ஈரானின் 7-வது அதிபராக ஹசன் ரௌகானி (64) முறைப்படி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கிறார். முன்னதாக அவர் சனிக்கிழமை ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியை சந்தித்து அவரது சம்மதத்தை பெற்றார்.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், 10 மாகாண அதிபர்களும், உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். ஐரோப்பிய நாடுகளின் விவகாரங்களை கவனித்த முன்னாள் தலைவர் சேவியர் சோலனாவும் விழாவில் பங்கேற்கிறார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஹசன் ரௌஹானி வெற்றி பெற்றார். ஈரான் நாடாளுமன்றத்தில் அமைச்சர்களாக தேர்வு செய்யப்படுவோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு 10 நாள்களில் வாக்கெடுப்பு நடத்தப்படும். 8 ஆண்டுகளாக அதிபர் பதவியில் இருந்த மெஹ்மூத் அகமதி நிஜாத், ரௌகானி பதவி ஏற்பதன் மூலம்
விலகிறார். அகமதி நிஜாத் போலவே ரௌகானியும் இஸ்ரேலை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...