Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 31, 2013

கடலூர் மாவட்டத்தில் கனமழை!

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பரவலாக நேற்று முன்தினம் மாலை துவங்கி நேற்று காலை வரை விடிய, விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரே நாள் இரவில் 8 செ.மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. கடந்த 4 நாட்களாக வழக்கத்துக்கு மாறாக சுட்டெரித்த வெயிலும், அதனால் ஏற்பட்ட அனலின் தாக்கமும் கனமழையால் தணிந்தது. இதனால் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையளவு விவரம்: 

சிதம்பரம் - 20
மி.மீ கடலூர் - 10.4 மி.மீ
பரங்கிப்பேட்டை - 23 மி.மீ
லால்பேட்டை - 7 மி.மீ
காட்டுமன்னார்கோவில் - 7 மி.மீ
சேத்தியாத்தோப்பு - 5.2 மி.மீ
விருத்தாசலம்
- 77 மி.மீ
தொழுதூர் - 107 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் - 4 மி.மீ
பண்ருட்டி - 4.2 மி.மீ
கொத்தவாச்சேரி - 28 மி.மீ
கீழ்செறுவாய் - 85 மி.மீ
வானமாதேவி - 2.8 மி.மீ
அண்ணாமலைநகர் - 40.8 மி.மீ
புவனகிரி - 8 மி.மீ
மே.மாத்தூர் - 69 மி.மீ
காட்டுமயிலூர் - 60 மி.மீ
வேப்பூர் - 85.4 மி.மீ
பெலாந்துரை - 74 மி.மீ
மொத்த மழையளவு - 782.80 மி.மீ சராசரி மழையளவு - 37.28 மி.மீ அதிகபட்சமாக தொழுதூரில் 107 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...