கடலூர்:காவிரியில் கடலூர் மாவட்டத்திற்கு உள்ள உரிமையை பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைகேட்புக் கூட்டத்தில் கலெக்டரிடம் முறையிட்டார்.
கடலூரில், நேற்று கலெக்டர் கிர்லோஷ்குமார் தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் மேட்டூர் அணையிலிருந்து கல்லணைக்கு வந்து சேரும் காவிரி நீரில் 10 சதவீதம் கீழணை பாசனத்திற்கு திறந்து விட வேண்டும். ஆனால் கல்லணையை நிர்வகிக்கும் திருச்சி கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளான திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு உரிய அளவில் திறந்து விடுகின்றனர். ஆனால், சென்னைக் கோட்டத்தைச் சேர்ந்த கீழணை பாசனத்திற்கு மிகக் குறைவாக திறந்து விடுகின்றனர். நேற்று முன்தினம் மேட்டூரில் இருந்து கல்லணைக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
அதில், கீழணைப் பாசனத்திற்காக கல்லணையில் இருந்து 1,500 கன அடிநீர் திறந்து விட வேண்டும். ஆனால், 304 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது.இந்த நீர், 81 கி.மீ., தூரத்தைக் கடந்து கீழணைக்கு சொற்ப அளவே வருகிறது. இதுவே, கல்லணை முதல் கீழணை வரையுள்ள 81 கி.மீ., தூரத்தில் 7 மணல் குவாரிகள் செயல்படுகிறது. இங்குள்ள பள்ளங்கள் நிரம்பி வர வேண்டும். மேலும் இப்பகுதியில் தான் வேதாரண்யம், தஞ்சை, கும்பகோணம், அரியலூர், சிதம்பரம் பகுதி கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான ஆழ்குழாய் கிணறுகள்
உள்ளன.திருச்சிக் கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதால், கீழணை பாசனப் பகுதிகளில்; குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இந்த நிலையை மாற்றிட, கல்லணையிலிருந்து கீழணைக்கு உரிய நீரை திறந்துவிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிள்ளை ரவீந்திரன் கோரிக்கை விடுத்து பேசினார்.இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.
-தினமலர்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...