Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 14, 2013

கீழணையில் ஷட்டர் பழுதால் கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீர்!!

காட்டுமன்னார்கோவில்: கீழணையில் ஷட்டர் பழுதானதால் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் பலத்த மழை பெய்ததால் உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர், கல்லணைகள் நிரம் பின. இந்த அணைகளிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் முழுவதும் திறக்கப்பட்டது. கீழணையின் முழு கொள்ளளவான 9 அடியும் தேக்கப்பட்டது. மேலும் நீர் வரத்து தொடர்ந்ததால் கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 781 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டு கடலுக்கு சென்றது.கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு வந்த அதிக அளவு உபரி நீரை கடலுக்கு அனுப்புவதற்கு ஏதுவாக வடக்கு, தெற்கு கொள்ளிட பிரிவில் உள்ள சுமார் 72 மதகுகள் திறக்கப்பட்டன. இதில் 4 மதகுகளை திரும்ப மூட இயலவில்லை.நீர்வரத்து குறைந்ததை அடுத்து கல்லணையிலிருந்து கீழணைக்கு தண்ணீர் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டது.இந்நிலையில் ஷட்டர் செயல்படாததால் கீழணையில் தேக்கப்பட்ட தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

9 அடி தேக்கி வைத்திருந்த
நிலையில் தற்போது கீழணையில் 8 அடி தண்ணீரே உள்ளது. ஷட்டரை விரைந்து சீரமைக்கவில்லை எனில் வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும். இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதிலும் தடை ஏற்படும் வாய்ப்புள்ளது.
-Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...