Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 19, 2013

இஸ்லாமிய வங்கியியல் முறையில் நிதி நிறுவனம் நடத்த அனுமதி!- ரிசர்வ் வங்கி

திருவனந்தபுரம்: இஸ்லாமிய பொருளாதாரச் சட்டங்களின் அடிப்படையில் நிதி நிறுவனம் துவங்க கேரள அரசுக்கு இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. சேரமான் ஃபினான்ஸியல் சர்வீஸ் லிமிட்டட் (CFSL) என்ற பெயரில் கேரள மாநில தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் நடத்தப்படும் நிதி நிறுவனம் Non-Banking Finance Company அடிப்படையில் இயங்கும். இந்நிறுவனத்திற்கு ரூ.40 கோடி நிதி திரட்ட முடியும் என்று கேரள அரசு நம்புகிறது.

இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் இந்நிறுவனம் வட்டியை வசூலித்தல், வட்டி அளித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாது. இந்நிறுவனம்
அடிப்படை கட்டமைப்புகள், சேவைகள் மற்றும் தயாரிப்பு துறைகளை இலக்காக வைத்துள்ளது. ஆனால், புகையிலை தயாரிப்புகள், மதுபானம், சூதாட்டம் மற்றும் ஊக வியாபாரங்களில் ஈடுபடாது. -

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...