Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 15, 2013

புத்த கயா குண்டுவெடிப்பு வழக்கு: ஹிந்து சாமியார் 'பிரம்மச்சாரி கைது!

பாட்னா: பீகார் மாநிலம் புத்த கயா மகாபோதி வழிபாட்டுத் தலத்தில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாக கருதப்படும் அரூப் பிரம்மச்சாரி என்ற ஹிந்து சாமியாரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் அரூப் பிரம்மச்சாரி, புத்தகயாவில் தங்கியிருந்துள்ளார். கடந்த ஜூலை 7-ந் தேதி புத்தகயாவில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவத்திற்குப் பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார். குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி புத்த கயா கோயில் நிர்வாகிகள் உட்பட பலரிடமும் விசாரணை நடத்தியது.மேலும் வினோத் மிஸ்திரி என்பவர் உட்பட 6 சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் புத்த கயாவில் தங்கியிருந்து குண்டுவெடிப்புக்குப் பின்னர் தலைமறைவாக இருந்த அரூப் பிரம்மச்சாரியை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

அவர் தற்போது ராம்பூர் காவல்
நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-source:thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...