியளவில் கச்சேரி தெரு, ரெட்டியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில்  வைத்திருந்த அரசியல் கட்சியினர் வைத்திருந்த பேனர்களை அகற்றினர்.
DM

ஜனவரி 20, 2011

துனிஷியா ஆட்சி கவிழ்ப்பு பற்றிய கருத்து

துனிஷியா ஆட்சி கவிழ்ப்பு பற்றி கருத்து தெரிவித்த ஜோர்டானின் மிகப் பெரும் இஸ்லாமிய அமைப்பான இக்வானுல் முஸ்லீமின் இனி மேலாவது அரபு நாடுகள் இஸ்லாமின் அடிப்படையில் சரியான சீர்திருத்தத்தை மேற் கொள்ள வேண்டும் என்றும் சர்வதிகாரமே அரபு நாடுகளில் காணப்படும் அனைத்து தீமைகளுக்கும் ஆணி வேர் என்று வர்ணித்துள்ளது. துனிஷியாவை போலவே தாங்கள் இஸ்லாமிய மலர்ச்சிக்கு உழைப்பதால் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.

இன்னொரு மத்திய கிழக்கு நாடான குவைத்தின் எதிர்கட்சி இஸ்லாமிய உறுப்பினர் வலீத் அல் தபத்ததி துனிஷிய மக்களின் தைரியத்தை பாராட்டுவதாகவும் தங்கள் மக்களை ஒடுக்கி இஸ்லாமிய தனித்துவத்தை கைவிட்டு மேற்குலகின் பாதையில் அடியெடுத்து செல்ல முற்படும் எல்லா நாடுகளுக்கும் இதே நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.

"பென் அலி" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை

அமெரிக்காவின் உதவியுடன் பதவியை காப்பாற்றிக் கொள்பவர்கள். அமெரிக்காவை திருப்திப்படுத்த இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பவர்கள். எல்லோருக்கும் பென் அலியின் கதை ஒரு சிறந்த பாடம்.அரபுலகின் முதலாவது மக்கள் எழுச்சியின் விளைவாக, உயிருக்கு பயந்து நாட்டை விட்டோடிய துனிசியா ஜனாதிபதி பென் அலி, இன்று சவூதி அரேபியாவில் சிறைக்கைதி போல வாழ்கின்றார்.

அதிகார மமதையுடன், டாம்பீகமான பணக்கார வாழ்வு வாழ்ந்தவர். துனிசியாவில் பல வர்த்தக நிறுவனங்களின் சொந்தக்காரர். 23 வருடங்களாக ஒரு தேசத்தின் அதிபதியாக எதிர்க்க ஆளின்றி அதிகாரம் செலுத்தியவர். இன்று உடல் தளர்ந்த வயோதிபராக, 74 வயதில் ஒதுங்க இடமின்றி பரிதாபகரமாக அலைந்தார். முதலில் மால்ட்டாவிடம் அடைக்கலம் கேட்டார். பின்னர் நெருக்கமான அயலுறவுக் கொள்கையைக் கொண்டுள்ள பிரான்சிடம் தஞ்சம் கோரினார். ம்ஹ்ம்.... யாருமே அந்த அரசியல் அகதியை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. இத்தனை காலமும் அமெரிக்காவின் விசுவாசியாக இருந்ததால், ஒபாமாவுக்கு தொலைபேசிப் பார்த்தார். வாஷிங்டனில் பென் அலியின் அழைப்புக்கு யாரும் பதில் சொல்லவில்லை.

இறுதியில் மதச்சார்பற்ற கொள்கைப் பிடிப்பாளரான பென் அலி, மத அடிப்படைவாத சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார். பென் அலி காலம் பூராவும் யார் யாருக்கு சேவை செய்தாரோ, அவர்கள் யாரும் ஆபத்து நேரத்தில் உதவவில்லை.

புதிய 10 ரூபாய் தாள் விரைவில் அறிமுகம்: இந்திய மைய வங்கி

மகாத்மா காந்தி படம் பொறிக்கப்பட்டு தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் தாள் வரிசையில், ஆங்கில ‘என்’ நிழல் அடையாளத்துடன் புதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று இந்திய மைய வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாடும் தங்களது பணத் தாளில் ஏதாவது ஒரு பாதுகாப்பு அச்சுக் குறியீட்டை பதித்து வெளியிடுவார்கள். அந்த வழியில் இந்தியாவின் ரூபாய் தாள்களில் ஆங்கில எழுத்துகள் வரிசையாக பயன்படுத்தப்படுகின்றன. எனவே விரைவில் அறிமுகம் செய்யப்படும் 10 ரூபாய் தாளில் என் நிழல் அடையாளமும், அதோடு தற்போது மைய வங்கியின் ஆளுநராக இருக்கும் டி.சுப்பாராவ் கையெழுத்தும் கொண்டதாக இருக்கும்.

தற்போது பயன்பாட்டிலுள்ள 10 ரூபாய் தாள்கள் அனைத்தும் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் மைய வங்கி கூறியுள்ளது.

இஸ்லாமியர்கள் - அர்ப்பணித்தவர்களை மறக்க முடியுமா?

"இஸ்லாமியர்கள் தேசிய உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்" எனவும், "தேசத்தைப் பாதுகாக்க இந்திய பண்பாட்டைப் பின்பற்ற வேண்டும்" எனவும் இந்து மத சார்பு இயக்கங்கள் அறைகூவல் விடுவது வழக்கமாகி விட்டது. இஸ்லாமியர்கள் தேச நலனில் அக்கறை இல்லாதவர் போலவும், தேச வளர்ச்சியில் பங்களிக்காதவர்கள் போலவும் நினைக்க வைக்கிற முயற்சியே இந்த அறைகூவல்கள். இந்த சிந்தனையை இந்து மத சார்பு இயக்கங்கள் பரப்ப முடிவதற்கு காரணம் "தேச விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய பெரும் பணிகள்" பற்றி நம்மில் பெரும்பாலானவர்கள் மறந்து விட்டதுதான்.

மகாத்மா காந்தி 'கள்ளுக்கடை மறியல்' நடத்த அறிவித்தபோது மதுரையில் பங்கு பெற்றவர்கள் பத்தொன்பதுபேர். அதில் இஸ்லாமியர்கள் பத்துபேர்!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்கள் சுதேசிக் கப்பல் வாங்க முடிவு செய்தபோது அதற்காக ஆரம்பித்த அறக்கட்டளையில் இருந்த தூத்துக்குடி ஹாஜி பக்கிர் முகம்மது அவர்கள் பத்து லட்ச ரூபாய் அளித்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது! மகாகவி பாரதியார் தனது பத்திரிக்கை மூலமாக வேண்டுகோள் விடுத்ததில் கிடைத்த நன்கொடை சில நூறு ரூபாய்கள்தான்! அதே போன்று,

விழுப்புரம் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் சார்பில் பள்ளிவாசல் இமாம்கள் மற்றும் பணியாளர்களுக்கு இலவச மிதி வண்டிகள் அமைச்சர் பொன்முடி வழங்கினார்

வி ழு ப் பு ர த் தி ல் ,மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் பேரவை சார்பில்,பள்ளிவாசல் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. தலைவர் அமீர் அப்பாஸ்தலைமை தாங்கினார். அமைச்சர் பொன்முடி, 60 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசிய தாவது:
.
சிறுபான்மையினருக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் முதல்வர் கலைஞர் தான். தேர்தல் நேரங்களில் மாநாடு, கூட்டம் என்றால் கோரிக்கைகள் இல்லாமல் இருக்காது.தற்போது முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் பேரவை சார்பில் கேட் டுள்ள கோரிக்கைகள் நியா யமானவை. முதல்வரிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறேன்.

ஃபலஸ்தீன் சுதந்திர நாட்டிற்கு ரஷ்யா ஆதரவு

மாஸ்கோ,ஜன.20:ஃபலஸ்தீன் சுதந்திர நாட்டிற்கு ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

முன்னாள் சோவியத் யூனியன் கடந்த 1988 ஆம் ஆண்டே ஃபலஸ்தீன் நாட்டை அங்கீகரித்துள்ளது எனவும் அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் மெத்வதேவ் பிரகடனப்படுத்தியுள்ளார்.

ரஷ்ய அதிபர் என்ற நிலையில் மெத்வதேவ் முதன் முதலாக ஃபலஸ்தீன் சென்றுள்ளார். அவ்வேளையில்தான் இதனை அறிவித்தார் அவர்.ரஷ்யாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை. கிழக்கு ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட சுதந்திர ஃபலஸ்தீனுக்கு ஏற்கனவே நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம்.எதிர்காலத்திலும் அது தொடரும் என மெத்வதேவ் தெரிவித்தார்.

பிரேசில்,அர்ஜெண்டினா உள்பட பல நாடுகளும் கடந்த இரண்டு மாதங்களிடையே ஃபலஸ்தீன் சுதந்திர நாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ஜனவரி 19, 2011

ஆப்கானில் புதிய மோதலுக்கு உத்தரவிடும் ஒபாமா

ஆப்கானிஸ்தானில் மேலும் 1,400 அமெரிக்க கடற்படை சிப்பாய்களை நிறுத்தும் ஒபாமா நிர்வாகத்தின் தீர்மானமானது ஒரு நீண்ட இரத்தந் தோய்ந்த யுத்தத்தின் வரவை அறிவிப்பதாக உள்ளதுடன் அடுத்த ஜூலையில் அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படும் என்ற ஜனாதிபதியின் 2009 டிசம்பர் உறுதிமொழி புறக்கணிக்கப்படும் என்பதற்கான ஓர் அறிகுறியாகவும் அமைந்துள்ளது.

ஜெனரல் டேவிட் பெட்ரியாஸ் மற்றும் ஏனைய பெண்டகன் தளபதிகளின் தன்னியல்பான நிலையாக இருக்கும் மூடத்தனமான நம்பிக்கைக்கு இடையில் அந்நிய ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு தங்கள் நாட்டை மறைமுக காலனியாக்கத்திற்கு அடிமைப்படுத்த மறுக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுடனான ஒரு கட்டுக்கடங்காத மோதலில் அமெரிக்க இராணுவம் சிக்கியுள்ளது.
படுகொலைகளைத் தீவிரப்படுத்துவது தான் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது.

14 மாதத்துக்கு இலவச உணவு: குவைத் மக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பணம்; அரசு உத்தரவு

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் 11 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் உள்ளனர். எண்ணை வளம் மிக்க இந்த நாடு செல்வ செழிப்புடன் திகழ்க்கிறது. இந்த நிலையில் இந்நாட்டு மக்களுக்கு இலவச உணவு மற்றும் ரூ.20 ஆயிரம் கோடி பண உதவி வழங்கப்பட உள்ளது.

இது அடுத்த ஆண்டு (2012) மார்ச் 31-ந் தேதி வரை அதாவது 14 மாதங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கான உத்தரவை குவைத் மன்னர் ஷேக் சபாஅல்-அகமது அல்-சபா பிறப்பித்துள்ளார். இதன் மூலம் அங்கு வாழும் மக்களுக்கு தலா 1000 தினார் (ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 561) வழங்கப்படும். அவை தவிர அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களும் இலவசமாக கிடைக்கும்.

அஸிமானந்தாவின் மனமாற்றத்திற்கு காரணமான அப்துல் கலீம் ஜாமீனில் விடுதலை

ஹைதராபாத்,ஜன:ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிரபராதியான அப்துல் கலீமுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புத் தொடர்பாக தீவிரவாதி என முத்திரைக்குத்தப்பட்டு போலீசாரால் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களில் அப்துல் கலீமும் ஒருவர்.

மத்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஐ மக்கா மஸ்ஜித் வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்தியதில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கு வெட்ட வெளிச்சமானது.

ஜனவரி 18, 2011

திமுக, முஸ்லீம்லீக் கூட்டணி தொடரும்! அப்துல்ரஹ்மான்

வேலூர்: எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,வுடன் உள்ள எங்கள் கூட்டணி தொடரும், என, வேலூர் எம்.பி., அப்துல்ரகுமான் கூறினார். இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடரும் என்றார்.

கட்டமாய திருமண பதிவு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதனால், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து அரசுக்கு தெரிவித்தோம். அதன்படி, காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஜமாத்தில், திருமணம் பதிவு செய்து தரும் சான்றிதழ் முறையாக எடுத்துக் கொள்ளப்படும். விருப்பம் இருந்தால், இந்த சான்றிதழை பதிவு அலுவலகத்தில் பதிவும் செய்து கொள்ளலாம் என, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

கறிவேப்பிலை: புற்று நோய் அபாயத்தை தடுக்கும்!!

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

முதல் கால்சென்டரை திறந்தது பிஎஸ்என்எல்!!

இந்தியாவின் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி‌எஸ்என்எல்) நிறுவனம், வாடிக்கையாளர்களின் குறைகளை விரைவில் தீர்க்கும் பொருட்டு கால்சென்டர்களை அமைக்கிறது. ராஜஸ்தானில், முதல் கால்சென்டரை திறந்து வைத்தபின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த

மத்‌திய தொலைதொடர்பு இணையமைச்சர் சச்சின் பைலட் கூறியதாவது : இந்த கால்சென்டர், தொலைபேசி மற்றும் ‌‌மொபைல்போன் சேவையில் ஏற்படும் குறைகளை களைவதோடு மட்டுமல்லாமல், பிஎஸ்என்எல் வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் பொருந்தும். இந்த கால்‌சென்டர் மூலம், வாடிக்கையாளர்களின் குறைகள் விரைவில் தீர்க்கப்படும், . நாட்டின் வடக்குப்பகுதியில் வசிக்கும் தங்களது வாடிக்கையாளர்களுக்காக, குர்கானில் கால்சென்டர் திறக்கப்பட உள்ளது. ராஜஸ்தான் சர்க்கிளிலிருந்து தினமும் 60 ஆயிரம் அழைப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கால்சென்டர்கள், நாட்டின் பிறபகுதிகளில் விரைவில் அமைக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
thanks:DM

கிரிக்கெட் உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த மாதம் நடத்தவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹேந்திரசிங் தோனி தலைமையிலான இந்த அணியில் அவர் உள்ளிட்டு 15 பேர் இடம் பெற்றுள்ளனர்.
விரேந்தர் சேவாக், சச்சின் டெண்டூல்கர், கௌதம் கம்பீர், விராட் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரைனா, யூசூஃப் பதான், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், அசீஷ் நெஹ்ரா, பர்வீண் குமார், முனாஃப் பட்டேல், ரவிசந்திரன் அஷ்வின், பியுஷ் சாவ்லா ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியில் மூன்று சுழல் பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.

ஒரே ஒரு தமிழக வீரர்:
கடந்த உலக கோப்பை தொடருக்கான (2007) அணியில் தமிழகம் சார்பில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருந்தார். இம்முறை முரளி விஜய், அஷ்வின் என 2 பேர் இடம்பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் சமீபத்திய சொதப்பல்களால் விஜய் வாய்ப்பு பறிபோனது. அஷ்வின் மட்டும் சுழற்பந்து வீச்சாளர் பிரிவில் இடம் பெற்றார்.

ஜனவரி 17, 2011

தங்கத்தின் உண்மை விலை என்ன???

கடந்த சில வாரங்களாகப் பங்குச் சந்தையின் முக்கிய தலைப்புச் செய்தியாக வருவது தங்கத்தின் விலை வணிகம் காரணமாக உயர்ந்து கொண்டே செல்வதுதான். உலக நாடுகளில் இந்தியாவில்தான் தங்கத்தை மிக அதிகமான அளவு ஆபரணத்திற்காகப் பயன்படுத்துகின்றோம். குறிப்பாகத் திருமணத்திற்கும் மற்றும் பல நல்லகாரியங்களுக்கும் தங்க அணிகலன்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வசதி குறைவானவர்களும் தங்கத்தைக் கட்டாயம் திருமணச் சடங்குக்காக வாங்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

இது தவிர வணிகத்தில் மற்ற பங்குகளின் விலை சரியும் போது பாதுகாப்பிற் காகவும், பங்குகளில் வந்த இலாபத்தினையும் தங்கத்தில் முதலீடு செய்யும் வணிகர்கள், உலகப் பங்குச் சந்தையில் ஏராளமானோர் உள்ளனர். இவ்வாறாகத் தங்கத்தின் தேவையை இரண்டு வகைப்படுத்தலாம்.

உடைந்த ரகசியங்கள் – Wikileaks (விக்கீ லீக்ஸ்)

இணையதளம் ரகசியங்களை பாதுகாக்கும் பெட்டகம் இல்லை என்பதை ‘விக்கிலீக்ஸ்’ என்ற இணையதளம் உண்மை படுத்திவிட்டது. பாதுகாப்பின் உச்சம் என்று உலகம் நம்பும் பென்டகனின் ரகசியங்களை நோண்டியிருக்கிறது இந்த இணையதளம்.
16 வயதிலேயே கணிணியின் சகல பரப்பிலும் புகுந்து விளையாடிய ஜீலியன் பால் அசஞ்சே (Julian paul Assa nge) என்ற 39 வயது இளைஞர் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை விஞ்ஞான தொழில் நுட்பத்தை கொண்டு பக்கம் பக்கமாக களவாடிவிட்டார்.

இந்த செயல் மூலம் ஒரு செங்கல் கூட தகர்க்கப்படாமல் பெண்டகன் மீது அசஞ்சே விஞ்ஞான யுத்தம் (Scientific War) நடத்தியுள்ளார். தற்போது, அசஞ்சே அமெரிக்காவுக்கு பின்லாடனை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானவர் என்று அமெரிக்கர்களே சொல்லத் தொடங்கிவிட்டார்கள். காயம் பலமாக இருக்கிறது. ஆனால் அழுகையும் கண்ணீரும் இல்லை, ரத்தமும் யுத்தமும் இல்லை. ஆனால் கோபம் விம்மி தெரிக்கவே செய்கிறது.

அசஞ்சேயை அமெரிக்காவுக்கு கொடுத்து விடுங்கள் என்று அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் லண்டனிடம் அமெரிக்கா கோருகிறது. ஆனால். ‘என்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் சட்டப்படியான விதிகள் பிரிட்டன் சட்டத்தில் இல்லை என்று கூறும் அசஞ்சே, தான் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டால் கொல்லப்படலாம் என்றும் தெரிவிக்கிறார்.அதேநேரம் அமெரிக்கா என்னை துன்புறுத்த நினைத்தால் அதன் பொருளாதாரத்தை சின்னா பின்னப்படுத்துவேன் என்று ஆஜானுபாகுவான வார்த்தைகளால் மிரட்டுகிறார். அதற்கு அவர் கூறும் காரணம்,

சூடான்:விருப்ப வாக்கெடுப்பில் பிரிவினைக்கு ஆதரவு

தெற்கு-வடக்கு என சூடானை பிரிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட மக்கள் விருப்ப வாக்கெடுப்பு பூர்த்தியானது. பெரும்பாலானோர் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்ததாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி 9-ஆம் தேதி துவங்கிய வாக்கெடுப்பு கடந்த சனிக்கிழமை மாலையோடு முடிவுற்றது.

தெற்கு சூடானின் 10 மையங்களில் நடத்தப்பட்ட மாதிரி வாக்கெடுப்பில் 96 சதவீதம் பேர் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்ததாக அசோசியேட் பிரஸ் கூறுகிறது. மூன்று சதவீதம்பேர் ஐக்கியத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். மீதமுள்ளவை செல்லாதவை.

ஜனவரி 16, 2011

20% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை!

தமிழ் வழியில் படித்தவர்-களுக்கு, அரசு வேலை-வாய்ப்பில் 20% முன்னுரிமை அளிக்கப்படுவதாக தமிழக அரசு பிறப்பித்திருந்த ஆணைக்கு, ஜனவரி 19&ம் தேதிவரை இடைக்கால தடை விதித்-திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழில் படித்தவர்-களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று செம்மொழி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்-பட்டது. இதையடுத்து, மாநில அரசுப் பணியில் 20% ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டம், ஆளுநரால் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன.

மேலும் இந்த 20% ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தன எதிர்க்கட்சிகள்.சட்டப்பேரவையில் இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன்,

கடலூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் ரூ.32 கோடி வழங்கப்பட்டுள்ளது: சீத்தாராமன்

மழை வெள்ளத்தால் சூழப்பட்ட 65 கிராமங்களுக்கும், தண்ணீர் புகுந்த 126 கிராமங்களுக்கும் மொத்தம் 11,944 குடும்பங்களுக்கு நிவாரணத்தொகையாக 11.69கோடி ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது. கடலூர் பகுதியில் முழுவதும் பாதிக்கப்பட்டதாக 110 வீடுகளும், பகுதி பாதிக்கப்பட்டதாக 1400 வீடுகளுக்கும் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இது போக இம் மாவட்டத்தில் 88,000 ஏக்கர் பயிர் பாதிக்கப்பட்டதாக கணக்கெடுக்கப்பட்டு நிவாரணத்தொகை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய நிவாரணத்தொகை அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெயரில் வரவு வைக்கப்படும். பயிர் பாதிப்புக்காக இதுவரை 20 கோடி ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கல்வி கருத்தரங்கம்..

அல்லாஹ்வின் மிக பெரிய அருளால் கடந்த 15-01- 2011 அன்று பரங்கிப்பேட்டையில் கல்வி கருத்தரங்கம் நடந்தேறியது. இதில் மாநில மாணவரணியை சார்ந்த சித்திக்.,M.Tech அவர்களும் கலீல்லூர் ரஹ்மான்.,MBA அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.

துவக்கமாக கலீல்லூர் ரஹ்மான்.,MBA அவர்கள் மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற இறை நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்றும் சகோ.சித்திக்.,M.Tech அவர்கள் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.மாநிலத்தில் இருந்து வருகை தந்து இருந்த மாநில செயலாளர்கள் சகோ.தவ்பிக் அவர்களும் சகோ. ஜின்ன அவர்களும் ஜனவரி 27 போரட்டத்தின் அவசியத்தை பற்றியும் அதில் மாணவர்கள் பங்கு மற்றும் அதற்க்காக உழைப்பதின் அவசியத்தை பற்றியும் உரை நிகழ்த்தினர்.

பிறகு மாணவர்களின் கேள்விகளுக்கு சகோ.சித்திக் மற்றும் கலீல்லூர் ரஹ்மான் அவர்கள் பதில் அளித்தனர்.பரங்கிப்பேட்டை வரலாற்றில் முதல் முறையாக இந்த நிகழ்ச்சி நமது பரங்கிப்பேட்டை டி.என்.டி.ஜே இனையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யபட்டது என்பது குறிப்பிடதக்கது.

டெல்லி:இடிக்கப்பட்ட இடத்தில் தற்காலிக மஸ்ஜித்

டெல்லி ஜங்புராவில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டது எனக் கூறி டெல்லி வளர்ச்சி ஆணையத்தால் இடித்துத் தள்ளப்பட்ட அல் நூர் மஸ்ஜிதின் சிதிலங்களின் மீது மக்கள் தற்காலிக மஸ்ஜிதை கட்டினர்.

போலீஸாரின் எதிர்ப்பை புறக்கணித்துவிட்டு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நிறைவேற்றியதற்கு பிறகு தகரம் மற்றும் மூங்கில்களைக் கொண்டு தற்காலிக மஸ்ஜித் நிர்மாணிக்கப்பட்டது.

தற்காலிக மஸ்ஜித் நிர்மாணிக்கும் பணி நள்ளிரவு வரை தொடர்ந்தது. ஜங்புரா எம்.எல்.ஏ தர்வீந்தர் சிங் மார்வாவின் தலைமையில் தற்காலிக மஸ்ஜிதை கட்டும் பணி நடந்தது. தற்காலிகமாக மஸ்ஜித் கட்டப்படுவதாக தகவல் போலீசாருக்கு கிடைத்த பொழுதிலும் அவர்கள் அதனை தடுக்கவில்லை. தற்காலிகமாக கட்டப்பட்டுள்ள மஸ்ஜிதில் 5 நேரமும் தொழுகை நடைபெற்று வருகிறது.

ஜனவரி 13, 2011

கள்ளச்சந்தையில் காஸ் சிலிண்டர் விற்பனை அமோகம் : அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அவதி

வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை அதிகாரிகள் கண்டுக் கொள்ளாததால் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் 2.5 லட்சம் வீட்டு உபயோக காஸ் இணைப்புகள் உள்ளன.

இதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் கடலூர் மற்றும் நெய்வேலியில் தலா மூன்றும், விருத்தாசலத்தில் ஒரு ஏஜன்சியும், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் சிதம்பரம், கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டையில் தலா ஒரு ஏஜென்சியும், பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் பண்ருட்டியில் இரண்டும், நெய்வேலி மற்றும் காட்டுமன்னார்கோவிலில் தலா ஒரு ஏஜன்சிகள் என மொத்தம் 15 காஸ் ஏஜன்சிகள் இயங்கி வருகின்றன.

வீட்டு உபயோக காஸ் இணைப்பு பெற்ற நுகர்வோர், பதிவு செய்த மூன்று நாளில் சிலிண்டர் வழங்க வேண்டும் என விதியிருந்தாலும், ஒரு சிலிண்டர் வாங்கி 21 நாட்களுக்கு பிறகே அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்ய வேண்டும் என ஏஜன்சிகள் அவர்களாகவே கால நிர்ணயம் செய்து வைத்துள்ளனர். அப்படியே 21 நாட்களுக்கு பிறகு பதிவு செய்தாலும் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு பிறகே சிலிண்டர்கள் வழங்குகின்றனர். இதனால் காஸ் இணைப்பு பெற்றவர்கள் (குறிப்பாக நகரப் பகுதிகளில் வசிப்பவர்கள்) சிலிண்டர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

கடலில் இருந்து மின்சாரம்!

உலகளவில் கடந்த இருபது ஆண்டுகளில் மின்சக்தியின் தேவை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. மக்கள் பெருக்கத்தின் காரணமாகவும், தொழில் முன்னேற்றத்தினாலும் மின்சக்திப் பயன்பாடு கூடிக்கொண்டே போகிறது.
சக்திக்கான இயற்கை மூலங்களான பெட்ரோலியம், எரி வாயுக்கள், நிலக்கரி போன்றவை தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. தற்போது பூமியில் புதைந்திருக்கும் நிலக்கரிப் படிவுகள், வரும் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று கணக் கிடப்பட்டுள்ளது.

நீர் மின்சார உற்பத்திக்கும் ஓர் அளவுண்டு என்பதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம். கோடைக் காலத்தில் அணைகளில் தண்ணீர் மட்டம் குறையும்போது நீர் மின்சார உற்பத்தியும் குறைந்துவிடுகிறது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரவாதத்தை மத்திய அரசு அலசியப்படுத்தியது - ஆனந்த் பட்வர்தன்

ஆட்சியாளர்களும், போலீசும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரவாதத்தை அலட்சியப்படுத்திவிட்டு முன்னரே முஸ்லிம்களை தீவிரவாதிகள் என தீர்மானித்ததன் விளைவுதான் அஸிமானந்தாவின் வாக்குமூலம் வெளிப்படுத்துகிறது என பிரபல ஆவணப்பட தயாரிப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான ஆனந்த் பட்வர்தன் தெரிவித்துள்ளார்.

திருச்சூரில் 6-வது விப்ஜியார் சர்வதேச திரைப்பட விழாவிற்கு இயக்குநராக வருகைத் தந்துள்ள அவர் தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி வருமாறு:

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பே 1992 ஆம் ஆண்டு "ராம் கீ நாம்" என்ற ஆவணப்படத்தை ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வெளியிட்டேன். தெளிவான ஆதாரங்களுடன் சங்க்பரிவார்கள் பாப்ரி மஸ்ஜிதை இடிப்பார்கள் என்பதை இந்த ஆவணப்படத்தின் மூலம் உணர்த்தினேன். ஆனால் மத்தியில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் அரசு இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஜனவரி 12, 2011

கூட்டம் கூட்டமாக செத்து மடிந்த பறவைகள்! மனித குலத்துக்கு ஆபத்து! விஞ்ஞானிகள் தகவல்

சமீபகாலமாக பறவைகள், மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கூட்டம் கூட்டமாக செத்து மடியும் நிகழ்வுகள் அமெரிக்காவில் அதிகரித்து வருகின்றன. இது மனித குலத்துக்கும் ஓர் எச்சரிக்கையாகும் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் அர்கன்சாஸ் பகுதியில் சுமார் 3000 பறவைகள் வானில் இருந்து கூட்டம் கூட்டமாக செத்து விழுந்தன. மேலும் செசாபிக் கடற்பகுதியில் சுமார் 20 லட்சம் மீன்கள் மடிந்து கரை ஒதுங்கின. இதேபோல் வியட்நாமில் சுமார் 150 டன் எடை உள்ள சிகப்பு திலாபியா என்ற கடல்வாழ் உயிரினமும், இங்கிலாந்தில் சுமார் 40 ஆயிரம் நண்டுகளும் இறந்துள்ளன.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கடலூர் மாவட்ட 2011-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்களர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வெளியிட்டார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:2011-ம் ஆண்டுக்கான சுருக்க முறை திருத்தப் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல், 9 சட்டப்பேவைத் தொகுதிகளுக்கும் 10-1-2011-ல் வெளியிடப்பட்டது.9 தொகுதிகளுக்கும் சேர்த்து ஆண் 8,36,633, பெண் 8,08,501, மொத்தம் 16,45,134

சட்டமன்ற மேலவை தேவையா?

மக்கள் பிரச்னையைப் பற்றி விவாதிக்கவும், தேவையான சட்டங்களை இயற்றவும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றம் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் சட்டமன்ற மேலவை அமைக்கப்பட வேணடும் என்று தமிழக அரசால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வாக்காளர்  சேர்ப்பும்  நடைப்பெற்றுவருகின்றது, இந்நிலையில் மேலவை கூடாது என்று வாழப்பாடி ராமமூர்த்தி போன்றவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.

1986ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது மேலவை ஒழிக்கப்படும் வரை தமிழகத்தில் மேலவை செயல்பட்டு வந்தது. அப்போது ஒழிக்கப்பட்ட சபையை தான் கருணாநிதி இப்போது கொண்டு வர முயற்சிக்கிறார்.

சட்டசபைக்குத் தேர்வு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் அறிவிலிகளாகவும், படிக்காதவர்களாகவும் இருந்ததால் அவர்களால் மக்கள் பிரச்னை பற்றி விவாதிக்க முடியாத நிலை இருந்தது. மக்களுக்குப் பயன் தரும் சட்டங்களை அவர்களால் இயற்ற முடியவில்லை. எனவே, ஆன்றோர்கள், சான்றோர்கள், நிபுணர்களைக் கொண்ட ஒரு சபையை நிறுவி அதிலும் மக்கள் பிரச்சினை விவாதிக்கப்பட்டு அந்த அவையிலும் ஒப்புதல் பெற்று சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்ற காரணத்துக்காகத்தான் மேலவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஜனவரி 11, 2011

கருவேல மரம்

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது.

சட்டக்கல்வியில் புதிய படிப்பு

தேசிய சட்டக்கல்வி மற்றும் ஆய்வு மையத்துடன் ஹைதராபாத் சட்ட பல்கலைக்கழகமும் இணைந்து வழக்கறிஞர்களுக்கு சட்ட உதவியாளர்கள் என்கிற பிரிவை உருவாக்கும் வண்ணம் Legal Assistant for Lawers (Para Legal) என்ற புதிய படிப்பை உருவம்கிட மனித வள மேம்பாட்டு அமைச்சரகத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இந்தப் படிப்பைப் படிப்பவர்கள். வழக்கறிஞர்கள் என்ற தகுதியைப் பெற மாட்டார்கள். சிவில் வழக்குகளில் சமரச தீர்வை ஏற்படுத்திட நடுவர்களாக பணியாற்றும் தகுதியை பெறுவார்கள்.
12ஆம் வகுப்பு முடித்தவர்கள் 6 மாதம் அல்லது 1 வருடம் என்று சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்பாக படிக்கலாம்.
சிவில் வழக்குகளில் ஏற்படும் தேக்க நிலையைப் போக்கி ஏழை மக்கள் வதைபடுவதை தடுக்க இது உதவிடும் என்ற அடிப்படையில் தேசிய சட்டக்கல்வி ஆய்வு மையம் சிறிய அளவில் இந்தப் படிப்புகளுக்கான பயிற்சியைக் கொடுத்து சோதித்துப் பார்த்து, இதில் பயின்றவர்களினால் சிவில் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுவதினால் இதை பல்கலைக்கழக படிப்பாக மாற்றலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.
thanks:samooka neethi

சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் "ரவுண்டானா"

சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் நடந்து வரும் நிலையில் போக்குவரத்தை சீரமைக்க ரூ.75 லட்சத்தில் ரவுண்டானா அமைப்பதற்காக தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.DM

கடலூரில்அரசு மருத்துவக்கல்லூரி அமைவதால் பொதுமக்களுக்கு அனைத்து சிறப்பு சிகிச்சைகளும் கிடைக்கும்: நலப்பணிகள் இணை இயக்குநர்

கடலூர் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் கமலக் கண்ணன் கூறியது:-

கடலூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையும், எதிர்பார்ப்பும் நிறை வேறும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பை கேட்டு கடலூர் மாவட்ட அனைத்து டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர் கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் அரசு தலைமை மருத்துவமனையை முன் னேற்றம் அடைய செய்ய தேசிய தர சான்று கிடைக்க நாங்கள் முழு முயற்சியுடன் பணியாற்றி வருகிறோம்.

அந்த சான்று விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிறப்பு சிகிச்சைகள் தற்போது கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 53 டாக்டர்கள் உள்ளனர். 588 படுக்கைகள் உள்ளன.

பொதுமன்னிப்பு:சவூதி இந்திய தூதரகத்தில் அலைமோதும் கூட்டம்

ரியாத்,ஜன.10:பொதுமன்னிப்பின் கால அவகாசம் முடிவதற்குள் 'அவுட் பாஸ்' பெறுவதற்காக சவூதியில் இந்திய தூதரகத்தில் இந்தியர்களின் கூட்டம் அலைமோதுகிறது.தினமும் 1000 அவுட் பாஸ் வழங்கப்பட்டு வருவதாக தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஹஜ், உம்ரா மற்றும் சுற்றுலா விசாக்களில் சவூதிக்கு வருகைத் தந்தவர்கள் விசா காலாவதி ஆனபிறகும் தங்களது நாட்டிற்கு திரும்பாமல் தங்கியிருப்பவர்கள், வேலைவாய்ப்பு உள்பட இதர விசா காலாவதியான பிறகும் சவூதியில் தங்கியிருப்பவர்கள் ஆகியோருக்கு கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் வருகிற மார்ச் மாதம் 25-ஆம் தேதி வரை தங்களது நாட்டிற்கு எவ்வித தண்டனையும் இல்லமல் திரும்பிச் செல்வதற்கான பொதுமன்னிப்பை சவுதி அரசு அறிவித்திருந்தது.

ஜனவரி 10, 2011

Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி?

உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.opera for phones

download opera mini 5.1 (271 KB)
download செய்த பிறகு
Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள்
ஆக கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் Opera வை exit செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள். தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள மேலே உள்ள Google search இல் nimzath என தேடி பார்க்கவும்.
thanks:lankasri

ஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 72 பேர் உயிரிழப்பு

நூற்றுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற ஈரானியப் விமானம் ஒன்று வடமேற்குப் பகுதியில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொறுங்கியதில் குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் தெகரானில் இருந்து புறப்பட்ட ஈரான்ஏர் போயிங் 727 விமானம் 700 கிமீ தொலைவில் உள்ள ஊர்மியா என்ற நகரில் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறியது.

32 பேர் காப்பாற்றப்பட்டதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. கடும் பனி காரணமாக மீட்பு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னர் வந்த செய்திகள் 50 பேர் வரையில் உயிர் தப்பியதாகத் தெரிவித்தன. இவ்விபத்து நேற்றிரவு உள்ளூர் நேரப்படி 1945 மணிக்கு இடம்பெற்றதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி அறிவித்தது. கடுமையான காலநிலையே இவ்விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானம் பல துண்டுகளாக வெடித்திருந்தாலும், குண்டுவெடிப்பு இடம்பெறவில்லையென ஈரானின் செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வடக்கு ஈரானில் இடம்பெற்ற ஒரு விமான விபத்தில் 168 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 09, 2011

கடலூரில் மருத்துவக் கல்லூரி தொடக்கம்: சட்டசபையில் அறிவிப்பு

கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கபட்டதையடுத்து தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். சட்டசபைக் கூட்டத்தில் கவர்னர் உரையில் கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடலூரில் தி.மு.க.,வினர் கட்சி அலுவலகம் முன் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் தமிழரசன், இளங்கோவன், பூங்காவனம், கணபதி, ரங்கநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆம்புலன்ஸ் உருவான வரலாறு:

உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ் இன்று (ஜன.8) முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் என "மினி மொபைல் ஆஸ்பத்திரி'யாக வலம் வருகிறது.

இந்த ஆம்புலன்ஸ் உருவான வரலாறு 17ம் நூற்றாண்டில் துவங்குகிறது. அந்த காலக்கட்டத்தில் காயம்பட்ட போர் வீரர்களை சிகிச்சை மையத்திற்கு எடுத்துச் செல்ல, இரு மூங்கில் கம்புகளில் இணைக்கப்பட்ட துணியை (ஸ்டிரெச்சர்) பயன்படுத்தினர். இதுதான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உருவாகுவதற்கான கரு எனலாம். பின், குதிரை வண்டி, மோட்டார் வாகன வண்டி ஆம்புலன்ஸ் என பல பரிமாணங்களை பெற்றன. கி.பி. 18ம் நூற்றாண்டில் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி கூட, தென்னாப்பிரிக்காவில் "இந்தியன் ஆம்புலன்ஸ் கிராப்ஸ்' என்ற நிறுவனத்தை துவக்கி, ஸ்டிரெச்சர் தூக்கும் ஊழியராகவும் இருந்தார். இந்தியாவில் முதன்முறையாக 1914ல் மும்பையில் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

குண்டுவெடிப்பை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் - சுவாமி அஸிமானாந்தா வாக்குமூலம்

மலேகானில் இரண்டு குண்டுவெடிப்புகள், ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு ஆகியவற்றை நடத்தியது நானும், எனது கூட்டாளிகளும்தான் என கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா தெரிவித்துள்ளான். ஆர்.எஸ்.எஸ் தலைமையின் கட்டளையின்படிதான் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாகவும், அதற்கு தேவையான பணத்தை அளித்தது ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ்குமார் எனவும் அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி தீஸ்ஹஸாரி மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் தீபக் தாபாஸின் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளான் சுவாமி அஸிமானந்தா.

வாக்குமூலம் 42 பக்கங்களைக் கொண்டதாகும். இந்த குற்றத்தின் பெயரில் எனக்கு மரணத்தண்டனை கிடைக்கும் என தெரியும், ஆனாலும் எனக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளிக்கவேண்டும் என அஸிமானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஜனவரி 07, 2011

முடிசாயும் கொடிசாயாது...

01.08.05 அன்று சவூதி மன்னர் ஃபஹத் மரணம் அடைந்தார். அவர் இறந்ததும் உலகச் சந்தையில் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. இப்படி உலகச் சந்தையை உலுக்கி எடுத்த அந்த சவூதி மன்னரின் மரணத்தை மக்கள் உன்னிப்பாகக் கவனித்தனர்.

உலகெங்கிலும் உள்ள நாட்டுத் தலைவர்கள் இறந்ததும் அரசாங்க விடுமுறை, அரைக் கம்பத்தில் கொடியைப் பறக்க விடுதல், அரசு மரியாதையுடன் கூடிய அடக்கம் போன்ற வழமைகள் எதுவுமின்றி சாதாரணமாக பொது மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றதைப் பார்த்து உலக மக்கள் ஆச்சரியத்திலும் அதிசயத்திலும் உறைந்து போயினர். அவர்களுக்கு இந்த மரணம் ஏதோ ஒரு செய்தியை உரைத்தது, உணர்த்தியது.

அது உணர்த்திய செய்தி என்ன என்பதை 03.08.05 அன்று வெளியான இந்து நாளேடு தெளிவாகவே போட்டு உடைத்தது. சவூதி அரசாங்கம் பின்பற்றுகின்ற வஹ்ஹாபியிஸம் தான் இதற்குக் காரணம் என்று விளக்கம் தெரிவித்திருந்தது.

ஜனவரி 06, 2011

நீடூரில் மருத்துவக் கல்லூரி: கவனத்தில் கொள்ள வேண்டியவை…!

தமிழக முஸ்லிம் சமுதாயம் கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்ற வேட்கையுடன் தங்கள் வாழ்நாள் முழுவதும் சுயநலம் இல்லாமல் உழைத்த தியாகிகளின் நிகரில்லா தியாகத்தின் வெளிப்பாடுதான் இன்றைக்கு முஸ்லிம் சமுதாயம் ஓரளவிற்கு விழிப்புணர்வு பெற்று வரும் காட்சி. அடுத்த தலைமுறை இஸ்லாமிய அடிப்படையில் கல்வி பயில வேண்டும் என்பதற்காக தங்களின் சொத்துக்களை எழுதி வைத்து பல கல்வி நிறுவனங்களை உருவாக்கிய வள்ளல் பெருமக்கள் வாழந்த மண் இது.
கருத்தராவுத்தர் அப்பா, காதிர் முகைதீன் அப்பா, ஜஸ்டிஸ் பஷீர் அகமது, பெரியவர் ஜமால் முகம்மது போன்ற பல தன்னலமற்ற தியாகிகள் உருவாக்கிய கல்வி நிறுவனங்களில் தான் இன்றைய தலைமுறை கல்வி பயின்று வருகிறது. இந்த நிறுவனங்கள் சிலவற்றின் இன்றைய செயல்பாட்டில் பலருக்குத் திருப்தி இல்லையென்றாலும் கூட உருவாக்கியவர்களின் உயர்ந்த தியாகத்தை யாராலும் மறுக்க இயலாது. அது இறைவனுடைய பொருத்தத்தைப் பெற்றது என்பதில் சந்தேகமில்லை.

தமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 தேர்வுகள்

S, IPS-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆனையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது. இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. பட்டம் படித்த யாரும் இந்த தேர்வை எழுதலாம்.

இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் வழக்கம் போல் இடஒதுக்கீட்டை வழங்கமால் தமிழக அரசு ஏமாற்றுமா? என்ற சந்தேகமும் தொடர்கின்றது. இதுவரை பணி அமர்த்தப்பட்ட அரசு பணிகளில் 3.5 % நடைமுறை படுத்தபடவில்லை. ஆனால் இப்போது அறிவித்துள்ள பணி மிக முக்கியமானது. இதில் கட்டாயம் 3.5% இட ஒதுக்கீட்டை அரசு வழங்கியே ஆகவேண்டும். எனவே பட்டதாரி முஸ்லீம்கள் இந்த வாய்ப்பை தவரவிடாமல் உடனடியாக விண்னப்பிக்கவும். காவல் துறையாலும், அரசு அதிகாரிகளாலும் வஞ்சிக்கப்பட்ட நமது சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் சமூக அக்கரை உள்ள பட்டதாரி முஸ்லீம் இளைஞர்கள் இந்த தேர்வை எழுத முன்வர வேண்டும்.

இந்த தேர்வை பற்றிய முழு விபரம்.

பிரிட்டனில் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

    கடந்த பத்தாண்டுகளில் பிரிட்டனில் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஃபைத் மேட்டர்ஸ் நடத்திய ஆய்வில்தான் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை நினைத்தைவிட ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகம் என தெரியவந்துள்ளது.

இஸ்லாத்தை பற்றிய தவறான பிரச்சாரம் பிரிட்டனில் பரப்பப்பட்டு வந்தாலும் ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்கின்றனர் என ஃபைத் மேட்டர்ஸ் நடத்திய சுதந்திர ஆய்வு தெளிவுப்படுத்துகிறது.

பழைய புள்ளிவிபரங்களின் படி 14 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலான நபர்கள் இஸ்லாத்தை தழுவுவதாக கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பில் மதமாறுபவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடாதது சிக்கலை ஏற்படுத்துகிறது.

நாடு முழுவதும் 200 அஞ்சல் அலுவலகங்களில் ஏ.டி.எம். மையங்கள்

நாடு முழுவதும் உள்ள 200 தலைமை அஞ்சலகங்களில் ஏ.டி.எம். மையங்களை அமைக்க அஞ்சல் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக சென்னை மயிலாப்பூர் உள்ளிட்ட 7 தலைமை அஞ்சலகங்களில் இந்த ஏடிஎம் வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

அஞ்சல் துறை தொடங்கப்பட்டது முதல் குக்கிராமங்களில்கூட சிறுசேமிப்புத் திட்டங்கள் மூலம் வங்கிச் சேவை நடத்தப்பட்டு வருகிறது. இப்போது அஞ்சலகங்களை நவீனமயமாக்குவதோடு, மக்களுக்கான பல்வேறு மதிப்பு கூட்டு சேவைகளை வழங்கும் திட்டங்களை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் 1.55 லட்சம் அஞ்சலகங்கள் உள்ளன. இதில் 90 சதவீத அஞ்சலகங்கள் கிராமங்களில் இயங்கி வருகின்றன.

ஜனவரி 05, 2011

தமிழக சட்டசபை தேர்தல் தேதி ஒரு வாரத்தில் அறிவிப்பு

தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி ஒரு வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.

தமிழக சட்டசபையின் ஆயுட்காலம் மே 16ம் தேதி முடிவடைகிறது. அடுத்த சில நாட்களில் புதுச்சேரி, கேரளா மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் முடிவடைகிறது. ஜூன் மாதத்தில மேற்கு வங்க சட்டசபை காலம் முடிவடைகிறது. இதையடுத்து இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி???

தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு,12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும்,அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான், நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து, நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிக்கும் அளவுகோலாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது...


அதிக மதிப்பெண் எடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள் :

கடலூரில் 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல் லாரி பறிமுதல்: 2 பேருக்கு வலை

கடலூர் :குள்ளஞ்சாவடியிலிருந்து கடத்தப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கைப்பற்றியினர், மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியிலிருந்து, வடலூர் நோக்கி மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. குள்ளஞ்சாவடிலியிருந்து அரிசி கடத்திச் சென்ற லாரியை விரட்டிச் சென்று குறிஞ்சிப்பாடி புறவழிச்சாலையில் மடக்கிப் பிடித்தனர்.

லாரியில் இருந்த இரண்டு பேர் தப்பியோடி விட்டனர். லாரியை சோதனை செய்ததில் 40 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. கடலூர் உணவு கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 40மூட்டை ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்தனர்.