Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 17, 2013

சிறுபான்மையின மாணவ – மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை 2013-14!

சிறுபான்மையின இஸ்லாமிய மாணவ – மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை 2013-14 தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் சிறுபான்மையின (இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள்,புத்தமதத்தினர், சீக்கியர்கள், பார்சிகள்) மாணவ – மாணவியர்களுக்கு ப்ரீ மெட்ரிக் (PRE MATRIC), போஸ்ட் மெட்ரிக் (POST MATRIC), மெரிட் கம் மீன்ஸ் பேஸ்ட் ஸ்காலர்ஷிப்ஸ் (MERIT CUM MEANS BASED SCHOLARSHIPS) என்ற மூன்று நிலைகளின் கீழ் ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 2013-14ம்கல்வியாண்டிற்கு, புதிதாக(FRESH) உதவித்தொகை பெற மற்றும் பெற்று கொண்டிருக்கும் உதவித்தொகை புதுப்பித்தல்(RENEWAL) செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றது

ப்ரீ மெட்ரிக் (PRE MATRIC), போஸ்ட் மெட்ரிக் (POST MATRIC), மெரிட் கம் மீன்ஸ் பேஸ்ட் ஸ்காலர்ஷிப்ஸ் (MERIT CUM MEANS BASED SCHOLARSHIPS) பற்றிய விபரம் மற்றும் கல்வி உதவித்தொகை பெற விண்ணபிக்க வேண்டிய முறை,கடைசி நாள்,தேவையான சான்றிதழ்களின் விபரம் கீழ் வருமாறு

       பள்ளிபடிப்பு -ப்ரீ மெட்ரிக் (PRE MATRIC)  

தகுதிகள்: 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ – மாணவியர்கள்
2) குடும்ப (பெற்றோர்/பாதுகாவலர்) ஆண்டு வருமானம் 1லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3) முன் ஆண்டின் இறுதித் தேர்வில் 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (1 ஆம் வகுப்பிற்கு தேவையில்லை)
4) வேறு எந்த அரசு கல்வி உதவியும் பெற்றிருக்க கூடாது
5) ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரு நபர்களுக்கு மட்டும்
6)மாணவியர்களுக்கு 30% ஒதுக்கீடு

உதவித்தொகை விபரம்:ஆண்டிற்கு அதிகபட்சமாக- ரூ6,850 (சேர்கை,கல்வி,
பராமரிப்பு கட்டணம்

விண்ணப்பிக்கவேண்டிய முறை:புதிதாக இந்த கல்வி  உதவிக்கு  விண்ணப்பிக்கும் மாணவர்கள்(prematric_fresh_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்

ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள்  புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
                   
விண்ணப்பங்களை கீழே உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பம் மற்றும் குறிப்பிட்டு உள்ள ஆவணங்களையும் இணைத்து உங்கள் கல்வி நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்ப்பிக்க
வேண்டும் , தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
1) 1 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
2) பிறந்த தேதி சான்றிதழ் நகல்
3) வருவாய் துறையினரால் வழங்கப்பட்ட வருமான வரி சான்றிதழ் (அல்லது) 10 ரூபாய் நீதித்துறை சாராத முத்திரை தாளில்  சுய பிரகடனம் செய்யவும் (self declaration in Rs 10 Non-Judicial stamp paper)
4) சாதி சான்றிதழ் நகல்  ( Community Certificate)
5) முந்தய  வருட பள்ளிக்கூட மதிப்பெண் அறிக்கை அட்டை (progress report /Rank card)
6) முகவரி சான்று Address Proof (Ration Card, Voter ID, PAN Card etc),
7) அடையாள சான்று Identification Proof
8) கல்வி கட்டண ரசீதுகள்
9) வங்கி கணக்கு என் மற்றும் வங்கி, வங்கி பாஸ் புக் நகல் அல்லது cancelled Cheque leaf , IFS Code (11 Digits)
குறிப்பு : விண்ணப்பிக்கும் மாணவன்/மாணவியின் பெயரில் வங்கி கணக்கு இருக்க வேண்டும்

கடைசி நாள்:
புதியது (Fresher) & புதுப்பித்தல் (Renewal):31-ஆகஸ்ட்-2013      (31-08-2013)

      பள்ளி மேற்படிப்பு – போஸ்ட் மெட்ரிக் (POST MATRIC)
தகுதிகள்:1) 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ – மாணவியர்கள், ஐடிஐ, ஐடிசி, என்.சி.வி.டி தொழில் கல்வி(வோகேஷனல்), டிப்ளோம இன் நர்சிங் , பாலிடெக்னிக், இளங்கலை(UG), முதுகலை(PG), ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி படிப்பு MPhil, Ph.D

2)குடும்ப (பெற்றோர்/பாதுகாவலர்) ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

3)முன் ஆண்டின் இறுதித் தேர்வில் 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4)வேறு எந்த அரசு கல்வி உதவியும் பெற்றிருக்க கூடாது

5)ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரு நபர்களுக்கு மட்டும்

6)மாணவியர்களுக்கு 30% ஒதுக்கீடு

உதவித்தொகை விபரம்:ஆண்டிற்கு அதிகபட்சமாக- ரூ7000 முதல் 15000 வரை (சேர்கை,கல்வி,பராமரிப்பு கட்டணம்)

விண்ணப்பிக்கவேண்டிய முறை:
i) 11 & 12 ம் வகுப்பு மாணவ – மாணவியர்கள் இந்த கல்வியாண்டு முதல் 11 & 12 ம் வகுப்பு மாணவ – மாணவியர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

ii) கல்லூரி நிலை (ஐடிஐ, ஐடிசி, என்.சி.வி.டி தொழில் கல்வி(வோகேஷனல்), டிப்ளோம இன் நர்சிங் , பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை, ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி படிப்பு MPhil, Ph.D)

புதிதாக விண்ணபித்தல் மற்றும் புதுப்பித்தல் ஆன்லைனில் மட்டுமே விண்ணபிக்க வேண்டும்http://www.momascholarship.gov.inஇணையத்தளத்தில் “POSTMATRIC SCHOLARSHIP SCHEME” என்ற பகுதிக்கு சென்று விண்ணப்பதை பூர்த்தி செய்யவேண்டும் . பூர்த்திசெய்த பிறகு “SAVE” பட்டனை CLICK செய்யவும் பிறகு “FORWARD” பட்டனை CLICK செய்யவும்
ஆன்லைனில் “FORWARD” பட்டனை CLICK  செய்தபின் மாணவர்களுக்கு ஒரு தற்காலிக அடையாள என் (Temporary ID) வழங்கப்படும், பூர்த்தி செய்த விண்ணப்பம் சம்மந்த பட்ட கல்வி நிலையத்திற்கு ஆன்லையன் மூலம் அனுப்பப்படும்.

பூர்த்திசெய்த விண்ணப்பதை “PRINT OUT” எடுத்து,  குறிப்பிட்டு உள்ள ஆவணங்களையும் (நகல்) இணைத்து உங்கள் கல்வி நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் , தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
1. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
2. மார்க் சீட் (Consolidated Mark sheet)
3. சாதி சான்றிதழ் நகல்  ( Community Certificate)
4. வருவாய் துறையினரால் வழங்கப்பட்ட வருமான வரி சான்றிதழ் (அல்லது) 10 ரூபாய் நீதித்துறை சாராத முத்திரை தாளில்  சுய பிரகடனம் செய்யவும் (self declaration in Rs 10 Non-Judicial stamp paper)
5. முகவரி சான்று Address Proof (Ration Card, Voter ID, PAN Card etc),
6. அடையாள சான்று Identification Proof
7. கல்வி கட்டண ரசீதுகள்
8. வங்கி கணக்கு என் மற்றும் வங்கி, வங்கி பாஸ் புக் நகல் அல்லது cancelled Cheque leaf , IFS Code (11 Digits)
குறிப்பு :ஆதார் எண் உள்ளவர்கள் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் மற்றும்  விண்ணப்பிக்கும் மாணவன்/மாணவியின் பெயரில் வங்கி கணக்கு இருக்க வேண்டும்

கடைசி நாள்: புதியது (Fresher)30-09-2013(30-செப்டம்பர்-13) 
புதுப்பித்தல் (Renewal) :10-12-2013 (10-டிசம்பர்-2013)

மெரிட் கம் மீன்ஸ் பேஸ்ட் ஸ்காலர்ஷிப்ஸ் (MERIT CUM MEANS BASED SCHOLARSHIPS)

தகுதிகள்:1)இளங்கலை(UG), முதுகலை(PG நிலை, மருத்துவம்(MBBS) ,பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் (BE,ME,B Tech...),கட்டிடக்கலை,சட்டம் போன்ற துறைகளில் படிக்கும் மாணவ – மாணவியர்களுக்கு

2)முழு துறைகளையும் அறிய கீழே உள்ள இணையதளத்தை பார்க்கவும்

3)குடும்ப (பெற்றோர்/பாதுகாவலர்) ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

4)முன் ஆண்டின் இறுதித் தேர்வில் 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5)வேறு எந்த அரசு கல்வி உதவியும் பெற்றிருக்க கூடாது

6)ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரு நபர்களுக்கு மட்டும்

7)மாணவியர்களுக்கு 30% ஒதுக்கீடு

உதவித்தொகை விபரம்:
ஆண்டிற்கு அதிகபட்சமாக- ரூ25,000முதல் 30,000 வரை (சேர்கை,கல்வி,
பராமரிப்பு கட்டணம்)

விண்ணப்பிக்கவேண்டிய முறை:
புதிதாக விண்ணபித்தல் மற்றும் புதுப்பித்தல் ஆன்லைனில் மட்டுமே விண்ணபிக்க வேண்டும்

http://www.momascholarship.gov.inஇணையத்தளத்தில் “MERIT CUM MEANS SCHOLARSHIPS” என்ற பகுதிக்கு சென்று விண்ணப்பதை பூர்த்தி செய்யவேண்டும் . பூர்த்திசெய்த பிறகு “SAVE” பட்டனை CLICK செய்யவும் பிறகு “FORWARD” பட்டனை CLICK செய்யவும்.  
ஆன்லைனில் “FORWARD”  பட்டனை CLICK செய்தபின் மாணவர்களுக்கு ஒரு தற்காலிக அடையாள என்   (Temporary ID) வழங்கப்படும், பூர்த்தி செய்த விண்ணப்பம் சம்மந்த பட்ட கல்வி நிலையத்திற்கு ஆன்லையன் மூலம் அனுப்பப்படும்.

பூர்த்திசெய்த விண்ணப்பதை “PRINT OUT” எடுத்து, குறிப்பிட்டு உள்ள ஆவணங்களையும் (நகல்) இணைத்து உங்கள் கல்வி நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் , தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

1) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
2) மார்க் சீட் (Consolidated Mark sheet) (without Arrears for RENEWAL)
3) சாதி சான்றிதழ் நகல்  ( Community Certificate)
4) வருவாய் துறையினரால் வழங்கப்பட்ட வருமான வரி சான்றிதழ் (அல்லது) 10 ரூபாய் நீதித்துறை சாராத முத்திரை தாளில்  சுய பிரகடனம் செய்யவும் (self declaration in Rs 10 Non-Judicial stamp paper)
5) முகவரி சான்று Address Proof (Ration Card, Voter ID, PAN Card etc),
6) அடையாள சான்று Identification Proof
7) கல்வி கட்டண ரசீதுகள்
8) வங்கி கணக்கு என் மற்றும் வங்கி, வங்கி பாஸ் புக் நகல் அல்லது cancelled Cheque leaf , IFS Code (11 Digits)

குறிப்பு :#ஆதார் எண் உள்ளவர்கள் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் மற்றும் விண்ணப்பிக்கும் மாணவன்/மாணவியின் பெயரில் வங்கி கணக்கு இருக்க வேண்டும்

கடைசி நாள்:
புதியது(Fresher)30-09-2013(30- செப்டம்பர்-13)
புதுப்பித்தல்(Renewal): 31.12.2013 (31- டிசம்பர்-2013)

மேலும் விபரங்களுக்கு கீழ் உள்ள இணையதளங்களை பார்க்கவும்,மற்றும் உங்கள் கல்வி நிறுவனங்களை அணுகவும்
                                                                           
                                                                             M.Y.உமர் பாரூக்
                                                                                              மாணவர் அணி TNTJ 




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...