Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 13, 2012

மத்திய அரசின் கிராமங்களில் மாதிரி கணக்கெடுக்கும் பணி துவக்கம்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் மத்திய அரசின் குடும்ப நலம் மற்றும் சுகாதார துறை சார்பில் கிராமங்களில் மாதிரி கணக்கெடுக்கும் பணி நடைப்பெற்றது. தமிழகத்தில் மத்திய அரசு கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் குடும்ப உறுப்பினர்களின் விவரம், சுகாதாரம், குடிநீர், நீர் நிலைகளின் விவரம் ஆகியன பற்றி சேகரித்து கிராமங்களில் வரும் ஐந்தாண்டுகளில் பல்வேறு பணிகள் செய்வதற்காக கணக்கெடுப்பு பணியை தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

இதன்படி கடலூர் மாவட்டத்தில் 35 கிராமங்களில் இன்டியன் இன்ஸ்டியூட் ஆப் பாப்லேஷன் சைன்ஸ் நிறுவனத்தின் மூலம் பணியாளர்கள் நியமித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் காட்டுமன்னார்கோவிலில் கீழக்கடம்பூர், மா.கொளக்குடி, இளங்கம்பூர், ஆகிய கிராமங்களை தேர்ந்தெடுத்து கணக்கெடுப்பு பணியை செய்து வருகின்றனர். இதுபற்றி கணக்கெடுப்பு பணியில் கீழக்கடம்பூரில் ஈடுபட்டுள்ள வினோத்குமார், வெங்கடேசன் ஆகியோர் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு பணி செய்யப்படுகிறது. கதவு எண் வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை குளம், ஏரி ஆகியவற்றின் விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...