Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 17, 2013

மாவட்டத்தில் தொடர் மழையால் விவசாயம் பாதிப்பு!

தானே புயலில் இருந்து ஒரளவு மீண்டுவந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கியிருப்பது விவசாயிகளை வேதனையடைச் செய்துள்ளது. இழப்பை ஈடுசெய்ய உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வறட்சியால் தவித்த தமிழகத்தில், கடந்த சில வாரங்களில் பெய்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், மழை காரணமாக, கடலூர் மாவட்டம் சி.என். பாளையம் பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் குருவை சாகுபடியை மேற்கொண்ட இந்தப் பகுதி விவசாயிகள், கிணற்று நீரை மட்டுமே நம்பியிருந்தனர். ஆள் பற்றாக்குறை, உரம் விலை உயர்வு, மின்வெட்டு போன்ற பல்வேறு நெருக்கடிகளை சமாளித்து, விளைவிக்கப்பட்ட நெற்பயிர் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தொடர் மழை விவசாயிகளின் ஒட்டுமொத்த உழைப்பையும் அழித்து விட்டது. கடலூர் மாவட்டத்தில், தானே புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து விவசாயிகள் ஓரளவு மீண்டு வந்த நிலையில், குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்கள் நீரில் முழ்கி உள்ள நிலையில், சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலையில் இருப்பதாக
விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த வேளாண் துறை அதிகாரிகள், இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...