எகிப்து தலைநகர் கெய் ரோவில் முகாமிட்டிருந்த மோர்சியின் முஸ்லிம் பிரதர்குட் இயக்கத்தைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான ஆதரவாளர் களை கலைக்க ராணுவம் முற்பட்டது. அப்போது பாதுகாப்பு படைக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது.
இந்த கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் ஆதரவாளர் களை நோக்கிசுட்டனர். இந்த தாக்குதலில் இது வரை 638 பேர் கொல் லப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் படுகாயமடைந்தனர்.
பலரின் நிலைமை மோசமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ் சப்படுகிறது. இந்த வன் முறையில் ஆயுதம் ஏந் தியவர்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது. இதையடுத்து எகிப்தில் அவசர நிலை பிரகடனம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க அரசுப் படைகளுக்கு
முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட இந்த ரத்தகளறி குறித்து விவாதிக்க அய்.நா. சபையின் ரகசிய அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை குறித்து நேர்மையான விசாரணை நடத்த அய்.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை கேட்டுக்கொண்டுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...