Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 28, 2011

அண்ணாமலை பல்கலைகழகத்தில் பி.ஏ. அனிமேஷன் படிப்பு அறிமுகம்

இளங்கலை அனிமேஷன் மற்றும் விஷுவல் தொழில்நுட்ப சினிமா தயாரிப்பு என்ற படிப்பினை அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அங்கமான பிக் எய்ம்ஸ் நிறுவனத்துடன் அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


இது குறித்து ரிலையன்ஸ் அனிமேஷன் துறையின் தலைமை செயல் அலுவலர் எஸ்.கே.ஆசிஷ், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:


ஓவியம் வரையும் திறமையுடன் கற்பனை வளம் அதிகமாக உள்ள மாணவர்களுக்காக இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படிப்பு திரைப்படத் தயாரிப்பில் அனிமேஷன் மற்றும் விஷுவல் தொழில்நுட்பங்களை விரிவாகக் கற்றுக் கொடுக்கும். இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு திரைக்கதைகளை உருவாக்குவது என்பது குறித்து கற்றுக் கொடுக்கப்படும். அனிமேஷன் கதாபாத்திரங்களை வரைந்து உருவாக்குவது, அவற்றுக்குக் குரல் கொடுப்பது, அவற்றின் பாவனைகள், முகக்குறிப்பு உள்ளிட்டவற்றை உருவாக்குதல் குறித்தும் பயிற்றுவிக்கப்படும்.

நமதூரில் அதிக பவர் கொண்ட ட்ரான்ஸ்பார்மர் மாற்றம் செய்யப்பட்டது

நமதூர் மக்களின் நீண்ட நாள் கனவான அதிக பவர் கொண்ட ட்ரான்ஸ்பார்மர் நேற்று மாற்றம் செய்யப்பட்டது.இதுவரை 100கிலோ வாட்சில்  மட்டுமே இருந்த நமதூரின் மின்சார  சப்ளை  தற்போது 250௦ கிலோ வாட்சாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக நம்மிடம் கருத்து தெரிவித்த வார்ட் உறுப்பினர் அப்துர்ரஹ்மான் அவர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு மக்களின் நலன் கருதி அணைத்து உறுபினர்களின் ஆதரவோடு இதைக்கொண்டு வந்துள்ளோம் என்றார்.

ஜூன் 08, 2011

முட்டம் பாலம் கட்டும் பணி...தீவிரம் : அடுத்த ஆண்டில் முடிக்க திட்டம்

சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் நாகை - கடலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் 48 கோடி ரூபாயில் கட்டப்படும் முட்டம் பாலம் பணி இரவு, பகலாக தீவிரமாக நடந்து வருகிறது. காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் பகுதியில் கடலூர் - நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 48 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது. இரு மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், வியாபார ரீதியாக இரு மாவட்ட பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் இப்பாலம் கட்டப்படுகிறது.


பாலம் பணி முடிவடைந்தால் நாகை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் சென்னை செல்வதற்கு பிரதான சாலையாகிவிடும். சென்னையில் இருந்து நாகை மாவட்டத்திற்குச் செல்பவர்கள் சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், முட்டம், பட்டவர்த்தி, வில்லியநல்லூர், நீடூர், மயிலாடுதுறை சென்று விடலாம். அதேப்போன்று காட்டுமன்னார்கோவில் சுற்றியுள்ள கிராம மக்கள் மயிலாடுதுறை செல்வதற்கு சிதம்பரம் வந்து சீர்காழி வழியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. நாகை கொள்ளிடக்கரை கிராம மக்களும் 70 கி.மீ., தூரம் சுற்றி வரவேண்டிய நிலை தவிர்க்கப்படும். இதனால் 2.30 மணி நேரம் செல்ல வேண்டியது ஒரு மணி நேரம் மிச்சமாகி விடும். முட்டம் பாலம் கட்ட வேண்டும் என 1974ம் ஆண்டு அப்போதைய காட்டுமன்னார்கோவில் சேர்மனும், அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தந்தையுமான கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர் வெறியாட்டம்: 120 பலஸ்தீனர் படுகாயம்

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் கலந்தியா அகதி முகாம் அருகில் இடம்பெற்ற அமைதிப் பேரணியைக் கலைக்குமுகமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் புதிய வகையான வாயுப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் விளைவாகப் பேரணியில் கலந்துகொண்ட பலஸ்தீன் பொதுமக்களில் அனேகர் மயக்கமடைந்ததோடு, மற்றும் பலருக்கு கண்களில் ஒருவித எரிச்சல் ஏற்பட்டுப் பெரிதும் சிரமப்பட்டனர்.

அமைதியான முறையில் இடம்பெற்ற எதிர்ப்புப் பேரணியில் அடாவடித்தனமாகக் குறுக்கிட்டுத் தாக்குதல் நடாத்திய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் எதேச்சதிகாரம் பொதுமக்களுக்கு ஆத்திரமூட்டுவதாக அமைந்திருந்தது.

பலஸ்தீன் பேரணியாளரைத் தாக்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர், அதன் பின் அங்கிருந்த அகதி முகாமுக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்டதையடுத்து, பொதுமக்கள் கற்கள் மற்றும் வெற்றுப் போத்தல்களால் எதிர்த்தாக்குதல் நடாத்தியதாக உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஜூன் 06, 2011

B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு படிக்க

B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு தற்போது பெரும்பாலான மாணவர்களின் விருப்ப படிப்பாக மாறிவருகின்றது. தமிழகத்தில் 12 கல்லூரிகளில் மட்டும்தான் இந்த படிப்பு உள்ளது. அதில் 2 கல்லூரிகள் (சென்னை புது கல்லூரி, கீழகரை சதக் கல்லூரி)முஸ்லீம்களால் நடத்த படுகின்றன.

B.Arch படிப்பில் சேர அண்ணா பல்கலை கழகம் வருட வருடம் கலந்தாய்வு (counseling) நடத்துகின்றது. அதற்க்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது, விண்ணப்ப படிவம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் மட்டும்தான் கிடைக்கும்.

விண்ணப்பத்தை பெறுவதற்க்கு NATA தேர்வில் தேர்சி பெற்று இருக்க வேண்டும். NATA தேர்வின் முழுவிபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. NATA தேர்வின் மதிப்பெண் சான்றிதழுடன் (Score card) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்திற்க்கு சென்று விண்ணப்பத்தை பெற வேண்டும்.

B.Arch கலந்தாய்வு (counseling) முறை : +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்ன்னையும், NATA தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும் வைத்து கட் ஆப் மதிப்பெண் கணக்கிடபடுகின்றது. அதாவது +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்ணை 6 – ஆல் வகுத்துகொள்ள வேண்டும், அதனுடன் NATA தேர்வின் மதிப்பெண்ணை கூட்டினால் வருவதுதான் B.Arch கட் ஆப் மதிப்பெண். இது 400 மதிப்பெண்ணுக்கு

ஜூன் 04, 2011

விமான விபத்தை தடுக்க சாப்ட்வேர், இந்திய விமான படை கண்டுபிடிப்பு

புதுடில்லி: விமான விபத்துக்கள் ஏற்படும் காரணிகளை முன்கூட்டியே அறிந்து அதன்மூலம் விமானங்களை ஆபத்தில் சிக்காமல் இருப்பதற்கானபுதிய சாப்ட் வேர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை பிரிவைச் சேர்ந்த குழுவினர் இதற்கான சாப்ட்வேரை தயாரித்துள்ளனர். ஏர்மார்ஷல் ஏ.எஸ்.கார்னிக் ( ஆய்வு மற்றும் பாதுகாப்பு ) தலைமையிலான குழுவினர் இத்தகைய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகாலம் நடைபெற்றுள்ள நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டு கணித்தின் மூலம் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். இந்த சாப்ட் வேரை வெளியிட்டு பேசிய இந்திய விமானப்படையினர் இதன்மூலம் விமான விபத்துக்கள் குறைவதற்கான வாய்ப்புக்கள் உண்டாகும் என நம்பிக்கை தெரிவித்தனர்

'இது 5 ஸ்டார் உண்ணாவிரதம்-பின்னணியில் ஆர்எஸ்எஸ்'-திக்விஜய்

டெல்லி: கறுப்புப் பணத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் யோகா குரு ராம்தேவின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.


இந்த உண்ணாவிரதத்துக்கு ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளதோடு, தனது தொண்டர்களை பெருமளவில் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்பர் என்றும் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது. ஆனால், தனக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று ராம்தேவ் கூறியுள்ளார்.

இந் நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், இப்போது பூனைக் குட்டி வெளியில் வந்துவிட்டது. ராம்தேவின் போராட்டத்துக்கு பந்தல் அமைப்பதில் ஆரம்பித்து, உண்ணாவிரத மையத்துக்கு ஆட்களைக் கூட்டி வருவது வரை எல்லா வேலைகளையும் ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் தான் பார்த்து வருகின்றனர்.

ஜூன் 03, 2011

செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!

ரியாத்: செளதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்க அந் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.


இது குறித்து செளதியின் அல் வதான் செய்தித் தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பகி அளித்துள்ள பேட்டியில், செளதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற உள்நாட்டினரிடையே போட்டியை உருவாக்கி, அவர்களது பணித் திறமையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.


இதனால் வெளிநாட்டினர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் செளதியில் பணியாற்ற தடை விதிக்கப்படும். இந்த சட்டத்தை கொண்டு வந்த பின், அதை அமலாக்க வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு 5 மாத கால அவகாசம் வழங்கப்படும்.

10 – ஆம் வகுப்பு தேர்வில் சாதித்த முஸ்லீம் மாணவர்கள்.

தமிழக அளவில் இரண்டாவது , மூன்றாவது இடங்களை முஸ்லீம் மாணவர்கள் பிடித்துள்ளனர்.


இரண்டாவது இடம்
மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் ஏ.சதாம் உசேன் என்ற மாணவர் 495 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் 2 -வது இடம் வந்துள்ளார்


மூன்றாவது இடம்

எம்.ஷபனா பேகம் 494, பல்லாவரத்தில் உள்ள செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் எம்.ஷபனா பேகம் என்ற மாணவி 494 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் 3 -வது இடம் வந்துள்ளார்

நமதூர் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் சுகைனா என்ற என்ற மாணவி 464 மதிப்பெண் எடுத்து நமதூரில் முதலிடம் வந்துள்ளார்.அவருக்கு கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிதுக்கொள்கின்றது.