Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 25, 2010

நமதூரில் ஜூலை4 எழுச்சி

நமதூரில் ஜூலை4 எழுச்சியுடன் காணப்படுகிறது திரும்பிய பக்கம் எல்லாம் டிஜிட்டல் பேணர்களாலும் போஸ்டர்களாலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 24 இடங்களில் டிஜிட்டல் பேணர்கள் வைக்கப்பட்டுள்ளன. தொண்டர்கள் துணிவோடும் ஆர்வத்துடனும் சிறப்பாக திட்டமிட்டு செயல்ப்பட்டு வருகின்றனர்.


ஜிஹாத் செய்யப்புறப்படுவோம் - கொள்ளுமேடு தெருமுனை பிரச்சாரம்


கடந்த புதன் அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நமதூர் தௌகீத் ஜமாத்தின் சார்பில் ஜூலை விளக்க தெருமுனைப் பிரச்சாரம் கிளை யின் முன்னாள் செயலாளர் தாரிப் அவர்களின் தலைமையில் நடைப் பெற்றது . அதன் சமயம் ஆயங்குடி பக்கர் அவர்கள் ஜூலை மாநாடு ஏன் எதற்கு என்ற தலைப்பில் விவான உரையை வழங்கினார். இறுதியாக மக்களை நோக்கி அழைக்கும் பொது அறவழியில் போராடுவதும் ஜிஹாத் தான் என்று கூறி மக்களை தீவு திடலை நோக்கி ஜிஹாத் செய்ய அழைத்தார்.

பிரச்சாரத்தின் போது கிளையின் தலைவர் ரஜ்வி மற்றும் நஜ்மு, இட்ரிஸ், யாசின் மற்றும் தாயகம் வந்துள்ள யு ஏ இ சகோதரர்கள் சைபுலலாஹ், ஹுமாயுன் கபீர் மற்றும் இஜ்ஜுல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .




ஜூன் 24, 2010

காஸ்ஸாவுக்கு உதவ எகிப்திடம் வழியை எதிர்நோக்கும் ஈரான்

மனிதநேய மற்றும் மருத்துவ உதவிகள் கொண்ட ஒரு கப்பலை காஸ்ஸாவிற்காக தயார்செய்து வைத்திருப்பதாகவும், வழிக்காக எகிப்தின் பதிலை எதிர்ப்பார்த்திருப்பதாகவும் ஈரான் கூறியிருக்கிறது.


இதுக்குறித்து ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரமின் மெஹ்மன்பரஸ்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"காஸ்ஸாவில் வறுமையில் வாடும் மக்களுக்கு கப்பலில் பொருட்களை அனுப்பும் ஏற்பாடுகள் குறித்து எகிப்திய அரசிடம் தொடர்பு கொண்டிருப்பதாகவும், வழிதிறக்க எகிப்து ஏதும் முயன்றால் எல்லா நாடுகளாலும் பாராட்டப்படும். காஸா மக்களுக்கு எகிப்து வழிதிறக்குமாயின் வரலாற்று சிறப்பு பெறும் என்று கூறியுள்ளார்.


சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் அதிகாரிகளுக்கு அனுமதி மறுத்த டெஹ்ரானின் முடிவு குறித்து ஈரானிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


அணுசக்தி அதிகாரிகள் அவர்களுடைய விதிகளை மீறினால் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் வேறு அதிகாரிகளை கோரவும் உறுப்பினர் நாடுகளுக்கு உரிமை உள்ளதாக கூறியுள்ளார்.


ஈரானுக்கு எதிராக வாக்களித்த 12 ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் நாடுகளுக்கும் அதிருப்தி கடிதம் அனுப்ப திட்டமிட்டிருப்பதையும் உறுதி செய்தார்.


ஈரான்-பாகிஸ்தானிடையே குழாய் வழியாக எரிவாயு அனுப்பும் திட்டத்தை அமெரிக்க அதிகாரிகள் பிரச்சாரம் செய்து தடுப்பதாகவும் தெரிவித்தார்.


நாடுகளுக்கிடையே இருக்கவேண்டிய ஒற்றுமையை வலியுறுத்தி, ஈரான் இந்த பிரச்சாரத்தை தாண்டி வெற்றியடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணைக்கசிவுக்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாக கூறிய அவர், இந்தநெருக்கடி நிலையில் சரியான நடவடிக்கை எடுக்காதது அமெரிக்காவின் இயலாமையையே காட்டுகிறது. அபாயம் மனிதாபிமானம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்ததாக இருப்பதால் அனைத்து நாடுகளின் பங்கீடும் இதில் அவசியம் என்றார்.
presstv

நாளைய உலகின் பொருளாதார சக்தியாக ஆப்கானிஸ்தான்?

காபூல்:ஆப்கானிஸ்தான் டிரிலியன் (1 டிரிலியன்= 100 பில்லியன்) டாலருக்கு மேல் மதிப்புள்ள கனிமவளங்கள் உள்ளதாக அமெரிக்க தொல்லியல் துறையின் அறிக்கையை மேற்கோளிட்டு நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஆஃப்கன் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் இக்கண்டுபிடிப்புகள் போரினால் சிதிலமடைந்துள்ள நாட்டை மிகப் பெரும் பொருளாதார சக்தியாக மாற்றும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் நிச்சயமற்ற அரசாங்கத்தால் அமெரிக்க தலையீடுகளை மீறி ஆஃப்கனுக்கு உதவ கூடியதாக அவ்வளங்களை பயன்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

லித்தியம், இரும்பு, தங்கம்,நியோபியம், கோபால்ட் மற்றும் இதர கனிம வளங்கள் ஆஃப்கனை ஒரு சர்வதேச புதையல் சுரங்கமாக ஆக்கிவிடும் என்று தெரிவித்துள்ளது.

உலகிலேயே அதிக லித்தியம் கிடைக்கும் நாடான பொலிவியாவில் கிடைக்கும் லித்தியத்துக்கு நிகராக ஆஃப்கனில் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய உலகில் மொபைல் போன்கள், லேப்டாப்கள் என எல்லாவற்றிலும் லித்தியத்தையே பேட்டரிக்கு பயன்படுத்துவதால் அதன் தேவை அதிகமாகவே உள்ளது. மேலும் வருங்காலத்தில் பேட்டரி மற்றும் மின்சார கார்கள், பைக்குகள் அதிகரித்தால் இதன் தேவையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

இரும்பு மற்றும் பிற உலோகங்களும் ஏராளமாக கிடைக்கின்றன. ஆனால் அமெரிக்க தலையீடு, தாலிபான்களின் தாக்குதல், உள்நாட்டு மோதல்கள், படிப்பறிவற்ற மக்கள், தொழில்நுட்ப வளர்ச்சி குறைபாடு போன்றவற்றால் இயற்கை வளங்களை பயன்படுத்தி உலகின் பொருளாதார சக்திகளுள் ஒன்றாக விளங்க ஆஃப்கன் முயற்சிக்குமா? இல்லை மேற்கண்ட காரணங்களால் எண்ணைய் உற்பத்தி அதிகமிருந்தும் அதனால் சுபிட்சி வருவதற்கு பதில் அழிவே உள்ள நைஜீரியாவை போல் மாறுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஜூன் 23, 2010

ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி பிற நாடுகளின் பொருளாதார மீட்சியை பாதிக்கும்- பிரணாப் முகர்ஜி

ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மீட்சியைக் கடுமையாக பாதிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.


இந்திய, அமெரிக்க தொழிலதிபர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் வந்திருந்த அவர் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) கருத்தரங்கில் பேசும்போது; 'ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியானது வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைக் கடுமையாக பாதிக்கும். 2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார மந்த நிலையிலிருந்து தற்போது பெரும்பாலான நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன.


இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்ய ஐரோப்பிய நாடுகள் உலக வங்கி உதவியுடன் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.


அதேசமயம் இதேபோன்ற நெருக்கடி அயர்லாந்து மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளிலும் ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.


இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் ரூபாயின் மாற்று மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு நிலை உள்ளிட்டவை ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் தாக்கத்தால் உருவானவை.


ஐரோப்பிய நாடுகளின் வங்கி நிதி நிலையை அறிக்கையாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் உண்மை நிலையை அறிய முடியும். இது தொடர்பாக இம்மாதம் 26 மற்றும் 27-ம் தேதி டொரண்டோவில் நடைபெற உள்ள ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது' என்றார் பிரணாப்.

ஜூன் 22, 2010

பள்ளிகூடங்களில் தலை முக்காடு (headscarves) அணிய தடைவிதித்ததை எதிர்த்து கொசோவாவில் போராட்டம்

ப்ரிஸ்டினி:முஸ்லிம்கள் அணியும் தலை முக்காடை (headscarves) பள்ளி கூடங்களில் அணிவதைத் தடைச் செய்யும் அரசின் முடிவை எதிர்த்து பொது மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொசோவோ தலைநகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொசோவோ மக்கள் தொகையில் 90 சதவீதம் மக்கள் முஸ்லிம்கள். 2008-ம் ஆண்டு செர்பியாவிடம் இருந்து விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடானது.
இப்போராட்டத்தில் நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு அரசின் இம்முடிவை திரும்பப் பெற வேண்டும் மேலும் முஸ்லிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

"எங்கள் பெண் குழைந்தைகள் தலை முக்காடு அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்" என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஹலீல் கஸ்ட்ரடி தெரிவித்தார்.

'எங்கள் நாட்டை எங்களுக்கு எதிராக பயன்படுத்தாதே' 'கம்யூனிசம் முடிந்து விட்டது' என்ற வாசகங்களை கொண்ட தட்டிகளுடன் தலை முக்காடு அணிவதை தடை செய்ய அனுமதி அளித்த கல்வி அமைச்சகத்தின் முன் போராட்டம் செய்தனர்.

"தலை முக்காடு அணிவது சீருடையல்ல, ஆனால் இது எங்கள் மத கோட்பாடு நாங்கள் எங்கள் மார்க்கத்தை மதிக்கிறோம், எங்கள் மதத்தின் படி வாழ வேண்டும்" என ஃபிதோர் அபாஸி என்ற மாணவி கூறினார்.

இதுவரை ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க மற்றும் சில முஸ்லிம் நாடுகள் உட்பட 69 நாடுகள் கொசோவோவை அங்கீகரித்துள்ளன.

எகிப்தில் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த நகரம் கண்டுபிடிப்பு

எகிப்தின் வெளிநாட்டவர் குடியிருப்புப் பகுதி எனக் கருதப்படும் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகரம் ஒன்றை ஆஸ்திரேலியா வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.ராடாரைப் பயன்படுத்தியே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ள்ளது.

கி.மு 1664-1569 ஆண்டுக் காலப்பகுதியில், ஹைக்சொஸ் ஆட்சியின் கீழ் இருந்த வடக்கு டெல்டா பகுதியில் ஆசியாவிலிருந்து வறுமைப்பட்டு வந்தோர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஆய்வை மேற்கொண்ட, ஆஸ்திரேலிய வானியலாளரான ஐரின் முல்லர் தலைமையிலான குழுவினர் கூறுகையில், இந்நகர் எத்தனை ஆழத்தின் அடியில் புதையுண்டிருக்கின்றது என்பதைக் கண்டறிவதே தங்களது நோக்கம் என்கின்றனர்.

டெல்-அல்-டபா நகரின் வீடுகள், வீதிகள், வழிபாட்டுத்தலங்கள், பச்சைப் பசேல் நிலங்கள், நவீன நகரம் போன்றவை ராடாரில் பதிவாகியுள்ளன.

ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் குழு 1975 ஆம் ஆண்டிலிருந்து இது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பாதங்களை பயமுறுத்தும் கால் ஆணி

பாதங்களை தாக்கும் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி. இது பாதத்தை தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.

கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை தருகிறது.

இந்த கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

கால் ஆணி ஏற்பட காரணம்:பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.

கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.

காலுக்கு பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.

கால் ஆணி ஏற்பட்டுவிட்டால் அதனை உடனடியாக சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.

கால் ஆணிக்கு உரிய சிகிச்சை: கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும்.

இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.

மேலும்,மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள்.இதனால் பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள்மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

periyar.org

ஜூன் 21, 2010

உதவிக் கப்பல்களை தடுப்போம் இஸ்ரேல் கொக்கரிப்பு

லெபனானில் பெண்கள் அமைப்பு காஸ்ஸாவுக்கு உதவுவதற்காக கப்பலைத் தயார் செய்து வருகிறது.

இந்நிலையில் "அனைத்து பலங்களையும் பிரயோகித்து அத்துமீறும் கப்பல்களைத் தடுப்பதற்க்கு இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது" என்று இஸ்ரேலிய ஐ.நா தூதர் மிரட்டல் விடுத்துள்ளார்.

அவர் இதுக் குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனைக் தெரிவித்துள்ளதாக இஸ்ரேல் வனொலிகளும் இணைய செய்திகளூம் கூறுகின்றன.

இந்தக் கப்பல்களை ஏற்பாடு செய்பவர்களூக்கு லெபனானிலுள்ள ஹிஸ்புல்லாஹ் அமைப்பினரோடு தொடர்பு இருக்கலாம் என்று இஸ்ரேலிய ஐ.நா தூதர் கப்ரியல்ல ஷலேவ் கூறினார்.

"சர்வதேசச் சட்டப்படி அனைத்துப் பலங்களையும் பிரயோகித்து இந்தக் கப்பல்களைக் தடுப்பதற்க்கு இஸ்ரேலுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. ஏனெனில் காஸ்ஸா பகுதியின் மேல் கடல் மார்க்கத் தடைவிதிக்கபட்டுள்ளது இதனை மீறக்கூடாது" என்று அவர் சொன்னதாக 'ஹாரெட்ஸ்' நாளிதழின் இனணயதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
7days

கடலுக்குள் ஒரு விபரீதம்:மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் கசிவு

அமெரிக்கா, மெக்சிகோ, கியூபா ஆகிய நாடுகளால் சூழப்பட்ட கடல் பகுதி தான், அழகான மெக்சிகோ வளைகுடா. ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள், அதில் இருந்து பொங்கும் நுரைகள், உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இயற்கை அழகு நிரம்பிய, மீன்வளம் நிறைந்த பகுதி இது. இயற்கை அழகு மட்டுமல்ல, இயற்கை வளங்களும் இங்கு கொட்டிக் கிடக்கின்றன. இந்த கடல் பகுதியில், மிசிசிபி ஆற்றுப் படுகையின் அருகில் இயற்கை எரிவாயு நிறைந்து இருக்கிறது. இதில் இருந்து கச்சா எண்ணெய் எடுப்பதற்காக, இந்த கடல் பகுதியை சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் குறி வைத்துள்ளன.



பிரிட்டிஷ் பெட்ரோலியம்இங்கு, பிரிட்டனை சேர்ந்த பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனமும், கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்துக்காக, டிரான்சொசஸன் என்ற நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. எண்ணெயை தோண்டி எடுப்பதற்காக, 8,000 அடி ஆழம் கொண்ட கடல் பகுதியில் இயந்திர மேடை அமைக்கப்பட்டு, பணிகள் நடந்தன. நவீன இயந்திரங்கள் மூலமாக, கடலுக்கு அடியில் துளையிட்டு, அவற்றில் குழாய்களை செலுத்தி, கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இயந்திரம் மூலம், கடலின் அடி மட்டத்தில் இருந்து பூமிக்குள் 30 ஆயிரம் அடி வரை துளையிட்டு, கச்சா எண்ணெய் எடுக்க முடியும்.



நடந்தது விபரீதம்கடந்த ஏப்ரல் 20ம் தேதி, மெக்சிகோ வளைகுடா பகுதியில், கச்சா எண்ணெய் எடுக்கும் பணி வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தது. அப்போது தான், யாரும் எதிர்பார்க்காத அந்த விபரீதம் நடந்தது. எண்ணெய் கிணற்றில் இருந்து கச்சா எண்ணெயை வெளியில் எடுக்க பயன்படுத்தப்படும் மிகப் பெரிய இரும்பு குழாய் திடீரென பெரிய சத்தத்துடன் வெடித்தது. குழாயின் ஒரு பகுதியில் வெடிப்பு ஏற்பட்டது. கடலுக்குள் 5,000 அடி ஆழத்தில் இந்த வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிப்பு மூலமாக பெருமளவு கச்சா எண்ணெய் பீய்ச்சி அடித்துக் கொண்டு, வேகமாக வெளியேறி கடலில் கலந்தது.



எண்ணெய் கசிவு காரணமாக, கடலின் மேல் பரப்பில் சில இடங்கள் தீப்பற்றி எரிந்தன.11 பேர் பலிஇதன் காரணமாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த இயந்திர மேடையும், வெடித்துச் சிதறி கடலுக்குள் மூழ்கியது. எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். என்ன நடந்தது என, யூகிப்பதற்கு முன்பே, கச்சா எண்ணெய் பெருமளவில் வெளியேறியது. முன் எச்சரிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த உயிர் காக்கும் படகுகள் மூலம் சிலர் உயிர் தப்பினர். மற்றவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்கப்பட்டனர். ஆனால், பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் எண்ணிக்கையை சரி பார்த்தபோது, 11 பேரை காணவில்லை என, தெரியவந்தது.



மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டைக்கு பின், 11 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. அலட்சியம்இத்தனை பெரிய விபரீதம் நடந்தும், பிரிட்டிஷ் பெட்ரோலியம் இதுகுறித்து மூச்சு விடவில்லை. இதன்பின், இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை, மெக்சிகோ வளைகுடாவில் நடக்கும் பேரவலத்தை கடுமையாக விமர்சித்தனர். விஷயத்தின் விபரீதத்தை உணர்ந்து பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம், அமெரிக்காவை உதவிக்கு அழைத்தது. தனது கடற்கரை பகுதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை உணர்ந்த அமெரிக்காவும் ஆடிப் போனது.



இருந்தாலும், பிரிட்டன் நட்பு நாடு என்பதால், அமெரிக்கா இந்த விஷயத்தில் சற்று அடக்கி வாசித்தது.தடுப்பு முயற்சிபிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் இன்ஜினியர்கள், எண்ணெய் கசிவை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். குழாயில் வெடிப்பு ஏற்பட்ட பகுதியை சரி செய்வதற்காக, ரிமோட் மூலம் இயக்கப்படும் சிறிய அளவிலான நீர்மூழ்கி வாகனங்களில் கடலுக்கு அடியில் சென்றனர். கடந்த மே 2ம் தேதி மட்டும், ஆறு முறை கடலுக்குள் சென்று, எண்ணெய் கசிவை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. குழாயில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து எண்ணெய் கசிந்ததால், அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம், மூன்று இடங்களில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டது.



தற்காலிக முயற்சியாக, குழாயில் வெடிப்பு ஏற்பட்ட பகுதியில் பெரிய தடுப்பு அமைக்கப்பட்டது. ஆனால், இந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. எண்ணெய் கசிவின் வேகத்துக்கு, அந்த தடுப்பு ஈடுகொடுக்கவில்லை. இதன்பின், வெடிப்பு ஏற்பட்ட குழாய்க்குள், வேறு ஒரு சிறிய குழாயை செலுத்தி, எண்ணெய் கசிவை தடுக்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது.எவ்வளவு எண்ணெய் வெளியேறுகிறதுகடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து கச்சா எண்ணெய் வெளியேறிக் கொண்டு தான் இருக்கிறது. இதை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சியும் இதுவரை வெற்றி பெறவில்லை. வெளியேறும் எண்ணெய் அளவு குறித்து, பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் முதலில் உண்மையான தகவல்களை கூறவில்லை.



"நாள் ஒன்றுக்கு 5,000 பேரல் எண்ணெய் தான் வெளியேறி, கடலில் கலக்கிறது' என, அந்நிறுவனம் தெரிவித்தது. சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், விஞ்ஞானிகளும் இதை கடுமையாக மறுத்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் நிபுணரும், எண்ணெய் துரப்பன துறை ஆலோசகருமான ஜான் ஆமோஸ் கூறுகையில்,"எனது மதிப்பீட்டின்படி, மெக்சிகோ வளைகுடாவில் தினமும் 20 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் கலக்கிறது' என்றார். கடலியல் ஆராய்ச்சி துறை நிபுணர் இயன் மெக்டொனால்டு கூறுகையில்,"நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பேரல் எண்ணெய் கடலில் கலக்கிறது' என்றார். ஆனால், தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பேரல் கச்சா எண்ணெய் கடலில் கலப்பதாக தெரியவந்துள்ளது.



இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம்,"வெடிப்பில் இருந்து எவ்வளவு கச்சா எண்ணெய் வெளியேறுகிறது என்பதை அளவிடுவது மிகவும் கடினம். வெளியேறும் எண்ணெய் அளவை கணக்கிடுவதற்காக, கடலுக்கு அடியில் கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை'என்றது. வெளியேறும் எண்ணெய் அளவை கணக்கிடுவதற்கு, நடுநிலையான விஞ்ஞானிகளையும் அந்த பகுதிக்கு செல்வதற்கு பிரிட்டிஷ் நிறுவனம் அனுமதி மறுத்து விட்டது. "இதனால், எண்ணெய் கசிவை தடுத்து நிறுத்தும் பணிக்கு இடையூறு ஏற்படும்' என, காரணம் கூறி வருகிறது.



இதற்கிடையே, கடலில் ஏற்கனவே கலந்து விட்ட கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் பணியில் பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. இருந்தாலும், வெளியேறிய எண்ணெயில், இதுவரை 40 சதவீதம் தான் சேகரிக்கப்பட்டுள்ளது என்றும், இன்னும் 60 சதவீத எண்ணெய் கடலின் மேல் பரப்பில் தேங்கியுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன பாதிப்பு ஏற்படும்?மெக்சிகோ வளைகுடாவில், இதுவரை 2,500லிருந்து, 9,100 ச.கி.மீ., வரை கச்சா எண்ணெய் திட்டு பரவியுள்ளது தெரியவந்துள்ளது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை, கடல் பகுதி கறுப்பாக காட்சி அளிக்கிறது. கடலின் மேல் பரப்பு முழுவதும் களிமண் குழம்பு போல் மாறிப் போய் விட்டது.



கடல் நீருக்கான அறிகுறியே அங்கு தென்படவில்லை. தற்போது எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதிக்கு மிக அருகில் தான், டெல்டா தேசிய வனவிலங்கு சரணாலயம், பிரெட்டன் தேசிய வனவிலங்கு சரணாலயம் ஆகியவை உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான விலங்குகளும், பறவைகளும் உள்ளன. வெகு விரைவில் இந்த பகுதிக்கும் கச்சா எண்ணெய் திட்டு பரவி விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அப்படி பரவி விட்டால், இங்குள்ள விலங்குகள் அனைத்தும் பலியாகி விடும் விபரீதமும் ஏற்படும். செத்து மடியும் கடல்வாழ் உயிரினங்கள்அமெரிக்காவின் லூசியானா மாகாண கடற்பகுதி முழுவதும் எண்ணெய் பிரதேசமாக மாறி விட்டது. மெக்சிகோவின் மெரிடா, டாம்பிகோ, மடாமொராஸ், அமெரிக்காவின் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கும் வேகமாக எண்ணெய் பரவி வருகிறது.



இதன் காரணமாக, இந்த கடல் பகுதியில் வசிக்கும் மீன்கள், கடல் ஆமைகள், திமிங்கிலங்கள், கடல் பறவைகள் ஆகியவை தினமும் ஆயிரக்கணக்கில் செத்து, கரை ஒதுங்கிக் கொண்டே இருக்கின்றன. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புஇந்த பகுதியில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரமும் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. இரண்டு மாதங்களாக அவர்கள் மீன்பிடிக்க முடியவில்லை. ஒருவேளை எண்ணெய் கசிவு நிறுத்தப்பட்டாலும், ஏற்கனவே கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெயை முழுமையாக நீக்குவது என்பது, நீண்ட கால முயற்சியாகவே இருக்கும். இதனால், "மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்வது என்பது, தற்போது நடக்க கூடிய விஷயம் அல்ல'என, சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெய், விரைவில் அகற்றப்படாவிட்டால், சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடு ஏற்படும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தீர்வு என்ன?சுற்றுச் சூழலை பெரிய அளவில் பாதிக்கும் இந்த எண்ணெய் கசிவு விவகாரம், சர்வதேச நாடுகளுக்கு கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் பிரிட்டனும், அமெரிக்காவும் அமைதி காப்பது, மற்ற நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் கசிவை முழுமையாக தடுத்து நிறுத்துவதற்கு பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் என்ன திட்டம் வைத்துள்ளது, மெக்சிகோ வளைகுடாவில் உள்ள எண்ணெய் கிணற்றுக்குள் இன்னும் எவ்வளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது, ஏற்கனவே கடலில் கலந்து விட்ட கச்சா எண்ணெயை முழுமையாக அகற்றி விட முடியுமா என்ற கேள்விகளுக்கு, வெளிப்படையான பதில் எதுவும் தெரிவிக்க பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் மறுத்து வருகிறது. "இந்த ஆழ் கடல் துயரம் இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை. அதுவரை கடல் வாழ் உயிரினங்கள் செத்து மடிவதையும், சுற்றுச் சூழல் மாசுபடுவதையும் தடுத்து நிறுத்த முடியாது.



சர்வதேச நாடுகள், இந்த விஷயத்தில் தீவிரமாக களமிறங்கினால் மட்டுமே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்' என்பது, சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கருத்து. சர்வதேச சமுதாயம் விழித்துக் கொள்ளுமா? மிகப் பெரிய எண்ணெய் கசிவு:அமெரிக்க கடல் பகுதியில் இதுவரை நடந்த எண்ணெய் கசிவுகளில், தற்போது மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தான், மிகப் பெரிய அளவிலானது என, கூறப்படுகிறது. கடந்த 1989ல் அலஸ்காவில் ஏற்பட்ட எக்சோன் வால்டாஸ் எண்ணெய் கசிவு விபரீதத்தின் பாதிப்பை விட, தற்போது மெக்சிகோவில் ஏற்பட்ட பாதிப்பு மிகவும் அதிகம் என, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒட்டு மொத்தமாக, சர்வதேச அளவில் 1991ல், வளைகுடா போரின்போது ஈராக், பெர்சியன் வளைகுடா பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தான், மிகப் பெரிய அளவிலானது. எண்ணெய் கசிவை தடுக்கஇந்திய விஞ்ஞானி யோசனை:



மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவை தடுத்து நிறுத்துவதற்கான புதிய யோசனையை, சேஷாத்ரி ராம்குமார் என்ற இந்திய விஞ்ஞானி கூறியுள்ளார். இவர், டெக்சாசில் உள்ள சுற்றுச் சூழல் மற்றும் மனித நல கல்வி மையத்தில் பேராசிரியாக பணியாற்றுகிறார். இவர் கூறியதாவது:எண்ணெய் கசிவை தடுப்பதற்கு தற்போது "சின்தடிக் பூம்'எனப்படும் முறை தான் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் குறைந்த அளவு எண்ணெயை மட்டுமே உறிஞ்ச முடியும். மேலும், சுற்றுச் சூழலுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். எண்ணெய் கசிவை தடுப்பதற்காகவே, "பைபர்டெக்ட்' என, அழைக்கப்படும் பருத்தி கார்பன் உறிஞ்சியை கண்டுபிடித்துள்ளேன்.



கார்பன் கலந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த பருத்தி கார்பன் உறிஞ்சி, மூன்று அடுக்குகளை கொண்டதாக இருக்கும். மேல் மற்றும் கீழ் அடுக்குகள் பருத்தியை உள்ளடக்கி இருக்கும். இவை கடலில் உள்ள எண்ணெயை உறிஞ்சும் தன்மை கொண்டவை. நடுவில் உள்ள அடுக்கில் இருக்கும் கார்பன் எண்ணெயில் உள்ள தீமை விளைவிக்க கூடிய ரசாயன பொருட்களை உள்ளிழுக்கும் திறன் உடையது. இந்த பருத்தி கார்பன் உறிஞ்சி, அதன் எடையைப் போல், 40 மடங்கு எண்ணெய் கசிவை உறிஞ்சும் திறன் உடையது. இதனால், சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.இவ்வாறு சேஷாத்ரி ராம்குமார் கூறினார். இரட்டை கோபுர தாக்குதலை விடமிக மோசமான பாதிப்பு இது:



மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் கசிவு ஏற்பட்டபின், இதுவரை நான்கு முறை அந்த பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியுள்ளார், அமெரிக்க அதிபர் ஒபாமா. இதுகுறித்து அவர் கூறியதாவது: அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பை விட, இது மிகவும் மோசமானது. அப்போது சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை போல், தற்போதும் ஏற்பட்டுள்ளது. இந்த விபரீதத்தின் மூலம், அமெரிக்காவின் சுற்றுச் சூழல் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.



குறிப்பாக, கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகள் தொடர்பான கொள்கையில் மாற்றம் தேவை. இந்த சம்பவம் எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், மிகப் பெரிய சவாலாகவும் அமைந்து விட்டது. இதற்கு காரணமான நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த இழப்பீடும் பெற்றுத் தரப்படும்.இவ்வாறு ஒபாமா கூறினார்.

ஜூன் 20, 2010

கிர்கிஸ்தான் அகதிகளுக்கு செம்பிறை உதவி

ரெட் கிரசண்ட் அதாரிட்டி என்ற செம்பிறை அமைப்பின் ஒரு குழு அமீரகத்திலிருந்து கிர்கிஸ்தான் அகதிகளுக்கு உதவுவதற்காக நிவாரணப் பொருட்களுடன் உஸ்பெகிஸ்தான் சென்றுள்ளது.


கடந்த வாரம் கிர்கிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான இன மோதல்களை அடுத்து ஆயிரக்கணக்கானோர் அண்டை நாடான உஸ்பெகிஸ்தானுக்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.


இந்தக் குழு அங்கே சென்று நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும். அதோடு மனிதாபிமான அடிப்படையில் அந்த மக்களுக்கு என்னென்ன உதவிப் பொருட்கள் அவசியம் என்று ஆய்வு செய்து விட்டு வரும்.


போர்வை, தற்காலிகக் குடில் (டெண்ட்), உணவு, மருந்து போன்ற அவசரகால உதவிப் பொருட்களை அவர்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம் என்று செம்பிறை அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் சாலிஹ் அல் தாயி கூறினார். இவர்தான் இக்குழுவுக்கு தலைமையேற்று செல்கிறார்.
7days

கிர்கிஸ்தான் மக்களுக்கு உதவும் படி ஐ.நா. கோரிக்கை

இன மோதல்களால் பாதிக்கப்பட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கிர்கிஸ்தான் மக்களுக்கு உதவி புரியுமாறு ஐ.நா. சபை கோரிக்கை விடுத்துள்ளது.

கிர்கிஸ்தானின் தென் பகுதியிலுள்ள ஓஷ் என்ற நகரத்தின் மக்கள் இன்னும் கடுமையான மோதல்கள் வெடிக்கும் என்ற பீதியில் உள்ளனர்.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், 71 மில்லியன் டாலர் உதவி கிர்கிஸ்தானுக்கு தேவை என்று கூறியுள்ளார்.

"வன்முறை கூடிக்கொண்டே செல்கிறது மரணங்களையும், காயங்களையும், கொள்ளைகளையும், பாலியல் வன்முறைகளையும், உள்கட்டமைப்புகள் அழிக்கப்படுவதையும் கண்டு அதிச்சியுற்றேன்" என்று ஐ.நா அவசரகால நிவாரண ஓருங்கினைப்பாளர் ஜான் ஹோம்ஸ் கூறினார்.
7days

இஸ்லாமியோ போபியா:மேற்குலகிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை, முஸ்லீம் நாடுகள் ஐ.நா கூட்டத்தில் வலியுறுத்தல்

வாஷிங்டன்:மேற்குலக நாடுகளும் அவற்றின் பல ஊடகங்களும் உமிழ்ந்து வரும் இஸ்லாமிய வெறுப்புணர்வினையும், விரோத போக்கினையும் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக துடைத்தெறிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென முஸ்லீம் நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ஐ.நா சபையின் மனித உரிமைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான், எகிப்து உட்பட பல்வேறு முஸ்லீம் நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கு பெற்றனர்.

அதில் மேற்குலக நாடுகள் முஸ்லீம்களை நடத்தும் விதம், முஸ்லீம்களை தெளிவான ஓர் இன ஒதுக்கலுக்கும், இன வேற்றுமைக்கும் உள்ளாக்குவதை வெளிப்படுத்துகின்றது என்று கூறியுள்ளனர்.


"அரபு வம்சாவழியினர் புதிய இன வேற்றுமை, இன ஒதுக்கல், கலாசார பாகுபாடு, மற்றும் இது தொடர்பான தொல்லைகளையும் எதிர் கொண்டு வருகின்றனர். மேலும் தனிமைப்படுத்துதல் மற்றும் ஒதுக்கப்படுதலுக்கும் உள்ளாகி வருகின்றனர்" என எகிப்து பிரதிநிதி கூட்டத்தில் குறிப்பிட்டார்.

57 இஸ்லாமிய நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) சார்பாக பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி "ஐ.நா வின் மனித உரிமை குழு ஓர் சிறப்பு விசாரணை குழுவினை பல்வேறு நாடுகளின் மத சுதந்திரத்தை ஆராயவும், உறுதி செய்யவும் நியமிக்கப்பட வேண்டும்" எனவும், மேலும் இது தொடர்பான தீர்மானத்தையும் முன் மொழிந்தார்.


மேலும் பல்வேறு நாடுகளின் கலாச்சார வேற்றுமையையும், மத பாகுபாட்டை போக்கி ஓர் சகிப்பு தன்மையுள்ள சூழலினை உருவாக்ககூடியதாக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். OICயும், ரஷ்யா, சீனா, கியூபா உட்பட அதன் 47 கூட்டணி நாடுகளும் முஸ்லீம்களை தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்துவதையும், இஸ்லாமிய விரோத போக்கினையும் கடுமையாக கூட்டத்தில் சாடியுள்ளனர்.

இந்த விசாரணைக்குழு ஐ.நாவின் மனித உரிமை குழுமத்திற்கு அதன் உறுப்பு நாடுகளின் மத சுதந்திரத்தை பாதுகாக்க, பலப்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.


OIC உட்பட பல்வேறு நாடுகள் ஏற்கனவே இதற்கான முயற்சியில் இணைந்து செயல்பட துவங்கியுள்ளன. பெரும்பாலான நாடுகள், வளர்ந்து வரும் இந்தியா, பிரேசில் போன்றவை இதில் இணைந்துள்ளன.மேற்கொண்டு ஈரான், இலங்கை உட்பட பிற நாடுகளை இதில் இணைய செய்வது மிக அவசியம்.

பெரும்பாலான நாடுகள் ஹமாஸின் நிர்வாகத்தில் உள்ள ஃபலஸ்தீனின் காஸ்ஸா பகுதியில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் மனித உரிமை மீறல்களையும், ஆக்கிரமிப்பையும் கடுமையாக கண்டித்தன.


செவ்வாய் கிழமை நடந்த கூட்டத்தில் நார்வே ஈரானின் அணு உலை செறிவாக்க நடவடிக்கையை ஐ.நாவின் பிரிவு 56 கீழ் கண்டித்தது. இருந்த பொழுதும் ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் எலின் சம்பர்லின் ஈரானுக்கு எதிரான ஐ.நாவின் தீர்மானத்தை குறை கூறினர்.

ஈரானுக்கு எதிரான ஐ.நாவின் தீர்மானம் நிறைவேற்றிய போதும், ஈரானின் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகவே இது பார்க்கப்படுகின்றது.
14 நாடுகள் மட்டுமே உள்ள பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மாற்றாக OIC உட்பட மனித உரிமைகளை காக்க பாடுபடும் நாடுகள் செயல்படுவது மனித உரிமை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.


மேலும் ஐ.நா வால் அங்கிகரிக்கப்பட்ட மனித உரிமை இயக்கங்கள் ஐ.நா வின் ஈரானுக்கு எதிரான தீர்மானம் "அமெரிக்காவின் திட்ட அறிக்கை" என கடிந்துள்ளன.

சர்வதேச மனித உரிமை மற்றும் நன்னெறி கூட்டமைப்பின் நீண்ட கால தலைவராக இருந்த ராய் பிரவுன் ஐ.நா சபையில் மேற்குலக நாடுகளின் இது போன்ற தீர்மானங்களை இதற்கு முன் பார்க்கவில்லை என இஸ்லாமியோ போபியா விற்கு எதிரான தீர்மானம் பற்றி கூறியுள்ளார்.


ஐ.நாவில் உள்ள பல ஓட்டைகள் மேற்குலகால் பயன்படுத்தப்பட்டது. இனி அது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் 2006 இல் தொடங்கப்பட்ட மனித உரிமை முயற்சி இப்பொழுது பயனளிக்க தொடங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 19, 2010

வெள்ள நிவாரணத்துக்கு நரேந்திர மோடி கொடுத்த நிதியை திருப்பி அனுப்பினார் நிதிஷ்குமார்

பாட்னா:பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த 12 ம் தேதி நடந்தது. அன்று பீகார் பத்திரிகைகளில் வெளியான முழு பக்க விளம்பரத்தில் நரேந்திர மோடியும், நிதிஷ்குமாரும் கைகோர்த்து நிற்கும் போட்டோ வெளியாகியிருந்தது. அது கடந்த ஆண்டு லூதியானாவில் நடந்த தே.ஜ. கூட்டணி கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

பீகாரில் வெள்ளச் சேதம் ஏற்பட்டபோது குஜராத் அளித்த நிதியுதவி பற்றியும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பீகாரில் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள நிதிஷ்குமார், முஸ்லிம் ஓட்டுகளை பெறுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், மோடியுடன் சேர்ந்து அவர் கைகோர்த்து நிற்கும் படம் வெளியானது நிதிஷ்குமாரை கோபப்படுத்தியது. இதையடுத்து பா.ஜ.க தலைவர்களுக்கு அன்றைய தினம் அழைப்பு விடுத்திருந்த விருந்தை ரத்து செய்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த நிதிஷ்குமார், "இயற்கை சீற்றத்துக்காக செய்த உதவியை சொல்லிக் காட்டுவது அநாகரிகம். நம் கலாசாரத்துக்கு எதிரானது. பீகார் வெள்ள நிவாரணத்துக்கு, நரேந்திர மோடி அளித்த நிதி மிச்சமிருந்தால் அதை திருப்பி அனுப்புவேன்" என்றார்.

அதன்படி, குஜராத் அரசு அனுப்பிய ரூ.5 கோடி நிதியை, பீகார் அரசு இன்று திருப்பி அனுப்பியது.

இஸ்ரேலிய தொடர்புகளை முடிவுக்கு கொண்டுவரும் துருக்கி

இஸ்தான்புல்:ராணுவ ஒப்பந்தங்கள், வர்த்தகத்துறை பரிமாற்றங்கள் என அனைத்து இஸ்ரேலிய தொடர்புகளை துருக்கி முடிவிற்கு கொண்டுவர பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் ஆங்கில நாளிதழ் ‘ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை துருக்கி திரும்ப அனுப்பாது என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 31ம் தேதியன்று, துருக்கி நிவாரணக் கப்பல் தாக்கப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரேலுடனான தன் எதிர்காலத் திட்டங்களை துருக்கி மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இத்திட்டங்கள் துருக்கி பாராளுமன்றத்தில் விவாதங்களில் உள்ளன.

துருக்கி கப்பல் தாக்கப்பட்ட விவகாரத்தில் இஸ்ரேல் ஐ.நா.வின் விசாரணையை ஏற்கும் வரை துருக்கி அரசு இஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை திருப்பியனுப்பாது என்றும், சுமார் $7.5 மில்லியன் மதிப்புடைய இஸ்ரேலிய ராணுவத் திட்டங்களை முடிவிற்கு கொண்டுவருவது என பல முடிவுகள் விரைவில் தீர்மானகளாக துருக்கி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவுள்ளதாக அந்நாளிதழ் செய்தி வெளிட்டுள்ளது.

இ-குப்பைகளின் ஆபத்து அதிகரிப்பு

மொபைல் போன், கம்ப்யூட்டர், இன்ன பிற மின்னணு (எலக்ட்ரானிக்) சாமான்கள் அதிகரிக்க அதிகரிக்க அதன் கழிவுகளும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இந்த இ-குப்பைகளினால் ஏற்படும் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

மொபைல் போன், கம்ப்யூட்டர், குளிர்சாதனப் பெட்டிகள் (ஃப்ரிட்ஜ்), ஏ.சி. போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் அதிகம் உபயோகப்படுத்தும் இந்தியா போன்ற நாடுகளில் இது பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது.

இ-குப்பைகளை மறுசுழற்சி (Recycling) செய்து உபயோகம் செய்யக் கூடிய ஒன்றிரண்டு திட்டங்கள் பெங்களூரில் துவக்கப்பட்டுள்ளது என்றாலும் இது பரவலாக்கப்படவில்லை.
2020 ல் இந்தியாவில் பழைய கம்பயூட்டர்களின் எண்ணிக்கை 2007 ஐ விடவும் 500 மடங்கு அதிகரிக்குமாம்!


அதே போல் பழைய மொபைல் போன்களின் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரிக்குமாம்.

உலக அளவில் 40 மில்லியன் டன் இ-குப்பைகள் வருடந்தோறும். உருவாகின்றது.


மொபைல் போன்களின் அசுர வளர்ச்சி தான் இந்த அளவுக்கு இ-குப்பைகள் பெருகுவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றது.

இரண்டு நபர்களுக்கு ஒன்று என்ற அடிப்படையில் 2008 ல் மட்டும் 150 மில்லியன் மொபைல் ஃபோன்கள் அமெரிக்காவில் கழிக்கப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஜூன் 17, 2010

தென்னாப்பிரிக்காவில் உலகக் கோப்பை கால்பந்தாட்டத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம்

டர்பன்:தென்னாப்பிரிக்கா தலைநகர் டர்பனில் உலகக் கோப்பை கால்பந்தாட்டத்திற்கெதிராக சுமார் 3000 தென்னாப்பிரிக்கர்கள் போராட்டம் நடத்தினர்.அரசின் ஆர்ப்பாட்ட, ஆடம்பரச் செலவுகளுக்கெதிராக அவர்களின் போராட்டம் அமைந்தது.


நிறவெறிக்கெதிராக நடந்த சொவிடோ எழுச்சியின் 34 வது ஆண்டு நினைவு நேற்று(16 ஜூன்) நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.



இதனையொட்டி நடந்த பேரணியில் FIFA உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்காக அரசு ஆடம்பரமாகச் செலவு செய்வதைக் கண்டித்து ஆக்ரோசமாகக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


இலட்சக்கணக்கான மக்கள் ஏழ்மையில் ஏங்கிக் கொண்டிருக்கும் பொழுது இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த பேரணியை ஒருங்கமைத்த ஆலன் மர்ஃபி கூறுகையில், "மிகப்பெரும் பொருட்செலவில் கால்பந்து மைதானங்களை புனரமைக்கவும், வாங்கவும் செய்தால், இங்கு இலட்சக்கணக்கானோர் வீடுகளின்றி இருக்கக் கூடாது" என்று தனது ஆதங்கத்தை அரசுக்கு வெளிப்படுத்தினார்.

பேரணியின் போது "FIFA கொள்ளைக் கும்பலே வெளியேறு" என்ற கோஷம் விண்ணை முட்டியது.

'ஃப்ரீடம் ஃப்ளோடில்லா' கப்பலில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள்

கடந்த மாதம் காஸ்ஸாவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றி வந்த 'ஃப்ரீடம் ஃப்ளோடில்லா' கப்பல்களை இஸ்ரேல் அராஜகமாகத் தடுத்து நிறுத்தி தாக்கியது இதில் 9 தன்னார்வத் தொண்டர்கள் கொல்லப்பட்டனர்.

அவர்களை கொன்றதும் இல்லாமல் மீதி உள்ளவர்களை இஸ்ரேலிய இராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட ஒரு சமூக அமைப்பு கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு சட்ட பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் வந்துள்ளது.

ஃபலஸ்தீன் சட்ட உதவி நிதி ( Palastine Legal Aid Fund - PLAF) என்ற சமூக சேவை அமைப்பின் தலைவர் மேரி நஸ்ஸல் பதாய்னெஸ், "எங்கள் குழு அவர்களுக்காக வாதாடும், அவர்களின் உரிமைகளை நிலை நாட்ட பாடுபடும்". என்று கூறினார்.

ஆறு சர்வதேச வழக்கறிஞர்கள் தங்கள் சட்டக் குழுவில் இணைந்திருப்பதாக இந்த ஜோர்பினிய வழக்கறிஞர் கூறினார்.

ஜூன் 16, 2010

பொருளாதார நெருக்கடி:இஸ்லாமிய பொருளாதாரத்திற்கு ஆர்வம்

பஹ்ரைன்:வட்டி அமைப்பிலான பொருளாதார அமைப்பு பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரும் இவ்வேளையில் இஸ்லாமிய பொருளாதாரத்தின் பக்கம் மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகின்றது.இந்த வருடம் இஸ்லாமிய வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகள் ஒரு ட்ரில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."இந்த அசுர வளர்ச்சியை அதிகக் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும். இப்பொழுது நிலவிவரும் சர்வதேசப் பொருளாதார நெருக்கடியிலிருந்து பாடங்களைப் பயில வேண்டும்".என்று பஹ்ரைன் மத்திய வங்கியின் கவர்னர் ரஷீத் அல் மராஜ் தெரிவித்துள்ளார்."இரண்டு வருடங்களுக்கு முன்பு சர்வதேசப் பொருளாதார நெருக்கடி வெடித்தது. அதன் பிறகு இஸ்லாமியப் பொருளாதாரத்தின் பக்கம் ஆர்வம் பெருக்கெடுத்து வருகிறது. ஆனால் இதற்கு ஈடுகொடுக்கக் கூடிய அமைப்பில் திருப்தியில்லை" என்று மேலும் அவர் கூறினார்.சிங்கப்பூர் வணிகத்துறை அமைச்சர் லிம் ஹிங் கியாங் பஹ்ரைன் மத்திய வங்கி கவர்னரின் கருத்தை ஆமோதித்தார்.இது குறித்து மேலும அவர் தெரிவிக்கையில் "இஸ்லாமியப் பொருளாதாரத்தின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளதற்கு, இப்பொழுதுள்ள பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தியுள்ள கசப்பான அவலங்களே இதற்குக் காரணம்" என்று அவர் கூறினார்.

உலகின் கவனத்தை இன்று தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான்.

உலகின் கவனத்தை இன்று தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான். அமெரிக்காவின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் 'மோப்பம் பிடித்தவர்கள்' அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் பேரளவில் கண்டுபிடித்துள்ளனர்.இப்படியொரு தாதுப் படுகை, பெரும் பொக்கிஷம் தங்கள் நாட்டில் இருப்பதே தெரியாமல் காலத்தைக் கழித்து வந்துள்ளனர் ஆப்கன் ஆட்சியாளர்கள். இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு சொல்லப்பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது.ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும்.'இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்' என்கிறார் ஒரு அதிகாரி.லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம்.இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்.ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா.ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது.ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்.மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து,ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும்" என்றார்.இந்த கனிமப் புதையலில் மதிப்பு என்ன?இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரைத் தாண்டும் என்கிறது ஆரம்பகட்ட கணக்கு. பில்லியன் கணக்கில் சொன்னால் 1000 பில்லியன் டாலர்கள். இன்றைய தேதிக்கு இந்தியாவின் ஜிடிபியே 1.23 ட்ரில்லியன்தான்!!.இவ்வளவு பெரிய புதையலை எப்படிப் பயன்படுத்தப் போகிறது ஆப்கானிஸ்தான் என்பதுதான் இப்போது எழுந்துள்ள 'பில்லியன் டாலர் கேள்வி'!. அல்லது இதை அமெரிக்கா எப்படி மறைமுகமாக சுருட்டப் போகிறது என்பது தான் 'ட்ரில்லியன் டாலர் கேள்வி!'.ஆப்கானிஸ்தானில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மீண்டும் தலிபான்கள் வெற்றிபெறும் நிலை. நாட்டின் பல பகுதியில் இன்னும் தலிபான்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் உள்ளது.இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப் பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில், இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியலறிஞர்கள்.இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படியெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது.ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.ஆப்கானிஸ்தானில் தாமிர தாது தோண்டியெடுக்கும் முழு உரிமையையும் சீனாவுக்கு தாரைவார்க்க ஆப்கன் அமைச்சர் ஒருவரே 30 மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளார். இன்னும் அவர் அமைச்சராகவே தொடர்வதும் அதை அதிபர் அமீத் கர்ஸாய் அனுமதிப்பதும், அமெரிக்கர்கள் பயத்தை அதிகரித்துள்ளது.ஆனால், பெரும்பகுதி கனிமங்களை கண்டுபிடித்ததே அமெரிக்காதான் என்பதால் முன்னுரிமை அவர்களுக்கே தரப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது ஆசைப் பார்வை பார்ப்பதைப் பார்த்தால், 'தேனெடுத்தவன் புறங்கையை நக்கிய கதையாகுமா அல்லது தேனையே எடுத்துக் கொண்டு வெறும் புறங்கையை மட்டும் ஆப்கன் மக்களுக்கு காட்டப் போகிறார்களா என்பது தெரியவில்லை.கடந்த ஓரிரு வாரங்களில் தான் இந்த ஆப்கான் கனிம சமாச்சாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளது அமெரிக்கா.'Unobtanium' என்ற கற்பனையான கனிமத்தை எடுக்க பண்டோரா கிரகத்தையே அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்து, அதன் மக்களை ஒழித்துக் கட்டும் கற்பனைக் கதையைத் தான் 'அவ்தார்' என்ற படமாக எடுத்தார் ஜேம்ஸ் கேமரூன். 3 டி சமாச்சாரம், அன்னிய கிரகவாசிகள் என்று கதை போனதால் கேமரூன் சொல்ல வந்த விஷயம் (கதையின் கரு ) பெரிதாகப் பேசப்படவில்லை.இப்போது ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிம வளம் கிட்டத்தட்ட பண்டோரா கிரக கதை மாதிரி ஆகிவிடுமோ என்ற அச்சம் இப்போதே பரவ ஆரம்பித்துவிட்டது.

ஜூன் 15, 2010

வெளிநாடுவாழ் இந்தியர்கள் விரைவில் ஓட்டுரிமை பெற பிரகாசமான வாய்ப்பு

பல லட்சக்கணக்கான வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் நீண்டகால கோரிக்கையான தம் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பான வாக்குரிமையை பெறுவதற்கான காலம் மிக சமீபத்தில் உள்ளது.வாக்குரிமையை வழங்குவதற்கான மசோதாவின் முன் வரைவு மத்திய அமைச்சரவை குழுக்கூட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த முன் வரைவு மசோதா நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்விற்குட்படுத்தப் பட்டது.பாதுகாப்புத் துறை அமைச்சர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைகுழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மசோதா தற்பொழுது அமைச்சரவையினால் ஒப்புதலுக்குட்படுத்தப்பட்டு அடுத்தபடியாக நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கான அமைச்சர் வயலார் ரவி செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதல் பெற்ற சில மாதங்களில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் பிரவாசி பாரதீய தீவாஸ் என்ற கூட்டத்தில் உரையாற்றும் பொழுது வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் இந்த "நியாயமான கோரிக்கையை" இந்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது எனக்கூறியுள்ளார்.ஜனநாயக வளர்ச்சியில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் வாக்குரிமை பங்களிப்பு, அவர்களுடைய பங்களிப்பு மற்றும் வளர்ச்சி என்ற இரண்டு வழியில் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுமென வயலார் ரவி கூறியுள்ளார்.மக்களின் பங்களிப்பு மசோதா என்ற பெயரில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் வாக்குரிமை மசோதா 2006 ஆம் ஆண்டு ராஜ்ய சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மசோதா நாடாளுமன்ற நிலைகுழுவிற்கு அனுப்பப்பட்டு பின்பு மத்திய அமைச்சர்கள் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.தற்பொழுதுள்ள சட்ட நெறிமுரையின்படி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 6 மாதம் அல்லது அதற்கு கூடுதலாக வெளிநாடுகளின் வசிக்கும் பட்சத்தில் அவர்களுடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும்.தற்பொழுது முன்மொழியப்பட்டுள்ள மசோதாவின்படி வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற அனுமதி அளிக்கும்.அவர்கள் பணி நிமித்தத்தின் காரணமாகவோ அல்லது மேற்படிப்பின் காரணமாகவோ வெளிநாட்டில் வசித்தாலும் சரியே. இந்த வாய்ப்பு தேர்தல் நடைபெறும் நாள் அன்று மட்டுமே பயன்படுத்த முடியும்.இந்த மசோதாவிற்கு அனுமதியளித்த அமைச்சர்கள் குழுவில் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் மற்றும் சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஜூன் 14, 2010

இஸ்ரேலிய அடாவடித்தனத்தைத் தமது நாடு ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை

இஸ்தான்புல்:ஃப்ரீடம் ஃபுளோடில்லா துயர்துடைப்புக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தி துருக்கியர்கள் பலரைப் படுகொலை செய்து, இன்னும் பலரை படுகாயமடையச் செய்த இஸ்ரேலிய அடாவடித்தனத்தைத் தமது நாடு ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை என்று துருக்கிய ஜனாதிபதி அப்துல்லாஹ் குல் தெரிவித்துள்ளார்.கடந்த சனிக்கிழமை (12.06.2010) 'லி-மொன்டே' எனும் ஃபிரான்ஸியப் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியின்போது ஃப்ரீடம் ஃபுளோடில்லா மீதான இஸ்ரேலியத் தாக்குதலானது, பயங்கரவாத செயலை ஒத்திருக்கிறது என்று வர்ணித்துள்ளார்.தான் மேற்கொண்ட இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோரல், ஏதேனும் ஒருவகையில் இழப்பீடு வழங்குதல், காஸா மீதான முற்றுகையை நீக்குதல் முதலான நடவடிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொள்ளாத வரையில் அதன் அடாவடிச் செயற்பாட்டை எளிதில் மறந்துவிடுவது எவ்வகையிலும் சாத்தியமில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தூர்ந்து கிடக்கும் வீராணத்தின் துணை ஏரிகள்

கடலூர் மாவட்டத்தில் வீராணத்தின் துணை ஏரிகளாக உருவாக்கப்பட்டவை வாலாஜா, பெருமாள் ஏரிகள். மழை இல்லாத காலத்திலும், கொள்ளிடத்தில் வீணாகும் காவிரி நீரைப் பயன்படுத்தும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், வீராணம் ஏரி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வாலாஜா மற்றும் பெருமாள் ஏரிகளுக்குக் காவிரி நீர் கிடைக்கும் வகையில், 1936-ல் கொள்ளிடம் கீழணை கட்டப்பட்டது.
வீராணம் ஏரி நிரம்பியதும் நீர் வீணாகாமல் இருக்க, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கும் வாலாஜா, பெருமாள் ஏரிகளுக்கும் உபரி நீர் செல்லும் வகையில், வீராணம் ஆயக்கட்டு முறை உருவாக்கப்பட்டு இருப்பது அற்புதமான நீர்ப்பாசன முறையாக அமைந்து உள்ளது. சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்வதால் மட்டுமே, வீராணம் ஏரி பற்றி விவசாயிகள் பேசுவது அரசின் காதுகளில் விழுகிறது. அதனால் வீராணம் ஏரியை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைளில், நூறில் ஒன்றாகிலும் நிறைவேறுகிறது. ஆனால் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி பற்றிய கோரிக்கைகளை தமிழக அரசு, தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாகவே விவசாயிகள் கூறுகிறார்கள்.
வாலாஜா ஏரி 15 ஆயிரம் ஏக்கர், பெருமாள் ஏரி 10 ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பளவைக் கொண்டவை. இந்த இரு ஏரிகளையும் 12 கி.மீ. நீளம் உள்ள நடுப்பரவனாறு இணைக்கிறது. பராமரிப்பு இன்மையால் கடந்த 50 ஆண்டுகளில் 10 அடி உயரத்துக்கு மண் மேடிட்டு, வாலாஜா ஏரி முற்றிலும் தூர்ந்து, தற்போது ஒரு வாய்க்கால்போல் காட்சி அளிக்கிறது. பெருமாள் ஏரி விரைவில் தூர்ந்து விடும் அபாயம் உள்ளது. என்.எல்.சி. சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர், வாரத்தில் 3 நாள்கள் பெருமாள் ஏரிக்கும், 4 நாள்கள் வாலாஜா ஏரிக்கும் விடப்படுகிறது. சுரங்க நீரைச் சுத்திகரிக்காமல் விடுவதால், அதில் உள்ள கரித்துகள்கள் மற்றும் கழிமண், படிந்து, இரு ஏரிகளும் தூர்ந்து வருவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். எனினும் சுரங்க நீர் இந்த இரு ஏரிகளின் பாசனத் தேவையில் 25 சதவீதத்தைக் கூடப் பூர்த்தி செய்வதில்லை என்கிறார்கள்.
முப்போகம் விளையும் 30 ஆயிரம் நிலங்கள் நிச்சயமற்ற குறுவை சாகுபடிக்கும், நிச்சயமற்ற காலம் கடந்த சம்பா சாகுபடிக்கும் தள்ளப்பட்டுவிட்டது. இரு ஏரிகளும் தூர்வாரப்பட்டு, பரவனாற்றின் கரைகளைச் சீரமைத்து, வடகிழக்குப் பருவமழை காலத்தில் முறையாக உபரிநீர் கடலுக்குள் வழியும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தால், 30 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் முப்போகம் நெல் விளையும் என்கிறார்கள் விவசாயிகள்.
இதுகுறித்து பெருமாள் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகம் கூறுகையில்,
"50 ஆண்டுகளில் வாலாஜா ஏரி முற்றிலும் தூர்ந்து விட்டது. பெருமாள் ஏரி தூர்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் வடகிழக்குப் பருவமழை காலத்தில் கிடைக்கும் நீரைச் சேமிக்க முடியவில்லை. வழிந்தோடும் உபரி நீரும் விரைவில் கடலில் கலக்காததால் 20 கிராமங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. பாதிப்புகளுக்கு நிவாரணமாக ஆண்டுதோறும் ரூ.15 கோடியை அள்ளி வீசுகிறது தமிழக அரசு. ஆனால் நிரந்தரத் தீர்வுக்கு வழிகாணவில்லை. பரவனாற்று நீர் எளிதில் வடிய, ரூ.5 கோடியில் அறிவிக்கப்பட்ட அருவாமூக்குத் திட்டம் அறிமுக நிலையிலும், வாலாஜா ஏரியை ரு.25 கோடியில் தூர்வாரும் திட்டம், என்.எல்.சி. நிறுவனத்தின் அறிவிப்பு நிலையிலும் உள்ளது. பெருமாள் ஏரியைத் தூர்வார திட்டம் தயாரிக்கப்படுவதாக பல்லாண்டுகளாகத் தெரிவிக்கிறார்கள்' என்றார்.

ஜூன் 10, 2010

நீர் மூழ்கிக் கப்பல்கள்


நீர் மூழ்கிக் கப்பல்கள் கடலின் வெகு ஆழமான பகுதி வரை சென்று திரும்பும் ஆற்றல் வாய்ந்த ஒரு சாதனமாகும். மனிதனின் சாதாரண நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு ஆக்கப்பட்ட சப்மெரீன் எனப்படும் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் இன்று மனிதன் அடையும் பயன்கள் ஏராளம்.

நீர் மூழ்கிக் கப்பலை மனிதன் ஏன் எவ்வாறு உருவாக்கினான் என்பது பலருக்குத் தெரியாது.மனிதன், முத்து, வைரம் உட்பட கடலுக்கு அடியில் உள்ள பெறுமதியான படைப்புகளைத் தேடி காலா காலமாகவே கடலின் அடிப்பரப்பு வரை செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளான். இதற்காக நீரினுள் இயங்கும் சாதனமொன்றை உருவாக்கும் எண்ணத்தையும் அவன் வளர்த்து வந்துள்ளான்.ஹாலந்து நாட்டைச் சேர்ந்த கார்னேலியஸ் வால்டிரப் என்பவர் 1620ம் ஆண்டிலே நீரில் மூழ்கும் படகொன்றினை அமைப்பதில் ஈடுபட்டு வெற்றி கண்டார்.மரத்தால் செய்யப்பட்டு தோலால் நீர் புகாது போர்த்தப்பட்ட இந்த படகைத் தொடர்ந்து பல்வேறு மூலப் பொருட்களின் உதவி கொண்டு பல்வேறு முறைகளில் நீர் மூழ்கிக் கப்பல் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

1727ம் ஆண்டு ஆகும் போது இங்கிலாந்தில் மாத்திரம் 14 வகையான நீர் மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்பட்டன.18ம் நூற்றாண்டின் இறுதிக்குள் உலகில் விதவிதமான பல தரப்பட்ட நீர் மூழ்கிக் கப்பல்கள் ஏட்டிக்குப் போட்டியாக உருவாக்கப்பட்டன.1880ம் ஆண்டிலே நீராவி இயந்திரத்தால் இயங்கக் கூடிய நீர் மூழ்கி கப்பல் உருவானது. அதைத் தொடர்ந்து பெற்றோல், மின்சக்தி என்பவற்றின் மூலம் இயங்கும் கப்பல்கள் உருவாகின.மனிதனின் பொருளாதார விருத்தியை குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள், யுத்தங்களுக்கு உதவியாக பிற்காலத்தில் பயன்படலாகின.

முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களின் போது அவை வெற்றிகரமாக இயக்கப்பட்டன. எதிரிகளின் படையெடுப்பைக் கண்காணிப்பதிலும் எதிரிகளின் யுத்தக் கப்பல்களை நிர்மூலமாக்குவதிலும் அவை சிறந்த சேவையை ஆற்றின.உருக்கு, இரும்புத் தகடு, கடினமான உலோகங்கள் பலவற்றாலும் ஆக்கப்பட்ட நீர்மூழ்கிகள் பல்வேறு நவீன தற்காப்புக் கருவிகள் பொருத்தப்பட்டவைகளாகவும் திகழ்ந்தன. நீரின் அடியில் இருந்த வண்ணமே நீரின் மேற்புறத்தில் நிலவும் நிலைமைகளை ஆராயும் பெரிஸ் கோப் எனும் கருவிகளும் எதிரிகளின் நீர் மூழ்கிக் கப்பல்கள் மற்றும் தாக்குதல்களுக்குப் பயன்படும் கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும், சோனார் கருவிகள் என்பனவும் நீர் மூழ்கிக் கப்பல்களில் பொருத்தப்படுகின்றன.

அணு சக்தியால் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்களுக்கு எரிபொருள் புகை என்பவற்றால், வாயுக்களால் எதுவித சிக்கலும் இன்றி இயங்க முடியும். நீர் மூழ்கிக் கப்பல்கள் பல வகைகளாக உருவாக்கப்பட்டு பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.கடல் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் அதனுள் அமிழ்ந்துள்ள அற்புதமான விளைச்சல் பொருட்கள் என்பன பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இவை மிகவும் பயன்படுகின்றன.கடலின் அடியில் இடம்பெறும் புவியியல் மாற்றங்கள் தொடர்பிலான ஆராய்ச்சிகளுக்கும் இவை உறுதுணை ஆகின்றன.நாடுகளின் பாதுகாப்புக்கும் நீர் மூழ்கிக் கப்பல்கள் இன்று பயன்படுத்தப்படுகின்றன.

வீராணம் ஏரியில் மூழ்கிய அதிகாரி உடல் கிடைத்தது

வீராணம் ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய அண்ணாமலை பல்கலைக் கழக தனி அதிகாரியின் உடல் நேற்று மீட்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த பூர்த்தங்குடியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகன் பழனிவேல் (30). அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி அதிகாரியாக இருந்தார். இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் வீராணத்தில் குளித்தார். கந்தகுமரன் மதகு அருகே குளிக்கும்போது பழனிவேல் தண்ணீரில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஏரியில் படகு மூலம் தேடினர். இதற்கிடையே நேற்று பகல் ஒரு மணிக்கு பழனிவேல் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

ஜூன் 08, 2010

சிதம்​ப​ரத்​தில் தொட​ரும் போக்​கு​வ​ரத்து நெருக்​கடி



சிதம்​ப​ரம் நக​ரில் அனைத்து சாலை​க​ளும் இரு​வ​ழிப் பாதை​யாக மாற்​றப்​பட்​ட​தால் போக்​கு​வ​ரத்து நெருக்​கடி ஏற்​பட்டு தினந்​தோ​றும் விபத்​து​கள் நடக்​கின்​றன.​÷கு​றிப்​பாக மேல​ரத வீதி,​​ தெற்​கு​ரத வீதி,​​ சபா​நா​ய​கர் தெரு,​​ போல்​நா​ரா​ய​ணன் தெரு ஆகி​யவை ஒரு​வ​ழிப் பாதை​யாக இருந்​தன.​ தற்​போது நகர காவல் துறை​யி​னர் அவற்றை ​ இரு​வ​ழிப் பாதை​யாக மாற்​றி​ய​தால் இரு​பு​ற​மும் வாக​னங்​கள் செல்​வ​தால் தினந்​தோ​றும் விபத்து நடக்​கி​றது.​

மே​ல​ர​த​வீதி இரு​பு​ற​மும் நடை​பாதை வியா​பா​ரி​க​ளால் ஆக்​கி​ர​மிக்​கப்​பட்​டுள்​ளது.​ அதன் பின்​னர் நிறுத்​தப்​ப​டும் வாக​னங்​களை தாண்டி போக்​கு​வ​ரத்​துக்கு குறு​கிய சாலையே உள்​ளது.​ இந்​நி​லை​யில் அச்​சாலை இரு​வ​ழிப் பாதை​யாக மாற்​றப்​பட்​ட​தால் கடும் போக்​கு​வ​ரத்து நெருக்​கடி ஏற்​பட்​டுள்​ளது.​ ​வ​டக்​கு​ரத வீதி​யில் நிறுத்​தப்​ப​டும் லாரி​க​ளா​லும்,​​ கீழ​ரத வீதி​யில் நிறுத்​தப்​ப​டும் சுற்​று​லாப் பய​ணி​க​ளின் வாக​னங்​க​ளா​லும் அப்​ப​கு​தி​யில் போக்​கு​வ​ரத்து நெருக்​கடி ஏற்​பட்டு அடிக்​கடி விபத்​து​கள் ஏற்​ப​டு​கின்​றன.​

சிதம்​ப​ரம் மற்​றும் அண்​ணா​மலை நக​ரில் ஆட்​டோக்​க​ளின் எண்​ணிக்கை மிக அதி​கம்.​ இவற்​றில் பாதிக்​கும் மேலான ஆட்​டோக்​கள் பர்​மிட்,​​ லைசென்ஸ்,​​ காப்​பீடு இல்​லா​மல் இயக்​கப்​ப​டு​கின்​றன.​÷அ​ள​வுக்கு அதி​க​மாக இயங்​கும் மினி​டோர் லாரி​கள்,​​ ஆட்​டோக்​க​ளி​னால்​தான் சிதம்​ப​ரம் நக​ரில் போக்​கு​வ​ரத்து நெருக்​கடி ஏற்​ப​டு​கி​றது.​ ​÷மே​ல​ரத வீதி,​​ தெற்​கு​ரத வீதி,​​ பஸ் நிலை​யம் பகு​தி​யில் ஆட்​டோக்​கள் சவா​ரியை தேடி எதி​ரும்,​​ புதி​ரு​மாக செல்​வ​தால் பாத​சா​ரி​க​ளும்,​​ இரு​சக்​கர வாக​னங்​கள் ஓட்​டு​வோ​ரும் கடும் அவ​திக்​குள்​ளா​கி​யுள்​ள​னர்.​÷அ​ரசு மருத்​து​வ​மனை,​​ அண்​ணா​ம​லைப் பல்​கலை மற்​றும் சீர்​காழி,​​ மயி​லா​டு​துறை ​ உள்​ளிட்ட பகு​தி​க​ளுக்​குச் செல்​லும் முக்​கி​யத் தெரு​வான போல்​நா​ரா​ய​ணன் தெரு​வில் உள்ள ஹோட்​ட​லுக்கு வரும் வாக​னங்​கள் முழு​வ​தும் சாலை​யி​லேயே நிறுத்​தப்​ப​டு​வ​தால் அத்​தெ​ரு​வில் அடிக்​கடி போக்​கு​வ​ரத்து ஸ்தம்​பித்து பொது​மக்​கள் பெரும் அவ​தி​குள்​ளா​கின்​ற​னர்.​ ​

ஹோட்​ட​லுக்கு பார்க்​கிங் வசதி இல்​லா​த​தால் அனைத்து வாக​னங்​க​ளும் சாலை​யி​லேயே நிறுத்​தப்​ப​டு​கின்​றன.​ ​ ​காவ​லர்​கள் பற்​றாக்​குறை:​​ சிதம்​ப​ரத்​தில் போக்​கு​வ​ரத்து காவல் நிலை​யம் தொடங்​கப்​பட்​டும் போதிய இடம்,​​ போதிய காவ​லர்​கள் இல்​லா​த​தால் அவர்​க​ளால் போக்​கு​வ​ரத்து நெருக்​க​டியை போக்க முடி​ய​வில்லை.​ ​சிதம்​ப​ரம் போக்​கு​வ​ரத்து காவல் நிலை​யத்​துக்கு ஒரு இன்ஸ்​பெக்​டர்,​​ 2 சப்-​இன்ஸ்​பெக்​டர்​கள்,​​ 16 போலீ​ஸôர் இருக்க வேண்​டும்.​ ஆனால் தற்​போது ஒரு இன்ஸ்​பெக்​டர்,​​ ஒரு சப்-​இன்ஸ்​பெக்​டர்,​​ 6 போலீ​ஸôர்​தான் பணி​யாற்​று​கின்​ற​னர்.​ எனவே கூடு​த​லாக போலீ​ஸôர் நிய​மிக்க வேண்​டும்.​

பள்ளி,​​ கல்​லூ​ரிக்கு செல்​லும் மாணவ,​​ மாண​வி​யர்​கள்,​​ முதி​யோர் இந்த போக்​கு​வ​ரத்து நெருக்​க​டி​யி​னால் கடும் அவ​திக்​குள்​ளா​கி​யுள்​ள​னர்.​ எனவே கட​லூர் மாவட்ட போலீஸ் கண்​கா​ணிப்​பா​ளர் சிதம்​ப​ரம் நக​ரின் போக்​கு​வ​ரத்தை கட்​டுப்​ப​டுத்த நட​வ​டிக்கை மேற்​கொள்ள வேண்​டும் என சிதம்​ப​ரம் நக​ர​வா​சி​கள் எதிர்​பார்ப்​பில் உள்​ள​னர்.

காவல் துறையில் பனிப்புரிய ஓர் அறிய வாய்ப்பு

நன்றி :சகோதரர் அப்துல் ரஹீம்

82 ஆண்டு கால 'உதைபந்தாட்ட' வரலாறு

உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள ஒரே விளையாட்டு கால்பந்து மட்டுமே. கால்பந்துக்கு ரசிகர்கள் இல்லாத நாடே இல்லை என்று கூறும் அளவுக்கு மிகத் தீவிரமான ரசிகர்களைக் கொண்ட ஒரே விளையாட்டும் கால்பந்து மட்டுமே. அதிலும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி என்பது உலக கால்பந்து ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாகும். வீரர்களையும், அணிகளையும், அவர்களின் அட்டகாச, ஆவேச ஆட்டங்களையும் காண தயாராகி விடுவார்கள் கால்பந்து ரசிகர்கள்.

எந்த அணி வெல்லும், எந்த வீரர் அதிக கோல் அடிப்பார், யாருக்கு கோப்பை என்ற பெட்டிங்கும் படு சூடாக நடக்கும். அந்த கால்பந்து திருவிழா தற்போது வந்து விட்டது.உலகக் கோப்பைப் போட்டிகள் வந்ததே ஒரு பெரிய வரலாறாகும். 1928ம் ஆண்டு சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவராக இருந்தவரான ஜூல்ஸ் ரிமெட், சர்வதேச அளவில் ஒரு கால்பந்துத் தொடரை நடத்த திட்டமிட்டார்.

இதையடுத்து விறுவிறுவனெ திட்டங்கள் தீட்டப்பட்டு 1930ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி உருகுவே நாட்டில் நடைபெற்றது. இந்த தொடரில் மொத்தம் 13 அணிகள் மட்டுமே கலந்து கொண்டன. அதன் பின்னர் சீரிய முறையில் உலகக் கால்பந்துப் போட்டித் தொடர்கள் முறைப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா போல நடத்தப்படத் தொடங்கியது.தற்போது உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளில் 32 அணிகள் இடம் பெறுகின்றன. இவற்றுக்கான தகுதிப் போட்டிகள் ஒவ்வொரு கண்டத்திலும் நடத்தப்பட்டு அணிகள் தேர்வாகின்றன.

தென் ஆப்பிரிக்காவில் ஜூன் 11ம் தேதி தொடங்கி ஜூலை 11ம் தேதி வரை 19வது உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.32 அணிகள், 64 ஆட்டங்கள் என ஒரு மாத காலத்திற்கு உலகக் கால்பந்து ரசிகர்களுக்கு தினசரி விருந்து காத்திருக்கிறது.இதுவரை நடந்துள்ள உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகபட்சம் பிரேசில் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.1958, 62, 70, 94, 2002 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பைப் போட்டித் தொடர்களில் பிரேசில் சாம்பியன் ஆனது.அதற்கு அடுத்து இத்தாலி நான்கு முறை (34, 38, 82, 2006) சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது. மேற்கு ஜெர்மனி 3 முறையும், அர்ஜென்டினா 2 முறையும், உருகுவே 2 முறையும், இங்கிலாந்து ஒரு முறையும், பிரான்ஸ் ஒரு முறையும் சாம்பியன் ஆகியுள்ளன.

உலகின் முதல் சர்வதேச கால்பந்துப் போட்டி...உலகின் முதல் சர்வதேச கால்பந்துப் போட்டி நடந்தது 1872ல். அப்போது இங்கிலாந்துக்கும், ஸ்காட்லாந்துக்கும் இடையே அப்போட்டி நடந்தது. அந்தக் கால கட்டத்தில் இங்கிலாந்துக்கு வெளியே கால்பந்துப் போட்டி நடைபெறுவது என்பது மிக மிக அரிதான ஒன்றாகும்.ஆனால் 1900ம் ஆண்டு வாக்கில் கால்பந்து உலகம் முழுவதும் பிரபலமடையத் தொடங்கியது. பல்வேறு நாடுகளில் கால்பந்து சங்கங்கள் உருவாக ஆரம்பித்தன. இங்கிலாந்துக்கு வெளியே, முதல் அதிகாரப்பூர்வமான போட்டியாக பாரீஸ் நகரில் 1904ம் ஆண்டு மே மாதம் பிரான்ஸுக்கும், பெல்ஜியத்திற்கும் இடையிலான சர்வதேச கால்பந்துப் போட்டி நடைபெற்றது.இந்தப் போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து பிரான்ஸ், பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து பாரீஸ் நகரில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தை முறைப்படி தொடங்கின.

இலவச வேலைவாய்ப்பு முகாம்!

மனிதர்களால் உருவாக்கப்பட்ட சாய்ந்த நிலை கோபுரம்

துபாய் : அபுதாபியில் கட்டப்பட்டுள்ள "கேபிடல் கேட்'என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதன்மையான சாய்ந்த நிலை கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான், உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில், அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில், சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி துவங்கப்பட்டது. இதற்கு "கேபிடல் கேட்'என பெயரிடப்பட்டது. 160 மீட்டர் உயரமுடைய இந்த கட்டடம், 35 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.இந்த கட்டடம், 18 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இது, பைசா கோபுரத்தின் சாய்மானத்தை விட நான்கு மடங்கு அதிகம். (பைசா கோபுரத்தின் சாய்மானம் 3.99 டிகிரி).

இந்த கட்டடத்தின் 12 மாடிகள் செங்குத்தாக உள்ளன.
அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாடிகள், படிப்படியாக சிறிய அளவில், சாய்ந்த அளவில் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் இந்த கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றம் கட்டி முடிக்கப்பட்டபோது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதை கட்டுவதற்கு, 10 ஆயிரம் டன் இரும்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து நட்சத்திர ஓட்டல் மற்றும் அலுவலகங்கள் இதில் இயங்கவுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள், இந்த கட்டடத்தின் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லோரையும் தூக்கிலிடுங்கள்"


போபால்:"தங்களுக்கு தீராத துயரத்தை பரிசாக அளித்த எல்லோரையும் தூக்கிலிடுங்கள்" 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு ஆறு லட்சம் பேர் பாதிப்படையவும் காரணமான போபால் விஷவாயு விபத்து வழக்கின் தீர்ப்பைக் கேட்டு ஹமீதாபி ஆவேசமடைந்து கூறிய வார்த்தைகள் இவை.

போபால் விஷவாயு துயரசம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாள் கறுப்புதினம் என நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்தவர்கள் உரக்க கூறினர்.மரணத்தின் குளிர்ந்த கரங்கள் தங்களுடைய காலனிகளை தேடிவந்த 25 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த கோர சம்பவம் நிகழ்ந்த இரவை நினைவுக் கூறும்பொழுது அவர்களுடைய முகத்திலிருந்து இதுவரை மிரட்சி மாறவில்லை.இச்சம்பவம் நிகழ்ந்தபொழுது ஹமீதாபீக்கு 28 வயதாகியிருந்தது. இந்த துயர சம்பவத்திற்கு காரணமான அனைவரையும் தூக்கிலிட்டால்தான் முழுமையான நீதி கிடைக்கும் என அவர் கூறுகிறார்.

தற்சமயம் சிறிதளவேனும் மன அமைதிக்கிடைப்பதற்காக இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளின் உருவப் பொம்மைகளை தூக்கிலிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் ஹமீதாபீயும் அவரைச் சார்ந்தவர்களும்.அன்றைய யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டேர்சன் உள்ளிட்ட 64 பேரின் உருவங்களை பல்வேறு இடங்களில் நாங்கள் தூக்கிலிடுவோம் என போபால் விஷவாயு துயரச்சம்பவத்தில் தனது 6 வயது மகனையும், மாமியாரையும் இழந்த ஷம்ஷாபீ கூறுகிறார்.

யூனியன் கார்பைடு தொழிற்சாலையின் எதிரேயுள்ள ஜெ.பி.நகரில்தான் அன்று 23 வயதாகியிருந்த ஷம்ஷாபீ வசித்துவந்தார்."எங்களுக்கு பொருளாதார உதவி தேவையில்லை. குற்றவாளிகளை தூக்கு மரத்திற்கு அனுப்புவதுதான் எங்களது கோரிக்கை" அந்த துயர சம்பவத்தில் கணவனை இழந்த சாந்திதேவி கூறுகிறார்.இப்பிரதேசம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்படைந்திருக்கும் பொழுது இந்த துயரத்திற்கு காரணமான டோ கெமிக்கல்ஸ் இந்தியாவில் சுதந்திரமாக வியாபரம் செய்கிறது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தமான நீர் அளிப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட பிரதமர் மன்மோகன்சிங்கின் வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என குற்றஞ்சாட்டுகிறார் இந்த துயர சம்பவத்தில் பாதிப்பிற்குள்ளான ஸஃப்ரீன்கான்.

பெயரளவிலான நீதிமன்ற தீர்ப்பைக் கேட்டவுடன் நீதிமன்றத்திற்கு வெளியேயும், போபாலின் பல்வேறு பகுதிகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் தலைமையில் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன.

செய்தி:பாலைவன தூது

ஜூன் 07, 2010

8 ஆண்டுகளாக ஒரே வண்டியுடன் வசதிகளின்றி சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையம்

அடிப்படை வசதியின்றி சேத்தியாத்தோப்பு தீயணைப்புத் துறையினர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சேத்தியாத்தோப்பு சந்தை தோப்பில் கடந்த 92ம் ஆண்டு தீயணைப்பு நிலையம் திறக்கப்பட்டது. 18 ஆண்டுகளாக அலுவலக கட்டடம், ஒயர்லஸ் கட்டடம், ஓய்வு அறை, எழுத்தர் அறை என்று நான்கு தடுப்பு சுவர் கொண்ட கட்டடத்தில் பெயரளவுக்கு ஆஷ் பெஸ்டாஸ் ஷீட்போடப்பட்டுள்ளது. ஓட்டை உள்ள இடங்களின் சம்மந்தட்டிகளைக் கொண்டு மறைத்துள்ளனர். வெயிலின் கொடுமைக்கும் மழையின் தூறலுக்கும் பயந்து தீயணைப்பு வண்டிக்கு அடியில் அமர்ந்து தனது எழுத் துப்பணிகளை கவனித்து வருகின்றனர். 17 பேர் பணிபுரியும் தீயணைப்பு துறையினரின் ஓய்வு அறையும் மோசமான நிலையில் உள்ளது.

இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில் 18 ஆண்டுகளாக ஒரே ஒரு தீயணைப்பு வண்டி தான் உள்ளது. அதுவும் அடிக்கடி மக்கர் செய்து விடுவதால் அதை சீரமைக்கவே தீயணைப்பு படையினர் படாத பாடுபடுகின்றனர். ஆயிரம் காலன் கொள்ளளவு கொண்ட தீயணைப்பு வண்டிக்கு தண்ணீர் பிடிக்க படாதபாடுபடுகின்றனர். சேத்தியாத்தோப்பு பேரூராட்சி குடிநீர் தொட்டியில் தண்ணீர் எடுக்கக் கூடிய வகையில் நீர் வெளியேற்று குழாய் அமைக்க வேண்டும் என தீயணைப்பு துறையினர் பலமுறை முறையிட்டும் பலனில்லாமல் தற்போது சர்க்கரை ஆலையில் உள்ள தரை கிணற்றுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தில் தேவையான வசதிகளை தற்போது இருக்கும் இடத்திலேயே செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலைக்காக வெளிநாடு செல்வோருக்கு விசா கிளியரன்ஸ் தேவையில்லை

வேலைக்காக வெளிநாடு செல்வோர் ஆன்-லைனில் விவரங்களை பதிவு செய்துவிட்டு செல்லும் வகையில் விசா நடைமுறைகள் எளிமையாக்கப்பட உள்ளன. இதற்காக, குடிபெயர்வோர் நிர்வாக ஆணையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்தியா முழுவதும் சென்னை, மும்பை, தில்லி உள்பட 8 இடங்களில் குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வேலைக்காக வெளிநாடு செல்லும் தனி நபர்களும், வேலைவாய்ப்பு முகவர்கள் மூலம் செல்பவர்களும் இந்த அலுவகத்தில்தான் விசா கிளியரன்ஸ் பெற வேண்டும்.இந்த நிலையில், சென்னை அலுவலகத்தில் கடந்த ஆண்டு சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி ஊழலில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்போதைய குடியுரிமை பாதுகாவலர் உள்பட 6 அதிகாரிகள் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் போலி முகவர்களின் நடமாட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களை நம்பி அப்பாவி இளைஞர்கள் பல லட்சங்களை ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது.இந்த அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக, குடிபெயர்வோர் நிர்வாக ஆணையத்தை அமைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தைப் போல் தனி அதிகாரத்துடன் இது செயல்படும்.இந்த ஆணையம் குறித்து குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது;'குடிபெயர்வோர் நிர்வாக ஆணையம் அமைக்கப்படுவதன் மூலம், குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலகங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோர், விசா கிளியரன்ஸ் பெற வேண்டிய அவசியமே இருக்காது. விசா நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு விடும்.வெளிநாடு செல்வோர் அமைச்சக இணையதளத்தில் விவரங்களைப் பதிவு செய்துவிட்டு, வெளிநாடு சென்று விடலாம். ஆனால், இந்த இணைய தள பதிவை, உரிமம் பெற்ற ஆள் தேர்வு முகவர்கள் மூலம் மட்டுமே பதிவு செய்யும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும்.உரிமம் பெற்ற முகவர்கள் மட்டுமே இணைய தளத்தின் குறிப்பிட்ட பகுதிக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும்.முகவர்களை மட்டும் கண்காணித்தால் போதும் என்ற நிலையை உருவாக்குவதற்காக, இதுபோன்ற நடைமுறை கொண்டுவரப்படுகிறது.இதனால் ஊழல் தடுக்கப்படுவதோடு,போலி முகவர்களின் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்படும்.இதற்கான சட்டத் திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.'மேலும் படிப்புக்காக வெளிநாடு செல்வோரையும் கண்காணிக்கவும், அதுதொடர்பான முகவர்களை முறைப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது' என்றும் அவர் கூறினார்.

நன்றி :பாலைவனதூது

"பெப்ஸில்" தவளை மிதப்பு....!

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையை அடுத்த பு.முட்லூரைச் சேர்ந்த வக்கீல் குமஸ்தா அஸ்கர்அலி (36). இவரது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்ததால் நேற்று காலை எம்.ஜி.ஆர்.இ சிலை அருகில் உள்ள பேக்கரி ஒன்றில், 500 மிலி., 'பெப்சி' பாட்டில் வாங்கினார்.அதிக, 'கூலாக' இருந்ததால் கையில் வைத்து குலுக்கிய போது பாட்டிலினுள் ஏதோ கிடப்பது தெரிந்தது. 'பெப்சி' பாட்டிலுக்கு பில் வாங்கிக் கொண்டு, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உள்ள ஆய்வகத்திற்குச் சென்று சோதனை செய்ததில் பாட்டிலினுள், தவளை இறந்து கிடப்பது தெரிந்தது. மூடி சீல் வைக்கப் பட்ட குளிர்பான பாட்டிலில், தவளை இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அஸ்கர்அலி கூறுகையில்,‘குளிர்பானத்தை வாங்கி குடிப்பதற்காக திறக்க முயன்றபோது தவளை இருப்பதை கவனித்தேன். குளிர்பான நிறுவனத்தின் இதுபோன்ற தவறால்,தாகம் தீர்க்கும் குளிர்பானம் விஷமாக மாறிவிடும் அபாயம் நிலை உள்ளது‘ என்றார்.

ஜூன் 06, 2010

கொள்ளுமேடு TNTJநிவாரண உதவி

நமதூர் சலாமத் புதுநகரில் கடந்த வாரம் (31.05.2010) நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அமீர் முஹம்மது அவர்களின் மகன் ஜுனைது வீடு முற்றிலும் சேதம் அடைந்தது,இதனால் அவருக்கு பலத்த சேதம் ஏற்பட்டது எனவே நமதூர் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக நிவாரண உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு. இதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று ரூ 11500/-
நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது.

நிவாரணத் தொகையை தலிபா அவர்கள் வழங்க கிளை நிர்வாகிகள் ரஜ்வி,ஜாவித்,நஜ்முத்தீன் ,இத்ரீஸ்,யாசின் மற்றும் தாயகம் சென்றுள்ள ஹுமாயுன் கபீர் மற்றும் இளையவன் பைஜி ஆகியோர் மற்றும் கிளைத் தொண்டர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

செய்தி : அபுல் மல்கர் - அபூதாபி

அடிமையாகும் தலைமுறை



ஆடுகளை வளர்த்ததற்காக ஓர் ஊழியரை,​​ அமெரிக்க நிறுவனம் அண்மையில் பணி நீக்கம் செய்தது.​ இதென்ன கொடுமை;​ ஆடு வளர்த்தது எப்படிக் குற்றமாகும் என்று எண்ணத் தோன்றும்.​ ஆனால்,​​ அந்த ஊழியர் வளர்த்தது உண்மையான ஆடுகளை அல்ல.​ அவை பொய்யானவை.​ ஆடுகள் வளர்க்கப்பட்டது அலுவலகக் கம்ப்யூட்டரில்.விஷயம் இதுதான்.​ விடியோ கேம்களின் அடுத்தநிலை இணையத்தில் ஆடப்படும் ஆன்லைன் விளையாட்டுகள்.​ 'விர்சுவல் ரியாலிட்டி' எனப்படும் உண்மை போன்ற மாயைதான் இன்றைய ஆன்லைன் விளையாட்டுகளின் மையக் கரு.விவசாயம் செய்வது,​​ ஆடு வளர்ப்பது,​​ காட்டு விலங்குகளைப் பராமரிப்பது,​​ ஹோட்டல் நடத்துவது என எல்லாமே ஆன்லைனில் சாத்தியம்.​ ஒரு மணி நேரம்,​​ இரண்டு மணி நேரம் அல்ல,​​ ஆண்டுக்கணக்கில்கூட இந்த ஆட்டங்களை ஆடிக்கொண்டே இருக்க முடியும்.இந்த ஆட்டங்களில் மூழ்கித் தூக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது இன்றைய இளைய தலைமுறை.​ இவர்கள் ஓடி விளையாடுவதில்லை.​ உட்கார்ந்து கொண்டோ,​​ படுத்துக் கொண்டோதான் விளையாடுவார்கள்.'பேஸ்புக்' எனப்படும் சமூக வலைத்தளத்துடன் இணைந்த 'பார்ம் வில்லா' என்ற ஆட்டம்தான் ஆன்லைனில் இப்போது மிகவும் பிரசித்தி.​ விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த ஆட்டம்.​ இதுவும் ஆண்டுக்கணக்கில் ஆடக்கூடிய ஆட்டம்தான்.​ விதை விற்பனை,​​ மகசூல் அறுவடை,​​ பால் உற்பத்தி,​​ தோட்டப் பராமரிப்பு என உண்மையான விவசாயி செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் இந்த ஆட்டத்தில் உண்டு.​
அடிப்படையில் இதெல்லாம் இலவசம்தான் என்றாலும்,​​ நம்முடைய தகவல்களை வணிகரீதியாகப் பகிர்ந்து கொள்வதன் மூலமாகவும்,​​ விளம்பரங்கள் ​ வழியாகவும் இணையதளத்துக்கு வருவாய் கிடைக்கிறது.​ தற்போதைய மதிப்பீட்டின்படி,​​ கோடிக்கணக்கானோர் பார்ம் வில்லாவில் விவசாயம் செய்வதாக பேஸ்புக் சொல்கிறது.​ அலுவலக வேலை நேரத்தில் இப்படி விவசாயம் செய்ததால்தான் மேற்சொன்ன நபருக்கு வேலை போனது.இதுபோன்ற வேறொரு ஆன்லைன் ஆட்டத்தில் மூழ்கி,​​ குழந்தைக்குப் பால் கொடுக்காமல் சாகடித்த தம்பதியைப் பற்றி அண்மையில் செய்தி வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தென்கொரியாவின் சியோல் நகரைச் சேர்ந்த அவர்கள் இருவரும் பிரியஸ் ஆன்லைன் என்ற தளத்தில் மாயக் குழந்தைக்கு பாலூட்டிச் சீராட்டி வளர்த்திருக்கின்றனர்.​ நாள்தோறும் பல மணி நேரம் இண்டர்நெட் மையங்களில் நேரத்தைப் போக்கியிருக்கிறார்கள்.​ அந்த நேரத்தில் 3 மாதமே ஆன அவர்களது சொந்தக் குழந்தை உணவில்லாமல் இறந்து போயிருக்கிறது.​ இது அசாதாரண சம்பவம்தான்.​ ஆனாலும்,​​ ஆன்லைன் ஆட்டங்கள் மக்களை எந்த அளவுக்கு மாயையில் மூழ்கச் செய்யக்கூடிய வலுக்கொண்டவை என்பதைப் புரிந்து கொள்ள இது நல்ல உதாரணம்.

சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்

செல்போனை சார்ஜ் செய்யாமல் வெளியில் சென்றுவிட்டீர்களா? கவலை வேண்டாம். சைக்கிள் இருந்தாலே போதும் செல்போன் சார்ஜ் ஆகிவிடும். ஆம், செல்போன் சைக்கிள் சார்ஜரை நோக்கியா ஒய்ஜ் நிறுவனம் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நேற்று அறிமுகம் செய்தது. விரைவில் இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின்சார தட்டுப்பாடு உள்ள இந்த காலத்தில், மின்சார பயன்பாட்டைக் குறைப்பதற்காக இதை தயாரித்துள்ளதாக நோக்கியா தெரிவித்துள்ளது. ‘‘ஐரோப்பிய நாடுகளில் அலுவலகம், ஷாப்பிங் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சைக்கிளில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில்தான் சைக்கிள் வழி செல்போன் சார்ஜரை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

குறிப்பாக ஆம்ஸ்டர்டாமில் சைக்கிள் பயன்படுத்துபவர்கள் அதிகம்.எனவேதான் இதை இங்கு அறிமுகம் செய்துள்ளோம். பின்னர் உலகின் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்’’ என நோக்கியா நிறுவன செய்தித் தொடர்பாளர் லியோ மெக்கே தெரிவித்துள்ளார். இந்த சார்ஜர், சைக்கிள் சக்கரம் சுற்றும்போது அதிலிருந்து முகப்பு விளக்கு எரிவதைப் போலவே, செல்போனுக்கு தேவையான மின்சாரத்தை கிரகித்துக் கொள்ளும். இதனால் மின்சார பயன்பாடு குறையும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித கேடும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

காஸ்ஸாவுக்கு மீண்டும் உதவிக்கப்பல்: இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

காஸ்ஸாவுக்கு மீண்டும் நிவாரண உதவிக் கப்பல்களை அனுப்பப் போவதாகவும்,அதனை இஸ்ரேல் தடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் காஸ்ஸா விடுதலை இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.காஸ்ஸாவுக்கு உதவிப்பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்ற துருக்கிக் கப்பலை,கடந்த திங்கட்கிழமையன்று இரவு நடுக்கடலில் இஸ்ரேல் கடற்படையினர் வழி மறித்து உள்ளே நுழைந்து,சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.இதில் 15 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவத்துக்கு ஐ.நா. மற்றும் பல்வேறு உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.இந்நிலையில்,காஸ்ஸாவுக்கு மீண்டும் உதவிக் கப்பல்களை அனுப்பப் போவதாகவும்,அதனை இஸ்ரேல் தடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் காஸா விடுதலை இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.காஸ்ஸாவுக்கு மீண்டும் உதவிக்கப்பல்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும்,இந்த கப்பல்கள் இன்னும் 2 வாரங்களில் காஸ்ஸா போய் சேரும் என்றும் அந்த இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் இந்த கப்பலையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்துமா அல்லது அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
source:presstv

ஜூன் 03, 2010

இஸ்லாம் அமைதியான மார்க்கம் (ஜாஹிர் நாயக்)


டாக்டர் ஜாஹிர் நாயக் பதில்கள்

கேள்வி : இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?

பதில்: இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் - உலகம்முழுவதிலும்இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள்
இருந்திருக்கமாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல.மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

1. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்
இஸ்லாம் என்ற வார்த்தை "ஸலாம்" என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. "ஸலாம்" என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு.

இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் -நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் - நீதியையும் நிலை நாட்டமாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.

பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ'லியரி எழுதிய "இஸ்லாம் கடந்து வந்த பாதை" என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன். குறைவதுடன் "இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும்-மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது - வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது."

1. ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் - ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.

2. கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் - பிரிட்டிஷ்காரர்களும் - சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் - இன்று கூட - 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்கமாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியிருந்தால் - முஸ்லிம் அல்லாதோர்களை - தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்கள்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் ண்பது சதவீத
முஸ்லிம் அல்லாதோர்களே - இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு சாட்சிகளாவர்.

3. உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் -மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள்.எந்த இஸ்லாமிய படைகள் இந்தோனேஷியாவிற்கும் -மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?

4. அதே போன்று ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஸ்லாம் துரிதமாக பரவி இருக்கிறது. எந்த இஸ்லாமிய படைகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

5. எந்த வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது?.அப்படி ஒரு வாள் இருந்தாலும் -இஸ்லாத்தை பரப்புவதற்காக அந்த வாளை இஸ்லாமியர்கள் பயன் படுத்தியிருக்கமுடியாது. ஏனெனில் கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் வசனம் அதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமும் இல்லை:
வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது.
(அல்-குர்ஆன் 02வது அத்தியாயம் - 256வது வசனம்)

அறிவார்ந்த கொள்கை என்பதுதான் அற்த வாள். மனிதர்களின் எண்ணங்களையும் -உள்ளங்களையும் கொள்ளை கொண்டது அறிவார்ந்த கொள்கை என்ற அந்த வாள். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயத்தின் 125வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது.
"(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!. அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் நீர் தர்க்கிப்பீராக!. மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத்தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்."

உலக மதங்களில் அதிகமான வளர்ச்சி அடைந்து முதலிடத்தை பிடித்திருப்பது இஸ்லாமிய மார்க்கமே. அதனுடைய வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீதமாக இருந்தது. கிறிஸ்துவ மார்க்கம் 47 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. லட்சக்கணக்கானவர்களை இஸ்லாத்தில் மாற்ற வேண்டி இந்த நூற்றாண்டில் எந்த போர் நடந்தது?.

இன்று அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். அதே போல் ஐரோப்பாவிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். எந்த வாள் மேற்கத்தியர்களை நிர்ப்பந்தப்படுத்தி மிகஅதிக அளவில் இஸ்லாத்தில் இணையச் செய்தது?.

ஜாஹிர் நாயக்கின் சுற்றுப் பயணம்:பிரிட்டனில் சர்ச்சை



லண்டன்:மும்பையைச் சார்ந்த பிரபல முஸ்லிம் அறிஞரும் மதங்களுக்கிடையேயான கலந்துரையாடலில் வல்லுநராக விளங்கும் டாக்டர்.ஜாஹிர் நாயக் பிரிட்டனுக்கு வருகைத்தர அந்நாட்டு அரசு விசா அனுமதியளித்ததற்கு அந்நாட்டின் பத்திரிகைகளும்,சில அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து களமிறங்கியுள்ளன.ஜாஹிர் நாயக் தீவிரவாதத்தை தூண்டுவதாகவும், வெறுப்பைத் தூண்டும் உரையை நிகழ்த்துபவர் என்றும் குற்றஞ்சாட்டுகின்றன பத்திரிகைகளும்,சில அமைப்புகளும்.


லண்டனில் வெம்ப்ளி அரினா, ஷெஃபீல்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இம்முறை டாக்டர் ஜாஹிர் நாயக் உரை நிகழ்த்தவிருக்கிறார். 2006 ஆம் ஆண்டு ஜாஹிர் நாயக் பிரிட்டனுக்கு சென்றபொழுது கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி டேவிட் டோஸ் உள்ளிட்டோர் அவருக்கெதிராக பிரச்சாரம் செய்தனர்.கன்சர்வேடிவ்கள் நாட்டை ஆளும்பொழுது ஜாஹிர் நாயக்கிற்கு விசா அனுமதித்தது அநியாயம் என டெலிகிராஃப் பத்திரிகை கூறுகிறது.இதுக்குறித்து உள்துறைச்செயலாளர் தெரசாமே கூறுகையில்,"ஜாஹிர் நாயக் மீது எவ்வித தீவிரவாத வழக்கும் பதிவுச் செய்யப்படவில்லை. அதுவரை அவருக்கு பிரிட்டன் விசா வழங்கும்" என தெரிவித்தார்.

செய்தி:மாத்யமம்

டாய்லெட்டில் விமானி: 7,000 அடி கீழே பாய்ந்த துபாய்-புனே ஏர் இந்தியா விமானம்


துபாயில் இருந்து புனே வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென 7,000 அடி கீழே தாவி, எதிரே வந்த விமானத்துடன் மோத இருந்த விபத்து மாபெரும் தவி்ர்க்கப்பட்டுள்ளது.கடந்த 26ம் தேதி, மங்களூர் விமான விபத்து நடந்த 4 நாட்களில், மஸ்கட் வான் வெளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
துபாயிலிருந்து புனே வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை 'ஆட்டோ பைலட்' கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு, விமானி அனுபம் திவாரி சிறுநீர் கழிக்கச் சென்றார். காக்பிட்டில் துணை விமானி இருந்தார்.அப்போது அந்த விமானம் மஸ்கட் மீது 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இந் நிலையில் வானில் வெற்றிடத்தில் (air pocket) நுழைந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்தது. விமானத்தை ஆட்டோ பைலட் சிஸ்டமும் தனது கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துவிட்டது.இதையடுத்து அந்த விமானம் 5,000 அடி கீழே குதித்தது. விமானத்தை துணை விமானி கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்.இதையடுத்து டாய்லெட்டில் இருந்து ஓடிவந்த பைலட், பாஸ்வேர்டைப் போட்டு காக்பிட்டின் கதவைத் திறக்கவே 2 நிமிடங்களாகியுள்ளது. அதற்குள் விமானம் நிலைதடுமாற ஆரம்பித்துள்ளது.ஒரு வழியாக கதவைத் திறந்து தனது சீட்டுக்குத் தாவிய விமானி, விமானத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அதற்குள் 3 நிமிடங்கள் ஆகிவிட்டன.
இந்த நேரத்துக்குள் விமானம் மேலும் 2,000 அடி கீழே பாய்ந்துள்ளது.அது போயிங் 737 ரக விமானமாகும். அதில் 118 பேர் இருந்தனர். இந்த சம்பவத்தால் யாரும் காயமடையவி்ல்லை.இந்த விமானம் தான் பறக்க வேண்டிய உயரத்திலிருந்து கீழே இறங்கியதால், எதிரே வந்த ஒரு விமானத்துடன் மோதும் அபாயம் ஏற்பட்டது. பின்னர் இரு விமானங்களின் விமானிகளும் அதைத் தவிர்த்துள்ளனர்.இந்த சம்பவத்தையடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பைலட்டும், துணை பைலட்டும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.ஆட்டோ பைலட் சரியாக செயல்படவில்லை என்று இரு விமானிகளும் குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிகிறது.

ஜூன் 02, 2010

இஸ்ரேலின் தாக்குதலும் இந்திய ஊடகங்களின் அமைதியும்


நூற்றுக்கணக்கான மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் புறப்பட்ட 'Freedom Flotilla' என்ற பெயருடன் சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்பட்டு மேலும் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்கவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலால் திறந்த சிறையாக மற்றப்பட்ட காஸா மக்களுக்காக உணவுப்பொருட்கள் கட்டுமானப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என 10000டன் பொருட்களுடன் புறப்பட்ட இந்தக் கப்பலில் துருக்கி கிரீஸ் உட்பட பல நாட்டு சமூக ஆர்வலர்கள் பயணம் மேற்கொண்டனர்.

உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்த வண்ணம் இந்தக் கப்பலை காஸ்ஸாவிற்கு செல்லவிடாமல் சுமார் 150 கிலோமீட்டருக்கு கடல் பகுதியில் இஸ்ரேல ஆக்கிரமிப்பு இராணுவதால் சிறை பிடிக்கப்பட்டது.பல நாடுகள் இஸ்ரேலிடம் நிவாரணப் பொருட்களை கொண்டு வந்த கப்பலை காஸ்ஸாவிற்குள் அனுமதிக்குமாறு கூறியும் வழக்கம் போல தனது அடவடித்தனமே இஸ்ரேலின் பதிலாக இருந்தது.கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பின் நேற்று காலை இஸ்ரேல ராணுவம் அதிரடியாக கப்பலுக்குள் தமது ராணுவத்தை அனுப்பி கப்பலில் இருந்த பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரின் மீதும் மிருகத்தனமான தாக்குதலை நடத்தி கிட்டத்தட்ட இருபதிற்கும் அதிகமான மக்களை கொன்று குவித்துள்ளது.

கப்பலில் ராணுவம் செய்த அட்டூழியங்களை கப்பலில் வைக்கப்பட்ட ரகசிய கேமரா மூலம் AL JAZEERA தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. ஆனால் இதை மறுத்த இஸ்ரேலிய அரசு வழக்கம் போல கப்பலில் இருந்தவர்கள் ராணுவத்தை நோக்கி தாக்குதல் நடத்தினர். எனவே தான் ராணுவம் தாக்குதல் நடத்த நேரிட்டது என ஒரு அற்பமான பொய்யை கூறி உள்ளது இந்தத் தாக்குதலில் இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் துருக்கியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.இத்தாக்குதல் குறித்து உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உலகில் உள்ள அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியை முதன்மை செய்தியாக வெளியிட்டன.ஆனால் இந்திய ஊடகங்களை தவிர. குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மிகவும் கேவலமான முறையில் அப்படி ஒரு தாக்குதலே நடக்க வில்லை என்பது போல ஒரு செய்தியையும் வெளிவிட வில்லை. இது தான் பத்திரிக்கை சுதந்திரம்.அதே நேரத்தில் பலஸ்தீனியர்களின் தாக்குதலில் ஒரு இஸ்ரேலியர் காயம் பட்டாலும் அதை பெரிய செய்தியாக போடும் நமது ஊடகங்களின் நடுநிலை தன்மை இதுதான்.

வெளிநாடுகளில் இருந்து காஸ்ஸாவிற்குள் செல்ல நினைத்த அதுவும் உணவுப்பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காத காஸ்ஸா மக்களுக்காக வீடு கட்டுமானப் பொருட்கள் உணவுப் பொருட்கள் என மனிதாபிமான பொருட்கள் கொண்டு சென்ற இவர்களுக்கே இந்த நிலை என்றால் காஸ்ஸாவில் வாழும் மக்களை நினைக்கும் போது அவர்கள் படும் துன்பங்களை நினைத்துப் பார்க்கவே முடியாது.இதில் இன்னொரு கொடுமை என்னவெனில் மனித உரிமையை பற்றி சிறிதும் கவலைப்படாத இஸ்ரேலிடம் நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்கள் இருந்தும் இதைப் பற்றி ஒரு கண்டனத்தையோ அல்லது அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூறாத அமெரிக்கா தனது மின் தேவைக்காக அணுவை பயன்படுத்துவதை கூட ஈரானுக்கு அனுமதி அளிக்க மறுக்கிறது.என்றைக்கு இருந்தாலும் இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பது உலக நாடுகளுக்கு ஆபத்து தான் என்பதற்கு இந்த கொடூர தாக்குதலும் ஒரு உதாரணம்.

உலக நாடுகள் இப்பொழுதே முன் வந்து இஸ்ரேலின் கொடூரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதே அமைதியை விரும்பும் ஒவ்வொரு சராசரி மனிதனின் எதிர்பார்ப்பு.

நன்றி:வாலைவன தூது

TNTJ மேலான்மை குழு உறுப்பினர் பி.ஜைனுல் ஆபிதின் அவர்களின் கடலூர் மாவட்ட விசிட்

செயல்வீரர்கள் கூட்டம்
அல்லாஹ்வின் கருனையால் சென்ற 29.05.2010 அன்று கடலூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-தின் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் மூசா தலைமையில் நடைப்பெற்றது. இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர் பி.ஜைனுல்ஆபிதின் அவர்கள் கலந்து கொண்டு மாநாடு குறித்த ஆலோசனைகளை வழங்கினார்கள். இக்கூட்டத்தில் மாநாட்டிற்கு கடலூர் மாவட்டத்திலிருந்து இருந்து அதிகமான மக்களை திரட்டுவது என்றும் மாநாட்டிற்கான பணிகளை துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டது. இதில் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது அவர்களும் கலந்து கொண்டார்.

கொள்ளுமேடு கிளையின் சார்பாக கிளை நிர்வாகிகள் த.யாசின், ஜாவித் ,ரஜ்வீ,நஜ்முத்தீன் மற்றும் தாயகம் சென்றுள்ள பைஜுர்ரஹ்மான் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


பத்திரிக்கையாளர் சந்திப்பு
அல்லாஹ்வின் கிருப்பையால் கடந்த 29.05.2010 (சனிக்கிழமை) பத்திரிக்கையாளர் சந்திப்பு (PRESS MEET) கடலூரில் நடந்தது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலான்மை குழு உறுப்பினர் பீ. ஜெயினுல் ஆப்தீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது...

நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்காக எத்தனையோ கமிஷன்கள் அமைக்கபட்டு ஒரு பலனும் இல்லை.

இந்த நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவோம் என காங்கிரஸ் அரசு அறிவித்தது. இதற்காக ஒய்வு பெற்ற நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இந்தியா முழுவதும் வலம் வந்து முஸ்லிம்கள் அடிதட்டு நிலையில் உள்ளனர். அவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உடன் நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்படாததால் தீர்மானம் நிறைவேற்றப் படவில்லை. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டதை இயற்றாமல் காங்கிரஸ் இழுத்தடிக்க பார்க்கிறது. ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் முஸ்லிக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

எனவே முஸ்லிக்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக்க வலியுறுத்தி ஜீலை 4-ந் தேதி சென்னை தீவுத் திடலில் பேரணி, மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். அந்த மாநாட்டில் இட ஒதுக்கீட்டை சட்டமாக்கினால் உங்களுக்கு (காங்கிரஸ்) வாக்களிப்போம், இல்லை என்றால் எதிராக வாக்களிப்போம் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்ற உள்ளோம்.
இவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலான்மை குழு உறுப்பினர் பீ.ஜெனுல் ஆப்தின் கூறினார்.
பேட்டியின்போது மாநில செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயலாளர் அப்துல்ரசாக் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

நலம் விசாரித்தல் :
கடலூரில் தர்கா ரெளடிகளால் கொலை வெறி தாக்குதல் நடத்தபட்ட ஜாபர் தற்போது அல்லாஹ்வின் கிருப்பையால் தற்போது குனம் அடைந்து வருகிறார். அவர்களை மேலாண்மைக் குழு உறுப்பினர் பி.ஜைனுல்ஆபிதின் அவர்கள் ஜாபர் அவர்களின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார். அவர்களுடன் பொதுச் செயலாளார் அப்துல் ஹமீது, மாவட்ட பேச்சாளர் ஃபாஜல் ஹீசைன், அபுதாபி யூசுப் அலி , மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் ஆகியோர் உடன்யிருந்தனர்.

ஜூன் 01, 2010

நமதூர் ஸலாமத் புதுநகரில் தீ விபத்து !!!

கொள்ளுமேடு: நமதூர் சலாமத் புதுநகரில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்? ஜுனைதுஅவர்களின் வீடு முற்றிலுமாக சேதம் அடைந்ததது,வீட்டில் இருந்தஅனைத் பொருட்களும் தீயில் எறிந்து சாம்பலானது,தீப்பற்றி எரிவதை அறிந்த ஊர்மக்கள் அனைவரும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர்க்கொண்டு அனைத்தனர் இதனால் மற்றக்குடிசைகளுக்கு பரவாமல் தவிர்க்கப்பட்டது.வழக்கம்போல் தீ முற்றிலும் கட்டுக்குள் வந்தவுடன் காட்டுமன்னார் குடியிலிருந்து தீ அனைப்புத்துறையினர் வந்து மீதம் இருந்த தீயையும் அனைத்தனர்.

கடைத்தெருவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்திலிருந்தூ மீள்வதற்குள் மீண்டும்
ஏற்பட்டிருக்கும் இந்த சம்பவம் மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது இதில் ஏதேனும் சதிவேலைகள் இருக்குமா என்பதைப் பற்றி காவல்த் துறை விசாரனையை முடக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கை எலுந்துள்ளது

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: மாவட்டத்தில் இன்று துவங்குகிறது

கடலூர் மாவட்டத்தில் இன்று துவங்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் 5 ஆயிரத்து 187 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். நாட்டின் 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த பணி தமிழகத்தில் இன்று முதல் வரும் 15ம் தேதிவரை நடக்கிறது.
இந்த கணக்கெடுப்பில் வழக்கம் போலின்றி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான தகவல்களும் சேகரிக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் எளிதாக செய்திட 4 ஆயிரத்து 121 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இப்பணியை ஏழு தாசில்தார்கள், ஐந்து நகராட்சி கமிஷனர்கள், நெய்வேலி துணை பொது மேலாளர் (கல்வி) ஆகியோர் தலைமையில் 4 ஆயிரத்து 36 ஊழியர்களும், 751 கண்காணிப்பாளர்களும் ஈடுபடுகின்றனர். இவர்கள் தினசரி 100 முதல் 150 வீடுகளுக்கு நேரடியாக சென்று குடும்ப தலைவர், குடும்ப உறுப்பினர்கள், உறவுமுறை, பாலினம், வயது, தொழில், ஆண்டு வருமானம், கல்வித் தகுதி, நிரந்தர முகவரி, தற்போதைய முகவரி போன்ற விவரங்களை சேகரிக்க உள்ளனர். தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி மாவட்டத்தில் முழுமையாக செய்து முடித்திட, கணக்கெடுக்க வரும் ஊழியர்கள் கேட்கும் விபரங்களை வீட்டில் உள்ளவர்கள் தெரிவிக்குமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் எவர் பெயரும் விடுபடாத வகையில் முழு கவனம் செலுத்தி அப் பணியாளர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய தகவல்களை கொடுத்து பதிவு செய்யப்பட்டதற்கான ரசீதையும் பெற்று பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள ஒவ் வொருவருக்கும் அடையாள அட்டையான பயோ - மெட்ரிக் கார்டு வழங்கப்பட உள்ளது. இந்த அடை யாள அட்டைதான் இனி அனைத்து அரசு காரியங்களுக்கும் பயன்படும். முஸ்லிம் பெயர்களில் குளறுபடி வராமல் இருப்பதற்கு பெயர்களை தெளிவாக நாமே எழுதிக் கொடுக்க வேண்டும்.

இஸ்ரேலின் கொடூரத்தில் உலகம் நடுங்கியது

காஸ்ஸா:இஸ்ரேல் என்ற அக்கிரமக்கார தேசம் விதித்த தடையால் பட்டினி உச்சத்தில் இருக்கும் ஃபலஸ்தீனர்களுக்கு உதவி புரிவதற்காக வந்த நிவாரண கப்பலின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் உலகத்தை நடுங்கச் செய்துள்ளது.இந்த அக்கிரமத்தை கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்த உலக நாடுகள் இஸ்ரேலின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளன. இத்தாக்குதலை ஐ.நா மனித உரிமை கவுன்சில் கண்டித்துள்ளது. இச்சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளதாகவும், இதனைக் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் தலைவர் நவி தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கெதிராக விசாரணை நடத்தவேண்டும் என்றும், காஸ்ஸாவின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை உடனே விலக்க வேண்டும் என்றும் ஐரோப்பியன் யூனியன் கோரியுள்ளது.

இஸ்ரேலின் கொடூரங்களுக்கெதிராக கண்களை திறக்கவும், எதிர்ப்பு தெரிவிக்கவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது. தாக்குதல் வரம்பு மீறிய நடவடிக்கை என அரப் லீக் கூறியுள்ளது.இஸ்ரேலுக்கெதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 22 உறுப்பினர்களின் கமிட்டி உடனடியாக கூடும் என அரப் லீக்கின் தலைவர் அம்ர் மூஸா தெரிவித்தார்.

இஸ்ரேலின் செயலை கூட்டுப்படுகொலை என ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் வர்ணித்துள்ளார். மரணித்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 3 நாட்கள் துக்கத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

மனிதத்தன்மையற்ற தாக்குதல் மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒரு முறை தங்களுடைய கொடூரத்தை வெளிப்படுத்தியுள்ளது என இச்சம்பவத்தை கண்டித்த ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்.இச்சம்பவத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்த கிரீஸ் இஸ்ரேலுடனான ஒருங்கிணைந்த கப்பற்படை பயிற்சியை ரத்துச் செய்தது. கிரீஸ் நாட்டைச் சார்ந்த 30 பேர் தாக்குதல் நடந்த கப்பலில் இருந்தனர்.எம்.பி உட்பட 16 குடிமக்கள் கப்பலிருந்தனர் எனக்கூறிய குவைத் இஸ்ரேலின் நடவடிக்கையை கொடூரமானது என வர்ணித்துள்ளது.

இஸ்ரேலின் நடவடிக்கையை நியாயப்படுத்தமுடியாது என பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் பர்ணாடு குஷ்னரும், ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாட்டர் வெலும் கூறினர்.இஸ்ரேலுக்கெதிராக எதிர்ப்பு தெரிவிக்க ஹிஸ்புல்லாஹ்வின் உதவியை நாடப்போவதாக லெபனானின் மனித உரிமை பணியாளர் மஹீன் பஷர் தெரிவித்தார். இஸ்ரேலை எவ்வாறு எதிர்க்கொள்ள வேண்டுமென்று அவர்களுக்கு தெரியுமென்றும் சூழலுக்கு தகுந்தவாறு அவர்கள் பதிலடிக் கொடுப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சமாதான பணியை மேற்கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் கண்டித்துள்ளது. இஸ்ரேலின் கொடூரத்திற்கெதிராக உலகம் முழுவதும் கண்டன பேரணிகள் நடைபெற்றன.லண்டனில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். துருக்கியில் எதிர்ப்பு கடுமையாக இருந்தது. இஸ்தான்புல்லில் தூதரகத்தின் மீது தாக்குதல் நடந்தது.50 நாடுகளிலிருந்து எம்.பிக்கள் உள்ளிட்ட 700 பேர் நிவாரண கப்பல்களில் இருந்தனர். ஃப்ரீடம் ஃப்ளோடில்லா என்று அழைக்கப்பட நிவாரண கப்பலில் 581 பேரில் 400 பேரும் துருக்கியை சார்ந்தவர்களாவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்