Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 15, 2013

ஓட்டை உடைசலான அரசு பேருந்துகள்! காட்டுமன்னார்குடி பகுதி மக்கள் வேதனை!

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் இரண்டு பஸ்களும் ஓட்டை உடைசலாக இருப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ப தரமான பஸ் விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியாக விளங்கி வரும் நகரம் காட்டுமன்னார்கோவில். நூற்றுக்கணக்கான கிராமங்களை உள்ளடக்கியது. காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வியாபாரம் மற்றும் பல்வேறு பணிகளுக்காக தினமும் சென்னை செல்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் அதிகம். காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் இரவு 11.00 மணிக்கு (தடம் எண்-149,) 11.30 மணிக்கு (தடம் எண் 149-பி) ஆகிய இரு அரசு பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. தினமும் இந்த பஸ்சில் முழு அளவு பயணிகள் செல்வது குறிப் பிடத்தக்கது.

நீண்ட தூரம் செல்வற்கு ஏற்ற தகுதியில் இந்த இரு பஸ்களும் இல்லை என்பது வேதனையான
விஷயம். கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ் கணக்காக சென்னை பஸ்சை இயக்குகின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த நிலை தொடர்ந்து வருகிறது. இது குறித்து பயணிகள் பல முறை கோரிக்கை வைத்தும் இன்னும் பஸ்கள் மாற்றப்படவில்லை.

இரவு நேர பயணத்தின்போது இதுபோன்ற சத்தத்தால் பயணிகள் வெறுப்படைகின்றனர். பஸ்சில் உள்ள பக்கவாட்டு ஜன்னல்கள் பல திறக்கவே முடியாதபடியும், சில ஜன்னல்கள் மழை வந்தால் கூட மூட முடியாதபடியும் உடைந்து சேதமடைந்துள்ளன. இதனால் இரவு நேரத்தில் பனியிலும், மழையிலும் புலம்பலோடும், தூக்கமில்லாமலும் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு பயணிகள் தள்ளப்படுகின்றனர். அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் "கொஞ்சமாவது' அக்கறை செலுத்தி நீண்ட தூரம் பயணிக்கும் வகையில் தரமான மாற்று பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
source:Dinamalar

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...